Sunday, June 2, 2013

பானகம்


 Sugar or jaggery dissolved in distilled water to clean. The veppampu cleaned, ground and mixed mango offerings to God and serving   of cooked sriramanavami Tamil New Year release.

தேவையானவை

புளி - 150 கிராம்
வெல்லம் - 200 கிராம்
சுக்குப்பொடி - கால் தே‌க்கர‌ண்டி 
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

செ‌ய்யு‌ம் முறை 

புளியை ஊற வைத்துக் கரைத்து, வடிகட்டவும். 

வெல்ல‌த்தை நன்கு பொடித்துக் கொள்ளவும்.

பொடித்த வெல்லத்தை வடிகட்டிய புளித் தண்ணீருடன் சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை கலக்கவும். 
பிறகு சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டால் தேவை‌ப்படு‌ம் போது எடு‌த்து அரு‌ந்தலா‌ம். 

இ‌ந்த பானக‌ம் கோடை‌யி‌ல் உட‌ல் கு‌ளி‌ர்‌ச்‌சி அடைய வே‌ண்டுமானா‌ல் குடி‌க்க‌ உக‌ந்தது ஆகு‌ம்.

பங்குனி மாதம் வந்து விட்டாலே நம் நினைவுக்கு வருவது பானகம் என்னும் இனிப்பான மற்றும் நீர் மோரும் தான்.
இதில் முக்கியமாக இரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இது முருக கடவுளுக்கு உகந்த பானம் யென்று கதை உண்டு.இது முதல் விஷயம்.இரண்டாவதா முக்கியமான விஷயம். 

நம் ஆறு விதமான சுவைகளை ருசிக்கிறோம்.முறையே 
1,கசப்பு 
2,இனிப்பு 
3,துவர்ப்பு 

4,உப்பு 
5,கார்ப்பு
6,புளிப்பு 

நன்றாக கவனியுங்கள் முதல் மூன்றும் ஒன்று சேரும்.அது இனிப்பு சார்ந்தது.இதை பானகம் யென்று சொல்வார்கள்.

அடுத்தது நீர் மோர் இந்த 456 கலவை தான் இந்த மூன்றும் ஒன்று சேரும்.

பாருங்கள் நமக்குஆறு விதமான சுவைகள் கிடைக்கிறது அல்லவா.

அந்த காலத்தில் முருக பக்தர்கள் கால்நடையாக முருக ஆலயங்களுக்கு நடந்து சென்றனர்.நடை கலைப்பு தீர வலி நெடுக இப்படி பானக பந்தல்கள் அமைத்து இருந்தனர்.முன்னோர்களுக்கு தெரிந்து இருந்தது ஆறு விதமான சுவைகள் 
கொண்ட நீர் பானகம் தேவை யென்று.

நாம் தாம் பங்குனி மாதம் மட்டும் தான் பானகம் குடிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் அருந்தமல் இருந்து விடுகிறோம். உண்மை அதுவல்ல இவை இரண்டும் எப்போதும் அருந்தக் கூடிய பானங்கள் தான்.சத்துக்களுக்கு குறைவில்லாத எங்கும் எடுத்துச்செல்லத்தக்க இந்த பானகத்தை அருந்தி பன்னாட்டு கம்பனிகலான பெப்சி,கொகோகோலா கம்பனிகளுக்கு ஆப்பு அடிப்போமாக!

மேலும் நமக்கு எந்த விதமான நோய்களும் நமக்கு வராது.நோய் இல்லா வாழ்க்கையே சுகமானது தானே.
நன்றி 

No comments:

Post a Comment