Sunday, February 24, 2013

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 5 )


சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 4) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

உணவு எச்சிலுடன் கலந்து உட்கொள்ளப்படும் போது உணவை எச்சில் ஜீரணத்துக்கு தயார் செய்வதுடன் ,வயிற்றின் உள்ளுறுப்புகளுக்கு தகவல் அனுப்பி வயிற்றில் விழும் உணவுக்கேற்ற வலிவுள்ள ஜீரண நீர்களை சுரக்க வைக்கிறது.  வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவை கரைத்து அன்ன ரசமாக்கி,(சர்க்கரையாக்கி) இரத்தத்தில் கலக்கும் போது , ஹைட்ரோ குளோரிக் அமிலமும் தன் தன்மையை விட்டு எச்சிலில் உள்ள சுண்ணாம்புச் சத்தால் அமிலம் (அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பையும் தண்ணீரையும் உண்டாக்கும்) தண்ணீராக மாறிவிட வேண்டும் . இல்லையேல் அந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் குடலின் சுவர்களை அரிப்பதுடன் , புண்ணாக்குவதுடன் , அமிலத் தன்மை இரத்தத்திலும் ஊடுருவ ஏதுவாகும் .
வெண்புள்ளி நோய் குணமாவதற்கு வீட்டு வைத்தியத்தில் என்ன மருந்து தெரியுமா கூறியிருக்கிறார்கள்.கருவேப்பிலைக் கொழுந்தும் , கீழா நெல்லி இலைக் கொழுந்து ஒரு கைப்பிடியும் காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வர குணமாகும் என்பதோடு சர்க்கரை நோயும் கட்டுப்படும்.அது மட்டுமல்ல ஈரல் நோய்களும் குணமாகும் , அது மட்டுமல்ல உடலில் உள்ள கழிவுகளையும் இவை நன்றாக நீக்கும்.
மேலும் கீழ்க்கண்ட இந்த இணைப்பில் வெள்ளைச் சர்க்கரையான சீனியை தவிர்த்தால் , விளையும் நன்மைகளுள் ஒன்று வெண்குஷ்டம் குணமாதல்.உடலெங்கும் கேடுகள் செய்யும் வெள்ளைச் சர்க்கரையான சீனியைத் தவிர்ப்போம்.
http://maravalam.blogspot.in/2011/10/blog-post_19.html
மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் கூறி இந்தப் பதிவை முடிக்கிறேன்.
சமஸ்கிருத மொழியில் “லங்கணம் பரம ஔஷதம்” என்பார்கள். அதாவது “பட்டினியே சிறந்த மருந்து” என்பார்கள். மூன்று வேளையும் , வேளை தவறாமல் உண்டால் உடம்பு வியாதிகளின் கூடாரமாகும் .அப்படி உண்ணுவதே வேலையாக உண்ணாமல் நன்றாகப் பசித்த பின் (காலை உணவுக்குப் பின் பசிக்கவில்லையானால் அன்று முழுவதும் சாப்பிடவே சாப்பிடாதீர்கள்) மட்டுமே உண்ணுங்கள்.
காலை உணவை எக்காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காமல், அவசரம் அவசரமாகச் சாப்பிடாமல், நிதானமாக காலை 7 மணி முதல் 9 மணிக்குள் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிடுங்கள்.ஏனெனில் வயிறு சக்தி நாளம் இயங்கும் நேரம் இதுவே.
பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்6) ல் தொடரலாம்.

No comments:

Post a Comment