Thursday, January 10, 2013

Know Your Body - பசுமை குடிநீர்


தமிழில் படிப்பவர்கள் தேடியாவது படிப்பீர்கள் அல்லவா......
சென்ற பகுதியில் குளிர்நீரில் குளிக்க வேண்டும் என்றவுடன் நிறைய சலசலப்புகள்.  குளியல் என்பது உடலின் அழுக்கை  களைவது மட்டுமல்ல.....உடல் உள் உறுப்புகளை குளிர்விப்பதும் கூட......குளியல் என்றாலேதலைக்கும் அதுவும் குளிர் நீரில்.......அல்லதுஉள் உறுப்புகளை குளிர்விக்கும் வேலை நடை பெறாது என்பது நினைவில் இருந்தாலே போதும்...வெந்நீரில் குளிப்பதோஉடலுக்கு மட்டும் குளிப்பதோ உண்மையான குளியல் அல்ல .....அதை விட குளிக்காமல் இருந்தாலே உடலுக்கு நலம் பயக்கும்.....
பசுமை குடிநீர் தயாரிப்பு மீண்டும் ஒரு முறை :
ஒரு குவளை நீர் கொதிக்க வைத்து இறக்கவும். கீழ்க்கண்ட இலைகளின் ஏதேனும் ஒன்று ஒரு கைப்பிடி அளவு அதில் போட்டு மூடி வைக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து நீரில் நல்ல பசுமை நிறம் இறங்கி இருக்கும்....சுவைத்து குடிக்கவும்...நிறைய மாற்றங்களை உணர்வீர்கள்....
 கொத்தமல்லி இலையில் செய்த பசுமைக் குடிநீர்
                                  

1.
கருவேப்பிலை  (கர்ப்ப பை நலம்  மற்றும் உடல் சூட்டை தணிக்க) 
2.
கொத்தமல்லி  (ஜீரண கோளாறுகள்சர்க்கரை நோயாளிகளுக்கு)
3. 
முருங்கை இலை (மண்ணீரல் சரி செய்யஜலதோஷத்திற்கு)
4. 
புதினா (நல்ல சுவை )
அறிவோம் 
   
உடல் நலமும் வளமும் கூட்டினால் நலம்.....ஆனால் பகைமையும்கோபமும்பொறாமையும் சேர்க்க கூடாத குணங்கள்...திருவள்ளுவர் கூறுவது போல., " நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. " , "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். " .....சினம் என்னும் குணம்,  காட்டுபவரை விட கொண்டுள்ளவரையே அதிகம் இழக்க வைக்கும்......நம்மை  நாம்  விரும்பி பிறரையும் விரும்புவோம்......

செய்வோம் 

வெற்றியுடன் ஒரு காரியம் செய்து முடித்தால் கட்டை விரலை உயர்த்துவது வழக்கம்....அதைப்போல கட்டை விரலை உயர்த்தி இப்பகுதியை ஆரம்பிப்போம்........ ஐம்பூதங்களில் ,கட்டை விரல் "நெருப்பை" குறிக்கிறது.....
கபச் சுரப்பி மற்றும் கூம்புச் சுரப்பிகளின் புள்ளிகள் மற்றும் மனஞ்சார்ந்த நரம்புகளின் புள்ளிகள் கட்டை விரலில் அமைந்துள்ளன......

கட்டை விரல்மற்றும் ஆள்காட்டி விரலின் நுனிகளை இணைக்கும் ஞான முத்திரையை தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உணரலாம்......மன அழுத்தம்,தூக்கமின்மைஅதிக கோபம்சோம்பல்மனக்கிலேசங்கள் போன்ற பல பிரச்சினைகளை இம்முத்திரைகளையும்....  நினைவாற்றல் மற்றும்   அறிவுத்திறனையும்  அதிகரிக்கும்....குழந்தைகள் தினந்தோறும் செய்து வந்தால் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.....உடல்  மன  நலனை சமப்படுத்தும் அருமையான முத்திரை. 
நான்கு  நாட்களுக்கு முன்னர் நன்றாக உச்சந்தலையில் இடித்துக்கொண்டேன்....தலை என்றால் கட்டை விரல் தானே - என நினைவுக்கு வந்து கட்டை விரலை அழுத்த ஆரம்பித்தேன்....கட்டை விரலில் லேசான ஒரு அழுத்தம் தென்பட்டது....அழுத்த அழுத்த உச்சியில் ஒரு இரத்த ஓட்டம் பாய்வது போன்ற உணர்வுஉண்மையிலேயே  இரத்தம் வருகிறதோ என தடவியும் பார்த்தேன்...ஆனால் அது உள் காயம் மட்டுமே......வலி உடனே குறைந்தது.....(பக்கத்தில் பெண் கால் வலியால் அழஅதை சரி செய்யும் முயற்சியில் உடனே இறங்க முடிந்தது...) வீக்கமும் சீக்கிரம் குறைந்தது....

 
ஏற்கனவே கூறியது போல "அறிவது செய்வதாகாது." (KNOWING IS NOT DOING, ONLY DOING IS DOING)..எனவே செய்யும் முயற்சியில் இறங்குவோம்....நல்ல உடல் நலனை பெறுவோம் ...நம் நலனை நாமே  பேணுவோம் ...மருத்துவரை  நம்பிஏமாந்து,  கொலை  செய்யும்  நிலை  வர  வேண்டாம் ....

No comments:

Post a Comment