Wednesday, January 9, 2013


ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்(பாகம்3)

ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும் வலைப்பூவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு புள்ளியான திலர்த வர்மத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட திருமதி கவிதா அவர்கள் வாழ்நாள் முழுவதும் , எல்ட்ராக்ஸின் என்ற மருந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அவத்தையில் இருந்து விடுபட்ட விவரம் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
   
என்னிடம் வரும்போது தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் மிக அதிக அளவில்TSH(65)ம்,குறைந்த அளவில் தைராய்டு ஹார்மோன் T4(4.6) ம் இருந்தது .தற்போது கடைசியாக உள்ள பகுப்பாய்வில் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் TSH(3.143)ம்,தைராய்டு ஹார்மோன்  T4(7.3)என்ற சரியான அளவில் உள்ளது.இந்த அளவிற்கு குணம் அளிக்கும் எளிமையான நமது ஆன்மீக ரீதியான பல விஷயங்களை விட்டுவிட்டு நமது மக்கள் குப்பைகளை மூட்டை கட்டி வைத்துக் கொண்டுள்ளோம்.அவற்றை நமது மக்கள் பெரிதாக மதிப்பது அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது.


மேலும் தைராய்டு பற்றி அறிந்து கொள்ள கீழ்க் காணும் வலைப் பூவை பார்வையிடவும்




அப்படிப்பட்ட மேலும் ஒரு விஷயத்தை இங்கே தருகிறேன்.நமது பரம்பரையான பழக்க வழக்கங்களில் ஒன்றான தாய்மாமாவின் மடியில் உட்கார வைத்து காது குத்துவார்களே அது எந்த அளவிற்கு பலன் தரக் கூடியது என்று இங்கே தருகிறேன்.இந்தக் காது குத்தும் பழக்கத்தை எனது நண்பர் மூட நம்பிக்கை என்று விட்டு விட்டதாகக் கூறினார்.அது எனக்கு மிக வருத்தத்தை அளித்தது.நமது முன்னோர்களின் அறிவு எடுத்துக் கூறுபவர்கள் இல்லாததால் எவ்வளவு முட்டாள்தனமாக இதை நினைக்க வைத்துவிட்டது.

    இந்தப் படத்தைப் பாருங்கள் .காது குத்தும் இடம் அக்கு பஞ்சர் தத்துவத்தில்,காது அக்கு பஞ்சர் (AURICULAR THERAPHY) கண்களை வியாதியின்றி வைத்துக் கொள்ளவும்,வந்த வியாதியை சரி செய்யவும் , உதவும் கண்களுக்குள்ள புள்ளியில்தான் காது குத்தப்படுகிறது.

எனது நண்பர் இப்படிப்பட்ட அற்புதமான தமிழர் அறிவைப் புறக்கணித்து தன் பிள்ளைகள் பின்னாளில் கண் குறைபாட்டினாலும்,கண் வியாதியிலும் அவதிப்படுவதற்கு அவரே காரணமாகிவிட்டார்.இந்த அறிவில்லாத செயலை  பகுத்தறிவு என்று கூறிக் கொள்கிறார்கள்.
இதை ஒரு பாடலில்
கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ!
கூறியிருப்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

நமக்கு விநாயகர் வழிபாடு எப்படி செய்வது என்று தெரியும்.விநாயகர் முன்னெற்றி பகுதியில் கொட்டிக் கொண்டு காதிரண்டையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம்(உக்கி) போடுவோம்.இதனால் ஞானக் கடவுளான விநாயகர் படிப்பையும்,அறிவையும்,ஞானத்தையும் கொடுப்பார் என்றால் மூடத்தனம்,பகுத்தறிவு வாதத்திற்கு ஒவ்வாதது என்பர்.ஆனால் இதை விநாயகர் வழிபாடாகச் செய்தாலும்,பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காத மாணவனுக்கு தண்டனையாக ஆசிரியர் கொடுத்தாலும் இது படிப்பையும்,அறிவையும்,ஞானத்தையும் கொடுத்தே தீரும்.
காதைப் பிடித்து நன்றாக தோப்புக்கரணம்(உக்கி) போடும்போது உடலின் அத்தனை உள் உறுப்புக்களும்(மேலே கொடுத்துள்ள காது படத்தில் REFFLEX POINTS கொடுக்கப்பட்டுள்ளது )  நன்றாக இயங்கி உடல் நலமும் பேணப்படும் என்பது உங்களுக்கு அளிக்கப்படும்ADDITIONAL BONUS.
கீழே கொடுத்துள்ள ஒளிப்படங்களைப் பாருங்கள்.அதே தோப்புக்கரணம்(உக்கி)  SUPPER BRAIN YOGA வாக உங்கள் முன்.நான் சொன்னது புரியும் என்றே நினைக்கிறேன்.



இனி அக்கு பங்சர் தத்துவங்களையும் நம் நாட்டு பழக்க வழக்கங்கள் எதை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பதை இதே தலைப்பில் விவரிக்க இருக்கிறேன்.பகுத்தறிவு வாதம் என்று எப்படிப்பட்ட விஷயங்களை தொலைத்துவிட்டோம் என்று நான் வருந்துவது உங்களுக்கு புரியும் என்றே நினைக்கிறேன்.
அடுத்த மடலில் சந்திப்போம்.
நன்றி
சாமீ அழகப்பன்

Post Comment


SUNDAY, AUGUST 1, 2010


ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்(பாகம்2)ஸ்டிக்கர் பொட்டு பற்றி ஆனந்த விகடன் வெளியீடு

ஸ்டிக்கர் பொட்டு பற்றி ஆனந்த விகடன் வெளியீடு பற்றி ஆனந்த விகடன்
வெளியீட்டை அப்படியே பிக்சர் டாக்குமென்ட் ஆக தந்துள்ளேன்.நான் வெளியிட்ட ப்ளாக்கை படித்துவிட்டு எனது நண்பர்  இதை கொண்டு வந்து தந்தார். நமது ப்ளாக் நண்பர்களுக்காக இங்கு தந்துள்ளேன்.அதில் ஸ்டிக்கர் பொட்டு பற்றி ,தோல் வியாதி பற்றி மட்டுமே குறிப்பிட்டு உள்ளது.ஆனால் அதன் மற்ற பக்க விளைவுகள் பற்றி நமது முன் வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளேன்.




 ஆனந்த விகடனுக்கு நன்றி

Post Comment


MONDAY, JULY 19, 2010


ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்(பாகம்1)


திலர்தவர்மம் என்பதே சுடரொளிக்காலம்

பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர் பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல எதிர்கால சந்ததிகளையே கேள்விக் குறியாக்கியுள்ள அவலம் பற்றிய ஒரு கட்டுரையே இது.

இதில் பல அதீத விசயங்களை குறிப்பிட்டுள்ளேன்.நடு நெற்றியில் உள்ள லலாட மத்தியை(புருவமத்தி என்றும் அழைக்கப்படும்)நெற்றிக்கண் என்றும் அழைக்கப்படும்.இதன் மூலம் திபேத்திய லாமாக்கள் மற்றவர்களின் ஆரா என்ற ஒளியுடலை காண உபயோகிக்கிறார்கள்.எனவேதான் சிவனுக்கு இந்தக் கண்ணை வெளிப்படையாக தெரியும் வண்ணம் படங்களாக வைத்துள்ளார்கள்










பழங்காலத்திலும் இக்காலத்திலும் மந்திரவாதிகள்,ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்கினைச் சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும் சக்தியை செலுத்துவார்கள்.மேலும் அந்த பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு புள்ளியாக அக்குபங்சரில் (EXTRA-1 IN DU-MERIDIAN)(DU AND REN மெரிடியன்களைப் பற்றி பின்னொரு கட்டுரையில் காண்போம்)பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள் திலர்த வர்மம் என வர்மப்பிரிவில் குறிப்பிடுகின்றனர்.யோக சாதன முறைகளில் இதை ருத்ர க்ரந்தி என அழைக்கப்படுகிற்து.படத்தில் 

காண்க. `ஆக்கினைச் சக்கரம் என்றால் கட்டளையிடும் சக்கரம் என்று பொருள்.இந்த ஆக்கினைச் சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம், மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்? செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம்(PHYCHIC ATTACKS&EVIL SPIRITS ATTACHMENTS)போன்றவற்றையும் செயல்படுத்த முடியும். 






மேலும் clairvoyance என்ற தொலைவில் உணர்தல் போன்றவற்றிற்கும்,அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நோய்களைக் களையவும்,வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் இந்த ஆக்கினைச் சக்கரம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்

ஆக்கினைச் சக்கரம் யோக சாதன முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து. தியான முறைகளின் மூலமாக முக்தியை அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பெண்களை இது போன்ற தொல்லைகளிலிருந்து காப்பாற்றவும்
ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம் பொருந்திய குங்குமம்.நல்ல மஞ்சளையும் வெண்காரத்தையும்(சிலர் நன்றாக ஒட்டுவதற்காக நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்) சேர்த்தரைத்து மங்கல மந்திரங்களை ஓதி
செய்யப்படும் குங்குமம், பெண்களைப் பல விதஙகளிலும் காக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை,இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது.

மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும்.இப்படிப்பட்ட சுரப்பிகளின் தலைவனை கட்டுப்படுத்தும் கட்டளைச் சக்கரத்தை குளுமையாக வைத்திருக்கவே குளுமையை கொடுக்கும் மஞ்சளை வெண்காரத்துடன் சேர்த்து சிவப்பாக மாற்றி உபயோகிக்க சித்தர்கள் கொடுத்துள்ளார்கள்.(சிவப்பாக மாற்றி உபயோகிக்கும் ரகசியம் பின்னொரு கட்டுரையில் காண்போம்).
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID STIMULATING HARMON)தைராய்டு சுரப்பியை செயல்படுத்த வைக்கும்.தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் இரண்டும்(T3,T4) பெண்களின் மாதாந்தர விலக்கை(MONTHLY PERIODS) நிர்ணயம் செய்கிறது.இதே சுரப்பு நீர்கள்தான் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பையும் நிர்ணயம் செய்யும்.


ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் தனது முதல் ருதுவான மாதாந்தர விலக்கை(MONTHLY PERIOD) அடைகிறாளோ அதே நட்சத்திரத்தில் மீண்டும் மீண்டும் 27 நாட்களுக்கு ஒரு முறை மாதாந்தர விலக்கானால் மட்டுமே அவர்களது ருது ஜாதகமே வேலை செய்யும்.ருது ஜாதகமே பொய்யாகப் போகும் நிலைமையை இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் உருவாக்கியுள்ளன.


தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.இதன் பின் விளைவுகள் என்னென்ன என்று இங்கு சொல்லாமல் விடுகிறேன்.எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பு குறைவதாலும் உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக் குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம் அதிகமாக வளர்ந்து பெண்கள்,ஆண் தன்மை கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக நேரிடுகிறது.இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.அவையெல்லாம் சித்தர்கள் அருளால் தீரவே இந்தக் கட்டுரை.


எனவே ஸ்டிக்கர் பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம் காப்பதுடன் நம் நலமும்
காப்போம்.

No comments:

Post a Comment