Showing posts with label நல்வாழ்வு. Show all posts
Showing posts with label நல்வாழ்வு. Show all posts

Thursday, January 10, 2013

Know Your Body - பசுமை குடிநீர்


தமிழில் படிப்பவர்கள் தேடியாவது படிப்பீர்கள் அல்லவா......
சென்ற பகுதியில் குளிர்நீரில் குளிக்க வேண்டும் என்றவுடன் நிறைய சலசலப்புகள்.  குளியல் என்பது உடலின் அழுக்கை  களைவது மட்டுமல்ல.....உடல் உள் உறுப்புகளை குளிர்விப்பதும் கூட......குளியல் என்றாலேதலைக்கும் அதுவும் குளிர் நீரில்.......அல்லதுஉள் உறுப்புகளை குளிர்விக்கும் வேலை நடை பெறாது என்பது நினைவில் இருந்தாலே போதும்...வெந்நீரில் குளிப்பதோஉடலுக்கு மட்டும் குளிப்பதோ உண்மையான குளியல் அல்ல .....அதை விட குளிக்காமல் இருந்தாலே உடலுக்கு நலம் பயக்கும்.....
பசுமை குடிநீர் தயாரிப்பு மீண்டும் ஒரு முறை :
ஒரு குவளை நீர் கொதிக்க வைத்து இறக்கவும். கீழ்க்கண்ட இலைகளின் ஏதேனும் ஒன்று ஒரு கைப்பிடி அளவு அதில் போட்டு மூடி வைக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து நீரில் நல்ல பசுமை நிறம் இறங்கி இருக்கும்....சுவைத்து குடிக்கவும்...நிறைய மாற்றங்களை உணர்வீர்கள்....
 கொத்தமல்லி இலையில் செய்த பசுமைக் குடிநீர்
                                  

1.
கருவேப்பிலை  (கர்ப்ப பை நலம்  மற்றும் உடல் சூட்டை தணிக்க) 
2.
கொத்தமல்லி  (ஜீரண கோளாறுகள்சர்க்கரை நோயாளிகளுக்கு)
3. 
முருங்கை இலை (மண்ணீரல் சரி செய்யஜலதோஷத்திற்கு)
4. 
புதினா (நல்ல சுவை )
அறிவோம் 
   
உடல் நலமும் வளமும் கூட்டினால் நலம்.....ஆனால் பகைமையும்கோபமும்பொறாமையும் சேர்க்க கூடாத குணங்கள்...திருவள்ளுவர் கூறுவது போல., " நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. " , "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். " .....சினம் என்னும் குணம்,  காட்டுபவரை விட கொண்டுள்ளவரையே அதிகம் இழக்க வைக்கும்......நம்மை  நாம்  விரும்பி பிறரையும் விரும்புவோம்......

செய்வோம் 

வெற்றியுடன் ஒரு காரியம் செய்து முடித்தால் கட்டை விரலை உயர்த்துவது வழக்கம்....அதைப்போல கட்டை விரலை உயர்த்தி இப்பகுதியை ஆரம்பிப்போம்........ ஐம்பூதங்களில் ,கட்டை விரல் "நெருப்பை" குறிக்கிறது.....
கபச் சுரப்பி மற்றும் கூம்புச் சுரப்பிகளின் புள்ளிகள் மற்றும் மனஞ்சார்ந்த நரம்புகளின் புள்ளிகள் கட்டை விரலில் அமைந்துள்ளன......

கட்டை விரல்மற்றும் ஆள்காட்டி விரலின் நுனிகளை இணைக்கும் ஞான முத்திரையை தினமும் சில நிமிடங்கள் செய்து வந்தால் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உணரலாம்......மன அழுத்தம்,தூக்கமின்மைஅதிக கோபம்சோம்பல்மனக்கிலேசங்கள் போன்ற பல பிரச்சினைகளை இம்முத்திரைகளையும்....  நினைவாற்றல் மற்றும்   அறிவுத்திறனையும்  அதிகரிக்கும்....குழந்தைகள் தினந்தோறும் செய்து வந்தால் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.....உடல்  மன  நலனை சமப்படுத்தும் அருமையான முத்திரை. 
நான்கு  நாட்களுக்கு முன்னர் நன்றாக உச்சந்தலையில் இடித்துக்கொண்டேன்....தலை என்றால் கட்டை விரல் தானே - என நினைவுக்கு வந்து கட்டை விரலை அழுத்த ஆரம்பித்தேன்....கட்டை விரலில் லேசான ஒரு அழுத்தம் தென்பட்டது....அழுத்த அழுத்த உச்சியில் ஒரு இரத்த ஓட்டம் பாய்வது போன்ற உணர்வுஉண்மையிலேயே  இரத்தம் வருகிறதோ என தடவியும் பார்த்தேன்...ஆனால் அது உள் காயம் மட்டுமே......வலி உடனே குறைந்தது.....(பக்கத்தில் பெண் கால் வலியால் அழஅதை சரி செய்யும் முயற்சியில் உடனே இறங்க முடிந்தது...) வீக்கமும் சீக்கிரம் குறைந்தது....

 
ஏற்கனவே கூறியது போல "அறிவது செய்வதாகாது." (KNOWING IS NOT DOING, ONLY DOING IS DOING)..எனவே செய்யும் முயற்சியில் இறங்குவோம்....நல்ல உடல் நலனை பெறுவோம் ...நம் நலனை நாமே  பேணுவோம் ...மருத்துவரை  நம்பிஏமாந்து,  கொலை  செய்யும்  நிலை  வர  வேண்டாம் ....

Wednesday, January 9, 2013

நோயின்றி வாழ சித்த மருத்துவம் கூறும் நல்வழிகள்.



  1. இரவில் பசும் பாலையே அருந்த வேண்டும்.( மந்தம் தரும் வேறு பாலை அருந்தக் கூடாது)

  1. மூலநோயினை உண்டாக்கும் காய்கறிகளை உண்ணக்       கூடாது.

  1. புளித்த தயிரையே மோராகச் செய்து அருந்த வேண்டும்.

  1. முன்தினம் செய்த கறி அமுதிற்கு ஒப்பு எனினும் அதை அருந்தக் கூடாது.

  1. பசித்த பின்பே புசிக்க வேண்டும்.

  1. நாள் ஒன்றிற்கு இரு முறைதான் உணவு உட்கொள்ளவேண்டும். மூன்று முறை உட்கொள்ளக்கூடாது.

  1. கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கைத் தவிர மற்ற கிழங்கு வகைகளைப் புசிக்கக் கூடாது.

  1. உண்ணும்போது இடை இடையே நீர் அருந்தக் கூடாது.

  1. உண்ட பின்பு சிறிது தூரம் நடக்க வேண்டும்.

  1. மலம், சிறுநீர் ஆகியவைகளை அடக்கக் கூடாது.

  1. ஆறு திங்கட்கு ஒரு முறை பேதியும், மூன்று திங்கட்கு ஒரு முறை வாந்தியும் வர மருந்துகள் உண்ண வேண்டும்.

  1. இடக்கையை கீழே வைத்து உறங்கவேண்டும்.

  1. நான்கு தினத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும்.

  1. இரவில் மரங்களின் நிழலில் தங்கக்கூடாது.

(இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம். தமிழ்நாடு அரசு, 1995-ல் வெளியிட்ட நல் வாழ்விற்கு ஒரு நல் மருத்துவம் என்ற கையேட்டிலிருந்து)

நல்வாழ்வுக்கான தகவல்கள் - 2


நேர்மை என்றும்” எனும் வலைப் பூவை பார்வையிட்ட போது,

 ஒரு அருமையான தகவல் கிடைத்தது.


சிவகங்கை மாவட்டம், ஆவுடைப் பொய்கை கிராமத்தில், சித்த மருத்துவர். திரு. சொக்கலிங்கம் அவர்கள்  நாற்பது ஏக்கரில் ஒரு அருமையான மூலிகைப் பண்ணையை அமைத்துள்ளார். அதில் கிட்டதட்ட ஐநூறு விதமான மூலிகைகள்  உள்ளன என்பது மிகப்பெரிய விஷயமாகும்.

                                                         சித்தமருத்துவர். திரு. சொக்கலிங்கம் அவர்கள் பல்வலி, பல்சொத்தை, பல்புழு போன்றவைகளிலிருந்து விடுபட ஒரு அருமையான  மருத்துவத்தை கூறியுள்ளார்.



                                                                     தும்பைச் செடி


                                                             சின்ன வெங்காயம்


                          ஒரு கைப்பிடியளவு தும்பை இலைகளுடன்,

                           நான்கு சின்ன வெங்காயங்களைச் சேர்த்து,

                         வாயில் போட்டு நன்றாக மென்று துப்ப

                         பல் சொத்தை, பல் புழு  சரியாகும்.


               சித்தமருத்துவர். திரு. சொக்கலிங்கம் அவர்கள்,                  

                தனது மூலிகைப்  பண்ணையை பார்வையிட,

               அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

               அவரது அலைபேசி எண்:  9443919801

நன்றி: nermai-endrum.blogspot.in

நல்வாழ்வுக்கான தகவல்கள்-1





சுதேசி” 2012-மே-1-15 இதழில் வெளியான சில தகவல்கள், இதோ உங்களுக்காக.....


இலவங்கப்பட்டையும், தேனும்  நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு 

உறுதுணையாக இருக்கிறது என்பதை  இதன் மூலம் அறியலாம். 

                                                              இலவங்கப்பட்டை


                                                                      தேன்

                                           இதயத்தை பாதுகாக்க....

                             * இலவங்கப்பட்டை பொடி- ஒரு தேக்கரண்டி
                           
                              * தேன் - இரண்டு தேக்கரண்டி
                           
                                  இவ்விரண்டையும் கலந்து,

                                 தினமும் காலையில் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வந்தால்,

                     இதய நோய் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.


                                                  முடக்கு வாதத்திலிருந்து விடுபட...

                              * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                              * தேன் - இரண்டு தேக்கரண்டி

                              இவற்றை ஒரு  டம்ளர் வெந்நீரில் கலந்து,

                             தினமும் காலை, இரவு  குடித்து வர,

                            ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,

                            நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.


                                     சிறுநீர்குழாய் கிருமித் தொல்லையை இல்லாமலாக்க...

                              * இலவங்கப்பட்டைப் பொடி - இரண்டு தேக்கரண்டி

                              * தேன் - ஒரு தேக்கரண்டி

                              மேற்குறிப்பிட்டவைகளை,
                     
                            இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குடித்துவர,

                          சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.

                         கோடைக்காலத்தில் இது அருமருந்தாகும்.


                                          கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த... 

                               *  இலவங்கப்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி

                               *  தேன் - இரண்டு தேக்கரண்டி

                                    இவ்விரண்டையும்,  மிதமான வெந்நீரில்  கலந்து,

                                  ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர,

                                  கொலஸ்ட்ரால் குறையும்.


                                   ஜலதோஷத்திலிருந்து விடுதலையாக...
                                                   
                              * இலவங்கப்பட்டைப் பொடி - கால் தேக்கரண்டி

                              * தேன் - ஒரு தேக்கரண்டி

                              சூடான தண்ணீரில் கலந்து  மூன்று நாட்கள் குடிக்க,

                              சைனஸ், சளி, இருமல் அனைத்தும் தீரும்.

                              நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.


                                                   வயிற்று உபாதைகளை போக்கிக் கொள்ள...

                                  * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                                   * தேன் - இரண்டு தேக்கரண்டி
                 
                                    இவ்விரண்டையும் கலந்து உண்டு வர,

                                  வயிற்றுவலி, அல்சர்  குணமாகும்.

                                   வாயுத்தொல்லை மறையும்.


                                        அஜீரணம் சரியாக...

                                      * இலவங்கப்பட்டைப் பொடி-  கால் தேக்கரண்டி.

                                       * தேன் - இரண்டு தேக்கரண்டி கலந்து,
                                         
                                         உணவுக்கு முன் சாப்பிட,

                                      உண்ணும் உணவு சுலபமாக சீரணமாகும்.

             சாப்பிட்டவுடன் வயிறு பெருத்து சிரமப்படுகிறவர்களுக்கு நலம் தரும்.


                                             நீண்ட ஆயுளுக்கு.....

                                       * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி

                                        * தேன் - நான்கு தேக்கரண்டி

                 மூன்று கோப்பை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் கலந்து அதை,

                ஒரு நாளில் மூன்று அல்லது இரண்டு முறையாக பருகி வர,

               வயதான தோற்றம் மறைந்து, இளமை ததும்பும்.

                சருமம் மிருதுவாகும். ஆயுள் நீடிக்கும்.

நன்றி: சுதேசி - 2012- மே. 1-15.