Wednesday, January 9, 2013


அணு உலையின் இயக்கமும் அணு மின்சாரம் பெறப்படும் பொறி முறையும் - வீடியோக்கள் இணைப்பு


உலகெங்கும் மின்சாரம் பெறுவதற்கு ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) டைனமோவில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பமே அடிப்படையாக உள்ளது. இங்கே பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மின்சாரம் உற்பதியாகின்றது. 
உயர்ந்த நீர்த் தேக்கங்களில் இருந்து நீர் கீழே பாயும் விசையை பயன்படுத்தி டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது "நீர் மின்சாரம்" எனவும், காற்றின் மூலம் பெரிய காற்றாட்டிகளை சுற்றச் செய்து டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது"காற்றாலை மின்சாரம்" எனவும், நீரைக் கொதிக்க வைத்து, நீராவியின் சக்தியால் டைனமோவைச் சுழலச் செய்து உற்பத்தி செய்வது"அனல் மின்சாரம்" எனவும் அழைக்கப்பெறுகின்றன.
அனல் மின்சாரம் உற்பத்தியாக்குவதற்கு நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்குவதற்கு நிலக்கரி, டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றை எரிபொருளாக பயன்படுதுகின்றார்கள். நீராவியில் விசையால் புகையிரதங்கள், பெரிய கப்பல்கள் இயங்குவதுபோல் பெரிய டைனமோக்களை சுழலச் செய்து மின்சாரம் பெறப்படுகின்றன.இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரி, டீசல் போன்றவைகள் அதிகமாக தேவைப் படுவதனால் அதற்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியாக்குவதே "அணு மின்சாரம்".
ஒரு டன் அணுக்கரு யுரேனியம் உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எரிபொருள்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். அதாவது சுண்டக்காய் அளவு யுரேனியம் [7 gram Uranium Pellet] 3.5 பீப்பாய் எரி ஆயில் [Barrels of Oil], 17,000 கியூபிக் அடி எரிவாயு [Natural Gas] அல்லது 1780 பவுண்டு நிலக்கரி தரும் வெப்பத்தை உண்டாக்குகிறது.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிரிக்கப்படும்போது அதிக அளவு வெப்பமும் ஆற்றலும் வெளிவிடப்பெறுகின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம். 
சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா? 
இல்லை. சூரிய ஒளியின் சக்தி மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் சோலார் கதிர் ஈர்ப்பு தட்டுகளை (Panels) பயன் படுத்தி பெறப்படுவதே சூரிய ஒளி மின்சாரம் எனப்படும். இவை மூலம் பெறப்படும் மின்சாரம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும் அல்லது சேமிக்க முடியும். அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. 
அணு உலையின் தொழில் நுட்பம் என்ன? அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் யாவை?
அணு உலைகளில் 
2%-3% செறிவு யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம் அணு, அணுஉலையில் பிரிக்கப்படும்போது சுமார் 2000 oC வரை வெப்பம் உண்டாகின்றது. இவ் வெப்பமானது நீரின் கொதி நிலையான 100 oC ஐ விட பன் மடங்கு அதிகமாகும். இந்த அனணுவை பிரிக்கும் போது உண்டாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி நீரை கொதிக்கச் செய்து நீராவியாக்கப் பெறப்படுகின்றது. அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உற்பத்திசெய்யப்பெறுகின்றது. இம் முறையானது பெரிய அளவில் மின் சாரத்தை உற்பதியாக்குவதற்கு மிகவும் லாபகரமானது. ஆனால்;
அணுவை பிரிக்கும்போது அதிக வெப்பம் வெளிப்படுவதனால் அணுவைப் பிரிக்க பயபடுத்தும் அணு உலையைக் குளிர்விக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. அதற்காக கடலிலிருந்து அல்லது வற்றாத நீர் நிலைகளில் இருந்து நீர் பெறப்படுகின்றது. கடல் நீரில் உப்பு இருப்பதனால் சுத்திகரிக்கப் பெற்று உப்பு அகற்றி, நன்னீராக மாற்றிய பின் அணு உலையை குளிராக்க பன்படுத்தப்படுத்துகின்றார்கள். 
யுரேனியம் அணுவைப் அணு உலையில் பிரிக்கும்போது வெப்பத்தை வெளியேறி பிரிவுறும் போது அது, புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் அங்கு கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கம் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் தீங்க்கினை உண்டாக்கக் கூடியன. மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படுவதுடன் மற்றைய உயிரினங்களையும் அழிக்கும் திறன் கொண்டது. இவற்றில் இருந்து உயிரினங்களை பாதுகாப்பதற்காக தகுந்த பாதுகாப்பு தேவைப்படுகின்றன. அதனால் அணு உலையைச் சுற்றி கொன்கிரீட் சுவர்களும், கதிர் வீச்சை தடுக்ககூடிய  பாதுகாப்பு வேலியும்,  கருவிகளும் அமைக்கப்பெறுகின்றன.
இரண்டாவது - இந்த பிரிக்கப்பெற்ற யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு தயாரிப்பதற்கு பயன்படும் மூலப்பொருளாகும். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே ஜப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும் என அராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாவது - இங்க்கு ஏற்படும் விபத்துக்களை மற்றய தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளாக இதைக் கருத முடியாது. அணு உலையில் ஏற்படும் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரக் கூடியன. நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும். 
நான்காவது - அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலையை குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் சேர்க்கப்படுகின்றன. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது. 
ஐந்தாவது - ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது என கூறப்படுகின்றது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அணு உலையில் தவறுதலாக வெடிப்பு ஏற்பட்டால் அல்லது எதிரிகளால் தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். 
சிலர் அணு உலைகள் பேராபத்து என்கிறார்கள். ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை? 
அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் அமைக்கப்படுகின்றன.
பாதுகாப்பான அணு உலை எப்படி அமைய வேண்டும்? 
முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
 பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். 
அதாவது பூமியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். அடுத்து இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட வேண்டும். 
பூமியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது. 
விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். 
மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது.
1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது. மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. 
மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின. சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை றசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார். 
இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது. 
சமீபத்தில் ஜப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 
மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை. எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை. ஜப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன. 
ஜேர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது. ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன. 
இந்தியாவில் கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபர் 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது.
1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 
இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள் இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள். அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் . 
1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய். 
அணுமின்சாரம்தான் மலிவானது. சுத்தமானது என்று சொல்கிறார்களே? 
மின்சாரம் தயாரிப்பில் அதற்கான மொத்த செலவுகளையும் கணக்கிட்டால் லாபகரமானது என்று கூற முடியாது. அணுஉலை கட்டுவதற்கான செலவு, அதை இயக்குவதற்கான செலவு, பிறகு அதை மூடுவதற்கான செலவு என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அத்துடன் இவற்றின் ஆயுள் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே. பின் இந்த உலைகளை மூடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும். 
அணு மின்சாரம் சுத்தமானது என்று சொல்வது கேலிக்குரியது. கடல்நீரை ஒரு நாளைக்கு 32லட்சம் லிட்டர் வரை உறிஞ்சி அதை உப்பு அகற்றி உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அந்த உப்புக் கழிவுகளை மீண்டும் கடலில்தான் கொட்டுவார்கள். குளிர்வித்த நீர் வெந்நீராக திருப்பி கடலில்தான் கொட்டப்படுகிறது. கடலில் கொட்டப்படும் வெந்நீரால் அப்பகுதி மீன்வளம் பாதிக்கப்படும். சுமார் 4 டிகிரி வெப்பம் உயாந்தாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க நேரிடும். அணு உலையின் கதிரியக்கச் செயல்பாடுகளால் சுற்றுப்புறமும் சீர்கெடும். மக்கள் நோய்க்கு உள்ளாவார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது அணுக்கழிவுகள்.  
அணுக்கழிவுகளை ஆபத்தில்லாததாக மாற்றுவதற்கு எந்த தொழில்நுட்பமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. அவற்றை பாதுகாப்பான பெட்டிகளில் இட்டு பூமிக்குள் புதைப்பதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது.

No comments:

Post a Comment