”
சுதேசி” 2012-மே-1-15 இதழில் வெளியான சில தகவல்கள், இதோ உங்களுக்காக.....
இலவங்கப்பட்டையும், தேனும் நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
இலவங்கப்பட்டை
தேன்
இதயத்தை பாதுகாக்க.... * இலவங்கப்பட்டை பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும் கலந்து,
தினமும் காலையில் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வந்தால்,
இதய நோய் தாக்குதலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
முடக்கு வாதத்திலிருந்து விடுபட... * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து,
தினமும் காலை, இரவு குடித்து வர,
ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,
நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.
சிறுநீர்குழாய் கிருமித் தொல்லையை இல்லாமலாக்க... * இலவங்கப்பட்டைப் பொடி - இரண்டு தேக்கரண்டி
* தேன் - ஒரு தேக்கரண்டி
மேற்குறிப்பிட்டவைகளை,
இளஞ்சூடான வெந்நீரில் கலந்து குடித்துவர,
சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.
கோடைக்காலத்தில் இது அருமருந்தாகும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த... * இலவங்கப்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும், மிதமான வெந்நீரில் கலந்து,
ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர,
கொலஸ்ட்ரால் குறையும்.
ஜலதோஷத்திலிருந்து விடுதலையாக... * இலவங்கப்பட்டைப் பொடி - கால் தேக்கரண்டி
* தேன் - ஒரு தேக்கரண்டி
சூடான தண்ணீரில் கலந்து மூன்று நாட்கள் குடிக்க,
சைனஸ், சளி, இருமல் அனைத்தும் தீரும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
வயிற்று உபாதைகளை போக்கிக் கொள்ள... * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவ்விரண்டையும் கலந்து உண்டு வர,
வயிற்றுவலி, அல்சர் குணமாகும்.
வாயுத்தொல்லை மறையும்.
அஜீரணம் சரியாக... * இலவங்கப்பட்டைப் பொடி- கால் தேக்கரண்டி.
* தேன் - இரண்டு தேக்கரண்டி கலந்து,
உணவுக்கு முன் சாப்பிட,
உண்ணும் உணவு சுலபமாக சீரணமாகும்.
சாப்பிட்டவுடன் வயிறு பெருத்து சிரமப்படுகிறவர்களுக்கு நலம் தரும்.
நீண்ட ஆயுளுக்கு..... * இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - நான்கு தேக்கரண்டி
மூன்று கோப்பை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் கலந்து அதை,
ஒரு நாளில் மூன்று அல்லது இரண்டு முறையாக பருகி வர,
வயதான தோற்றம் மறைந்து, இளமை ததும்பும்.
சருமம் மிருதுவாகும். ஆயுள் நீடிக்கும்.
நன்றி: சுதேசி - 2012- மே. 1-15.