Friday, February 8, 2013

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 4 )


சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 3) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

மேலே உள்ள படத்தில் உள்ளது சீனிக்கட்டியேதான்
சென்ற பதிவில் நல்ல சர்க்கரை , கெட்ட சர்க்கரை என்பது  பற்றிப் பார்த்தோம்.அது எப்படி நம்முடலில் நடை பெறுகிறது என்பதையும் அதை எப்படி தடுக்கலாம் என்பதையும் இப்போது விபரமாக காணலாம்
முதன் முதலில் நாம் சிறு வயதாக இருக்கும் போது நம்முடல் நல்ல ஒரு கருவியாக இருக்கிறது .அதில் இடும் எதையும் எந்த சூழ்நிலையிலும் நல்ல தரமான சர்க்கரையை உற்பத்தி செய்யும் வல்லமை உள்ளதாக இருக்கிறது .அது பின்னாளில் நம்மால்தான் கெடுக்கப்படுகிறது .எப்படி என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒரு அடுப்பு இருக்கிறது .அதில் விறகிட்டு எரிக்க ஆரம்பிக்கும் போது முதலில் அதற்கு சிறு மென்மையான பொருட்கள் நெருப்பை ஆரம்பிக்க தேவைப்படுகிறது ( தாள்கள் , மரப்பட்டைகள் , சிறு குச்சிகள்) , பிறகு சற்று அதிக பருமனான குச்சிகள் தேவை , அதன்பின்தான் விறகுக் கட்டைகளை எரிக்கும் வல்லமை உள்ளதாகிறது   நெருப்பு .இதிலேயே அதிக விறகுகளைத் திணித்தால் நெருப்பு அணைந்து புகைகிறது.பிறகு நெருப்பு அணைந்தும் விடுகிறது.
இப்படி  அதிக காற்றும் (ஆக்ஸிஜன்) இல்லாமல் அதிக எரிபொருளும் இல்லாமல் மிதமான சரியான எரிப்பு எரிப்பதை ஆங்கிலத்தில் STOICKIYOMETRIC FIRING என்பார்கள்.இப்படி எரிக்கப்படும் போதுதான் சரியான  காற்று இருந்தால்கரியோ அல்லது எவ்விதமான எரிபொருளோ  முழுவதுமாக எரிந்து  கரியமில வாயுவாக ( கார்பன் டை ஆக்சைடாக {CARBON DI OXIDE[CO2] }) மாறும் .
C + O2 —>  CO2
இப்படி இல்லாமல் எரிக்கப்படும் போது அதிக காற்று உள்ளிருக்கும் வெப்பம் காற்றுடன் எடுத்துச் செல்லப்பட்டு அடுப்பு குளிர்ந்துவிடும் . குறைவான எரி பொருள் இருந்தாலும் இதே நிலைதான். அதிக எரி பொருள் இருந்தாலும் , குறைவான காற்று இருந்தாலும் , கரியோ அல்லது எவ்விதமான எரிபொருளோ  முழுவதுமாக எரிந்து  கரியமில வாயுவாக ( கார்பன் டை ஆக்சைடாக {CARBON DI OXIDE [CO2]}) மாறாமல் , ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதி மட்டுமே எரிந்து கார்பன் மோனாக்ஸைடாக (CARBON MONOXIDE {CO}) மாறுகிறது .
C + O  —>  CO
இந்த கார்பன் மோனாக்ஸைடு மிக கடும் விஷத் தன்மை கொண்டது . காரை நிறுத்தி வைத்துக் கொண்டு  A /C போட்டுக் கொண்டு தூங்கியவர்கள் இறப்பது இந்த கார்பன் மோனாக்ஸைடினால்தான் . இது போன்ற தொரு  விஷமித்த நிலை வயிற்றில் ஏற்படுவதனால்தான் சர்க்கரை நோய் உருவாகிறது.
நம் நாட்டில் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியால் உயிர் விடுபவர்களைவிட, அதிகம் சாப்பிட்டதனால் அதிக கொலஸ்ரால் , அதிக சர்க்கரை, அதிக உப்பு , அதிக எடை என்று அதிகரிப்பதனால் உயிர் விடுபவர்கள் அதிகம் பேர். மூன்று வேளையும் தவறாமல் வயிற்றில் கொட்டுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். மேலே தொடரும் முன் உணவு உண்ணுவதைப் பற்றி திரு வள்ளுவர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.
மேற்கண்ட இணைப்பில் கூறியிருப்பதை சாப்பிடுவதில் கடைப்பிடித்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வராது . இருந்தாலும் அது குணமாகும்.
மேலே  சொன்னவாறு அடுப்பில் நெருப்பு எரிப்பதைப்  போலத்தான் நம் வயிற்றில் உள்ள ஜடராக்கினியும் செயல்படுகிறது ( ஹைட்ரோ குளோரிக் அமிலம் {HYDROCHLORIC  ACID [H CL ] }). உணவைக் கரைக்கும் அக்கினியான ஜடராக்கினியும் சாதாரண நெருப்பு எரியும் விதத்தை ஒத்ததே என்பதை முதலில் இங்கே சொல்லிக் கொள்ளுகிறேன்.
நாம்  பிறந்தவுடன்  ஜடராக்கினி கிளர்ந்து எழுந்து பசி என்ற உணர்வைக் கொடுக்கிறது .குழந்தையாக இருக்கும் போது பசியால் அழுகிறோம். தாயும் நம் பசி உணர்ந்து பால் கொடுக்கிறார்கள்.இது நெருப்புக்கு மென்மையான காகிதம் போன்று நம் ஜடராக்கினியை நன்கு தொடங்கி எரிய உதவுகிறது. பின்பு சிறுவயதாக இருக்கும் போது சிறு , சிறு உணவுகளை மசித்து கொடுக்கிறோம் .அவை சிறு குச்சிகள் போல ஜடராக்கினி வளர உதவுகிறது.
இவை எல்லாம் நம்மிடம் முறையாக  நல்ல சர்க்கரை உற்பத்தியாக உதவியாக இருந்தது.நல்ல சர்க்கரை என்றால் என்ன???உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை நல்ல சர்க்கரையாக இருந்தால் நம் உடலில் உள்ள கணையம் அதனை சோதனையிட்டு ஒரு இன்சுலினை கையில் கொடுத்து அனுப்புகிறது .இதுவே நல்ல சர்க்கரை.இன்சுலின் கையில் இல்லாத சர்க்கரை கெட்ட சர்க்கரை.இதனையே சிறு நீரகம் நம் உடலைவிட்டு சிறு நீர் மூலமாக வெளியேற்றுகிறது . இது கழிவே தவிர இது நல்ல சர்க்கரை அல்ல அது சத்துமல்ல.
நம்முடலில் உள்ள எல்லா செல் அணுக்களும் , சோடியம், பொட்டாசியம் , போன்ற எல்லா தாதுக்களையும் தாமே எடுத்துக் கொள்ளும்.ஆனால் சர்க்கரையை மட்டும் இன்சுலினுடன் இருந்தால் மட்டுமே நல்ல சர்க்கரை என்று எடுத்துக் கொண்டு தனக்குள் எடுத்துக் கொள்ளும்.
எடுத்துக் காட்டாக நம்மிடம் சிறு குழந்தையாய் இருக்கும் இந்த வேளையில் வாயில் உமிழ் நீர் நன்றாக சுரக்கப்பட்டு , இரை நன்கு அரைக்கப்பட்டு , உள்ளே அனுப்பப்பட்டு இரைப்பையும் ஜீரண உறுப்புக்களும் சேர்ந்து  ஒரு 600 நல்ல சர்க்கரை அணுக்களை  உற்பத்தி செய்கின்றன என்று வைத்துக் கொண்டால் அப்போதைய நம் உடலுக்கு தேவையான சர்க்கரை 50 சர்க்கரை அணுக்கள் என்று கொண்டால் அவை நம் செல்களின் உபயோகத்திற்கு உபயோகம் ஆனது போக  மீதம் உற்பத்தி ஆன 550 நல்ல சர்க்கரையும் செறிவூட்டப்பட்ட சர்க்கரையாக (கிளைக்கோஜனாக) மாற்றப்பட்டு பிற்கால தேவைக்காக சேமித்து வைக்கப்படுகிறது.
அடுத்து குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் நிலை வரும் போது , அப்பா (ஸ்கூல் வேன்) பள்ளிப் பேருந்து வந்துவிட்டது என்று கத்த, அம்மா பிள்ளைக்கு இந்தா தின்னு , தின்னு என்று ஊட்ட அல்ல, திணிக்க முற்படும் போது அந்தக் குழந்தை உணவை உமிழ் நீருடன் கலந்து மென்று தின்னாமல் விழுங்க முற்படுகிறது ,விக்கும் போது தண்ணீரை ஊற்றி உள்ளே திணித்து அனுப்பிவிடுவோம்.இங்கேதான்  சர்க்கரை நோய் உட்பட அனைத்து வியாதிகளுக்கும் மூல காரணமான பிரச்சினை ஆரம்பிக்கிறது.
நமது எச்சிலில் சுண்ணாம்புச் சத்து உள்ளது .அது இரையை  வாயில் மெல்லும் போது ,சுவை மறையும் நேரம் , அந்தச் சுவையை நாக்கு சுவை வாரியாக  பிரித்து அந்தந்த சுவைக்குரிய ராஜ உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அந்த உறுப்புக்களும் ,உள்ளே வரும் உணவின் தன்மையை பொறுத்து சீரண நீர்களை சுரந்து உணவை இரைப்பையில் வரவேற்க தயாராக இருக்கின்றன. எடுத்துக் காட்டாக கொழுப்புப் பொருட்களை நாம் சாப்பிடும் போது பித்தப் பையில் இருந்து பித்தம் சுரந்து கொழுப்பை சீரணிக்க தயாராக வயிற்றை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
அவ்வாறன்றி நாம் அரை குறையாக மென்று விழுங்கும் போது , எச்சில் சரியாக சுரக்காமல் , உணவு இரைப்பாதையில் வழுக்கிச் செல்லாமல் ஆங்காங்கே தேங்குவதால் நமக்கு விக்கி,நெஞ்சடைப்பு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது . உடனே எச்சிலுக்குப் பதிலாக  தண்ணீரை குடித்து உணவை உள்ளே தள்ளுகிறோம்.இதனால் என்ன????உணவு உள்ளே போய் விழுந்தால் போதுமல்லவா???என்று நீங்கள் கேட்பது புரிகிறது .
அதை அடுத்த பதிவில் காணலாம்.பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்5) ல் தொடரலாம்.

No comments:

Post a Comment