Friday, January 11, 2013

ஹரிஹரனின் காதல் வேதம் பாடல்கள்




பிற மொழி இசை ஆல்பங்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் இசை ஆல்பங்கள் வெளிவருவது மிகக் குறைவு. எனினும் நல்ல இசை ஆல்பப் பாடல்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.அந்த முறையில் 1998ல் கவிப்பேரரசுவைரமுத்து அவர்களின் வைர வரிகளுக்கு திரு.உத்பால் பிஸ்வாஸ் இசையமைத்து ஹரிஹரனும் சுஜாதாவும் பாடி வெளியான காதல் வேதம் இசை ஆல்ப பாடல்கள் என் மனதை விட்டு இன்றும் கூட நீங்காமலிருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை youtube வீடியோவாக மாற்றியுள்ளேன். இதமான இசையை ரசிப்பவர்கள் இது போன்ற பாடல்களுக்கு மனதை பறிகொடுப்பது நிச்சயம்.




கண்ணில் என்னென்ன மயக்கம்


பல்லவி

கண்ணில் என்னென்ன மயக்கம்
வார்த்தை நெஞ்சோடு துடிக்கும்-

சோகம் சந்தோஷம் கலந்து
என் நெஞ்சில் பாரங்கள் கனக்கும்-கண்ணில்

சரணம்-1

பாலைவனமொன்றில் விழுந்தேன்
நீரே இல்லாமல் அலைந்தேன்
உயிரே உலர்கின்ற நேரம்
உயிரில் துளியாக விழுந்தாய்-2

வாழ்வில் நான் கண்ட வரமே
யாரும் பாடாத ஸ்வரமே-2

பொங்கும் மின்சாரச் சிரிப்பில்
எந்தன் வாழ்வு
அர்த்தங்கள் பெறுமே-கண்ணில்

சரணம்-2

காயம் ஆறாத போதும்
கண்ணீர் என் காயம் ஆற்றும்
கண்ணீர் ஆற்றாத போதும்
உன் கண்கள் காயங்கள் ஆற்றும்-

பூமி தொடாத மழைப் போல்
புனிதம் உன் கண்ணில் பார்த்தேன்-2

ஜீவன் போகின்ற போதும்
சின்னக் கைகள்
என் நெஞ்சில் சேர்ப்பேன்-கண்ணில்

நீ என்பதில் நானும் அடங்கும்


பல்லவி

நீ என்பதில்
நானும் அடங்கும்
நானென்பதில் நீயும் அடங்கும்

நாம் என்ற சொல்லில்
உலகம் முழுதும் அடங்கும்-நீ 

சரணம்-1 

கண்ணாடி வளையாக இருந்தால்
உன் கை கொண்ட மென்மை ரசிப்பேன்

கதை பேசும் கொலுசாக இருந்தால்
உன் காலோடு பாடி கிடப்பேன்

போயும் போயும்
நானும் ஒரு ஆணாகினேன்
ஏனாகினேன்-நீ

சரணம்-2 

கார்காலம் உன் கூந்தல் கண்ணே
அதில் நிலவொன்று காயும் முன்னே

பகலோடு விண்மீன்கள் பார்த்தேன்
மீனல்ல உன் கண்கள் பெண்ணே

காலங்களும் உன்னைக் கண்டு
தடுமாறுதே
தடம் மாறுதே-நீ

நட்சத்திர பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா


பல்லவி
நட்சத்திர பூங்காவில்
நீ மட்டுமே வெண்ணிலா-2
நூறு பெண்கள் வந்தாலும்
நீ மட்டுமே என் நிலா-2

சரணம்-1

உன்னை விட யாரும்
அழகில்லை என்று-2நீதிமன்றம் போய் உரைப்பேன்

உன்னை விட யாரும்
அழகென்று சொன்னால்
எந்தன் கண்ணை நான் எரிப்பேன்

என் காதலி...

காலடியில் நான் மரிப்பேன்-2-நட்சத்திர

சரணம்-2

வார்த்தைகள் செய்த
தவங்களில் தானே-2
உன் உதடு தீண்டியது

மலர்களும் செய்த
தவங்களில் தானே
உந்தன் குழல் சூடியது

என் ஜீவனே...

உன் உடல் சேர்ந்திருக்க
என்னத் தவம் நானிருக்க-நட்சத்திர

மலையும் நதியும் நிலமும் ஒருநாள் மறையும் காலம் வந்தாலும்
பல்லவி-1


மலையும் நதியும்
நிலமும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும்

நீ... பிரியாதிரு
சகியே... பிரியாதிரு

பல்லவி-2

வானும் மண்ணும்
நீரும் ஒருநாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும்

நீ... பிரியாதிரு
உயிரே... பிரியாதிரு

பாதி ஜீவன் பிரியும் போது
மீதி வாழுமா

சகியே பிரியாதிரு
பெண்மையே பிரியாதிரு

சரணம்-1 

முள்ளிலே கிடந்தாலும்
ஆணி மேல் நடந்தாலும்-2
கண்மணி மெய் தீண்டினால்
காயங்கள் பூவாகும்

காதலி கண் ஜாடையில்
சிலுவையும் சிறகாகும்

எந்த மாதமும்
பௌர்ணமியே...தேயாதிரு
அங்குலமும் நீங்காதிரு-வானும்
சரணம்-2
வண்டு வந்து தேனுண்டால்
பூவின் வலி யார் கண்டார்

நேசம் மட்டும் நீ கண்டாய்
நெஞ்சின் வலி யார் கண்டார்

பூக்களில் கண்ணீர் துளி
பொங்குதே யார் தந்தார்

சிந்திய கண்ணீரிலும்
உன் முகம் தானாடுது

காதல் ஒரு போர் போன்றது
என்பதே நான் கண்டது

கண்கள் கேட்குதே
காதலனே... பிரியாதிரு

கண் திரையில் மறையாதிரு-மலையும்

சரணம்-3
சூரியனும் அணைந்தாலும்
சந்திரனும் அவிந்தாலும்-2

உன் கண்ணில் சந்திரனுண்டு
இரவோடு வலம் வருவேன்

மறு கண்ணில் சூரியனுண்டு
பகலோடு வலம் வருவேன்

உந்தன் கண்களை
காதலியே... மூடாதிரு

கையருகே நீங்காதிரு-மலையும்http://youtu.be/nfyUjFO1s-M

இரு கண்ணும் தூங்காமலே


பல்லவி

இரு கண்ணும் தூங்காமலே
ஒரு சொல்லும் பேசாமலே
வாழ்வோம் ஆயிரம் காலம்
மௌனங்கள் தானே காதலின் வேதம்-2

சரணம்-1

உரையாடவே மொழி தேவையே
உறவாடினால் மொழி ஊமையே

மனதோடு தான் பல ஆசையே
விரல் பேசுமே பரிபாஷையே-2-இரு கண்ணும்

சரணம்-2 

ஓசையே கொஞ்சம் ஓய்வெடு
மௌனமே வந்து பாய்கொடு

வார்த்தையே நீ போய்விடு
மன்மதா உன் வில்லெடு-இரு கண்ணும்

சரணம்-3

உடல் சேரும் இன்பம் ஏனடி
உயிர் தேடும் தேடல் தானடி

மொழி தீர்ந்து போகும் வேளையில்
மோட்சங்கள் தோன்றும் பாரடி-2-இரு கண்ணும்
அழகான காதல் நிலா

பல்லவி
அழகான காதல் நிலா
அடிவானில் வாவென்றதே

அடிவானில் நான் ஏறினேன்
கடலோடு அது வீழ்ந்ததே

கடலோடு நான் மூழ்கினேன்
கரை சேர்ந்த அலையானதே

அழகான காதல் நிலா
அடிவானில் வாவென்றதே

சரணம் 1 
நம் பூமி கடல் போன்றது
நம் வாழ்வு அலை போன்றது

நம் காதல் உறவானது
அலை மீது குமிழ் போன்றது

குமிழோடு குடியேறவே
குறை நெஞ்சு கூத்தாடுது-அழகான

சரணம் 2
அலைகின்ற பூங்காற்றிலே
அவள் சுவாசம் நான் தேடவோ

அழிகின்ற மணல் மேட்டிலே
அவள் பாதம் நான் காணவோ

கண் தூங்க முடியாமலே
கனவோடு நான் வாழவோ-அழகான
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

பல்லவி
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே
என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

வீட்டில் யாரும் இல்லை
வெளியில் யாரும் இல்லை

ஊரில் ஒரு ஓசையில்லை
பால் போல வா வா
பள்ளி கொள்ள நீ வா-என் நெஞ்சில்

சரணம்-1

விண்மீனும் மேகங்களும்
கண் தூங்கும் போது
வாய்முத்தம் நீ சிந்தவா
வாய்ப்புள்ள போது-2

அடி நெஞ்சு தள்ளாடியே
அலை பாயும் போது
தலை சாய்வதேது-என் நெஞ்சில்

சரணம்-2
நான் உன்னை
பார்த்து பார்த்து தேய்கிறேன்
முகில் என்னும் ஆடை கொண்டு
மூடினேன்-2

முகில் என்னும்
துகில் கொள்ளவே
உன் கையை நீ நீட்டினால்
நான் என்ன தான் செய்வதோ-என் நெஞ்சில்

சரணம்-3

என் உள்ளம்
வெறும் கோப்பை தான்
தடுமாறும் கண்ணே
உன் காதல் நீரூற்றினால்
ஆடாது பெண்ணே-2
நீ வந்து என் கோப்பையை
நிறைவாக மாற்று
உடையாமல் ஊற்று-என் நெஞ்சில்

No comments:

Post a Comment