Tuesday, January 22, 2013

கடுக்காய் பிரபாவ போதினி' பாகம் 1 to 9

ஒரு பழம் பெரும் புத்தகம் 5(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 1)

எனது தாத்தாவின் மருத்துவப் பொக்கிஷங்களில் பல புத்தகங்கள் உள்ளன.அவற்றில் மிகச் சிலவற்றையே வாசக அன்பர்களாகிய உங்களுக்கு இது வரை அறிமுகப்படுத்தி உள்ளேன்.மேலும் ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறேன்.

இது என் தாத்தாவின் சொந்தக் கையெழுத்தில் கடுக்காய் மையினால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியில் உள்ள விடயங்களை விளக்கங்களுடன் தர இருக்கிறேன்.

அந்த நூலின் பெயர் ''கடுக்காய் பிரபாவ போதினி''.
கடுக்காய் பிரபாவ போதினி
கடுக்காயும் தாயும் கருதிலொ ன்றென்றாலும்
கடுக்காய்த் தாய்க்கதிகங் காணீர்-கடுக்காய்நோ
யோட்டியுடற்று மற்றன்னையோ சுவைக
ளூட்டியுடற் றேற்று முவந்து.

விளக்கம்;-கடுக்காயும் தாயும் ஒன்று என்றாலும், கடுக்காய் தாயைவிட ஒரு படி மேலாக கருதப்படும். எவ்வாறென்றால் அன்னை சுவையான உணவை மட்டுமே ஊட்டுவாள்.தாய்க்கு இல்லாத தகுதியான நோய் போக்கும் சக்தி இந்தக் கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காயை கிரமப் பிரகாரம் சாப்பிட்டு வருவது நோயணுகா விதிகளில் ஒன்று.

பதினான்கு வகை இரத்தினங்களில் கடுக்காயும் ஒரு வகையாகக் கருதப்படுகிறது.தேவ வைத்தியரான தன்வந்திரி பகவான்,கடுக்காயை எப்போதும் தம்மிடம் வைத்திருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.வட மொழியான சமஸ்கிருதத்தில் கடுக்காய்க்கு அரிதகி என்று பெயருண்டாவற்கு காரணம் அது எல்லா வியாதிகளையும் நீக்குகிறது என்பதேயாகும்.

இன்னும் இதைப் பற்றி கடுக்காய்ப் பிரபாவ போதினியிற் சொல்லப்பட்டிருப்பதாவது,
சுவை ஆறுவகையென்பது பிரசித்தம்.

ஆனால் கடுக்காயின் சுவை ஐந்தாகும்,அவை தித்திப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உரைப்பு, ஆகிய ஐந்து வகைக் கடுக்காய்கள் இருக்கின்றன.உவர்ப்பு வகைக் கடுக்காய் மாத்திரமில்லை.

இங்கு சர்வ தயாபரனான கடவுளின் அற்புதமான படைப்பின் ஏற்பாட்டைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். கடுக்காயானது அதி மேலான குணங்களையுடையது. அதில் துவர்ப்பானது கண்வியாதி, இந்திரிய விருத்தி, இரத்த விருத்தி ஆகிய வகைகளுக்கு விரோதஞ் செய்யத் தக்கது.

கடுக்காயோ கண்ரோகம் முதலியவைகளுக்கு சஞ்சீவிக் கொப்பானது. ஆகையால் ஒன்றுக்கொன்று விரோத குணமுள்ளவை முற்றும் ஒன்றாக இருக்கக் கூடாது என்னும் ஏற்பாட்டிற்காகவே உவர்ப்பு வகைக் கடுக்காயை இயற்கையே உருவாக்கவில்லை போலும்.         

'வாதமாய்ப் படைத்து,பித்த வன்னியாய்க் காத்து,சிலேத்துமமாய்த் துடைத்து என்பார்கள்.''

விளக்கம்;-வாதம் என்பது பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தியால் உடல் வளர்க்கப்படுகிறது.பின் 20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான(வன்னி) நெருப்பு சக்தியால் காக்கப்பட்ட உடல் பின் 45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தியால் (சளி தொண்டையில் அடைத்து ஒரு விக்கலுடன் உயிர் பிரிகிறது) உடல் சக்தியெல்லாம் துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரிகிறது.

காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்-உண்டிடில்
கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர்
கோலை விட்டு குலாவி நடப்பரே.

இதில் காலையில் இஞ்சி,மதியம் சுக்கு,மாலையில் கடுக்காய் என்று பொருள் எடுக்கக் கூடாது.காலைப் பருவமாகிய பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், வாதக் கதிப்பினால் வரும் வியாதிகளைக் களைய இந்தப் பருவத்தில் இஞ்சியை வருடம் ஒருமுறை ஒரு மண்டலம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போலவே  20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான (வன்னி) நெருப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், பித்தக் கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு சுக்கை சுத்தி செய்து வருடம் ஒருமுறை ஒரு மண்டலம்  மருந்தாகத் தர குணமாகும்.
   
45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில்,

சிலேற்பன 
கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு கடுக்காயை சுத்தி செய்து கீழ்க் குறிப்பிட்ட முறைகளின் படி சாப்பிட்டு வர, 

உடல் சக்தி காக்கப்பட்டு, சிலேற்பனக் கதிப்பு துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரியாமல் காக்கப்படுகிறது.இதனால் இது காயகற்பத்தில் தலையாயதாகவும் செயல்படுகிறது.கடுக்காய்க் கற்பம் எனப் போற்றப்படுகிறது.  

கடுக்காயின் உட்கொட்டையயும் மேற் தோலையும் நீக்கிவிட்டு கடுக்காயின் சதைப்பற்றான பகுதியை மட்டும் எடுத்து இடித்து(மிக்ஸியிலோ, மில்லிலோ கொடுத்து அரைக்கக் கூடாது,சூரணம் சூடானால் அதன் மருந்துத் தன்மை இழந்துவிடும்,கடைகளில் விற்கும் சூரணமொ,பொடிகளோ இது போன்ற பக்குவத்தில் செய்ய மாட்டார்கள்,செய்தால் அவர்களுக்கு கட்டுபடி ஆகாது,மொத்தக் கடுக்காயையும் போட்டு அரைத்தால்தான் கட்டுப்படியாகும்), வஸ்திரகாயஞ் செய்து (துணியில் சலித்து) வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்படி கடுக்காய்ப் பொடியில் முக்கால் விராகனிடை(ஒரு விராகன்= 4.16 கிராம் எனில் முக்கால் விராகனிடை என்பது 3.12 கிராம் ) மேற்கண்ட அனு பான விஷேஷங்களிற் சாப்பிட வேண்டும்.மேற்குறிப்பிட்ட மாத இடைவெளிக் கால அளவு முழுவதும் சாப்பிட்டால் நன்று. குறைந்த பட்சம் 14 நாட்கள் சாப்பிட வேண்டும். அப்படியும் செய்ய இயலாதவர்கள் எவ்வேழு நாட்களாவது  சாப்பிட்டு வர வேண்டும்.

இப்படிச் செய்வதால் தேக சுகம் நிலைத்திருக்கும், வேறு வியாதிகளுண்டாகா!! மலங் கிரமப்பட்டு(நாளுக்கிரு முறை), இரைப்பை முதலான இராஜ கருவிகளின் தொழிலுங் கிரமப்பட்டு வரும்.

இனி கடுக்காயை காலத்திற்கேற்றார் போல பல வகை அனுப்பானங்களுடன் ஏன் கலந்து உபயோகிக்க வேண்டுமென்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்

கடுக்காயை செப்டெம்பர் மாத நடுவிலிருந்து நவம்பர் மத்தி வரையில் கடுக்காய்ச் சூரணத்தைக் கற்கண்டுத் தூளுடன்,அல்லது அதுபோன்றவைகளுடன் அனுப்பானித்து ஏன் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தச் சத்தானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுவிடுவது சுபாவமாகையால் அதைச் சமப்படுத்த அல்லது சாந்தி செய்ய வேண்டியதற்காகவேயாம்.

நவம்பர் மத்திம பாகத்திலிருந்து ஜனவரி மத்திய பாகம் வரையில் சுக்குச் சூரணத்துடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் ஏன் அனுப்பானித்துச் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தங் குறைந்து போவது சுபாவமாகையால்,அவ்விதக் குறைவு நேரிடாதிருப்பதற்காகவேயாம்.

ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை 

அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள காரணமாவது,அக்காலங்களில் கபமதிகரிப்பது சுபாவமாகையால், அவ்விதம் அது அதிகரிக்காமலிருப்பதற்காகவேயாம்.

மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவமாகையால் 
 அதனைக் கிரமப்படுத்த தேனிற் குழைத்து அல்லது அதைப் போன்றவவைகளுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும்.
மே மாதம் மத்திம பாகத்திலிருந்து ஜீலை மாத மத்திம பாகம் வரையில் வாதமதிகரிப்பது சுபாவமாகையால் அதனைச் சாந்தப்படுத்த   வெல்லத்துடன் அனுப்பானித்துட் கொள்ள வேண்டியது விதியாகும்.

 ஜீலை மாதம் மத்திம பாகத்திலிருந்து செப்டம்பர் மாத மத்திம பாகம் வரையில் பித்தமதிகரிப்பது சுபாவமாகையால் கடுக்காயை உப்புடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் என்று விதியேற்படுத்தப்பட்டிருக்கிறது.

சிகிச்சர்கள் அல்லது மருத்துவர்கள் இக்கால பேதத்தின் விகற்பத்தைக் கவனத்தில் வைத்து மற்ற வியாதிகளின் சிகிச்சைகளிலும் , இவ்விதியை அனுசரித்து அவுடதப் ( மருந்துகள் கொடுத்தல் ) பிரயோகம் செய்வார்களாயின் கடவுளின் கிருபையால் எந்த வியாதியையும் சவுக்கியப்படுத்துவதில் சித்தி பெறுவார்களென்பது நிச்சயம்.

இதனுடன் அவரவர்களின் தேகசுபாவ விகற்பங்களையும் ( வாத தேகம் ,பித்த தேகம், சிலேற்பன தேகம், வாத பித்த தேகம், பித்த வாத தேகம், பித்த சிலேற்பன தேகம், சிலேற்பன பித்த தேகம், வாதசிலேற்பன தேகம், சிலேற்பன வாத தேகம் ) கவனிக்க வேண்டுமென்பதும் அவசியமாகையால், அதனையும் கவனித்துச் சமயோசிதமாக அனுபானாதிகளை மாற்றியும் அதிகப்படுத்தியும் கொள்வது சிகிச்சர்களாகிய மருத்துவர்களின் கடமையாகும்.

இம் இவற்றை கருத்தில் கொண்டு உணவுகளில் தன்மையைப் பொறுத்து கால பேதங்களில் சரியாக உண்டு வந்தால் நோய் அணுகாது. இதையே வள்ளுவர் தன் குறளில் மருந்து என்ற தலைப்பில் ( மருந்து என்ற அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் எதிலும் மருந்து பற்றியே இராது ) வலியுறுத்தி உள்ளார்.   தை சாதாரண நபர்களு
கடுக்காயானது வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் முத்தோஷங்களின் விகற்பத்தால் ஏற்படும் வியாதிகளை நீக்குகிறது. ஆனால் புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, ஆகிய இம்மூன்று சத்துக்களும் பித்த விகற்பத்தை நீக்குகின்றன. 

கடுக்காயில் உள்ள கசப்பு, துவர்ப்பு, உறைப்பு ஆகிய இம்மூன்று சத்துக்களும் கப விகற்பத்தை நிவர்த்தி செய்கின்றன.

துவர்ப்பு, உறைப்பு இவ்விரண்டும் வாத விகற்பத்தை நிவர்த்தி செய்கின்றன. இவையெல்லாம் கடுக்காயில் இருக்கின்றன.

கடுக்காயின் விஷேஷ குணம் கீழ்க்காணும் ரோகங்களில், கடுக்காய் அதிகமாக கீழ்க்காணும் நோய்களில் குணப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது, அவையாவன,
இருமல் ரோகம், சுவாச ரோகம், மூல ரோகம், குஷ்ட ரோகம், இரைப்பை சம்பந்தமான ரோகம், குரற்கம்மல் ரோகம், சுர ரோகம், அஜீரண ரோகம், வயிற்றுப் பொருமல் ரோகம், வாந்தி ரோகம், விக்கல் வியாதி, தாக ரோகம், சொறி, மஞ்சட்காமாலை, குன்ம ரோகம், மண்ணீரல் ரோகம், கல்லடைப்பு, ஈரல் ரோகம், மது மேகம், இந்திரிய சிராவக ரோகம், வீக்கங்கள், பிரமேகம், புண்கள், வயிற்றுக் கட்டிகள், சங்கிரகணி {சங்கடங்கள் தோற்றுவிக்கும் கிரகணி,இதை ஆங்கில வைத்தியத்தில் IBS (IRRITABLE BOWEL SYNDROME) என்பார்கள்}, இருதய ரோகங்கள், முதலியவைகளுக்கு அருமையான அமிர்தமாக கடுக்காய் வேலை செய்கிறது.

இன்னும் இது மூளையையும் இருதயத்தையும் பலப்படுத்துகிறது. ஞாபக சக்தியை விருத்தியாக்குகிறது. மல பந்தம் முதலிய கட்டுக்களை நீக்குகிறது. பைத்தியம், மனக்கிலேசம், சித்தப் பிரமை, ஆகிய மனம் சம்பந்தமான வியாதிகளில் மிக அதிகமாக உபயோகப்படுகிறது.

பெரு வியாதி,மார்பு துடித்தல், தொந்தசுரம், வாத மூல ரோகம், ஆகியவைகளுக்கும் உபயோகப்படுகிறது. கபம் முதலிய துர் நீர்களை வறளச் செய்து குணப்படுத்துகிறது. வயிற்றிலுள்ள உள்ளுறுப்புக்களை பலப்படுத்துகிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. காக்கை வலிப்பு(கால்,கை வலிப்பு), பக்க வாதம், ஆகிய வியாதிகளிலும் பயன்படுகிறது.கடுக்காயை உபயோகிப்பதில் பல மர்மங்களும் உள்ளன.அந்த மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.
''க''வது(ஒன்றாவது) மர்மம்
கடுக்காயை மென்று தின்பதால் தீபாக்கினி அதிகப்பட (பசி அதிகப்படும்) ஏதுவாகும்.சூரணம் செய்து சாப்பிடுவதால் தாராளமாகப் பேதியாகும் (இதையே அவன் எனக்கு கடுக்காய் கொடுத்துவிட்டான் என்பார்கள்). கஷாயஞ் செய்து பானஞ் செய்து வந்தால் மலத்தை பந்தப்படுத்தும்.

இதனைச் சுட்டுக்கரியாக்கிப் பொடித்து வஸ்திரகாயஞ் செய்து(துணியில் சலித்து) தகுந்த அனுப்பானங்களில் உண்ண வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூவகைத் தோஷங்களையும் சாந்தப்படுத்தும்.
  
கடுக்காயை உபயோகிப்பதில் இன்னும் பல மர்மங்களும் உள்ளன.இரண்டாவது மர்மம் முதல் அந்த மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.
''உ''வது(இரண்டாவது) மர்மம்

கடுக்காயை ஆகாரஞ் சாப்பிட்ட பின்பு மென்று தின்பதால் பலம் புத்தி ஆகியவை ஆகியவை அதிகப்படும்.தேகம் செழிப்புண்டாகும்.தேக வசீகரமுண்டாகும்.வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூவகைத் தோஷங்கள் நாசமாகும்.மலம் கிரமப்பட்டு தேகாரோக்கியம் உண்டாகும்.

 ''ங"வது(மூன்றாவது) மர்மம்

கப சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயை உப்புடன் சாப்பிடத் தீரும்.பித்த சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயைக் கற்கண்டுடன் மிஸ்ரமித்து சாப்பிடத் தீரும்.வாத சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயை நெய்யுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும்.எல்லா ரோகங்களுக்கும் பொதுவாக வெல்லத்துடன் மிஸ்ரமித்துச் சாப்பிட தீரும்.
''கடுக்காயின் பிரமாணம்'
(சாப்பிடும் அளவு), அநுபானம்,பரிகாரம்
கடுக்காயின் சூரணத்தை முக்கால் முதல் ஒரு விராகனிடை வரையில் சாப்பிடலாம்.(ஒரு வராகன் என்பது 35 கிராம் ஆகும்.)

இதன் அநுபானமும், பரிகாரமும், தேனாகும்.சில சமயம் கடுக்காயை அதிகம் சாப்பிட்டுவிட்டதால் ஏதேனும் கெடுதியுண்டானால் தேனைப் பானம் செய்யத் தீரும்.தேனானது கடுக்காய்க்கு அநுப்பான(மருந்தை சாப்பிட உடன் உபயோகிக்கும் பொருள்) வஸ்துவாயிருப்பதுடன்,அதற்கு பரிகார(மருந்தை அதிகம் சாப்பிட்டதால் உண்டான கெடுதலை நீக்கும் பொருள்) வஸ்துவாகவும் இருக்கிறது.    

கடுக்காயை உபயோகிப்பதில் இன்னும் பல மர்மங்களும் உள்ளன.அவற்றுள் அனுபவ சித்தமான சில முறைகளும்,மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.

No comments:

Post a Comment