Wednesday, January 23, 2013

சித்த மருத்துவம்: தற்போதய நிலை


,,,

தம் உடலை அழியாது காக்கவும், வாழ்நாட்களை நீட்டிக்கவும், மரணமில்லாத வாழ்வுக்கும் வழிகண்டவர்கள் நம் முன்னோர்களாகிய சித்தர்கள்.
மனிதர்களுக்கு வரக்கூடிய அனைத்து நோய்களையும் கண்டறிந்து அவற்றை குணப்படுத்தக் கூடிய வழி வகைகளையும் கண்டறிந்தவர்கள் நமது முன்னோர்களாகிய சித்தர்கள். தாம் கண்டுணர்ந்த நோயற்ற வாழ்வுக்கான வழிகளை எளிய வாழ்க்கை முறைகளாக (உணவு, சிந்தனை, வாழ்க்கை முறைகள் என) வகுத்து மக்களை இயற்கையோடு இயைந்து வாழப் பழக்கியுள்ளார்கள்.
அவர்கள் ஆக்கித்தந்த வாழ்வியல் முறைகள், எல்லாக் காலங்களுக்கும் ஏற்புடையது. நமது மண்ணில் நமது முன்னோர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட அறிவியல், மனித நேயத்தையும், சுற்றுச்சூழலின் நலத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
சிறு உதாரணம்.
நமது அறிவியல் அடிப்படையில் கரிகால் சோழன் காலத்தில கட்டப்பட்ட கல்லனை காலத்தால் அழியாத சாட்சி.
தாம் பிறந்த இடத்திலிருந்து, வழியெல்லாம் காடுகளை விரித்துக்கொண்டு, தமிழகத்தை வளப் படுத்த வந்த காவிரித் தாயை, மெல்ல நிறுத்தி தன் நாட்டை வளப்படுத்தினர் நம் முன்னோர்கள் , நாடு செழித்தது. சோழ நாடு சோறுடைத்தது என பெயர் பெற்றது.
தற்போது நவீன அழிவியல் அறிவு, ஆறுகள் உற்பத்தியாகும் இடங்களில் அணைகள் கட்டி நாட்டை வறட்சியாக்குகிறார்கள். வந்தால் வெள்ளம் இல்லையேல் வறட்சி என்பதே தற்கால நிலை.
பெரும் அணைகளை விடுத்து சிறு தடுப்பணைகளைக் கட்டினால் நாட்டில் தண்ணீர் பஞ்சமும், வெள்ள அபாயமும், மணற்கொள்ளையும் காணாது போகும். வறட்சி என்பது இல்லாது ஒழியும்.
நம் முன்னோர்கள் தந்த அமைதியான நலவாழ்வைக் கடந்த சில பத்தாண்டுகளில் தொலைத்து விட்டோம். மேலை வணிகர்களின் பேரழிவு ஆயுதமான நவீன உயர் தொழில் நுட்ப அறிவியலை, விழிப்புணர்வு இல்லாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றியதால், இன்று நம் நாடே, உலகமே அழிவின் விளிம்பை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
நிலம், நீர். நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் 5 மூலகங்களையும் இந்த நவீன உயர் தொழில் நுட்ப அழிவு அறிவியல் நாசப்படுத்திவருகிறது.
உதாரணம்
நம் நாட்டில பசுமைப்புரட்சி, வென்மைப்புரட்சி, நீலப்புரட்சி என வந்த எல்லாப் புரட்சிகளும் நம் மக்களின் உடல், மன நலத்தையும், வாழும் சூழலையும் அழித்து நச்சுச் சூழலை உருவாக்கி விட்டன. மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்து விட்டன.
இந்த புரட்சிகள் வந்த சில ஆண்டுகளிலேயே நிலமும், நீரும் நஞ்சாக்கப் பட்டுவிட்டன. 1960 களிலேயே விவசாய – உற்பத்தி இடங்களிலிருந்து விலகி வாழும் தாய்மார்களின் தாய்ப் பாலில் கூட , விவசாயத்தில் – உணவு உற்பத்தியில் பயன்படுத்தும் இரசாயன நஞ்சுகள் கலந்திருப்பதைக் கண்டுவிட்டார்கள். மக்களுக்கு உண்மை தெரியாமல் மறைத்தும் விட்டார்கள்.
மனித நேயமுள்ள, விழிப்புணர்வுள்ள அறிவியல் அறிஞர்களின், சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும், விமர்சனங்களையும் மீறி தரகு அரசியல் வாதிகளாலும், மனித்தன்மையற்ற அழிவியல் அறிஞர்களாலும், பொறுப்பற்ற அதிகாரிகளாலும் தொடர்ந்து இன்று வரை சூழல அழிப்பும், விச விரிவாக்கமும் தொடர்கிறது.
1980 களில் வேகமாகத் தொன்றி வளர்ந்த சூழல் விடுதலைக்கான இயக்கங்கள் மக்களிடம் சிறிது பார்வைத் தெளிவை ஏற்ப்படுத்தினாலும், விரைவில் அரசாலும், அரசால் தூண்டிவிடப்பட்ட அரசியல் கட்சிகளாலும், நடத்தப்பட்ட வன்முறைகளாலும், மிகப் பெரிய விளம்பரங்களாலும், அறிவியல் மூடநம்பிக்கை திணிப்புப் பேரணிகளாலும், விழிப்புணர்வு இயக்கங்களின்  தவறான போராட்ட முறைகளாலும், மக்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை.
அதே நேரம் மக்களோடு இருந்து, மக்களிடம் கற்றுக் கொண்ட சூழலியல் அறிஞர்கள் மண்ணுக்கான வேளாண்மை முறைகளை மிகச் சிறப்பாக வளர்த்துள்ளார்கள்.  பல்லுயிர் பெருக்கத்தை அடிப்படையாய கொண்ட தாளாண்மை -  வேளாண்மை இன்று விழிப்புணர்வுடன் சிந்திக்க கூடிய சக்தி  படைத்த விவசாயிகளுடையதாகி அவர்களை வாழ வைத்துள்ளது. நிற்க,
முன்பு சித்த மருத்துவமானது,
  1. மக்கள் வாழ்க்கையின் ஆணிவேராக இருந்த்து.
  1. வீடுகளில் பெரியோர், குறிப்பாக பெண்கள் தங்கள் மருத்துவ அறிவைப் பாதுகாத்து தொடர்ந்து புதுப்பித்து வந்தனர்.
  1. சமையல் எனபது உணவே மருந்து மருந்தே உணவு என்றாக இருந்த்து. தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், பால், இறைச்சி, முட்டை, எண்ணெய் போன்றவை நஞ்சற்ற சூழலில் மக்களுக்குக் கிடைத்த்து.
  1. சூரணங்கள், பற்ப, செந்தூரங்கள, மெழுகுகள், லேகியங்கள், நெய் போன்றவை சிறிய அளவில், மருத்துவம் கற்ற – கற்க முனைபவர்களின் நீண்ட காலக் கடும் உழைப்பால் தயாரிக்கப்பட்டன.
  1. நோய் அறியும் நுட்பங்களை வழி வழியாக அணுபவத்தில் கற்றுத் தேர்ந்த மருத்துவர்கள் தங்கள் மருத்துவ முறையில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டார்கள்.
  1. வீடுகளில் பெரியவர்கள்-பெண்கள் தம் குடும்பத்தினருக்கு வரக்கூடிய நோய்களுக்கான மருந்துகளைத் தாமே செய்து கொள்ளும் ஆற்றல்-அறிவு உடையவராக இருந்தனர். தம்மால் முடியாத சூழலில்த் தான் ஊர் மருத்துவர் உதவியை நாடுவர். மருத்துவர் தரக்கூடிய சிறப்பு மருந்துகளைப் பயன் படுத்தத் தேவையான அறிவும் மக்களிடம் இருந்தது.
  1. மருந்துகள் உடலியற்கைக்குப் பொருந்தும் வகையில், நன்கு சுத்தி செய்து மருத்துவர்கள் தாம் சாப்பிட்டுச் சோதித்த பின்னரே மருந்து தருவர். சித்த மருத்துவர்கள் தாம் தம் கைப்படத் தயாரித்த மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவர். மருத்துவரும்-பிணியாளரும் மருந்துகளை இறையச்சத்தோடு கையாண்டனர்.
  1. மக்களுக்கும் – மருத்துவர்க்கும் இடையில் குடும்பரீதியான நட்பும், அன்பும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
  1. மருந்துகளுக்கான பத்தியம், மருந்துண்ணும் அளவு, காலம், சூழல், மனநிலை பற்றிய அறிவு குடும்பத்தினருக்கு இருந்ததால் நோயுற்றவர்க்கு நல்ல ஒத்துழைப்பு இருந்த்து.
  1. 10. மக்கள் ஏரி, குளம், கன்மாய், கடல், காடு, மலைகளைத் தடையின்றிப் பயன்படுத்தியதால் அவர்களின் உணவு, மூலிகைகள் மற்றும் மருத்துவத்துக்குத் தேவையான சரக்குகளை எளிதாகப் பெற முடிந்த்து. பதிலுக்கு, அவர்கள் இயற்கைச் சூழலை அழியவிடாது காத்துவந்தனர்.
தற்போதய நிலை.
  1. மக்களின் வாழ்வாதாரங்கள் அரசுடமையாக்கப்பட்டதால் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களாகிய ஏரி, குளம், கன்மாய் மற்றும் கடல், மலை, காடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அன்னியமாக்கப் பட்டுள்ளனர். இதனால் மக்கள் பொறுப்பற்றுப் போயினர். இதனால் கேட்பாரின்றி அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையோடு மனித நேயமற்ற பெரும் பணக்காரர்களின் வேட்டைக் காடாகி மனிதவாழ்வாதாரங்கள் அழிந்து கொண்டிருக்கிறது.
  1. மருந்து உண்பதற்கான சூழல், மனநிலை, அறிவு முதலியன இல்லை. அவசரமும், அறியாமையும், குழப்பமும், தவறான பழக்க வழக்கங்களும், (இரவுத் தூக்கம், பசிக்கு உணவு, தாகத்துக்குத் தண்ணீர், தலைக்குக் குளியல், உடலியற்கைக்குப் பொருந்திய நல்லுணவு, கழிவுகளை வெளியேற்றுதல் இவையாவும் இன்றி, – எல்லாம் நேரம் கிடைத்தாலத்தான்-கடமைக்காக, எதுவானாலும் சரி என்றாகிப் போய்விட்டது.)
  1. பல இலட்சங்கள் செலவு செய்து பணம் பன்ன வந்த மருத்துவர்கள், பணத்துக்காக எதையும் செய்யும் மருத்துவர்கள். இவர்களைப் பாதுகாக்கப் பலமான அமைப்புகள். இவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் எந்த ஒரு ஒட்டோ, உறவோ, அன்போ இல்லை, இதனால், பயமோ, பொறுப்போ இல்லை.
  1. தற்போது சித்த மருந்துகள் மிகப் பெரும் அளவில், வணிக நோக்கில் செய்யப் படுகின்றன. அதனால் சரியான படிச் சுத்தி செய்ய இயலாது. மருந்துகளின் தரத்தையும், குணத்தையும், அளவையும் முடிவு செய்யும் காரணி வணிகர்களே. வியாபாரத்துக்காக நீண்ட நாள் பாதுகாக்கவும், எளிய நடைமுறைகளுக்காகவும், பெருமளவில் உயிர்க் கொல்லிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை உடலுக்கு மிகப் பெரிய கேடு.
தற்போது எளிமை கருதி குப்பிகளில அடைத்து விற்கிறார்கள். இதனால உமிழ் நீராகிய அமுதம் கலவாது வயிற்றுள் செல்லும் மருந்துகளும் விசமாகிறது.
சிறிய அளவில் மூலிகைச் சாறுகள் பெருமளவில் விட்டு, கைகளால்          இறையச்சத்துடன் அரைத்துச் செய்யப்படும் மருந்துகள் அரைக்கும்    மருத்துவரின் நல்ல எண்ணங்களால் நல் மருத்துவ குணத்தைப் பெறும். இது பெருமளவில வணிக நோக்கில் செய்யும் போது  சாத்தியமில்லை.
  1. மருந்துகளுக்கு அனுபானமாக (கொண்டு செலுத்தியாக) உள்ள மூலிகைகைக் கசாயங்கள், சாறுகள், சூரணங்கள் பற்றிய அறிவு நொயுற்றவர் மற்றும் அவர் குடும்பத்தினர்க்கு இல்லாத்தால், தகுந்த அனுபானமின்றி நன்கு முடித்த மருந்துகள் கூட போதுமான பலனைத் தருவதில்லை.
மருந்துகள் காரனமாக, உடலின் சக்தி பெருகும் போது, உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றிய அறிவின்மையால், தேவையற்ற பயமும் குழப்பமும் ஏற்பட்டு (எதிர்முறைய (அலோபதி) மருத்துவத்தின் தவறான கருத்துகளின் ஆளுமையால்)மருந்துண்போர் தமது ஆற்றலைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள்.
  1. தற்போதய சித்தமருத்துவர்கள் (படிப்பறிவு) பெயரில் மட்டுமே சித்த மருத்துவர்களாக இருக்கின்றார்கள். தமது மருத்துவ முறை மீது நம்பிக்கை இல்லாதவர்களாக அவர்களது படிப்பு முறை அவர்களை உருவாக்கி உள்ளது. நாடி பார்த்தல், மூலிகை பற்றிய அறிவு, மருந்து செய்முறைகள், மரபுவழி வாழ்க்கை நுட்பங்களை அறியாதவர்களாயும், அறிந்தவர்களின் பெருமையை உணராதவர்களாயும் தான் இருக்கிறார்கள்.
பெரும் வணிக நிறுவனங்களை மருந்துத் தேவைக்கும் நோயறிதலுக்கும் நம்பி, சித்தர்களின் பெயரைக் கெடுக்கிறார்கள்.
தம் இயலாமையாலும், பேராசையாலும், பிழைப்புக்காகவும் தன் முறைகளுக்கு நேர் எதிரான அலோபதி மருந்துகளைப் பயன்படுத்தி போலி மருத்துவர்களாகிக் கீழ்மைப்படுகிறார்கள்.
அழிந்துவரும் அலோபதி முறை தம்மைக் காத்துக் கொள்ள கடைசி முயற்சியாக, தாம் தம் கைப் பிள்ளைகளாக வளர்த்து வந்த சித்த (அலோசித்தா) மருத்துவர்களும் ஆங்கில மருந்துகளைப் பயன் படுத்த அழைப்பு விடுத்துள்ளது. எப்படியோ தங்கள் பை நிறைந்தால்ப் போதும் என நிணைக்கும் ஆட்சியாளர்கள். இவர்கள் கருணையால் நமது செலவில் நாளும் உடல் உறுப்புகளை இழந்துவரும் அறிவற்ற மக்கள் கூட்டம். இலவசம் என்றால் உடல் உறுப்புகளை இழப்பதற்கும் போட்டி தான் இந்த விழிப்புணர்வற்ற நாட்டில்.
உதாரணம்.
28,29,30-6-2008 ல் திருநெல்வேலியில் ஆசான்.திரு.ந.சண்முகம் அவர்களால் நடத்தப்பட்ட வர்மக்கலைப் பயிற்சிக்காகப் போயிருந்தேன் அந்தப் பயிற்சியில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 30 மாணவிகள் 2 மாணவர்கள் கலந்திருக்கலாம். 3 நாள் நிகழ்சியில், மாணவர்களிடம் ஏற்பட்ட நட்பால் பயிறசி முடிந்த நாள் இரவு மாணவர் விடுதிக்கு அழைப்பின் பேரில் சென்றேன். என்னுடைய புதிய நண்பர்களில் ஒருவர் M.D  இரண்டாமாண்டு மாணவர், மற்றவர்  B.S.M.S இறுதியாண்டு மாணவர்.
விடுதி அறையில், இவர்களது சக மாணவர் ஒருவர் மிக்க் கடுமையான உடல் வலி, மற்றும் சுரத்தினால் அவதிப்பட்டவாறு படுத்திருந்தார். என்ன இந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள் ஏதேனும் மருந்து கொடுத்தீர்களா? என்று கேட்டவாறு அறையை நோட்டமிட்டேன். புத்தக மேசையில் புத்தகங்களோடு அலோபதி மருந்துகள், மாத்திரைகளைப்(சுரநீக்கி, வலிநீக்கி) பார்த்தேன்.
உங்கள் இடத்தில் ஏன் இந்த விசங்கள், இவையெல்லாம் உடலுக்குக் கேடு என்பதை நீங்கள் அறியவில்லையா? எனக் கேட்டேன். நாங்கள் சண்டமாருதம்(கடையில் வாங்கியது) மற்றும் சில மருந்துகளைப் பயன்படுத்திப் பார்த்தோம். கேட்கவில்லை அதனால் தான ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தினோம் என்றனர்.
இதை சரிசெய்வது பெரிதில்லை, நான் முயற்சி செய்யலாமா? எனக் கேட்டேன். அனுமதித்தனர்.
இறைவழி மருத்துவத்தில் விணாடிக்குள் சுரம் மிகவும் குறைந்துவிட்டது, உடல் வலியும் முற்றாக நீங்கி புத்துணர்வடைந்தார் துன்பத்திலிருந்தவர். எழுந்தவுடன் பக்கத்து அறைகளுக்குச் சென்றவர் வயிற்றுவலி. தலைவலி, உடல்வலி மற்றும் மூட்டுவலிகளால் துன்பமடைந்து இருந்த சில மாணவர்களையும் உடன் அழைத்து வந்தார். அவர்களும் விணாடிகளில் சுகம் பெற்றார்கள்.
வியப்பும், மகிழ்வும் அடைந்த நண்பர்கள் கூறினர். கடந்த 3 நாட்களாக மிக அற்புதமான வர்மக் கலை நுட்பங்களைப் பார்த்து வியந்து போயிருந்தோம், தற்போது நீங்கள் நோயுற்றவரைத் தொடாமலே, விணாடிக்குள் சுகப்படுத்திக்காட்டிய இறைவழி மருத்துவம் எங்களை வியப்பின் உச்சத்துக்கே கொண்டுபோய்விட்டது என்றனர். மேலும், நீங்கள் சுகப் படுத்தியதை விட உங்கள் மருத்துவமுறை மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், தைரியமான அணுகுமுறையும் எங்களைக் கவர்ந்துவிட்டது என்றனர்.
மேலும், மனம்விட்டுப் பேசினர், நாங்கள் எல்லாவித வசதிகளுடனும் படிக்கிறோம் நீங்களோ தன்முயற்சியைக் கொண்டு பல இடங்களில் தேடி மருத்துவம் கற்றுள்ளீர்கள். நாங்கள் இந்தக் கல்லூரியில் சேரும் போது, நாம் மிகச் சிறந்த மருத்துவர்களாக வேண்டும் எனும் நினைவோடு உத்வேகத்த்தோடு சேர்ந்தோம் ஆனால் இந்த 7 ஆண்டுகாலப் படிப்பு எங்களை நடப்பதற்குக்கூட ஊன்றுகோல் தேடும் அளவுக்குத் தன்னம்பிக்கை அற்றவர்களாக ஆக்கிவிட்டது.
இங்கு எங்களுக்கு உள்ள பாடத்திட்டமும், அதை நடத்தும் விதமும் எங்களை பயன் இல்லாதவர்களாக நாங்களே கருதும் படி ஆக்கிவிட்டது என்றனர். கடந்த 3 நாள் பயிற்சியில் ஆசான் ந. சண்முகத்திடம் கற்றுக் கொண்ட வர்மக்கலை நுட்பத்தில நூற்றில் ஒரு பங்கு கூட இத்தனை ஆண்டுகளில் எங்கள் பேராசிரியர்களிடம் கிடைத்த்தில்லை. இவ்வளவுக்கும் அவர் வர்மக்கலை வல்லுனர் தான். நாங்களாக முயன்று பிற ஆசான்களிடம் கற்பதற்கும் தடையாகவே இருக்கிறார்கள் என்றார்.
இப்படி இருக்கையில் ஏன் மரபுவழி மருத்துவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துகிறீர்கள் என்றேன். நாங்கள் மாணவர்கள பலவாறாகப் பிரிந்து கிடக்கிறோம் கட்சிகள், சாதிகள், மதங்கள், ஏழை பணக்காரன் என்ற வேற்றுமைகள் எங்களைப் பிரிக்கின்றன. மேலும், இந்த அடிமைக்கல்வி எங்களைத் தற்சார்பற்றவர்களாய் அடித்துள்ளது. படிப்பு முடிந்த்தும் பிழைப்புக்காக மருந்து எழுதிக் கொடுத்தால் போதும் என்ற நிலை. மக்களின் கேள்விகளிலிருந்து தப்பிக்கவும், வருமானத்துக்காகவும் அலோபதியினர் போல நடிக்க்க கற்றுக் கொள்ளவேண்டும். இந்த நிலையில் நாங்கள் இருப்பதினால் எங்களைப் பிற சக்திகள் எளிதாகப் பயன்படுத்திக கொள்கின்றன என்றார்.
  1. தற்போது கடையில் விற்கும் சித்த மருந்துகளை சிறிய அள்வில் நிறைய மூலிகைச் சாறுகளை விட்டுத் தேவையான நேரம் வரை அரைத்தோ, இடித்தோ செய்வதில்லை. தற்போது மிகப் பெரிய அளவில் நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி விற்பனை நோக்கில் செய்வதால் தரமாக மருந்துகள் முடிக்கப்படுவதில்லை.
இங்கே ஞாபகம் வைக்க வேண்டியது, எந்த மருந்து நிறுவனமும் நோய் தீர்க்கும் நோக்கில் மருந்து செய்வதில்லை. பெரும் பணம் பன்னும் நோக்கில் தான் வணிகர்கள் இருப்பர். இதற்கு சித்த மருந்து நிறுவனங்கள் விதிவிலக்கல்ல. நோயாளி படுக்கையில் இருந்து எழுந்தால் தன் வியாபாரம் படுத்துவிடும் என்பது வணிகர்களுக்குத் தெரியாதா?
மருந்து வணிகர்களுக்கு நோயுண்டாக்கும் காரணிகள் தான் நண்பர்கள். நோய் தீர வழிகாட்டுபவர்களும், நோய் தீர்க்கும் வாழ்க்கை முறைகளும் தான் முதல் எதிரிகள். முடிந்தால் KEVIN TRUDEAU எழுதிய  NATURAL CURES எனும் புத்தகத்தை வாங்கி-வலையிறக்கிப் படியுங்கள்.
முன்பு கற்றுக்கொள்ள விரும்பி வரும் சீடர்களை வைத்து மருந்துகளை முடிப்பார்கள் சித்தர்கள். சீடர்களின் உடலையும், மனதையும் வலுவாக்க வேண்டிய பொறுப்பு குருவுடையதே எனவே, மனதை இருத்தி மருந்துகளை பல சாமங்கள் இடிப்பதற்கும், அரைப்பதற்கும் பயிற்றுவிப்பார்கள் இதை ஒரு யோகமாக நினைத்து குருபக்தியுடனும், இறையச்சத்துடனும் செய்யும் மாணவர்களுக்கு நினைத்த்தை முடிக்கும் ஆற்றலைப் படைப்பாற்றல் வழங்கும்.
  1. சித்த மருந்துகள் செய்யப் பயன்படுத்தும் மூலிகைகளும், தானியங்களும், இளநீர், பால், பழம், முட்டை, இறைச்சி முதல் தாய்ப்பால் வரை எல்லாம் நவீன அறிவியலால் நஞ்சேறிப் போயுள்ளது. உப்பைக்கூட நஞ்சாக்கி விட்டனர்.
உதாரணம். பசுவின் பால் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்துவது, மருந்துகள் செய்வதற்கும், அனுபானத்துக்கும், மருந்துகளை சுத்தியாக்கவும் பால் பயன்பட்டது.
பால் கறந்து ஒரு சாமத்துக்குள் சாப்பிட்டால் அமுது என்கிறது பதார்த்த குண சிந்தாமணி. நமக்கு கிடைக்கும் பால் கறந்து பல நாள் கழித்து, அதிலிருந்து சத்துக்கள் நீக்கி, நஞ்சுகள் கலந்து கிடைக்கிறது. முன்னோர்கள் பயன்படுத்திய பாலுக்கும் இதற்கும் வெள்ளை நிறம் மட்டுமே ஒற்றுமை, மற்றபடி இது என்ன?
தேடிப்பிடித்து பாலைக் கறந்து வாங்கினாலும் பசு சாப்பிட்ட தீவனமும், பசுவின் இரத்த்த்தை பாலாக்கித்தரும் இரசாயன ஊக்கிகளும் பாலைப் பாழாக்கித் தான் தருகின்றன.
பாலே இப்படியென்றால் அதிலிருந்து பெறும் நெய்-வெண்ணையும் கலப்படம் தான்.
எண்ணெய் எல்லாம் நிறமூட்டிகளும், மணமூட்டிகளும் கலந்து தரும் ஏதோ ஒன்றாகத்தான் கிடைக்கிறது.
உதாரணம். 10 ஆண்டுகளுக்கு முன் மதுரையில், எண்ணெய் மொத்த வணிகரிடம் கேட்டேன்.
நான் புதிதாக கடை ஆரம்பித்துள்ளேன். பக்கத்துக் கடைகளில் எல்லாம் ஏற்றதாழ்வான விலைகளில் எண்ணெய் விற்கிறார்கள். பக்கத்தில் உள்ள எண்ணெய் ஆட்டுமிடங்களில் வாங்கினால் கூட விலை ஒத்துவரவில்லை எப்படி? என்றேன்.
இதோ பாருங்கள் இந்த நல்லெண்ணெய் டின் 1380 ரூபாய், இன்னொன்றைக்காட்டி இது 300 ரூபாய்  இரண்டையும் வாங்கிப் போங்கள் உங்கள் விலைக்குத் தக்கபடி கலந்து கொள்ளுங்கள் என்றார். இரண்டின் மணமும், நிறமும் ஒத்திருந்தது.
சும்மா பன்னுங்க தம்பி, பெரிய நிறுவனம் தயாரிக்கும் எண்ணெய் இதைவிட மோசம் தான் என்றார்.
நேற்று வைத்தியத்துக்கு வந்த மளிகைக் கடை நண்பர் கூறுகிறார் நாங்கள் விற்கும் பொருளில் 100க்கு 10 கூட தரமானதில்லை (not original) என்கிறார். உண்மையான, நஞ்சில்லாத, தரமான பொருள்களை எவ்வளவு பணம் செலவு செய்தும், தேடிப்பெறவும் முடியவில்லை.
மனம் ஒத்துக்கொள்ளாவிடிலும் பிழைக்க வேண்டியுள்ளது. மக்களுக்கும் நலவாழ்வின் தேவை புரியவில்லை என்றார்.
இளநீரும் பறித்த இடத்திலிருந்து நம்மை அடைவதற்குள் தன் தன்மையை இழந்துவிடுகிறது.(பறித்த 5 மணி நேரத்துக்குள் குடித்தலே சிறப்பு) மேலும் தென்னைக்கு வைக்கும் விசம், குடிப்பவர்க்கும் கொடூரமான பாதிப்பைத்தான் தருகிறது.
  1. செலவுக்கும், அலைச்சலுக்கும் அஞ்சாத வைத்தியர் கூட மொத்தத்தில்  திருப்தி இல்லாத நிலையில் தான் மருந்துகளை முடிக்க முடிகிறது.
  1. ஒருவாறு மருந்துகள் முடிந்தாலும், அதைச் சாப்பிடத் தகுதியான நோய் தீர்வோர் இல்லை. உடலியற்கை பற்றிய அறிவு நம் மக்களிடம் இல்லை. மேலை அறிவியலால் நம் அறிவு சீர்குலைக்கப்பட்டுள்ளது. முறையாக வைத்தியர்கள் சொன்னபடி, நேரத்துக்கு, தக்க அனுபானங்களில், தக்க ஓய்வெடுத்து நலம் பெற வேண்டும் என காத்திருப்போர் இல்லை. வீட்டில பொறுமையாய் ஒத்துழைப்பவர்களும், விழிப்புணர்வுடன் உதவிசெய்வோரும் இல்லை.
உற்றவன் தீர்ப்பான மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பாலநாற் கூற்றே மருந்து.
  1. முன்பு சமூகம் கூட்டுக் குடும்பங்களாக இருந்த்து. வீட்டில பெண்களிடம் உணவு தயாரித்தல், உடல்நலம் காத்தல், விதைகளைப் பக்குவப்படுத்திப் பாதுகாத்தல், குழந்தைகளை வளர்த்தல், முதியோர் நலம் காத்தல், சுற்றுச்சூழலைக் காத்தல் போன்ற தலையாய பொறுப்புகள் இருந்தன. இவற்றை முழுக் குடும்பம் மற்றும் சமூக ஒத்துழைப்புடன் அழகாகச் செய்து வந்தனர்.
தற்போதய வணிக அறிவியல் சூழலால் கூட்டு வாழ்க்கைச் சூழல் சிதைந்து, தனிச்சிறு குடும்பங்களாகிப் போயின.
பெண்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக மிகச் சீராக வளர்க்கப்பட்டு வந்த வாழும் கலை அறிவியல் அவர்களிடமிருந்து பலவந்தமாக, மறைமுகமாக, மிகவிரைவாகப் பறித்துச் சீரழிக்கப் பட்டுவிட்டது.
தற்போதய குடும்பத் தலைவிகளுக்கு தமது பழைய கடமைகளோடு, பல புதுச் சுமைகளும் சேர்ந்துவிட்டன. தனது குடும்பம் மற்றும் சமூகத்து உதவியும், அறிவும் இன்றி தானே தனக்குச் சுமையாகிப் போய்விட்டனர் பெண்கள்.
பெண்கள் தன் தனித் தன்மையையும், சிறப்பையும் இழந்து, தன் துணையோடு போட்டிபோட்டு, வெறுக்கும் அவல நிலைக்கு ஆளாகிவிட்டனர்.
தங்களின் தனிச்சிறப்பான தன்மையின் பயன்களை- அறிவை இழந்ததால், ஆண்களைப் போல் நடிப்பதும், நடப்பதும், தம் உடல் இயற்கைக்கும், மன இயற்கைக்கும் பொருந்தாத, பிழைப்பு வழிகளைத் தேட மறைமுகமாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் தன் நலமான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார்கள்.
விளைவு, ஆண் பெண்ணிடம் காதல் வாழ்க்கை என்பதே காணாமல் போய்விட்டது. இருவருக்கும் இடையில் பாலுணர்வுத்தேவை தவிர வேறொன்றும் இல்லை  எனும் நிலை வந்துவிட்டது. ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதாக நினைக்கும் போக்கு அதிகமாகி விட்டது.
பெண்கள் தங்கள் குடும்ப-சமூகத் தலைமைப் பொறுப்பை மனித நேயமற்ற வணிகர்களிடமும், அறிவியலாளர்களிடமும் இழந்து விட்டார்கள். பெண்கள் மற்றும் ஆண்களின் அடிமை நிலைக்குக் காரணம் தற்போதய நவீன உயர் அறிவியல் தொழில் நுட்பமே.
சிந்திக்க மறந்து போன, விரும்பாத, அடிமைத் தன்மையில் ஊறிப் போன மாக்களுக்கு சித்தமருத்துவம் மட்டுமல்ல வேறு எந்த மருத்துவமும் –  எந்த நோயையும் தீர்க்க முடியாது.
தான் ஒரு அடிமை என்பதை உணராதவர்க்கும், தனது அடிமை வாழ்விலே இன்பம் காண்பவர்க்கும் விடுதலையே இல்லை.
-இது சான்றோர் வாக்கு.

வெறும் கால் நடை


வெறும் கால் நடை பழக்கம் கால் வலி மற்றும் பிற வலிகள் நீங்க எவ்வாறு நமக்கு உதவுகிறது என்று பார்ப்போம்.
உங்கள் பாதத்தின் அடியில் உங்கள் உடல் உறுப்புக்களின்  உணர்ச்சி நரம்புகள் முடிகின்றன. நீங்கள் இந்த புள்ளிகளை மசாஜ் செய்தால் வலி நிவாரணம் கிடைக்கும். உதாரணமாக இதயத்தில் வலி இருந்தால் இடது காலில் மசாஜ் செய்ய வேண்டும். பொதுவாக இந்த புள்ளிகள் மற்றும் அதை இணைக்கும் உறுப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் அக்குபஞ்சர் பற்றிய ஆய்வுகள் அல்லது உரைநூல்களில் காணக் கிடைக்கின்றன.
கடவுள் மிகவும் அற்புதமாக நம் உடலை வடிவமைத்துள்ளார். அவர் நாம் எப்போதும் இந்த புள்ளிகள் தரையில் படுமாறு நம்மை நடக்க செய்துள்ளார். இவ்வாறு நடக்கும் போது நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்படைகின்றன.
அதிகாலையில் வெறும் காலில் நடப்பது நம் எலும்புகளுக்கும் உடம்பிற்கும் நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, வெறும் காலில் நடக்கும் போது கால் தசைகள் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
வெயில் காலங்களில் அதிகாலையில் புல்வெளியில் அல்லது இலை தழைகளின் மேல் நடக்கும் போது உடல் குளிர்ச்சி அடைகிறது.
இயற்கை எழில் மிக்க பூங்காக்களில் நடக்கும் போது கால் வலி நீங்க துணைபுரிவதோடு மனமும் இலேசாகிறது.
எனவே தினமும் நடப்போம்!

Tuesday, January 22, 2013

கடுக்காய் பிரபாவ போதினி' பாகம் 1 to 9


ஒரு பழம் பெரும் புத்தகம் 5(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 1)

எனது தாத்தாவின் மருத்துவப் பொக்கிஷங்களில் பல புத்தகங்கள் உள்ளன.அவற்றில் மிகச் சிலவற்றையே வாசக அன்பர்களாகிய உங்களுக்கு இது வரை அறிமுகப்படுத்தி உள்ளேன்.மேலும் ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறேன்.

இது என் தாத்தாவின் சொந்தக் கையெழுத்தில் கடுக்காய் மையினால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியில் உள்ள விடயங்களை விளக்கங்களுடன் தர இருக்கிறேன்.

அந்த நூலின் பெயர் ''கடுக்காய் பிரபாவ போதினி''.
கடுக்காய் பிரபாவ போதினி
கடுக்காயும் தாயும் கருதிலொ ன்றென்றாலும்
கடுக்காய்த் தாய்க்கதிகங் காணீர்-கடுக்காய்நோ
யோட்டியுடற்று மற்றன்னையோ சுவைக
ளூட்டியுடற் றேற்று முவந்து.

விளக்கம்;-கடுக்காயும் தாயும் ஒன்று என்றாலும், கடுக்காய் தாயைவிட ஒரு படி மேலாக கருதப்படும். எவ்வாறென்றால் அன்னை சுவையான உணவை மட்டுமே ஊட்டுவாள்.தாய்க்கு இல்லாத தகுதியான நோய் போக்கும் சக்தி இந்தக் கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காயை கிரமப் பிரகாரம் சாப்பிட்டு வருவது நோயணுகா விதிகளில் ஒன்று.

பதினான்கு வகை இரத்தினங்களில் கடுக்காயும் ஒரு வகையாகக் கருதப்படுகிறது.தேவ வைத்தியரான தன்வந்திரி பகவான்,கடுக்காயை எப்போதும் தம்மிடம் வைத்திருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.வட மொழியான சமஸ்கிருதத்தில் கடுக்காய்க்கு அரிதகி என்று பெயருண்டாவற்கு காரணம் அது எல்லா வியாதிகளையும் நீக்குகிறது என்பதேயாகும்.

இன்னும் இதைப் பற்றி கடுக்காய்ப் பிரபாவ போதினியிற் சொல்லப்பட்டிருப்பதாவது,
சுவை ஆறுவகையென்பது பிரசித்தம்.

ஆனால் கடுக்காயின் சுவை ஐந்தாகும்,அவை தித்திப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உரைப்பு, ஆகிய ஐந்து வகைக் கடுக்காய்கள் இருக்கின்றன.உவர்ப்பு வகைக் கடுக்காய் மாத்திரமில்லை.

இங்கு சர்வ தயாபரனான கடவுளின் அற்புதமான படைப்பின் ஏற்பாட்டைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். கடுக்காயானது அதி மேலான குணங்களையுடையது. அதில் துவர்ப்பானது கண்வியாதி, இந்திரிய விருத்தி, இரத்த விருத்தி ஆகிய வகைகளுக்கு விரோதஞ் செய்யத் தக்கது.

கடுக்காயோ கண்ரோகம் முதலியவைகளுக்கு சஞ்சீவிக் கொப்பானது. ஆகையால் ஒன்றுக்கொன்று விரோத குணமுள்ளவை முற்றும் ஒன்றாக இருக்கக் கூடாது என்னும் ஏற்பாட்டிற்காகவே உவர்ப்பு வகைக் கடுக்காயை இயற்கையே உருவாக்கவில்லை போலும்.         

'வாதமாய்ப் படைத்து,பித்த வன்னியாய்க் காத்து,சிலேத்துமமாய்த் துடைத்து என்பார்கள்.''

விளக்கம்;-வாதம் என்பது பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தியால் உடல் வளர்க்கப்படுகிறது.பின் 20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான(வன்னி) நெருப்பு சக்தியால் காக்கப்பட்ட உடல் பின் 45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தியால் (சளி தொண்டையில் அடைத்து ஒரு விக்கலுடன் உயிர் பிரிகிறது) உடல் சக்தியெல்லாம் துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரிகிறது.

காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்-உண்டிடில்
கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர்
கோலை விட்டு குலாவி நடப்பரே.

இதில் காலையில் இஞ்சி,மதியம் சுக்கு,மாலையில் கடுக்காய் என்று பொருள் எடுக்கக் கூடாது.காலைப் பருவமாகிய பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், வாதக் கதிப்பினால் வரும் வியாதிகளைக் களைய இந்தப் பருவத்தில் இஞ்சியை வருடம் ஒருமுறை ஒரு மண்டலம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போலவே  20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான (வன்னி) நெருப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், பித்தக் கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு சுக்கை சுத்தி செய்து வருடம் ஒருமுறை ஒரு மண்டலம்  மருந்தாகத் தர குணமாகும்.
   
45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில்,

சிலேற்பன 
கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு கடுக்காயை சுத்தி செய்து கீழ்க் குறிப்பிட்ட முறைகளின் படி சாப்பிட்டு வர, 

உடல் சக்தி காக்கப்பட்டு, சிலேற்பனக் கதிப்பு துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரியாமல் காக்கப்படுகிறது.இதனால் இது காயகற்பத்தில் தலையாயதாகவும் செயல்படுகிறது.கடுக்காய்க் கற்பம் எனப் போற்றப்படுகிறது.  


'வாதமாய்ப் படைத்து,பித்த வன்னியாய்க் காத்து,சிலேத்துமமாய்த் துடைத்து என்பார்கள்.''

விளக்கம்;-வாதம் என்பது பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தியால் உடல் வளர்க்கப்படுகிறது.பின் 20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான(வன்னி) நெருப்பு சக்தியால் காக்கப்பட்ட உடல் பின் 45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தியால் (சளி தொண்டையில் அடைத்து ஒரு விக்கலுடன் உயிர் பிரிகிறது) உடல் சக்தியெல்லாம் துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரிகிறது.

காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்-உண்டிடில்
கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர்
கோலை விட்டு குலாவி நடப்பரே.

இதில் காலையில் இஞ்சி,மதியம் சுக்கு,மாலையில் கடுக்காய் என்று பொருள் எடுக்கக் கூடாது.காலைப் பருவமாகிய பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், வாதக் கதிப்பினால் வரும் வியாதிகளைக் களைய இந்தப் பருவத்தில் இஞ்சியை வருடம் ஒருமுறை ஒரு மண்டலம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போலவே  20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான (வன்னி) நெருப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், பித்தக் கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு சுக்கை சுத்தி செய்து வருடம் ஒருமுறை ஒரு மண்டலம்  மருந்தாகத் தர குணமாகும்.
   
45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில்,
சிலேற்பன 
கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு கடுக்காயை சுத்தி செய்து கீழ்க் குறிப்பிட்ட முறைகளின் படி சாப்பிட்டு வர, 

உடல் சக்தி காக்கப்பட்டு, சிலேற்பனக் கதிப்பு துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரியாமல் காக்கப்படுகிறது.இதனால் இது காயகற்பத்தில் தலையாயதாகவும் செயல்படுகிறது.கடுக்காய்க் கற்பம் எனப் போற்றப்படுகிறது.  


கடுக்காயின் உட்கொட்டையயும் மேற் தோலையும் நீக்கிவிட்டு கடுக்காயின் சதைப்பற்றான பகுதியை மட்டும் எடுத்து இடித்து(மிக்ஸியிலோ, மில்லிலோ கொடுத்து அரைக்கக் கூடாது,சூரணம் சூடானால் அதன் மருந்துத் தன்மை இழந்துவிடும்,கடைகளில் விற்கும் சூரணமொ,பொடிகளோ இது போன்ற பக்குவத்தில் செய்ய மாட்டார்கள்,செய்தால் அவர்களுக்கு கட்டுபடி ஆகாது,மொத்தக் கடுக்காயையும் போட்டு அரைத்தால்தான் கட்டுப்படியாகும்), வஸ்திரகாயஞ் செய்து (துணியில் சலித்து) வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.


மேற்படி கடுக்காய்ப் பொடியில் முக்கால் விராகனிடை(ஒரு விராகன்= 4.16 கிராம் எனில் முக்கால் விராகனிடை என்பது 3.12 கிராம் ) மேற்கண்ட அனு பான விஷேஷங்களிற் சாப்பிட வேண்டும்.மேற்குறிப்பிட்ட மாத இடைவெளிக் கால அளவு முழுவதும் சாப்பிட்டால் நன்று. குறைந்த பட்சம் 14 நாட்கள் சாப்பிட வேண்டும். அப்படியும் செய்ய இயலாதவர்கள் எவ்வேழு நாட்களாவது  சாப்பிட்டு வர வேண்டும்.


இப்படிச் செய்வதால் தேக சுகம் நிலைத்திருக்கும், வேறு வியாதிகளுண்டாகா!! மலங் கிரமப்பட்டு(நாளுக்கிரு முறை), இரைப்பை முதலான இராஜ கருவிகளின் தொழிலுங் கிரமப்பட்டு வரும்.


இனி கடுக்காயை காலத்திற்கேற்றார் போல பல வகை அனுப்பானங்களுடன் ஏன் கலந்து உபயோகிக்க வேண்டுமென்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்

கடுக்காயின் உட்கொட்டையயும் மேற் தோலையும் நீக்கிவிட்டு கடுக்காயின் சதைப்பற்றான பகுதியை மட்டும் எடுத்து இடித்து(மிக்ஸியிலோ, மில்லிலோ கொடுத்து அரைக்கக் கூடாது,சூரணம் சூடானால் அதன் மருந்துத் தன்மை இழந்துவிடும்,கடைகளில் விற்கும் சூரணமொ,பொடிகளோ இது போன்ற பக்குவத்தில் செய்ய மாட்டார்கள்,செய்தால் அவர்களுக்கு கட்டுபடி ஆகாது,மொத்தக் கடுக்காயையும் போட்டு அரைத்தால்தான் கட்டுப்படியாகும்), வஸ்திரகாயஞ் செய்து (துணியில் சலித்து) வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.


மேற்படி கடுக்காய்ப் பொடியில் முக்கால் விராகனிடை(ஒரு விராகன்= 4.16 கிராம் எனில் முக்கால் விராகனிடை என்பது 3.12 கிராம் ) மேற்கண்ட அனு பான விஷேஷங்களிற் சாப்பிட வேண்டும்.மேற்குறிப்பிட்ட மாத இடைவெளிக் கால அளவு முழுவதும் சாப்பிட்டால் நன்று. குறைந்த பட்சம் 14 நாட்கள் சாப்பிட வேண்டும். அப்படியும் செய்ய இயலாதவர்கள் எவ்வேழு நாட்களாவது  சாப்பிட்டு வர வேண்டும்.


இப்படிச் செய்வதால் தேக சுகம் நிலைத்திருக்கும், வேறு வியாதிகளுண்டாகா!! மலங் கிரமப்பட்டு(நாளுக்கிரு முறை), இரைப்பை முதலான இராஜ கருவிகளின் தொழிலுங் கிரமப்பட்டு வரும்.


இனி கடுக்காயை காலத்திற்கேற்றார் போல பல வகை அனுப்பானங்களுடன் ஏன் கலந்து உபயோகிக்க வேண்டுமென்பதை அடுத்த பதிவிலிருந்து பார்க்கலாம்

கடுக்காயை செப்டெம்பர் மாத நடுவிலிருந்து நவம்பர் மத்தி வரையில் கடுக்காய்ச் சூரணத்தைக் கற்கண்டுத் தூளுடன்,அல்லது அதுபோன்றவைகளுடன் அனுப்பானித்து ஏன் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தச் சத்தானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுவிடுவது சுபாவமாகையால் அதைச் சமப்படுத்த அல்லது சாந்தி செய்ய வேண்டியதற்காகவேயாம்.

நவம்பர் மத்திம பாகத்திலிருந்து ஜனவரி மத்திய பாகம் வரையில் சுக்குச் சூரணத்துடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் ஏன் அனுப்பானித்துச் சாப்பிட வேண்டுமெனின், அக்காலங்களில் பித்தங் குறைந்து போவது சுபாவமாகையால்,அவ்விதக் குறைவு நேரிடாதிருப்பதற்காகவேயாம்.

ஜனவரி மத்திம பாகத்திலிருந்து மார்ச்சு மத்திம பாகம் வரை கடுக்காயை 





அரிசித்திப்பிலிச் சூரணத்துடன் மிஸ்ரமித்து (கலந்து) உட்கொள்ள காரணமாவது,அக்காலங்களில் கபமதிகரிப்பது சுபாவமாகையால், அவ்விதம் அது அதிகரிக்காமலிருப்பதற்காகவேயாம்.

மார்ச்சு மாத மத்திம பாகத்திலிருந்து மே மாதம் மத்திம பாகம் வரையில் கபமானது அக்கிரமப்படுவது அல்லது கெட்டுப் போவது சுபாவமாகையால் 
 அதனைக் கிரமப்படுத்த தேனிற் குழைத்து அல்லது அதைப் போன்றவவைகளுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும்.
மே மாதம் மத்திம பாகத்திலிருந்து ஜீலை மாத மத்திம பாகம் வரையில் வாதமதிகரிப்பது சுபாவமாகையால் அதனைச் சாந்தப்படுத்த   வெல்லத்துடன் அனுப்பானித்துட் கொள்ள வேண்டியது விதியாகும்.

 ஜீலை மாதம் மத்திம பாகத்திலிருந்து செப்டம்பர் மாத மத்திம பாகம் வரையில் பித்தமதிகரிப்பது சுபாவமாகையால் கடுக்காயை உப்புடன்,அல்லது அதைப் போன்றவற்றுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும் என்று விதியேற்படுத்தப்பட்டிருக்கிறது.

சிகிச்சர்கள் அல்லது மருத்துவர்கள் இக்கால பேதத்தின் விகற்பத்தைக் கவனத்தில் வைத்து மற்ற வியாதிகளின் சிகிச்சைகளிலும் , இவ்விதியை அனுசரித்து அவுடதப் ( மருந்துகள் கொடுத்தல் ) பிரயோகம் செய்வார்களாயின் கடவுளின் கிருபையால் எந்த வியாதியையும் சவுக்கியப்படுத்துவதில் சித்தி பெறுவார்களென்பது நிச்சயம்.

இதனுடன் அவரவர்களின் தேகசுபாவ விகற்பங்களையும் ( வாத தேகம் ,பித்த தேகம், சிலேற்பன தேகம், வாத பித்த தேகம், பித்த வாத தேகம், பித்த சிலேற்பன தேகம், சிலேற்பன பித்த தேகம், வாதசிலேற்பன தேகம், சிலேற்பன வாத தேகம் ) கவனிக்க வேண்டுமென்பதும் அவசியமாகையால், அதனையும் கவனித்துச் சமயோசிதமாக அனுபானாதிகளை மாற்றியும் அதிகப்படுத்தியும் கொள்வது சிகிச்சர்களாகிய மருத்துவர்களின் கடமையாகும்.

இம் இவற்றை கருத்தில் கொண்டு உணவுகளில் தன்மையைப் பொறுத்து கால பேதங்களில் சரியாக உண்டு வந்தால் நோய் அணுகாது. இதையே வள்ளுவர் தன் குறளில் மருந்து என்ற தலைப்பில் ( மருந்து என்ற அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் எதிலும் மருந்து பற்றியே இராது ) வலியுறுத்தி உள்ளார்.   தை சாதாரண நபர்களு
கடுக்காயானது வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் முத்தோஷங்களின் விகற்பத்தால் ஏற்படும் வியாதிகளை நீக்குகிறது. ஆனால் புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, ஆகிய இம்மூன்று சத்துக்களும் பித்த விகற்பத்தை நீக்குகின்றன. 

கடுக்காயில் உள்ள கசப்பு, துவர்ப்பு, உறைப்பு ஆகிய இம்மூன்று சத்துக்களும் கப விகற்பத்தை நிவர்த்தி செய்கின்றன.

துவர்ப்பு, உறைப்பு இவ்விரண்டும் வாத விகற்பத்தை நிவர்த்தி செய்கின்றன. இவையெல்லாம் கடுக்காயில் இருக்கின்றன.

கடுக்காயின் விஷேஷ குணம் கீழ்க்காணும் ரோகங்களில், கடுக்காய் அதிகமாக கீழ்க்காணும் நோய்களில் குணப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது, அவையாவன,
இருமல் ரோகம், சுவாச ரோகம், மூல ரோகம், குஷ்ட ரோகம், இரைப்பை சம்பந்தமான ரோகம், குரற்கம்மல் ரோகம், சுர ரோகம், அஜீரண ரோகம், வயிற்றுப் பொருமல் ரோகம், வாந்தி ரோகம், விக்கல் வியாதி, தாக ரோகம், சொறி, மஞ்சட்காமாலை, குன்ம ரோகம், மண்ணீரல் ரோகம், கல்லடைப்பு, ஈரல் ரோகம், மது மேகம், இந்திரிய சிராவக ரோகம், வீக்கங்கள், பிரமேகம், புண்கள், வயிற்றுக் கட்டிகள், சங்கிரகணி {சங்கடங்கள் தோற்றுவிக்கும் கிரகணி,இதை ஆங்கில வைத்தியத்தில் IBS (IRRITABLE BOWEL SYNDROME) என்பார்கள்}, இருதய ரோகங்கள், முதலியவைகளுக்கு அருமையான அமிர்தமாக கடுக்காய் வேலை செய்கிறது.

இன்னும் இது மூளையையும் இருதயத்தையும் பலப்படுத்துகிறது. ஞாபக சக்தியை விருத்தியாக்குகிறது. மல பந்தம் முதலிய கட்டுக்களை நீக்குகிறது. பைத்தியம், மனக்கிலேசம், சித்தப் பிரமை, ஆகிய மனம் சம்பந்தமான வியாதிகளில் மிக அதிகமாக உபயோகப்படுகிறது.

பெரு வியாதி,மார்பு துடித்தல், தொந்தசுரம், வாத மூல ரோகம், ஆகியவைகளுக்கும் உபயோகப்படுகிறது. கபம் முதலிய துர் நீர்களை வறளச் செய்து குணப்படுத்துகிறது. வயிற்றிலுள்ள உள்ளுறுப்புக்களை பலப்படுத்துகிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. காக்கை வலிப்பு(கால்,கை வலிப்பு), பக்க வாதம், ஆகிய வியாதிகளிலும் பயன்படுகிறது.கடுக்காயை உபயோகிப்பதில் பல மர்மங்களும் உள்ளன.அந்த மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.
''க''வது(ஒன்றாவது) மர்மம்
கடுக்காயை மென்று தின்பதால் தீபாக்கினி அதிகப்பட (பசி அதிகப்படும்) ஏதுவாகும்.சூரணம் செய்து சாப்பிடுவதால் தாராளமாகப் பேதியாகும் (இதையே அவன் எனக்கு கடுக்காய் கொடுத்துவிட்டான் என்பார்கள்). கஷாயஞ் செய்து பானஞ் செய்து வந்தால் மலத்தை பந்தப்படுத்தும்.

இதனைச் சுட்டுக்கரியாக்கிப் பொடித்து வஸ்திரகாயஞ் செய்து(துணியில் சலித்து) தகுந்த அனுப்பானங்களில் உண்ண வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூவகைத் தோஷங்களையும் சாந்தப்படுத்தும்.
  
கடுக்காயை உபயோகிப்பதில் இன்னும் பல மர்மங்களும் உள்ளன.இரண்டாவது மர்மம் முதல் அந்த மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.
''உ''வது(இரண்டாவது) மர்மம்

கடுக்காயை ஆகாரஞ் சாப்பிட்ட பின்பு மென்று தின்பதால் பலம் புத்தி ஆகியவை ஆகியவை அதிகப்படும்.தேகம் செழிப்புண்டாகும்.தேக வசீகரமுண்டாகும்.வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூவகைத் தோஷங்கள் நாசமாகும்.மலம் கிரமப்பட்டு தேகாரோக்கியம் உண்டாகும்.

 ''ங"வது(மூன்றாவது) மர்மம்

கப சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயை உப்புடன் சாப்பிடத் தீரும்.பித்த சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயைக் கற்கண்டுடன் மிஸ்ரமித்து சாப்பிடத் தீரும்.வாத சம்பந்தமான ரோகங்களுக்கு கடுக்காயை நெய்யுடன் மிஸ்ரமித்துச் சாப்பிட வேண்டும்.எல்லா ரோகங்களுக்கும் பொதுவாக வெல்லத்துடன் மிஸ்ரமித்துச் சாப்பிட தீரும்.
''கடுக்காயின் பிரமாணம்'
(சாப்பிடும் அளவு), அநுபானம்,பரிகாரம்
கடுக்காயின் சூரணத்தை முக்கால் முதல் ஒரு விராகனிடை வரையில் சாப்பிடலாம்.(ஒரு வராகன் என்பது 35 கிராம் ஆகும்.)

இதன் அநுபானமும், பரிகாரமும், தேனாகும்.சில சமயம் கடுக்காயை அதிகம் சாப்பிட்டுவிட்டதால் ஏதேனும் கெடுதியுண்டானால் தேனைப் பானம் செய்யத் தீரும்.தேனானது கடுக்காய்க்கு அநுப்பான(மருந்தை சாப்பிட உடன் உபயோகிக்கும் பொருள்) வஸ்துவாயிருப்பதுடன்,அதற்கு பரிகார(மருந்தை அதிகம் சாப்பிட்டதால் உண்டான கெடுதலை நீக்கும் பொருள்) வஸ்துவாகவும் இருக்கிறது.    

கடுக்காயை உபயோகிப்பதில் இன்னும் பல மர்மங்களும் உள்ளன.அவற்றுள் அனுபவ சித்தமான சில முறைகளும்,மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.