Tuesday, March 5, 2013

எண்ணை குளியல்


எண்ணை தேய்த்து குளிப்பது என்பது எல்லா நாட்களிலும் செய்யக்கூடாது. ஆண்கள் புதன், சனி கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் எண்ணை தேய்த்து குளிக்கலாம்.
 
அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜென்ம நட்சத்திரம் ஆகிய நாட்களில் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது. தலையில் தேய்த்த எண்ணையை வழித்து உடம்பின் பிற பகுதிகளில் தேய்த்தல் கூடாது. மாலையில் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது.
 
எண்ணை குளியலுக்கு உகந்த தினங்களில் கூட, சூரியன் உதித்து இரண்டரை நாழிகை (ஒரு மணிநேரம்) சென்ற பின்பே எண்ணை தேய்த்து குளிக்கலாம்.
 
தீபாவளி அன்று மட்டும்தான் விதிவிலக்கு. அன்று மட்டும் சூரியோதயத்துக்கு முன்பே, அதிகாலை இருள் பிரியும் முன்னர் எண்ணை தேய்த்து நீராடி முடித்துவிட வேண்டும்.
 
தீபாவளிக்கு முதல் நாள் அடுப்பை மெழுகி கோலமிட்டு, சந்தனம், குங்குமம் வைத்த அலங்காரித்து, குடங்களில் நீர் நிரப்பி வைப்பதுதான் நீர் நிரப்பும்  பண்டிகை.
 
இதில்தான் புனித நதிகள் அனைத்தும் அன்று ஆவாகனம் ஆகின்றன. அதுபோலவே தீபாவளி அன்று குளிக்கும் நீர், எண்ணை இரண்டிலுமே மகாலட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment