Monday, September 9, 2013

உண்ணா நோன்பு

மருத்துவர் தேவையில்லை

வரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும்
நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்து
நோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது  இதைப்பற்றி தான் இந்த பதிவு.
எல்லா மதங்களிலும் விரதம் என்று ஒன்று வைத்திருந்தனர் இதன் காரணம்
என்னவென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் நமக்கு புரியும்.
மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே இந்த விரதங்கள் நமக்கு முன்னோர்கள்
கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.எல்லா மதங்களிலேயும் விரதம் என்று
சொன்னதும் நமக்கு உடனே தோன்றுவது உண்ணா நோன்பு. முதன் முதலில்
உண்ணா நோன்பு எப்படி அனுசரித்தனர் என்பதை பற்றி பார்ப்போம்.
உண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல. இதில் பல
சூட்சமங்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக உண்ணா நோன்பு மொத்தம்
7 நாட்கள் இருக்க வேண்டும். நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும்
இருக்கலாம் முதல் நாள் தோலுள்ள பழங்களை மட்டும் தான் உண்ண
வேண்டும் ( வாழைப்பழம், மாம்பழம்,சப்போட்டா பழம்).
இரண்டாம் நாள் சாறு உள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும்
( ஆரஞ்சு,திராட்சை,எலுமிச்சை). மூன்றாம் நாள் வெறும் தண்ணீரை மட்டும்
தான் அருந்த வேண்டும் நான்காம் நாள் ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க
வேண்டும். ஐந்தாம் நாள் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண்டும்.
ஆறாம் நாள் சாறு உள்ள பழங்களை உண்ணவேண்டும்.ஏழாம் நாள்
தோலுள்ள பழங்கள். இது தான் உண்ணா நோன்பின் முறை நாளடைவில்
இது விருப்பதுக்கு தகுந்தபடி மாறிவிட்டது. இதைப்பற்றி நமக்கு பல
சந்தேகம் வரலாம் ஒரு வேளை பசி என்றாலே நம்மால் தாங்க
முடியவில்லையே 7 நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருக்கப்போகிறோம்
என்று தோன்றினாலும் கண்டிப்பாக நம்மால் இருக்க முடியும்.
இதில் மறைந்திருக்கும் உண்மையை பற்றி பார்ப்போம் முதல் நாள்
நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடலை சுத்தப்படுத்தும்
கழிவுகளை நீக்கும். இரண்டாம் நாள் நாம் சாப்பிடும் சாறுள்ள பழங்கள்
உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மூன்றாம் நாள் நாம்
அருந்தும் தண்ணீர் நம் உடலில் எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு
இருக்கிறதோ அதை குணப்படுத்தும். (System Recovery).நான்காம் நாள்
நம் உடல் ஒன்றுமே கேட்பதில்லை வயிறு பசிப்பதில்லை. ஐந்தாம் நாள்
தண்ணீர், ஆறாம் நாள் சாறு உள்ள பழங்கள் , ஏழாம் நாள் தோலுள்ள
பழங்கள். சிறு பூனையை எடுத்துக்கொள்வேம் தனக்கு நோய் வராமல்
இருக்க சில நாட்கள் அது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது.
நம் உடலும் பெரும் நோய் தாக்காமல் தடுக்க இதைப்போன்ற
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்.நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
இயற்கை மருத்துவரிடம் ஆலோனை பெற்ற பின் உண்ணா நோன்பு
இருப்பது நல்லது. விரதம் இருக்கும் நாட்களில் உடலுக்கும் மூளைக்கும்
வேலை கொடுக்காமல் இருக்க வேண்டு

ஆன்மிகத்துக்குள் புதைந்துள்ள ஒளடதம்

மருந்து மாத்திரைகளால் முடியாததை உண்ணா நோன்பு தீர்த்து வைக்கும்

தற்போது புனித ரமழான் மாதத்தில் இஸ்லாமியர்களால் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. ஆன்மிக எழுச்சிக்காக அனுஷ்டிக்கப்படும் நோன்பு வாழையடி வாழையாக ஒரு மார்க்கமாகக் கடமையாக நிறைவேற்றப்படுகிறது. இந்நோன்பின் மூலம் அபரிமிதமான மருத்துவப் பயன்கள் கிடைப்பது பற்றிப் பலருக்குத் தெரியாது.
இது உடல், உள நோய்களை வென்று உயிர்க்காக்கும் உன்னத சாதனமாக விளங்குவதோடு ஆன்மீகத்ரைதயும் மேம்படுத்துகிறது. உடல், உள்ளம், உயிர் மூன்றுக்கும் உதவும் மகிமையைக் கொண்டது. ஊசி, மருந்து, மாத்திரைகளால் சாதிக்க முடியாததை, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமின்றி எளிமையான நோன்பைக் கடைப்பிடிப்பதின் மூலம் சாதிக்கலாம் என்றால் மிகையாகாது. விரதம், உபவாசம், உண்ணா நோன்பு என்ற பெயரில் ஏனைய மதத்தவர்களாலும் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது.
பட்டினியும் உண்ணா நோன்பும் ஒன்றல்ல. தன்னையே ஒடுக்கி உயர்த்திக் கொள்ளும் உன்னத நிலையே உண்ணா நோன்பாகும். அதனால்தான் உபவாசமே சிறந்த மருந்து என்பதை வட மொழியில் ‘லங்கணம் பரம ஒளவிதம்’ எனச் சிறப்பாகக் கூறியிருக்கிறார்கள். ‘உற்ற சுரத்திற்கும் ஓயாத வாய்வுக்கும் அற்ற மட்டும் அன்னத்தை காட்டாதே’ என்பது பழம் பாடலாகும். இதனால் தான் தற்போது பிரசித்தி பெற்றுவரும் இயற்கை மருத்துவத்தில் உண்ணா நோன்பு தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது.
உண்ணாநோன்பு என்பதற்குக் ‘கடவுளுக்கு அருகில் வசிப்பது’ என்று அர்த்தம். சாதி, சமய பேதமின்றி எல்லாச் சமயத்தினரும் உண்ணா நோன்பு இருந்தால் ஆரோக்கியமான பேராற்றல், பொருள் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும்.
எங்களைச் சுற்றியுள்ள பிராணிகள் குறிப்பாக நாய், பூனை, பசு போன்ற வீட்டு விலங்குகள் நோய் வாய்ப்படும் தருணத்தில் உணவை அறவே புறக்கணித்து உண்ணா நோன்பு இருந்து நோயை நீக்கிக் கொள்வதைக் காண்கின்றோம். எவ்வளவுதான் வற்புறுத்தினாலும், அடித்தாலும் அவை தங்கள் நோய் நீங்கும் வரை ஒரு துளி நீர் கூடக் குடிக்காமல் இருப்பதின் மூலம் உண்ணா நோன்பின் பெருமையை அறியலாம்.
அவசர தேவைக்கு உதவ ஒவ்வொருவர் உடலிலும் ‘சேமிப்பு நிதி’ (ஞிலீsலீrvலீ) ஏராளமாக உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொண்டு உடலினுள்ள கழிவுகளையும் நச்சுப் பொருட்களையும் அகற்றும் அறிவியல் முறைதான் உண்ணா நோன்பு என்பதாகும்.
இதயத்திற்கு இரக்கத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு, சிறுநீர் குழாய்களில் அடைப்பு, சினைப்பை குழாயில் அடைப்பு, மூளைக்கு இரத்தம் செல்லும் குழாய்களில் அடைப்பு, மூச்சுக் குழாய்களில் அடைப்பு என உடல் முழுவதிலும் உள்ள அடைப்புக்களை அகற்றி, வெளியேற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும்.
கழிவுகள் மற்றும் நச்சுப் பொருட்கள் உண்ணா நோன்பு இருப்பதின் மூலம் வெளியேற்றப்படும். மேற்படிக் கழிவுகளும், நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்பட்டதும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நோய்கள் குணமாகும்.
உண்ணா நோன்பின் போது உடலின் அனுசேப அளவு (ணிலீtaboliணீ ஞிatலீ) குறைகிறது. இழந்த சக்தி மீளப் பெறப்படுகிறது. உடலின் உயிர் அணுக்கள் (விலீlls) மற்றும் உறுப்புக்களுக்கு புத்துயிர் ஊட்டப்படுகிறது. உடலுக்குத் தேவையான சக்தி உடலில் தேங்கியுள்ள கொழுப்பிலிருந்து பெறப்படுவதால் கொழுப்பு அகற்றப்படுகிறது.
இவை அனைத்தும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடலில் போதிய உணவு கிடையாத போது உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் கழிவுப் பொருட்கள் மூலம் உணவு பெறப்படுகிறது. இதனால் சிதைவுற்ற புற்றுநோய் உயிர் அணுக்கள், கெடுதியான பக்டீரியாக்கள் மற்றும் கட்டிகள் அகற்றப்படுகின்றன என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்படுகின்றன.
இதனால் தான் உண்ணா நோன்பு தொடங்கிய முதல் சில நாட்களில் தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படுகின்றன. உடலின் நச்சுப் பொருட்கள் அகற்றப்படுவதின் அறிகுறிகளே இவையாகும். எனவே, உண்ணா நோன்பு என்பது ‘சுயசுத்தி’(ஷிலீll விlலீansing) செய்து கொள்வதாகும். இப்போது உடலினுள் உள்ள எல்லா உறுப்புக்களும் கழிவுகளை வெளியேற்றுகின்றன.
இந்நேரம் நாக்கில் அதிகமான மாவு படியும், சிறுநீர் சிவப்பு, மஞ்சள் நிறங்களில் வெளியேறும். நீண்ட நாட்களாக மார்பில் அடைபட்டுக் கிடந்த சளி வேகமாக வெளியேறும். இப்போது சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டால் வேண்டாத கழிவுகள் அச்சுறுத்தும் வகையில் இருப்பதைக் காணலாம்.
உடலில் தங்கியுள்ள கழிவுகள் மட்டுமல்லாது பல வருடங்களாக நோய்களுக்குப் பயன்படுத்திய ஊசி, மருந்து, மாத்திரை ஆகியவற்றின் நச்சுக்களும் கூட உண்ணா நோன்பின் போது வெளியேற்றப்படும். எந்த வைத்தியம் பார்த்தும் தீர்வு கிடைக்காத போது கடைசிப் புகலிடமாக நோய்களை குணப்படுத்தும் மருந்து உண்ணா நோன்பாகும்.
உண்ணா நோன்பு ஒருநாள் இருந்துவிட்டு உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள். ‘விளக்கிய பாத்திரம்’ போல் கழிவுகள் நீங்கி முகம் மிகவும் பிரகாசமாக திகழும். முகம் காந்தம் போல் அனைவரையும் ஈர்க்கும். விருந்தொன்றில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட நேரிட்டால் உடனே விருந்துக்கு மருந்தாக ஒருவேளை உண்ணா நோன்பு இருக்கலாம்.
இதனால் தான் இயற்கை மகத்துவம் போன்றது மாற்று மருத்துவத்தில் உண்ணா நோன்பு சிபார்சு செய்யப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வில் உண்ணா நோன்பு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உண்ணா நோன்பு மேற்கொள்வோரின் சில தவறான பழக்க வழக்கங்களினால் மேல் கூறப்பட்ட நன்மைகள் கிடைக்காது போகும் ஆபத்து உண்டு. கண்ணீர் கூட குடியாமல் பல மணித்தியாலங்கள் இருப்பதால் உடலினுள் உள்ள நீர் இழக்கப்படுகிறது. இதை ஈடுசெய்ய உண்ணா நோன்பு முடிந்த பின் அதிக அளவு நீர் பருகுதல் மிகவும் அவசியம். ஆனால் பெரும் பாலானோர் அதிக நீர் பருகாமல் திண்ம உணவுகளால் வயிற்றை நிரப்புகின்றனர்.
பல வகையான நாவிற்குச் சுவையான பொரித்த, தாளித்த ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்பி உண்கின்றனர். பாளுதா, சர்பத், போத்தலில் அடைத்த மென்பானங்களை விரும்பிக் குடிக்கின்றனர். இழந்த நீரை மீளப்பெற உடல் ஏங்கும் போது அதிக அளவு நீரைப் பருகாமல் திண்ம உணவுகளாலும் மென்பானங்களாலும் வயிற்றை நிரப்புவது பல தீமைகளை ஏற்படுத்தும்.
உண்ணா நோன்பை முடித்த பின் அதிக தண்ணீர் பருக வேண்டும். போத்தலில் அடைத்த மென்பானங்களைத் தவிர்த்து சுத்தமான நீரைப் பருக வேண்டும்.

No comments:

Post a Comment