Showing posts with label diabetic. Show all posts
Showing posts with label diabetic. Show all posts

Monday, August 19, 2013

அத்திபழம்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்ட
கும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.
:-
அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
:-
1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
:-
2. மலச்சிக்கலைநீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
:-
3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
:-
4. போதைப் பழக்கம்மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம். 
:-
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டுவந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
:-
விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ்மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும்,மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். 
இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும்இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
:-
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.
:-
இதை சீமைஅத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம்காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டுவந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீதுபூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
:-
நன்றி தினக்ஸ் தளம்

நமது உடலின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் , வலிமையையும் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பது நமது இரத்தம் . இரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தியே நமக்கு வரும் நோய்களை தீர்மானிக்கிறது .இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவு குறையும் போது ரத்த சோகை அதாவது நமது செயலாற்றல்
குறைதல் ,சோர்வு ,ஒரு மாதிரி மந்தமான நிலை இவையெல்லாம் ஏற்படும்.இது அதிகப்படின் வேறு பலவிதமான நோய்களுக்கு இட்டு செல்லும் . அத்திபழம் இதற்கு மிகச்சிறந்த தீர்வு .

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன .ஆனால் அதன் பயன் தான் யாவரும் அறிந்தாரில்லை .அபூர்வமாக நடை பெறும் நிகழ்வை ''அத்தி பூத்தாற்போல் ''என சொல்வது தமிழர் வழக்கு . அது போன்றே மிகவும் ஆச்சரியகரமான மாறுதல்களை நிகழ்த்தக்கூடியது தேனில் ஊற வைத்த அத்திப்பழம் .ஹீமோ குளோபின் அளவு குறைபாட்டை உடனடியாக சரிசெய்யகூடியது .

ஒரு வார கால இடைவெளியில் அத்திபழம் உண்பதற்கு முன் அத்திபழம் உண்ட பின் என இரத்தபரிசோதனையில் ஹீமோ குளோபின் அளவில் மாற்றம் காட்ட கூடியது . தினம் இரண்டு அத்திபழம் உண்பது நல்லது .பதப்படுத்தபட்டவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .நாமே மரத்தில் இருந்து பழுத்து விழுந்ததை எடுத்து சுத்தபடுத்தி (பூச்சிகள் அதிகம் இருக்கும் ) சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிடலாம் 

Thursday, April 11, 2013

சர்க்கரை நோய் - சிறுகுறிஞ்சான்


சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.

சர்க்கரைக் கொல்லி :

சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.

விதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

விஷக்கடி போக்கும் :

வண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema) நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

Sunday, February 24, 2013

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 6 )


சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 5) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

மூலிகை மணி என்ற மூலிகை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சம்பந்தமான இதழ்கள் அப்போது தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.அவற்றுக்கு எமது சித்தப்பாவான திரு இராமையா அவர்கள் (எலும்பு முறிவிற்குப் பற்றிடலில் உள்ள நோயாளர் இவரே ) ஆயுள் சந்தாதாரராகச் சேர்ந்து அது வரை வெளி வந்த பல ஆண்டுகள் இதழ்களை வாங்கி வைத்திருந்தார் .அவற்றை சிறு வயது முதலே படித்து வந்ததாலேயே சித்த மருத்துவத்தில் எமக்கு இவ்வளவு ஈடுபாடு ஏற்பட்டது(பரம்பரை என்பது வேறு சேர்ந்து கொண்டது).
அந்த மூலிகை மணி இதழில் 1971 ஆம் ஆண்டு ஜூன் மாத இதழில் வெளியான கார்ட்டூனை இங்கே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.
நன்றி :-மூலிகை மணி
முதன் முதலில் செயற்கை இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது எதற்காக என்று தெரியுமா????சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக அல்ல!!!ஆங்கில வைத்தியத்தில் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு மனித உடலில் ஒரு  சத்திர சிகிச்சை ( OPERATION ) செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிறைய முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.அதில் முக்கியமான ஒன்று உடம்பில் கத்தியால் கீரி காயம் உண்டாகி இரத்தம் வெளிப்பட்ட அடுத்த வினாடி உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வினாடிக்கு வினாடி ஏறி அளவு கடந்த மிக அதீதமான நிலையை எட்டிவிடும்.எடுத்துக்காட்டாக 600 மிகி முதல் 900 மிகி வரை எட்டும்.இது ஏன் நிகழ்கிறது.
உடல் கிழிக்கப்பட்டு திறந்த நிலையில் , கிருமிகள் உடலின் உள்ளே   நுழையாமல் இருக்கவும் ,காயம் ஆறப் போராடவும் உடல் தயாராகும் நிலைதான் இந்த சர்க்கரை அளவு அதிகரித்தல்.இது போன்ற சத்திர சிகிச்சை ( OPERATION ) செய்ய இயற்கையாக உயரும்  சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கத்தான் முதன் முதலில் இன்சுலின் பயன்பட்டது .
ஒரு நாய் உங்களை விரட்டுகிறது.அந்த பயத்தில் உடனே உங்களால் தாவிக் குதிக்க முடியாத உயரத்தை நீங்கள் சர்வ சாதாரணமாகத் தாவுவீர்கள்.ஓட்டமோ ஒரு குதிரை  ஓடும் வேகத்தைவிட அதிக வேகமாக ஓடுவீர்கள்.இந்த மாயா ஜாலக் காரியங்களையும் செய்வது நம் உடலில் சிறு நீரகத்தின் உச்சியில் உள்ள தொப்பிச் சுரப்பி,  என்ற அட்ரீனலீன் சுரப்பிதான் அது.
நாய் விரட்ட ஆரம்பித்தவுடன் அட்ரீனல் சுரப்பி அட்ரீனலீனை சுரப்பதால் ,உடலில் இது வரை சேர்த்து வைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட சர்க்கரை அனைத்தையும் அவிழ்த்து இரத்தத்தில் கொட்ட ஆரம்பிக்கிறது .எடுத்துக்காட்டாக 600 மிகி முதல் 900 மிகி வரை எட்டும்.இதயம் அட்ரீனலீன் உதவியினால் இந்தச் சர்க்கரையை உபயோகித்து தன் வேகத்தை அதிகரித்து,(இதயம் தான் இயங்க இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையில் இருந்தே தனக்கு சக்தியை பெறுகிறது) ,இரத்த ஓட்ட வேகத்தை அதிகரிக்கிறது .உடலில் உள்ள தசைகள் அனைத்தும் , இந்த அதிகரிக்கப்பட்ட சர்க்கரையினால் மிக வேகமாக செயல்பட்டு ஆபத்திலிருந்து தப்பிக்கிறது.இந்த உடலின் அதீத செயல்பாட்டை உபயோகித்துத்தான் ஓட்டப் பந்தய விளையாட்டுக்களில் , ஊக்க மருந்தால், தட கள வீரர்கள் வெல்ல முயற்சிப்பதும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர்களுக்கு ஆபத்து சமயத்தில் மேற்கண்ட எதுவும் நிகழாது.உதாரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர் கடுமையான விபத்தில் சிக்கி அதிக இரத்தப் போக்கில் இருப்பவருக்கு அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காததால், இரத்தப் போக்கு தடுக்கப்படாது விடப்படும் , அதனால் அதிக இரத்தப் போக்கினாலேயே அவர் உயிரிழக்கலாம்.
எனவே மேற்கண்ட இரு உதாரணங்களில் இருந்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்தல் என்பதே கேலிக் கூத்து என்பதையும் , இதனால் அந்த நபர் உயிரிழக்கும் ,சாத்தியக் கூறுகள்தான் அதிகம் ஆகின்றன. இத்தனையிலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ள அவர் பிழைத்திருந்தாலும் ,  உடலின் இயக்க வேகத்தை அதிகரிக்க , அதிகரிக்கும் இதயத்துடிப்பால் இதயத்துக்கு சக்தியளிக்கும் சர்க்கரை இரத்தத்தில் உயராததால்  இதயம் சக்தியிழந்து (இதயம் தான் இயங்க சக்தியை  இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையில் இருந்தே பெறுகிறது, உடலின் வேகம் அதிகரிக்கும் போது உடலில் உள்ள மற்ற உறுப்புக்களும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுவதால்) , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ள நபரின் இதயம் இயங்க இயலாத அளவில் இரத்தத்தில் சர்க்கரை இருக்கும்  நிலையில் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தும் போது இதயத்  தாக்கு ( HEART  ATTACK )நேரிடுகிறது.
ஆங்கில  மருத்துவர் சொல்வார் “நானும் எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டேன்.கடைசியில் இதயத்தாக்குதல் வந்ததால் நோயாளர் இறந்துவிட்டார். கடவுள் அவருக்கிட்ட ஆயுள் அவ்வளவுதான் ” என்பார். ஆங்கில மருத்துவம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று கடைப்பிடித்த வைத்திய முறைதான் இந்த இறப்புக்கு காரணம் என்று உணராமல் ,நாமும்  “இதயத்  தாக்கு ( HEART  ATTACK ) வந்துவிட்டால் அவ்வளவுதான் ஒன்றும் செய்ய இயலாது ”என்று சொல்லிக் கொண்டே உச்சுக் கொட்டிக் கொண்டே போய் அவரை சுடு காட்டில் அடக்கம் செய்துவிட்டு அத்துடன் அவரை மறந்துவிடுவோம்.நமக்கும் ஒரு நாள் இந்த நிலைதான் என்பதை அடியோடு மறந்துவிடுவோம் .என்னே நமது அறிவீனம்.
தரமில்லாத சர்க்கரைக்கு கணையம் இன்சுலின் தராது .இன்சுலின் தரப்படாத சர்க்கரை உடலைவிட்டு வெளியேறியே தீரும்.அவையத்தனையும் வீணான சர்க்கரயே. ஆங்கில மருத்துவம் உடலில் சுற்றும் தரமற்ற சர்க்கரைக்கு  தரும் , தன்னிச்சையான இன்சுலினால் தரமற்ற சர்க்கரை உடலின் செல்களுக்குள் நுழையும். விளைவு செல்கள் அனைத்தும் அழுகிச் சாகும்.உடலின் பல பகுதிகளிலும் , ஏற்கெனவே இரத்தத்தில் சர்க்கரையினால் சூழப்பட்ட ஹீமோகுளோபினால் உடலின் செல்களுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் சாகும் செல்களோடு , தரமற்ற சர்க்கரை உள்ளே நுழைவதால் அழுகி இறக்கும் செல்களும்  சேர உடலின் பல பாகங்களிலும் பல குறைபாடுகள் நிகழ்கின்றன.
சிலர் கேள்வி கேட்பார்கள் “ நான் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டே , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டே , சித்த மருந்துகளை சாப்பிடுகிறேன்” என்பார்கள். அவர்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. உடலில் கெட்டுப் போன சர்க்கரையை செல்களுக்குள் தள்ளும் வேலையைச் செய்து கொண்டே செல்களை எந்த விதத்தில் சரி செய்ய இயலும்.அல்லோபதி மருந்துகளை (அவற்றை மருந்துகள் என்று சொல்வதே தவறு , விஷங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் ) எடுப்பதே தவறு என்று நான் மீண்டும், மீண்டும்  நிரூபணங்களோஒடு சொல்லி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள்  கேலிக் கூத்துதான்.
கீழுள்ள காணொளிக் காட்சியைக் காணுங்கள். அதில் உடலில் உள்ள செரிக்கப்படும் பொருட்களுக்கு ஏற்ற வகையில் செரிமானத்திற்கு உதவும் , பித்த நீர் ( BILE ), பாங்க்ரியானிக் செரிமான நீர்களை(PANCREANTIC JUICES  ) அசினார் செல்கள்  (ACINAR CELLS ) சுரந்து டியோடினம் வழியாக நுழைவதை சுட்டிக் காட்டுவதைப் பாருங்கள்.உடலில் சர்க்கரை அளவு குறைவானால் அதிகமாக்க உடலின் கணையத்தில் உள்ள பாங்கிரியாட்டிக் ஐலெட்ஸ் (PANCREATIC AISLETS ) என்ற இடங்களில் உள்ள ஆல்பா செல்கள் (ALPHA CELLS ) குளூகோகான் (GLUCAGON )என்ற நீரைச் சுரந்து உடலில் உள்ள சேமிப்பு சர்க்கரையை எடுத்து  இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக்கும்.
உடலில் சர்க்கரை அளவு  அதிகமானால் குறைக்க (PANCREATIC AISLETS ) என்ற இடங்களில் உள்ள பீட்டா செல்கள் (BETA CELLS )இன்சுலினை (INSULIN ) சுரந்து உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க, செல்களுக்குள் சர்க்கரை உள்ளே நுழைய அனுமதி கொடுத்து இரத்தத்தில் இருந்து செல்களுக்குள் சர்க்கரையை அனுப்புகின்றது .
இந்த இரண்டு செயல்களையும் கட்டுப்படுத்த டெல்டா செல்களில் ( DELTA CELLS ) உள்ள சோமாட்டோஸ்டேட்டின் ( SOMATOSTATIN) சுரந்து சமிக்கைகளைப் (SIGNALS ) புரிகிறது.இப்படி சர்க்கரை அளவு கூடினாலும் குறைந்தாலும் , கெட்ட சர்க்கரை இருந்தால் வெளியேற்றவும்,நல்ல சர்க்கரையை வீணாக்காமல் சேமித்து வைக்கவும் நம்முடலிலேயே சகல வசதிகளுடன் அமைப்புகள் இருக்க, இவற்றை சரியாக செயல்பட வழி செய்தால் போதாதா??? ஆங்கில மருத்துவம் இந்த நாளமில்லாச் சுரப்பிகளின் இடையில் புகுந்து குழப்பங்கள் விளைவிப்பதால்தான் உடல் நலிந்து , ஆங்கில மருந்துகளால் படாத பாடுபட்டு , உள்ளுறுப்புக்களும் முழுவதும் கெட்டு நோயாளர் படாத பாடுபட்டு முடிவில் அத்தனை பொறிகளும் , புலன்களும் கெட்டு இறந்தே போகிறார்.
பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்7) ல் தொடரலாம்.

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 5 )


சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 4) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

உணவு எச்சிலுடன் கலந்து உட்கொள்ளப்படும் போது உணவை எச்சில் ஜீரணத்துக்கு தயார் செய்வதுடன் ,வயிற்றின் உள்ளுறுப்புகளுக்கு தகவல் அனுப்பி வயிற்றில் விழும் உணவுக்கேற்ற வலிவுள்ள ஜீரண நீர்களை சுரக்க வைக்கிறது.  வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவை கரைத்து அன்ன ரசமாக்கி,(சர்க்கரையாக்கி) இரத்தத்தில் கலக்கும் போது , ஹைட்ரோ குளோரிக் அமிலமும் தன் தன்மையை விட்டு எச்சிலில் உள்ள சுண்ணாம்புச் சத்தால் அமிலம் (அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பையும் தண்ணீரையும் உண்டாக்கும்) தண்ணீராக மாறிவிட வேண்டும் . இல்லையேல் அந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் குடலின் சுவர்களை அரிப்பதுடன் , புண்ணாக்குவதுடன் , அமிலத் தன்மை இரத்தத்திலும் ஊடுருவ ஏதுவாகும் .
வெண்புள்ளி நோய் குணமாவதற்கு வீட்டு வைத்தியத்தில் என்ன மருந்து தெரியுமா கூறியிருக்கிறார்கள்.கருவேப்பிலைக் கொழுந்தும் , கீழா நெல்லி இலைக் கொழுந்து ஒரு கைப்பிடியும் காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வர குணமாகும் என்பதோடு சர்க்கரை நோயும் கட்டுப்படும்.அது மட்டுமல்ல ஈரல் நோய்களும் குணமாகும் , அது மட்டுமல்ல உடலில் உள்ள கழிவுகளையும் இவை நன்றாக நீக்கும்.
மேலும் கீழ்க்கண்ட இந்த இணைப்பில் வெள்ளைச் சர்க்கரையான சீனியை தவிர்த்தால் , விளையும் நன்மைகளுள் ஒன்று வெண்குஷ்டம் குணமாதல்.உடலெங்கும் கேடுகள் செய்யும் வெள்ளைச் சர்க்கரையான சீனியைத் தவிர்ப்போம்.
http://maravalam.blogspot.in/2011/10/blog-post_19.html
மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் கூறி இந்தப் பதிவை முடிக்கிறேன்.
சமஸ்கிருத மொழியில் “லங்கணம் பரம ஔஷதம்” என்பார்கள். அதாவது “பட்டினியே சிறந்த மருந்து” என்பார்கள். மூன்று வேளையும் , வேளை தவறாமல் உண்டால் உடம்பு வியாதிகளின் கூடாரமாகும் .அப்படி உண்ணுவதே வேலையாக உண்ணாமல் நன்றாகப் பசித்த பின் (காலை உணவுக்குப் பின் பசிக்கவில்லையானால் அன்று முழுவதும் சாப்பிடவே சாப்பிடாதீர்கள்) மட்டுமே உண்ணுங்கள்.
காலை உணவை எக்காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காமல், அவசரம் அவசரமாகச் சாப்பிடாமல், நிதானமாக காலை 7 மணி முதல் 9 மணிக்குள் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிடுங்கள்.ஏனெனில் வயிறு சக்தி நாளம் இயங்கும் நேரம் இதுவே.
பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்6) ல் தொடரலாம்.

Friday, February 8, 2013

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 4 )


சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 3) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

மேலே உள்ள படத்தில் உள்ளது சீனிக்கட்டியேதான்
சென்ற பதிவில் நல்ல சர்க்கரை , கெட்ட சர்க்கரை என்பது  பற்றிப் பார்த்தோம்.அது எப்படி நம்முடலில் நடை பெறுகிறது என்பதையும் அதை எப்படி தடுக்கலாம் என்பதையும் இப்போது விபரமாக காணலாம்
முதன் முதலில் நாம் சிறு வயதாக இருக்கும் போது நம்முடல் நல்ல ஒரு கருவியாக இருக்கிறது .அதில் இடும் எதையும் எந்த சூழ்நிலையிலும் நல்ல தரமான சர்க்கரையை உற்பத்தி செய்யும் வல்லமை உள்ளதாக இருக்கிறது .அது பின்னாளில் நம்மால்தான் கெடுக்கப்படுகிறது .எப்படி என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒரு அடுப்பு இருக்கிறது .அதில் விறகிட்டு எரிக்க ஆரம்பிக்கும் போது முதலில் அதற்கு சிறு மென்மையான பொருட்கள் நெருப்பை ஆரம்பிக்க தேவைப்படுகிறது ( தாள்கள் , மரப்பட்டைகள் , சிறு குச்சிகள்) , பிறகு சற்று அதிக பருமனான குச்சிகள் தேவை , அதன்பின்தான் விறகுக் கட்டைகளை எரிக்கும் வல்லமை உள்ளதாகிறது   நெருப்பு .இதிலேயே அதிக விறகுகளைத் திணித்தால் நெருப்பு அணைந்து புகைகிறது.பிறகு நெருப்பு அணைந்தும் விடுகிறது.
இப்படி  அதிக காற்றும் (ஆக்ஸிஜன்) இல்லாமல் அதிக எரிபொருளும் இல்லாமல் மிதமான சரியான எரிப்பு எரிப்பதை ஆங்கிலத்தில் STOICKIYOMETRIC FIRING என்பார்கள்.இப்படி எரிக்கப்படும் போதுதான் சரியான  காற்று இருந்தால்கரியோ அல்லது எவ்விதமான எரிபொருளோ  முழுவதுமாக எரிந்து  கரியமில வாயுவாக ( கார்பன் டை ஆக்சைடாக {CARBON DI OXIDE[CO2] }) மாறும் .
C + O2 —>  CO2
இப்படி இல்லாமல் எரிக்கப்படும் போது அதிக காற்று உள்ளிருக்கும் வெப்பம் காற்றுடன் எடுத்துச் செல்லப்பட்டு அடுப்பு குளிர்ந்துவிடும் . குறைவான எரி பொருள் இருந்தாலும் இதே நிலைதான். அதிக எரி பொருள் இருந்தாலும் , குறைவான காற்று இருந்தாலும் , கரியோ அல்லது எவ்விதமான எரிபொருளோ  முழுவதுமாக எரிந்து  கரியமில வாயுவாக ( கார்பன் டை ஆக்சைடாக {CARBON DI OXIDE [CO2]}) மாறாமல் , ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதி மட்டுமே எரிந்து கார்பன் மோனாக்ஸைடாக (CARBON MONOXIDE {CO}) மாறுகிறது .
C + O  —>  CO
இந்த கார்பன் மோனாக்ஸைடு மிக கடும் விஷத் தன்மை கொண்டது . காரை நிறுத்தி வைத்துக் கொண்டு  A /C போட்டுக் கொண்டு தூங்கியவர்கள் இறப்பது இந்த கார்பன் மோனாக்ஸைடினால்தான் . இது போன்ற தொரு  விஷமித்த நிலை வயிற்றில் ஏற்படுவதனால்தான் சர்க்கரை நோய் உருவாகிறது.
நம் நாட்டில் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியால் உயிர் விடுபவர்களைவிட, அதிகம் சாப்பிட்டதனால் அதிக கொலஸ்ரால் , அதிக சர்க்கரை, அதிக உப்பு , அதிக எடை என்று அதிகரிப்பதனால் உயிர் விடுபவர்கள் அதிகம் பேர். மூன்று வேளையும் தவறாமல் வயிற்றில் கொட்டுவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். மேலே தொடரும் முன் உணவு உண்ணுவதைப் பற்றி திரு வள்ளுவர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.
மேற்கண்ட இணைப்பில் கூறியிருப்பதை சாப்பிடுவதில் கடைப்பிடித்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வராது . இருந்தாலும் அது குணமாகும்.
மேலே  சொன்னவாறு அடுப்பில் நெருப்பு எரிப்பதைப்  போலத்தான் நம் வயிற்றில் உள்ள ஜடராக்கினியும் செயல்படுகிறது ( ஹைட்ரோ குளோரிக் அமிலம் {HYDROCHLORIC  ACID [H CL ] }). உணவைக் கரைக்கும் அக்கினியான ஜடராக்கினியும் சாதாரண நெருப்பு எரியும் விதத்தை ஒத்ததே என்பதை முதலில் இங்கே சொல்லிக் கொள்ளுகிறேன்.
நாம்  பிறந்தவுடன்  ஜடராக்கினி கிளர்ந்து எழுந்து பசி என்ற உணர்வைக் கொடுக்கிறது .குழந்தையாக இருக்கும் போது பசியால் அழுகிறோம். தாயும் நம் பசி உணர்ந்து பால் கொடுக்கிறார்கள்.இது நெருப்புக்கு மென்மையான காகிதம் போன்று நம் ஜடராக்கினியை நன்கு தொடங்கி எரிய உதவுகிறது. பின்பு சிறுவயதாக இருக்கும் போது சிறு , சிறு உணவுகளை மசித்து கொடுக்கிறோம் .அவை சிறு குச்சிகள் போல ஜடராக்கினி வளர உதவுகிறது.
இவை எல்லாம் நம்மிடம் முறையாக  நல்ல சர்க்கரை உற்பத்தியாக உதவியாக இருந்தது.நல்ல சர்க்கரை என்றால் என்ன???உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை நல்ல சர்க்கரையாக இருந்தால் நம் உடலில் உள்ள கணையம் அதனை சோதனையிட்டு ஒரு இன்சுலினை கையில் கொடுத்து அனுப்புகிறது .இதுவே நல்ல சர்க்கரை.இன்சுலின் கையில் இல்லாத சர்க்கரை கெட்ட சர்க்கரை.இதனையே சிறு நீரகம் நம் உடலைவிட்டு சிறு நீர் மூலமாக வெளியேற்றுகிறது . இது கழிவே தவிர இது நல்ல சர்க்கரை அல்ல அது சத்துமல்ல.
நம்முடலில் உள்ள எல்லா செல் அணுக்களும் , சோடியம், பொட்டாசியம் , போன்ற எல்லா தாதுக்களையும் தாமே எடுத்துக் கொள்ளும்.ஆனால் சர்க்கரையை மட்டும் இன்சுலினுடன் இருந்தால் மட்டுமே நல்ல சர்க்கரை என்று எடுத்துக் கொண்டு தனக்குள் எடுத்துக் கொள்ளும்.
எடுத்துக் காட்டாக நம்மிடம் சிறு குழந்தையாய் இருக்கும் இந்த வேளையில் வாயில் உமிழ் நீர் நன்றாக சுரக்கப்பட்டு , இரை நன்கு அரைக்கப்பட்டு , உள்ளே அனுப்பப்பட்டு இரைப்பையும் ஜீரண உறுப்புக்களும் சேர்ந்து  ஒரு 600 நல்ல சர்க்கரை அணுக்களை  உற்பத்தி செய்கின்றன என்று வைத்துக் கொண்டால் அப்போதைய நம் உடலுக்கு தேவையான சர்க்கரை 50 சர்க்கரை அணுக்கள் என்று கொண்டால் அவை நம் செல்களின் உபயோகத்திற்கு உபயோகம் ஆனது போக  மீதம் உற்பத்தி ஆன 550 நல்ல சர்க்கரையும் செறிவூட்டப்பட்ட சர்க்கரையாக (கிளைக்கோஜனாக) மாற்றப்பட்டு பிற்கால தேவைக்காக சேமித்து வைக்கப்படுகிறது.
அடுத்து குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் நிலை வரும் போது , அப்பா (ஸ்கூல் வேன்) பள்ளிப் பேருந்து வந்துவிட்டது என்று கத்த, அம்மா பிள்ளைக்கு இந்தா தின்னு , தின்னு என்று ஊட்ட அல்ல, திணிக்க முற்படும் போது அந்தக் குழந்தை உணவை உமிழ் நீருடன் கலந்து மென்று தின்னாமல் விழுங்க முற்படுகிறது ,விக்கும் போது தண்ணீரை ஊற்றி உள்ளே திணித்து அனுப்பிவிடுவோம்.இங்கேதான்  சர்க்கரை நோய் உட்பட அனைத்து வியாதிகளுக்கும் மூல காரணமான பிரச்சினை ஆரம்பிக்கிறது.
நமது எச்சிலில் சுண்ணாம்புச் சத்து உள்ளது .அது இரையை  வாயில் மெல்லும் போது ,சுவை மறையும் நேரம் , அந்தச் சுவையை நாக்கு சுவை வாரியாக  பிரித்து அந்தந்த சுவைக்குரிய ராஜ உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அந்த உறுப்புக்களும் ,உள்ளே வரும் உணவின் தன்மையை பொறுத்து சீரண நீர்களை சுரந்து உணவை இரைப்பையில் வரவேற்க தயாராக இருக்கின்றன. எடுத்துக் காட்டாக கொழுப்புப் பொருட்களை நாம் சாப்பிடும் போது பித்தப் பையில் இருந்து பித்தம் சுரந்து கொழுப்பை சீரணிக்க தயாராக வயிற்றை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
அவ்வாறன்றி நாம் அரை குறையாக மென்று விழுங்கும் போது , எச்சில் சரியாக சுரக்காமல் , உணவு இரைப்பாதையில் வழுக்கிச் செல்லாமல் ஆங்காங்கே தேங்குவதால் நமக்கு விக்கி,நெஞ்சடைப்பு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது . உடனே எச்சிலுக்குப் பதிலாக  தண்ணீரை குடித்து உணவை உள்ளே தள்ளுகிறோம்.இதனால் என்ன????உணவு உள்ளே போய் விழுந்தால் போதுமல்லவா???என்று நீங்கள் கேட்பது புரிகிறது .
அதை அடுத்த பதிவில் காணலாம்.பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்5) ல் தொடரலாம்.

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 3)


சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

நீங்கள்பாட்டுக்கு நல்ல சர்க்கரை , கெட்ட சர்க்கரை என்று சொல்லுகிறீர்கள் , அலோபதி மருத்துவர் இவையெல்லாம் சுத்த ஹம்பக் என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .நல்ல சர்க்கரையின் செயல்பாடுகள் பற்றியும் , கெட்ட சர்க்கரையின் செயல்பாட்டைப் பற்றியும் இதோ கீழே காணொளிப்படக் காட்சியாகத்  தந்துள்ளேன்.கண்டு தெளியுங்கள்.
இந்த சோதனையில் உபயோகிக்கப்படும் கந்தகத்தின் தன்மைகளை முதலில் பார்க்கலாம்.
பொதுவாக கந்தகம் என்ற சல்பர் ( SULFUR  ) , சித்த மருத்துவத்தில் கெந்தி , என்றும் சுரோணிதம் என்றும் சக்தி என்றும் பொன்வர்ணகாரி என்றும் நாறும் பூபதி என்றும் காரிழைநாதம் என்றும் அழைக்கப்படும். பாஷாணங்களில்  கடும் விஷம் கொண்டது . கந்தகம்  எரியும் போது கந்தக டை ஆக்ஸைடை வெளியிடும் .அந்த கந்தக டை ஆக்ஸைடு தண்ணீரில் கரையும் போது கந்தக அமிலமாக மாறும். இது உயிரினங்களுக்கு பலத்த  சேதாரத்தை ஏற்படுத்த வல்லது. அமெரிக்காவில் பல இடங்களில் இந்த  சுற்றுச் சூழல் சீர்கேட்டினால் அமில மழை  பொழிகிறது.அப்படிப்பட்ட கந்தகத்தின் குணங்களை கீழ்க்கண்ட இணப்புகளில் பாருங்கள்.
இநதக் கந்தகத்தை புகை போடும் போது உற்பத்தியாகும் கந்தக டை ஆக்ஸைடால் (SULFUR  DI OXIDE ) இந்தச் சோதனையில் உபயோகிக்கப்படும் சிவப்பு ரோஜப்பூ வெளுத்துப் போவதைப் பாருங்கள். மீண்டும் நாம் சாதாரணமாக எண்ணும் கருப்பட்டியை புகை போட்டு அதைல்  மீண்டும் ரோஜப்பூவைக் காட்ட , கந்தகத்தின் நஞ்சை கருப்பட்டி புகை முறித்து ,நஞ்சு நீங்கியதால்  ரோஜாப்பூ தன்னுடைய இயல்பான நிறத்தை அடைவதைப் பாருங்கள்.
 ரோஜாப் பூக்கள்
கந்தகம்
கருப்பட்டி
உடைத்த கருப்பட்டி
இந்த கந்தகத்தை வைத்து உற்பத்தி செய்யப்படும் என்டோ சல்பான் ( Endosulfan ) (வேதியியல் அணுப் பெயர் C9H6Cl6O3S ) (வேறு  வேதிப் பெயர்கள் Benzoepin, Endocel, Parrysulfan, Phaser, Thiodan, Thionex )பூச்சி மருந்தை கேரளாவில் உள்ள காசர் கோடு என்ற இடத்தில் தெளித்ததால் மனிதனுக்கு விளைந்த விளைவுகளை இந்த இணைப்புகளில் காணலாம்.
href=”http://en.wikipedia.org/wiki/Endosulfan”>http://en.wikipedia.org/wiki/Endosulfan
href=”http://arunobsarathy.blogspot.in/2011/04/endosulfan.html”>http://arunobsarathy.blogspot.in/2011/04/endosulfan.html
href=”http://www.patientsville.com/toxic/endosulfan.htm”>http://www.patientsville.com/toxic/endosulfan.htm
href=”http://newszone4u.blogspot.in/2010/09/hell-in-kerala-gods-own-country.html”>http://newszone4u.blogspot.in/2010/09/hell-in-kerala-gods-own-country.html
href=”http://vakkomsen.blogspot.in/2011/04/effects-of-endosulfan-in-human-body.html”>http://vakkomsen.blogspot.in/2011/04/effects-of-endosulfan-in-human-body.html
href=”http://godsowncountrys.wordpress.com/endosulfan-tragedy-in-kerala/”>http://godsowncountrys.wordpress.com/endosulfan-tragedy-in-kerala/
இந்தத் தொடரில் ஏன் இந்த என்டோ சல்பான் நுழைகிறது என்று உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா???நமது  நாளமில்லாச் சுரப்பிகளில் பல கேடுகளை விளைவிக்க வல்ல என்டோ சல்பான் {endocrine disruptor }நாளமில்லாச் சுரப்பியான கணையத்தின் மீதும் தன் தாக்குதல்களைத் தொடுக்கிறது .அதன் விளைவுதான் இத்தனை சர்க்கரை வியாதிக்காரர்கள் .அப்படிப்பட்ட  என்டோ சல்பான் நஞ்சையும் நீக்க வல்லது கருப்பட்டி என்றழைக்கப்படும் நம் பனங்கருப்பட்டி (பனை வெல்லம்).என்டோ சல்பான் விஷத்தால் பீடிக்கப்பட்டு சர்க்கரை வியாதிக்காளான  நோயாளர்கள்  கருப்பட்டியை சாப்பிட்டால் சர்க்கரை வியாதியில் இருந்து குணமாகலாம் .
எண்டோ சல்பான் பற்றி ஏற்கெனவே நமது மச்சமுனி வலைப்பூ இணப்பையும் கீழே கொடுத்துள்ளேன். பார்த்து தெளியவும்.
என்டோ சல்பானின் மேலும் பல தீங்குகள் பற்றி ஆங்கிலக் கட்டுரையின் சிறு பகுதி.
{Endosulfan is one of the most toxic pesticides on the market today, responsible for many fatal pesticide poisoning incidents around the world.[37] Endosulfan is also a xenoestrogen—a synthetic substance that imitates or enhances the effect of estrogens—and it can act as an endocrine disruptor , causing reproductive and developmental damage in both animals and humans. Whether endosulfan can cause cancer is debated. With regard to consumers’ intake of endosulfan from residues on food, the Food and Agriculture Organization of United Nations has concluded that long-term exposure from food is unlikely to present a public health concern, but short-term exposure can exceed acute reference doses.}
The World Health Organization estimated worldwide annual production to be about 9,000 metric tonnes (t) in the early 1980s.[13] From 1980 to 1989, worldwide consumption averaged 10,500 t per year, and for the 1990s use increased to 12,800 t per year.
சென்ற ஆண்டு  தமிழ் நாட்டிலுள்ள தஞ்சை காவிரி டெல்டாப் பகுதியில் பயிரிட்ட நெல்லில் மட்டும் சில லட்சம் லிட்டர்கள் எண்டோ சல்பான் தெளிக்கப்பட்டுள்ளது.எனில் அதைச் சாப்பிடும் அனைவரும் சர்க்கரை நோயாளிகள் (அது மட்டுமல்ல புற்று நோய் முதலான பெருங் கேடுகளையும் விளைவிக்க வல்லது ) ஆவது உறுதி . இதைத் தவிர்க்க அனைத்து இனிப்பு வகைகளுக்கும் இனி சீனியைத் (அஸ்கா சர்க்கரையை) தவிர்த்து  கருப்பட்டியை  உபயோகித்தால் இந்த அபாயத்தில் இருந்து முற்றிலும்  தப்பிக்கலாம்  . கருப்பட்டி அத்தனை நஞ்சையும் முறித்து நம்மைக் காக்கும் என்பதை மிக உறுதியாகக் கொள்ளலாம்.
கல்லீரலிலும் , மண்ணீரலிலும் சேரும் அலோபதி மருந்தெனும்  நஞ்சுகள் , உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளால் விளைவிக்கப்படும் உணவினால் ஏற்படும் நஞ்சுகளால் கல்லீரலும் , மண்ணீரலும் தள்ளாடுகின்றன. எனவே அவற்றால் ஜீரணத்திற்கு உதவும் பணியை செய்ய இயலாமல் இருக்கும் நிலையே சர்க்கரை வியாதி.கல்லீரலிலும் , மண்ணீரலிலும் இருக்கும் நஞ்சுகளை கருப்பட்டி முறித்து எறியும் .எனவே கல்லீரலும் ,மண்ணீரலும் முழு உயிரோட்டத்திற்குத் திரும்பும். அத்துடன் கருப்பட்டியானது  சர்க்கரை நோயயையும் வர விடாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
அஸ்கா சர்க்கரையான சீனியும் இந்த கந்தகத்தைப் போலவே கடும் விஷத்தன்மை கொண்டது . 45 வகையான வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு கடும் உஷ்ணக் கட்டமைப்போடு வருகிறது .சுடுகாட்டில் மழை நேரத்தில் பிணத்தை எரிக்க சீனியைத்தான் உபயோகிக்கிறார்கள் எனில் அதன் உஷ்ணத்தன்மையை உணர முடிகிறதா????சீனி உடல் உள்ளுறுப்புக்களை சூடாக்கி அதன் செயல்பாட்டைப் பாழாக்குகிறது.
கீழ்க் கண்ட காணொளிக் காட்சியில் இந்த சீனியின் புகையும் ,கந்தகப் புகை போலவே ரோஜாப் பூவின் நிறத்தையும் , வளத்தையும் குறைக்கிறது.மீண்டும் கருப்பட்டிப் புகை அந்த ரோஜாப்பூவின் நிறத்தையும் வளத்தையும் திரும்பக் கொடுக்கிறது.
இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறோம் .நல்ல அமுதமான உணவைக் கொடுக்க வேண்டிய விவசாயிகள் நஞ்சான உணவைக் கொடுத்து நமது மனித சமுதாயத்தை பாழ்படுத்தி வருகிறார்கள் .அதற்கு அரசாங்கமும் ஒரு முக்கிய காரணம் .
ஆனால் அதே வேளையில் இந்தக் கருப்பட்டியை பல்லாயிரம் வருடங்களாக நஞ்சாகாமல் அமுதமாக இன்றளவும் வைத்திருக்கும் இரு சமுதாயத்தை இங்கே பாராட்டாமல் இருக்க முடியாது .அவர்கள்தான் பனையேறி நாடார்கள், மற்றும் கோனார்கள் என்னும் அற்புத மனிதர்கள்.இந்த வியாபார சந்தையில் இன்றளவும் விலைபோகாமல் கருப்பட்டி என்னும் கருப்புத் தங்கத்தை காப்பாற்றி வைத்திருக்கும் தேவதூதர்கள் இவர்கள் என்றும் கூறலாம்.
பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்4) ல் தொடரலாம்.

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2)



சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 1) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.
முதலில் சர்க்கரை நோய் என்ற ஒன்று வியாதியே கிடையாது . மேலும் இந்தக் கட்டுரையை படிக்கும் முன்னர் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை வியாதி பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கும் அத்தனை குப்பைகளையும் தூக்கி உங்கள் தலையில் இருந்து வெளியே  எறிந்துவிடுங்கள்.பின்பு கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
நாம் சகஜமாக பார்க்கும் இன்னோர் விடயம் , ”உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா??? ஏன் மெலிந்து கொண்டே போகிறீர்கள்???” என்று கேட்டால் , சர்க்கரை வியாதியுள்ளவர் சொல்லும் பதில் ” என்ன என்று தெரியவில்லை . அலோபதி மருத்துவர் கொடுக்கும் எல்லா மருந்துகளையும் , முறையோடு எடுத்து சாப்பிட்டு வருகிறேன் . இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில்தான்  வைத்திருக்கிறேன் .ஆனாலும் இதய வலி , கண்பார்வைக் குறைவு , சர்க்கரை நோயினால் உள்ளுறுப்புக்கள் பாதிப்புக்கள்,காலில் சுருக்,சுருக் என்று ஊசி வைத்து குத்துவது போன்ற வலி,கால் பெரு விரல்களில் புண், கால் பெருவிரல் நகம் செத்துப் போதல் என பல துன்பங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன .ஏன் என்றே தெரியவில்லை  ”என்பார்.இது போன்ற அத்தனை கேள்விகளுக்கும் விடை இந்தக் கட்டுரைத் தொடரில் கிடைக்கும். இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள  வழிகளால் பல வியாதிகளை குணமாக்கிக் கொள்ளலாம்.
முதலில்  சரியாக ஜீரணமாகாமல் இருப்பதே சர்க்கரை வியாதி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.எனக்கு சரியாக ஜீரணம் ஆகிறது. உடனே எனக்குப் பசிக்கிறதே ??என்று சிலர் கேட்கும் போது எனக்கு சிரிப்புத்தான் வரும். உடலில் இரத்தத்தில் சர்க்கரை குறையும் போது உடலுக்கு சர்க்கரை தேவைப் படும்போது அதை சோதனை செய்து பிட்யூட்டரி சுரப்பி டோபாமைன்களை சுரந்து பசியை உணரச் செய்து நமக்கு சாப்பாட்டை சாப்பிட வைக்கிறது . சர்க்கரை வியாதிக்காரர்கள் உடலில் நிறைய சர்க்கரை இரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதே , பிறகேன்   சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு பசி யெடுக்கிறது. இரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அந்தச் சர்க்கரை முழுவதும் கெட்ட சர்க்கரை எனவே அதை உடலில் உள்ள செல் அணுக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.எனவேதான் பசி உண்டாகிறது.
ஜீரணம் என்றால் என்ன???? நாம் சாப்பிடத் தெரியாதவர்களாக உள்ளோம் .விளைவு ஜீரணக் குறைவு. ஜீரணக் குறைவின் காரணமாக , வயிறு , மற்றும் ஜீரண மண்டலம் சேர்ந்து உற்பத்தி செய்யும் சர்க்கரை தரத்தில் குறைவாகவும் ,கெட்ட சர்க்கரையாகவும் உற்பத்தி ஆகிறது . விளைவு உடல் அதை நிராகரிக்கிறது . நிராகரிக்கப்பட்ட சர்க்கரை சிறு நீரகம் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.அதைப் பார்க்கும் நாம் ஐயோ இவ்வளவு சர்க்கரை வெளியே போகிறதே என்று புலம்புகிறோம்.
கொழுப்பில் நல்ல கொழுப்பு (ஹெச் டி எல் ) , கெட்ட கொழுப்பு (எல் டி எல் ) என்றிருப்பதைப் போல நல்ல சர்க்கரை , கெட்ட சர்க்கரை என இரண்டிருக்கிறது.ஆனால் இதை சோதிக்க நம்மிடம், ஆங்கில மருத்துவத்தில்  வழிமுறைகள் இல்லை.இதனால் அவர்களுக்கு இந்த உடல் நடை முறை தெரியாததால் ஆங்கில மருத்துவர்கள் செய்யும் குழப்பங்கள், சர்க்கரை வியாதியை மிகமிக மோசமாக உடலை நாசமாக்குகிறது . அது எப்படி என்று கட்டுரைத் தொடர்ச்சிகளில் பார்க்கலாம்!!!!
ஜீரணம் என்பது கையில் ஆரம்பித்து , வாயில் நடந்து , வயிற்றில் முடிவடைகிறது .கையினால் நன்றாகப் பிசைந்து , வாயில் உள்ள உமிழ் நீரில் நன்றாக உணவு கலக்குமாறு நன்றாக மென்று , சுவை முழுவதும் காணாமல் போகும் அளவு நன்றாக அரைத்து பின் சிறிது சிறிதாக விழுங்க வேண்டும். பின் சிறிது நேரம் உலவிய பின் ஓய்வு எடுக்கலாம்(தூங்கக் கூடாது). மேலும் சாப்பிடும் போதும் சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்னாலும் , பின்னாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
ஏனெனில் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக்அமிலம் (H.C.L), எடுத்துக் கையில் விட்டால், கை பொத்து ஓட்டை ஆகிவிடும்.அவ்வளவு செறிவுள்ள அமிலம்தன் நம் உணவை கரைத்து செறிக்க வைக்கும் வல்லமை வாய்ந்தது.இதை தண்ணீரை அருந்துவதின் மூலம் , நாம் நீர்த்துப் போகச் செய்தால் , அது உணவைக் கரைத்து செரிக்க வைக்க சக்தியற்றதாகிறது .எனவேசாப்பிடும் போதும் சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்னாலும் , பின்னாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
உணவை வாயில் போட்டு , வாயை மூடி நன்றாக அரைத்து எச்சிலோடு சேர்த்து உண்ணும் போது எச்சிலில் உள்ள அமலேஸ்  காற்றினில் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது .மேலும் காற்றுத் தொடர்பு இல்லாமல் மெல்லும் போது எச்சில் சுரப்பு அதிகரிக்கிறது. இதற்குப் பின்னால் பல ஞான ரகசியங்களும் உள்ளன.அதை எமது சபை உபதேசம் பெறாமல் சொல்ல இயலாது .ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி மட்டும் பேண நான் சொல்பவை மட்டுமே போதும்.
சாப்பிடும் போது பேசாதீர்கள்.வாய் நிறைய உணவைத் திணித்துக் கொண்டே இருக்காதீர்கள் .நன்றாக உண்வை எச்சிலோடு கலந்து அரைத்து ருசி அனைத்தும் மறையும் வரை அரைத்து பின் உணவை  விழுங்குங்கள் .கையால் நன்றாக பிசைந்து முடிந்த வரை நுணுகலாக்கி வாயில் போடுங்கள்.சாப்பிடும் போது டீவீ பார்க்காதீர்கள் .சாப்பிடும் போது புத்தகம் படிக்காதீர்கள். சாப்பிடும்போது சாப்பிடுவதை மட்டுமே செய்யுங்கள்.சாப்பிடுவதை ஒரு தவம் போல் செய்யுங்கள்.
இந்த இணைப்பையும் பாருங்கள்.இதனால் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.எமது விளக்கங்கள் எளிதாக உங்களுக்குப் புரியும்.
http://machamuni.blogspot.in/2011/10/45.html
அதிக உணவை உண்டால்தான் அதிக பலம் என்று எண்ணாதீர்கள் . பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பழுக்கும் நெல்லிக் கனியை மட்டுமே உண்டு யோக சாதனை புரிந்த ரிஷிகளும் ,  முனிவர்களும்  வாழ்ந்த நாடு நம் நாடு.எனவே உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு மட்டுமல்ல , நம் அனைவருக்குமே நல்லது.நம் நாட்டில் பட்டினியால் இறப்பவர்களை விட நம் உடல் தேவைக்கு அதிக உணவை  சாப்பிடுவதால் இறப்பவர்களே அதிகம்.
பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்3) ல் தொடரலாம்.

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 1)


சர்க்கரை வியாதி என்றவுடன் அனைவருக்கும் பொதுவாக பயம் தோன்றிவிடுகிறது.இது ஏதோ குணப்படுத்த முடியாத வியாதி என்று. ஆனால் இவ்வளவு பயம் கொள்ளுமளவிற்கு சர்க்கரை வியாதி ஒரு கொடும் வியாதியா?? என்றால் இல்லை என்று நான் உறுதிபடச் சொல்வேன்.அது மட்டுமல்ல பல சர்க்கரை வியாதியஸ்தர்களை நான் குணப்படுத்தியும் இருக்கிறோம்.சிறு வயதினருக்கு வரும் சர்க்கரை வியாதியையும்   (JUVENILE  SUGAR COMPLAINT ) குணப்படுத்தலாம்.எமது அனுபவத்திலேயே இது பார்த்தது.
சர்க்கரை வியாதி என்றால் ஆங்கில மருத்துவம் என்ன கூறுகிறது . இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90 -140 வரை (நம் நாட்டு உணவுப்பழக்க வழக்கங்களுக்கு) எப்போதும் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என்று கூறுகிறது . ஆனால்  இதே அளவு இரத்தத்தில் சரியாக இருந்தும் , சர்க்கரை சிறுநீரில் வெளியேறினால் அதை சர்க்கரை வியாதி என்று எடுத்துக் கொள்வதில்லை.
சித்த மருத்துவமும் அக்கு பஞ்சரும் சர்க்கரை  நோயைப் பற்றி என்ன கூறுகிறது .அதை எப்படி குணப்படுத்தலாம். ஆங்கில மருந்துகளை உட் கொண்டு வந்தாலும் சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து நோயாளர் தப்பிப்பது இல்லையே ???ஆங்கில மருந்துகளின் துணையோடு சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், உள்ளுறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு , இரத்த அழுத்தம் ,இரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுவது , விளைவாக இருதயம் அதிக வேலைப்  பழுவின் காரணமாக , இதயத் தாக்குதலுக்கு உள்ளாவது , போன்ற பிரச்சினைகள் ஏன் ஏற்படுகின்றன. முதலில் ஓரிரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கும் ,ஆங்கில மருந்துகள் , அடுத்தடுத்து பெருகி ஒரு டிபன் பாக்ஸ் ல் மாத்திரைகள் வைத்து சாப்பிடும் அளவிற்கு போவது ஏன்?????
முதலில் சர்க்கரை நோயைப் புரிந்து கொண்டால் இந்த நோயை குணமாக்குவதும் எளிது . முதலில் சர்க்கரை நோய் என்பது மேகங்கள் 21 றனுள் ஒன்றான மது மேகம் என்று சித்த வைத்தியத்தில் அழைக்கப்படுகிறது . மேகங்கள் வானத்தில் ஒரு இடத்தில்  நில்லாமல்  எப்படி நிலையில்லாது அலைகிறதோ அதே போல சர்க்கரை வியாதியும்  உடலில் பல இடங்களில் பல விதமான பிரச்சினையான குறி குணங்களை வெளிப்படுத்தும்.
சிறு நீரில் சர்க்கரை வெளியேறுவதால் ,சிறு நீர்ப் புற வழிகளில் கிருமித் தொற்று , ஆண்குறி , பெண்குறிகளில் அரிப்பு , மற்றும் சிவந்து போதல் , எரிச்சல் , போன்றவை உண்டாகும். கால்களில் நமைச்சல் , ஊசி வைத்து குத்துவது போல சுரீர் , சுரீர் என்ற வலிகள் , கால்களில் உணர்வு குன்றுவது ,பெரு விரல்களில் ஆறாத புண் , கால் பாதம் முழுவதும் ஆறாத ரணம் ( காங்கரீன் என்று ஆங்கில வைத்தியத்தில் அழைப்பார்கள் )  சிறு நீரக செயலிளப்பு , மண்ணீரல் கல்லீரல் கேடடைதல் , இரத்தம் சர்க்கரை போன்ற பொருட்களால் சாக்கடையாக ஆவதால் இரத்தம் கெட்டிப்பட்டு இதயம் அந்தக் கெட்டியான சாக்கடை இரத்தத்தை உடலுக்கு அனுப்ப மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுவதால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது .
இதனால் இரத்தக் குழாய்கள் மூளையில் வெடிப்பதால் பக்க வாதம் வருதல் , அதீத வேலையினால் இதயத் தாக்கு (HEART ATTACK ) நேரிடுவது, கண்களில் இரத்தக் கசிவு , கண்களில் அழுத்தம் அதிகரித்தல் , குளுக்கோமா,காதுகளின் கேட்கும் திறன் பாதிக்கப்படுதல் , அதீத சர்க்கரை இரத்தத்தில் இருப்பதால் உடல் எப்போது சூடாகுதல் ,அந்தச் சூட்டைத் தணிக்க உடல் சேர்த்து வைக்கும் சளியால் சைனஸ் , பாரா சைனஸ் பள்ளங்களில் சளி நிறைதல் , விளைவாக முன்பக்க பின்பக்க தலைவலி கழுத்து வலி ,செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் என்னும் கழுத்து எலும்புத் தேய்வு , அதன் விளைவாக தலைச் சுற்றல், அதிக தாகம் , அதிக பசி , அதிக சிறு நீர் கழித்தல் , உடலெங்கும் சொல்ல முடியாத அளவு வலி, உடலில் எங்கு காயம் பட்டாலும் ஆறாத நிலை ,  இவை போல இன்னும் பல நேரிடும்.
நம் உடலில் உள்ள இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோ குளோபின் , நுரையீரல்களுக்குச் சென்று ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு ஆக்ஸி – ஹீமோகுளோபின் ஆக மாறி  மீண்டும் நம் தசையில் , உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுத்துவிட்டு  மீண்டும் ஹீமோகுளோபின் ஆக மாற வேண்டும் . ஆனால் சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் இந்த ஹீமோ குளோபினைச் சுற்றி சர்க்கரை ஒட்டி பிடித்துக் கொள்வதால் நுரையீரல்களுக்குச் சென்று ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு ஆக்ஸி – ஹீமோ குளோபின் ஆக மாறுவதைத் இந்தச் சர்க்கரை தடுத்துவிடுகிறது .
எனவே இரத்தம் நுரையீரல்களுக்கு போனாலும், பிறகு  அங்கிருந்து உடலெங்கும் பரப்பப்பட்டாலும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து  எடுக்கும் , பின் உடல் அணுக்களுக்கு  கொடுக்கும் பணியைச் செய்யாமல் ஒப்புக்கு சப்பாணியாக ஓடிக் கொண்டேயிருக்கும் . விளைவு உடலெங்கும் உள்ள  செல் அணுக்களுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் செல்கள் சாகும் .இதனால்தான் சர்க்கரை வியாதிக் காரர்கள் உடல் மெலிந்து போவது நிகழ்கிறது . (There are a number of different human hemoglobin (Hb) variants the most prevalent being HbA1, HbS and HbC.   HbA1 is the most common variant making up approximately 97% of the total hemoglobin in normal adult red blood cells.   HbS is a hemoglobin variant associated with sickle cell anemia which occurs predominantly in African Americans.   HbC is another hemoglobin variant found in people of African ancestry including African Americans and West Indians. ) 
பொதுவாக சர்க்கரை வியாதி முற்றி மோசமாக இருப்பவர்களுக்கு இந்த (HbA1 )சர்க்கரை ஒட்டிக் கொண்டுள்ள ஹீமோ குளோபின் அளவு 14 % அளவில் இருக்கும். சித்த வைத்தியத்தில் இந்த வியாதியஸ்தர்களைக் குணமாக்கும் போது 5 லிட்டர் இரத்தத்தில் 900 மில்லிகிராம் சர்க்கரை இருக்கும் .ஹீமோ குளோபினில் ஒட்டிக் கொண்டுள்ள சர்க்கரையை சித்த மருந்துகள் உரிக்கும் போது அவை இரத்தத்தில் இருப்பதாகக் காட்டும்.சித்த மருந்துகள் சாப்பிட்டேன் சர்க்கரை அளவு கூடிவிட்டது என்று எண்ணி பயப்படுவார்கள்.  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வைத்து சர்க்கரை நோயைக் கணிப்பதே தவறான முறையாகும்.
இது ஏன் என்று அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம் .அந்த விடயங்களுக்குப் போகுமுன்னர் ஆங்கில வைத்தியர்கள் உங்களிடம் கூறியுள்ள விடயங்கள் , உங்களை சர்க்கரை நோய் பற்றிய தெளிவான அறிவில்லாத முட்டாள்களாகவும்  , அதன் மூலமாக சர்க்கரை நோயாளிகளாக உங்களை வைத்திருப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு .அந்த முட்டாள்தனமான  ஆங்கில வைத்திய முறை சொல்லும் பல விடயங்களை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு காலிக் கோப்பையாக வந்தால் மட்டுமே  மேலும் நாம் கூறும் விடயங்கள்  புரியும்.
இந்த தொடரைப் படித்து அதிலுள்ள சில விடயங்களைக் கடைப்பிடித்தாலேயே சர்க்கரை நோயைக்  குணமாக்கிவிடலாம்.மற்ற விடயங்களை சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 2) ல் பார்க்கலாம்.