Wednesday, June 5, 2013

யானை வணங்கியும்,பூனை வணங்கியும்


நான் இப்போது சொல்லப் போவது இரண்டு மூலிகைகளைப் பற்றியது.முதலில் யானை வணங்கியைப் பற்றிப் பார்ப்போம்.
யானை வணங்கி என்பது யானை நெருஞ்சில் என்றழைக்கப்படும் பெருநெருஞ்சில்தான்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு,பெரும்பாடு என்னும் கடும் உதிரப்போக்கு,சிறுநீரகக் கல்(URINARY COLIC),சிறுநீரகக் கோளாறுகள்(NEPHRITIS),சிறுநீரக வடிகட்டும் வலை அமைப்பு பூராவும் அடைத்துக் கொள்ளும் நிலையில் சிறுநீரகம் சுருங்கிவிடும்,தண்ணீர் நிறைந்து கிடக்க வேண்டிய சிறுநீரகம் கருவாடு போல வற்றிச் சுருங்கும் நிலையே KIDNEY FAILURE, இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டுகளில் ஏற்படும் எலும்புத் தேய்மானம்,இவற்றை அடியோடு துடைத்தெரியும் வல்லமை உள்ளது.

இதையும் பாருங்கள்

யானைகள் கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக் குறையால் சரியாகத் தண்ணீர் குடிக்க இயலாததால் யானைகளுக்கு கடும் நீரெரிச்சலும்,கடும் நீர்க்கடுப்பும் வரும்.அப்போது யானைகள் இந்த பெருநெரிஞ்சிலை
தின்று தங்கள் நீர்க்கடுப்பும்,நீரெரிச்சலும் நீங்கி இதை வணங்கிச் செல்வதால் இதற்கு யானை வணங்கி என்றும்,யானை நெருஞ்சில் என்றும் பெயர்.மிருகங்களுக்கு இருக்கும் அறிவு மனிதனுக்கு இல்லையே!

யானை நெருஞ்சிலை காலையில் பழைய சோற்று நீராகாரத்தில் போட்டு அசைத்துக் கொண்டிருந்தால்,சற்று நேரத்தில் நீராகாரம் கஞ்சி போலாகும்.யானை நெருஞ்சிலை எடுத்து வெளியே போட்டுவிட்டு வெறும் அந்த நீராகாரத்தை மட்டும் மூன்று நாள் மட்டும் பருகி வந்தால்,மேலே சொன்ன பிணிகள் அகலும்.

அடுத்து பூனை வணங்கி என்பது குப்பை மேனி என்ற செடிதான்.இதை கசக்கி பூனை அருகில் போட்டால்,பூனை கண்ணை மூடிக் கொண்டு முன்கால்கள் இரண்டையும் கண்களின் மேல் வைத்துக் கொள்ளும்.

ஏனெனில் குப்பை மேனியில் உள்ள கந்தகச் சத்து பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால் இது அவ்வாறு செய்கிறது.மேலும் இதை எலி போன்ற ஆரோக்கிய குறைவான உணவை உண்டால் அதனால் உண்டாகின்ற நஞ்சு நீங்க பூனை இரவில் சென்று உண்ணும்.அப்போதுதான் பனியால் குப்பை மேனியின் கந்தக வீரியம் குறைந்திருக்கும்.பின் குப்பை மேனியை பூனை வணங்கிச் செல்லும்.எனவேதான் இதற்கு பூனை வணங்கி என்று பெயரிடப்பட்டது.

இதன் வேறு பெயர்கள் அரிமஞ்சரி, அண்டகம், அக்கினிச் சிவன்,பூனை வணங்கி,அனந்தம்,கோழிப் பூண்டு சங்கர புஷ்பி,மேனி
 
குப்பை மேனி 
குப்பை போன்ற போன்ற மேனியையும் பொன்மேனியாக்கும்.எனவே இதன் பெயர் குப்பை மேனி.உப்பையும் குப்பை மேனிச் சாற்றையும் கலந்து,சிறு குழந்தைகளுக்கு வரும் சிரங்கு முதலான வியாதிகளுக்கு மேற்பூச்சாக பூசி வெயிலில் நிற்க வைக்க கொஞ்சம் எரிச்சல் எடுக்கும்.மூன்று நாட்களில் அத்தனை சிரங்கும் கருகி உதிரும்.

ஒரு முறை ஒரு ஆறு மாத குழந்தையை என்னிடம் தூக்கி வந்தார்கள்.அந்தக் குழந்தையின் நுரையீரல் எல்லாம் சளி நிறைந்து இருக்கும் X-RAY படத்துடன் வந்தார்கள்.இந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் 30 நாட்கள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர் கூறினார்.பணம் ரூ25,000/= எடுத்து வரச் சொல்லி இருக்கிறார்கள் என்றார்கள்.

நான் குப்பைமேனிச் சாற்றை உப்புடன் வைத்துக் கசக்கி 4 சொட்டுகள் மட்டும் எடுத்து,அந்தக் குழந்தைக்கு கொடுக்க 3 நிமிடங்களில் அத்தனை சளியையும் வாந்தியாக எடுத்துவிட்டது. பொதுவாகவே,பெரியவர்,சிறியவர் என்ற பேதமில்லாமல்,X-RAY படம் அதிகம் எடுக்கக் கூடாது.அதிலும் சிறு குழந்தைக்கு சில தடவைகள் கூட எடுக்காதீர்கள்,அது இரத்தச் சிவப்பணுக்களை கொல்லும்,என்று கூறி அனுப்பினேன்.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு X-RAY எடுத்துப் பார்த்தோம்.நீங்கள் கூறியது போல சளி குறைந்திருக்கிறதா? என்று பார்த்தோம்.படத்தில் குறைந்துவிட்டது என்று தெரிந்து கொண்டோம்.மிக்க நன்றி என்றார்கள்.நான்தான் X-RAY எடுக்க வேண்டாம் என்றேனே? அவர்கள் சரியானதை உறுதிப்படுத்த எடுத்ததாகக் கூறினார்கள்.மக்களின் அறியாமையை எண்ணி எனக்குள் நொந்து கொண்டு அவர்களை அனுப்பி வைத்தேன்.
  
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்   

No comments:

Post a Comment