- பத்மா அர்விந்த் |
சென்ற வாரம் தண்ணீரின் அருமைகளை பார்த்தோம். உடல் எவ்வாறு தாகத்தின் மூலம் தண்ணீர் தேவையை சொல்கிறது என்றும் அதை தணிக்கும் முரையையும் பார்த்தோம். இந்த வாரம் இரத்தம் எவ்வாறு தன் அமில அல்லது காரத்தன்மையை சச்சீர் நிலையில் வைத்திருக்கிறது என்று பார்க்கலாம். முன்னுரை: இரத்தத்தின் அமிலத்தன்மை உடலில் அமிலத்தன்மையுள்ல பொருட்கள் உன்ணுவதாலோ உடலின் ரசாயன மாற்றங்களாலோ அ திகரித்தால், இரத்தத்தின் அமிலத்தனமையும் அதிகரிக்கிறது. அதேபோல காரத்தன்மை உள்ள பொருட்கள் அதிகரித்தல், அல்லது வெளியேறுவது குறைந்தால் இரத்தத்தின் காரத்தன்மை அதிகரிக்கிறது. உடல் எவ்வாறு சமச்சீர் நிலையை தக்கவைத்துக்கொள்கிறது என்பதே அமில-கார சம ச்சீர் நிலை ஆகும்.சமச்சீர் நிலை தக்கவைத்துக்கொள்வது மிகவும் அவசியம், இல்லை என்றால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் ஒருவகையில் உடலின் கார்பன் டை ஆக்சைடு என்னும் கரியமில வாயுவை நுரையீரல்கள் வெளியேற்றுவதன் மூலம், அமிலத்தன்மை சீராக்க முடியும். கரியமில வாயு மென்மையான அமிலத்தன்மை கொண்டது. இது உடலின் செரிமானம் அதிகரிக்கும் போது உண்டாகும் வேதிவினைகள் உப பொருளாக உண்டாகிறது. வெளியேறாமல் இரத்ததில் இது அதிகரிக்கும் போது அமிலத்தன்மை அதிகரிக்கிறது. மூளை கரியமில வாயு வெளியேற்றப்படும் வேகத்தையும் அளவையும் கட்டுப்படுத்துகிறது. முளை இதன்மூலம் இரத்தத்தின் PH ஐ சரிப்படுத்துகிறது. சிறுநீரகங்களும் இரத்ததின் அமில காரத்தன்மையை சீரமைக்க உதவுகின்றன. ஆனால் மூளளயைவிட சிறுநீரகங்கள் மிகவும் மெதுவாக வேலை செய்வதால், அதிக நாள் எடுக்கின்றன. இரத்தத்தில் ஒருவகை கார்பானிக் மின்னணுக்கள் மூலமும் சமச்சீர் நிலைமையை தக்க வைத்துக்கொள்ள முடியும். இவர்றிற்கு “buffer என்று பெயர். கார்பானிக் அமிலத்திற்கு செயலிழக்க கார்பானிக் மின்னணுக்கள் என்ற காரத்தன்மை கொண்ட மென்மையான காரம் சீர் படுத்த உதவுகின்றன. அமிலதன்மை கொண்ட நோய் (acidosis), காரத்தன்மை கொண்ட (alkalosis) என்பது இரண்டு சீரான நிலைமை மாறியதால் வரும் இரண்டு நோய்கள். இதில் அசிடோசிஸ் என்பது அமிலத்தன்மை அதிகரிப்பதாலும் இரத்ததின் Ph குறைவதாலும் வருகிறது. இதில் சுவாசமண்டல குரைபாடு காரணம் என்றால் சுவாச அஸிடோசிஸ் என்றும் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாததால் வந்தால் அதற்கு செரிமான அசிடோசிஸ்(metabolic) என்றும் அழைக்கப்படும். அஸிடோசிஸ் என்பது கரியமில வாயு அதிகம் இரத்ததில் சேர்வதாலும் (சுவாச மண்டல அஸிடோஸிஸ்) அல்லது பைகார்பனேட் அயனிகள் குறைவதாலும் உருவாகிறது. இரத்ததின் அமில தன்மை அதிகரிப்பதால், மூளை இன்னும் வேகமாக மூச்சுவிட துரிதப்படுத்துகிறது, இது கரியமில வாயு வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகங்கலும் அதிக சிறுநீர் மூலம் சரிப்படுத்த செயல்படுகிறது. ஆனால் அதிக வேலை செய்து இந்த இரு உறுப்புகளும் பழுதடையக்கூடும். இது கோமாவில் முடியக்கூடும். காரணங்கள்: மது, மெத்தனால் போன்றவை அருந்தினால், அவை செரிமானத்திற்கு பிரகு இரத்ததில் உள்ள அமிலத்தை அதிகரிக்கிறது. அதிக ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளவதும், நீரிழிவு நோயின் சில கட்டங்களிலும், அமிலம் அதிகம் உருவாகிறது. நுரையீர்லில் நீர் சேர்ந்துகொள்ளும் போதும், இருமல், எம்பசீமா போன்ற நோய்கள் தாக்கும் போதும் அசிடோஸிச் வரும். இவை நுரையீரல் தசைகளை வலுவிழக்க செய்கிறது. அதேபோல தூக்க மாத்திரைகள், அதிக போதை பொருட்கள் உரிஞ்சுவதாலும் வரக்கூடும். வயிற்றுப்போக்கினால் அதிக பைகார்பனேட் அயனிகள் நீங்குவதால், அதிக உடற்பயிற்சி செய்வதால் லக்டிக் அமிலம் சேர்வதால், சில விஷங்கள் தவறுதலாக உடலில் சேர்வதால், ஆஸ்பிரின் அதிகம் சாப்பிடுவதால் வருகிறது. அறிகுறிகள்: மென்மையான அமிலத்தன்மை அறிகுறிகள் எதுவும் தென்படாது. மற்றபடி வாந்தி, களைப்பு இரண்டும் அறிகுறிகள். மூச்சு விடுதல் இன்னும் அதிக ஆழமாகவும், வேகமாகவும் இருக்கும். அமிலத்தன்மை அதிகரிக்க, முழப்பம், தள்ளாமை ஆகியவை ஏற்படும். கடைசியில் இரத்த அழுத்தம், வாந்தி, ஏற்பட்டு கோமா, அதன்பின் இறப்பு ஏற்பட வழிஉண்டாகும். எவ்வாறு மருத்துவ ரீதியில் கண்டறியப்படும்? தமனிகளில் இரத்தம் எடுத்து இரத்த கரியமில வாயு அளவு கண்டறிவார்கள். இதற்கு குணமாக்க மருந்து எந்த காரணத்தினால் வருகிரதோ அதற்கேற்றவாறு தரவேண்டும். உதாரணமாக நீரிழிவு நோய் ஒரு காரணம் என்றால், அதை கட்டுப்படுத்தாமல் அஸிடோஸிசை குணப்படுத்த முடியாது. சிரைகள் மூலம் பைகார்பனேட் என்ற சோடாஉப்பை செலுத்துவது, அதிக சோடியம் உள்ள திரவங்களை தருவது போன்றவை உதவும். |
கற்ப மூலிகை சருமத்தைக் காக்கும்
குப்பைமேனி..மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.
மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.
குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.
குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.
மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.
Tamil - Kuppaimeni
English - Indian acalypha
Telugu - Kuppi-Chettu
Malayalam - Kuppa-meni
Sanskrit - Arittamajarie
Botanical name - Acalypha indica
இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.
தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்
தேரையர் குணபாடம்
பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்க
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
சொறி, சிரங்கு நீங்க
குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.
இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா
அகத்தியர் குணவாகடம்
பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.
குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.
குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.
மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.
குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.