”சுதேசி” 2012-மே-1-15 இதழில் வெளியான சில தகவல்கள், இதோ உங்களுக்காக.....
இலவங்கப்பட்டையும், தேனும் நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு
உறுதுணையாக இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
இலவங்கப்பட்டை
தேன்
இதயத்தை பாதுகாக்க....
* இலவங்கப்பட்டை பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும் கலந்து,
தினமும் காலையில் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வந்தால்,
இதய நோய் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
முடக்கு வாதத்திலிருந்து விடுபட...
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து,
தினமும் காலை, இரவு குடித்து வர,
ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,
நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.
சிறுநீர்குழாய் கிருமித் தொல்லையை இல்லாமலாக்க...
* இலவங்கப்பட்டைப் பொடி - இரண்டு தேக்கரண்டி
* தேன் - ஒரு தேக்கரண்டி
மேற்குறிப்பிட்டவைகளை,
இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குடித்துவர,
சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.
கோடைக்காலத்தில் இது அருமருந்தாகும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த...
* இலவங்கப்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும், மிதமான வெந்நீரில் கலந்து,
ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர,
கொலஸ்ட்ரால் குறையும்.
ஜலதோஷத்திலிருந்து விடுதலையாக...
* இலவங்கப்பட்டைப் பொடி - கால் தேக்கரண்டி
* தேன் - ஒரு தேக்கரண்டி
சூடான தண்ணீரில் கலந்து மூன்று நாட்கள் குடிக்க,
சைனஸ், சளி, இருமல் அனைத்தும் தீரும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
வயிற்று உபாதைகளை போக்கிக் கொள்ள...
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும் கலந்து உண்டு வர,
வயிற்றுவலி, அல்சர் குணமாகும்.
வாயுத்தொல்லை மறையும்.
அஜீரணம் சரியாக...
* இலவங்கப்பட்டைப் பொடி- கால் தேக்கரண்டி.
* தேன் - இரண்டு தேக்கரண்டி கலந்து,
உணவுக்கு முன் சாப்பிட,
உண்ணும் உணவு சுலபமாக சீரணமாகும்.
சாப்பிட்டவுடன் வயிறு பெருத்து சிரமப்படுகிறவர்களுக்கு நலம் தரும்.
நீண்ட ஆயுளுக்கு.....
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - நான்கு தேக்கரண்டி
மூன்று கோப்பை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் கலந்து அதை,
மூன்று கோப்பை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் கலந்து அதை,
ஒரு நாளில் மூன்று அல்லது இரண்டு முறையாக பருகி வர,
வயதான தோற்றம் மறைந்து, இளமை ததும்பும்.
சருமம் மிருதுவாகும். ஆயுள் நீடிக்கும்.
நன்றி: சுதேசி - 2012- மே. 1-15.
No comments:
Post a Comment