பசுமை தாயகத்தில் இயற்கை வழி பூச்சி விரட்டிகளை பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம். இதோ, இன்னொன்று பதிவு
வசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும்.
காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ தூவினால் போதும். வீட்டுத்தோட்டங்கள், சிறிய செடிகள், பூந்தொட்டிகளுக்கு ஒரு கைபிடி (75-100 கிராம்) இலைப்பகுதி மற்றும் தண்டுப்பகுதிகளில் தூவலாம். பெரிய கொடிகள், மரங்களுக்கு 250 கிராம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
மேலும் வீட்டு கழிப்பறை, குளியலறை, சமையல் அறைகளில் பூச்சியைக் கட்டுப்படுத்த இரவு 250 கிராம் தூவிவிட்டு காலையில் கழுவிவிட்டால் போதும்.
மேலும் விபரங்களுக்கு: குஞ்சிரமணி, மொபைல்: 094433 33172, புவிகேர் (பி) லிட், 177ஏ/21, பார்வதி சாகர் காம்ப்ளக்ஸ், திருவனந்தபுரம் ரோடு, வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி-627 003.
No comments:
Post a Comment