Tuesday, February 26, 2013

நவீன வானவியலின் பிறப்பு - நட்சத்திர பயணங்கள் : 2


உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்
பயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் பற்றி விரிவாக அறிவதற்கு ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒரு காலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை?

முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.
சில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாக சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது.

சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.

கி.பி இன் 1473ம் ஆண்டு முதன்முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழியும் வரை புவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.

கோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளையும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கிவைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.

ஆயினும் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கனின் கத்தோலிக்க தேவாலயத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோவின் இறுதிக்காலத்தில் அவரது கண்கள் குருடாகி விட்டன. அறிவியல் வளர்ச்சி உன்னத இடத்திலிருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டிலேயே அதாவது 1992 ம் வருடம் கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து அவரைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலாம் நூற்றாண்டில் வானவியல் - நட்சத்திர பயணங்கள் : 1



முதலாம் நூற்றாண்டில் வானவியல்...


சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது  ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?
இன்றைக்கு ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முன்னர் எழுந்த கோட்பாடு இது. ஆரம்ப காலத்தில் எந்தவித நவீன தொலைநோக்கிகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் எந்தவித செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படாத நிலையிலும், பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்? எத்தனை கிரகங்கள் இருக்கும் என்ற ஊகங்கள் பரவலாக கிளம்பலாயின.
உலகத்தின் மிகப்பிரசித்தமான தத்துவவியலாளரான அரிஸ்ட்டோட்டில் வாழ்ந்த காலம் அது.  அவரது கொள்கைகளும், கண்டுபிடிப்புக்களும் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் கணித சூத்திரங்களாக இருந்தன.

,'எப்பிசைக்கில்ஸ்' எனப்படும்  வட்ட ஒழுக்களினூடே சுமார் 55 வளையங்களில் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த 6 கிரகங்களும் சூரியனும் வலம் வருவதாக அரிஸ்ட்டோட்டில் கருதினார்.


6 கிரகங்களும் சூரியனும் பூமியை சுற்றி வலம் வரும் ஒழுங்கானது பின்வருமாறு

1. சந்திரன்
2.புதன்
3.வெள்ளி
4.சூரியன்
5.செவ்வாய்
6.வியாழன்
7.சனி

விண்ணில் தெரியும் பொருட்கள் பூமியை சுற்றி வலம் வருகின்றனவா? அல்லது பூமி அவற்றை சுற்றி வலம் வருகிறதா என்பதனை அக்காலத்தில் அறிவது கடினமான காரியமாக இருந்தது.

பரலக்ஸ் எனப்படும் அசையும் பொருட்களில் ஏற்படும் தடுமாற்றம் பூமியில் இருந்து அவதானிக்கும் போது விளங்கினால், பூமியே விண் பொருட்களை சுற்றி வருவதும்,  தன்னை தானே சுற்றுவதும், தெளிவாக நிரூபிக்கப்படும். ஆனால் விண்ணில் தெரியும் நட்சத்திரங்களின் அசைவில் ஏற்படும் தடுமாற்றம் மிகச்சிறியதாக இருப்பதானால் இதை நிரூபிக்க வழியில்லை. கிரகங்களின் இயக்கத்தை கொள்கையளவில் வரையறுப்பது அக்காலத்தில் கடினமான காரியமாக இருந்தது.

வானத்தில் நிலையாக நிற்கும் நட்சத்திரங்களுடன் கிழக்குத்திசையில் பயணிக்கும் கிரகங்களின் இயக்கம், அவற்றின் வேகம் என்பன கேத்திரகணித ரீதியில் சமச்சீரானவையாக (Uniform motion) கணிக்கப்பட்டன.

கிரகம் என்ற சொல், 'வேண்டரர்' (Wanderer)  என்ற கிரேக்க பதத்தில் இருந்து வந்தது. இதற்கு அர்த்தம் அதிசயிக்கத்தக்க பொருள் என்பதாகும்.

இக்கிரகங்களின் இயக்கத்தினை நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் வானவியல் கருவிகள் எதன் துணைகொண்டுமல்லாது கணித ரீதியாக மட்டுமே ஆராய்ந்து, இப்படியான  தகவல்களை அளித்த அக்காலத்து மாமேதைகளான தொலமியும், அரிஸ்ட்டோட்டிலும் மெச்சத்தக்கவர்கள்தானே.
அரிஸ்டோடில்
அக்காலத்தில் இந்த வானவியல் கோட்பாடுகளை மையமாக கொண்டு வரையப்பட்ட கணித சூத்திரங்கள்தான், இன்றைய நவீன வானவியலின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது உங்களில் எத்தனை பேருக்கு நம்ப முடிகிறது.

நவீன வானவியலின் பிறப்பு - நட்சத்திர பயணங்கள் : 2

Vidhya and Deepu











VIDHU AND DEEPU






DEEPU EATING MANGO




deepu and tatoos







vidhya's drawing 22 feb 2013





family and deepu




vidhya






திருகுறள்,

http://www.gokulnath.com/thirukurals

Monday, February 25, 2013

குமரிக்கண்டம் Kumari Kandam

Super Invitation

Acupuncture points

Photo: கையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும் அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம்.

தமிழ்ச்சித்தர்கள் வகுத்த 64 தமிழர் கலைகள். 65வது கலை சாகாக்கலை எனும் மரணமிலாப் பெருவாழ்வு.

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன். இந்த அதிசயத்தைப் பற்றி எழுதவே நான் பெருமையடைகிறேன். இந்த இடத்திற்கு சென்று பார்ப்பதையே என் வாழ்நாள் ஆசையாக கொண்டுள்ளேன். தினமும் என் கணினியை தொடங்கியவுடன் இதன் படங்களை பார்த்த மகிழ்ச்சியில் தான் அன்றைய வேலைகளே தொடங்குவேன்.

நானும் இந்த தொகுப்பபை எவ்வளவோ சுருக்கி சிறியதாக எழுதலாம் என்று தான் நினைதேன். ஆனால் குறைக்கப்படும் ஒவ்வொரு வரியும், இதன் ஒரு வருட உழைப்பை குறைத்து விடும். நீங்கள் உங்கள் நேரத்தை நிச்சயம் ஒதுக்கி இதை படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.

இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.

பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார். பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது.

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால், இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக் கொள்கிறேன்.

கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே?! தேடல் தொடரும்..!!!

குறிப்பு : சூர்யவர்மன் மலாய் வழி வந்த மலாய் தமிழ் மன்னன் என்று ஒரு தரப்பும், அவர் க்ஹ்மேர் இன மன்னன் என மற்றொரு தரப்பும் கூறுகின்றது..எது எப்படியோ, இதை ஏற்ப்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம் சார்ந்தது !

இராஜராஜ சோழன் - தஞ்சை பெரிய கோயில்


'உதகையைத் தீ உய்த்த உரவோன்..'

'என்னது ஊட்டியை எரித்தார்களா?' என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.

இராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில்  வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போரிலேயே சும்மா அதகளப்படுத்திட்டார்ல!! 'வீண் சண்டைக்குப் போறதில்லை; வர சண்டையை விடுவதில்லை' என்ற நம் தமிழ் சினிமா ஹீரோக்களின் கொள்கை இராஜராஜ சோழனிலிருந்து தான் தொடங்கி இருக்கும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் போரிற்கு, "காந்தளூர்ச்சாலைப் போர்" என பெயர். அது வரை இருமுடிச் சோழர்களாக இருந்தவர்கள், இராஜராஜ சோழனால் மும்முடிச் சோழர்களாக உயர்ந்தனர். மூவேந்தர்களின் முடியையும் தன் வசமாக்கிய முதல் சோழன் இராஜராஜ சோழன். பின் புலி வாலைப் பிடித்த கதையாக வேங்கி (ஆந்திரா), கன்னட நாடு, சாளுக்கிய நாடு, இலங்கை, கலிங்க நாடு என ஒரு கை பார்த்த இராஜராஜ சோழனின் இறுதிப் போர் வ.பி. 1044ல் நிகழ்ந்தது. பாணராஜா, போகதேவன் என இரு மன்னர்களை வ்ரட்டி, "முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்" என்றழைக்கப்பட்ட தற்போதைய மாலத்தீவு (Maldives)-ஐக் கைப்பற்றினார் இராஜராஜ சோழன். கப்பற்படையில் சிறந்து விளங்கிய பிற்கால சோழர்களின் (அதாவது கடாரம் கொண்ட இராஜேந்திர சோழன் காலம்) முன்னோட்டமாக இப்போர் அமைந்தது. சீனா,  சுமத்ரா, இலங்கை, நிக்கோபர் போன்ற நாடுகளுடன் சீரான வாணிபத்தை மேற்கொண்டுள்ளது சோழ நாடு. சீனாவுடன் கடல் வாணிபம் செய்வதற்காக, இராஜராஜன் பல உயர்ந்த பொருள்களைப் பரிசாக அனுப்பியது குறித்து சீன நூல்களும் தெரிவிக்கின்றன.

"வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து"

சோழர்கள் பற்றி சொன்னால் இந்தப் பாடலை கண்டிப்பாக மேற்கோள் காட்டியே ஆகணும். சோழர்கள் நீரின் மகத்துவம் உணர்ந்தவர்கள். அதனாலேயே சோழ நாடு சோழ வளநாடு என்று புகழப்பெற்றது. நீர்வரத்தை சேமிப்பதற்கான கரிகால சோழனின் கல்லணை மற்றும் ராஜாதித்தனின் வீரநாராயணன் (வீராணம்) ஏரி ஆகிய இரண்டும் காலத்திற்கு சோழர்களின் புகழ்பாடும். அப்பரம்பரையில் வந்த இராஜராஜ சோழன் ஒரு படி மேலே போய், நீர்நிலைகளின் நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்து கொள்ள "ஆயக்கட்டுச் சபை" என நீர்ப்பாசனத்திற்காக கிராமசபை அமைப்பு ஒன்றினையே உருவாக்கினார். இராஜராஜன் காலத்தில் சுமார் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டன. தூர் வாறுவதும், மதகுகளை சரி செய்வதும் நீர்வாரியத் துறையின் முக்கிய பணிகளாக தொடர்ந்தன. இராஜராஜனின் தேர்ந்த நிர்வாகத்திற்கு இது ஒரு சான்று. இன்னொரு சான்று,  ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம். பண்டாரம் என்றால் என்னவென்று பார்க்கும் முன் இன்னொன்னு பார்த்துடலாம் (பண்டாரம் என்ற சொல்லுக்கு பரதேசி, ஆண்டி என்ற பொருள் தான் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும். ஆனால் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றொரு பொருளும் உண்டு).

இராஜராஜ சோழன் எவ்வளவோ செய்திருந்தாலும்.. அவர் பெயரைக் கேட்டதும் முதலில் நினைவிற்கு வருவது வ.பி. 2041-ல் ஆயிரமாவது பிறந்தாண்டைக் கொண்டாடிய தஞ்சை பெரிய கோயில். 'ராஜராஜீஸ்வரம்' என்ற அந்தக் கலைப் பொக்கிஷத்தை இராஜராஜன் ஆன்மீகத் தளமாக  உருவாக்கவில்லை. சோழ மண்டலத்தின் நிர்வாகக் கேந்திரம் அது. சோழர் காலத்து இலக்கியம், கலை, அரசியல், வாழ்வியல் முறைகள், பொருளாதாரம் என சகலமும் பெரிய கோயில் மூலமாகவே நமக்கு தெரிய வந்தது. கோயில் விளக்குகளை ஏற்ற தினமும் நெய் அளிப்பதற்கு பதிலாக இராஜராஜ சோழன் கால்நடைகளை மக்களுக்கு தானமாக வழங்கினார். மக்கள் பதிலுக்கு பால், நெய் என கோயிலுக்கு தானமாக அளிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கெட்டிக்காரர் இராஜராஜன். அதே போல் கோயிலுக்கென்றும் ஏராளமான கொடை வழங்கினார் இராஜராஜ சோழன். அதன் ஒரு பகுதியை மக்களின் பயன்பாட்டுக்கென ஒதுக்கினார். அதை நிர்வகிக்க தான் ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம் தொடங்கப்பட்டது. அதாவது இன்றைய வங்கி போல. ஊர் சபைகள், வணிகக்குழுவினர், விவசாயிகள், தனி நபர்கள் எனப் பலரும் அந்த வங்கியில் கடன் பெற்றார்கள். ஆண்டொன்றுக்கு 12.5% வட்டியைக் கோயிலுக்கு செலுத்தினார்கள்.


வ.பி. 1037ல் தொடங்கப்பட்டது பெரிய கோயிலின் கட்டுமானம். வ.பி.1041ல் கோயிலுக்கு குடமுழுக்கு நடந்தது. கோயிலுக்கான கற்களை சுமார் 75 கி.மீ. தொலைவிலிருந்து எடுத்து வரப்பட்டது. ஆக இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டி முடிக்க பலரை அடிமைகளாக கசக்கி பிழிந்திருப்பார் என போகிற போக்கில் கருத்து சொல்லும் பலர் உள்ளனர். ஆனால் இராஜராஜ சோழன் கோயில் கட்டுமானம் பற்றிய ஒவ்வொன்றையும் ஆவணத்தை அதீத கவனத்துடன் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிரந்திர ஊழியர்கள், சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், 118 ஊர்களிலிருந்து நியமிக்கப்பட்ட மெய்க்காவலர்கள், ஓதுவார்கள், உடுக்கை கொட்டி மத்தளம் வாசிப்போர்கள், பெருந்தச்சர்கள், ஆடல்மகளிர், பக்திப் பாடலிசைத்த பிடாரர்கள், நிவந்தம் அளித்த ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை என சகலரின் பெயரையும் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். இராஜராஜ சோழன் "அன்பே சிவம்" என உணர்ந்த ஞானி. சாதி அது இது என சக மனிதனை மதிக்காத சம காலத்து சாதாரணர்கள் முதல் தினவெடுத்த அரசியல்வாதி வரை அனைவரும் அந்தத் தஞ்சை கல்வெட்டில் தலையை மோதி கொண்டு சாகலாம்.

சரி மும்முடிச் சோழனான இராஜராஜ சோழனின் தஞ்சை அரண்மனை எங்கே? மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் வெஞ்சினத்தில் தஞ்சை நகர் சிதலமடைந்தது. ஆனால் அவரின் கோபத்திற்கு பெரிய கோயில் இலக்காகவில்லை. பத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களையும் கம்பீரமாக சமாளித்தது. ஆனால் வ.பி. 1342-ல், மாலிக்காபூர் படையெடுப்பில் தான் பெரிய கோயிலுக்கு அதிகச் சேதாரங்கள் ஏற்பட்டன. வ.பி. 1886-ற்கு பிறகு மராட்டிய வம்ச தலைமை ராணியான காமாட்சியம்பா பாய் சாஹேப், பரோடா கெய்ஹ்வாட் மன்னர் குடும்பத்துடன் சம்பந்தம் செய்தார். "ஊரான் வீட்டு நெய்யே புருஷன் கையே!!" என சொல்வது போல் தஞ்சை பெரிய கோயிலில் இருந்த மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகளையும் சீதனமாக அனுப்பிவிட்டார். அதில் ராஜராஜன் வழிபட்ட பஞ்சதேக மூர்த்தி செம்புச் சிலையும் பரோடாவிற்கு போய் விட்டதாம்.


கல்வெட்டியலின் தந்தையான கே.வி. சுப்ரமணிய ஐயருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

அற்புதமான ஒருவன்;
அற்புதத்தில் ஒருவன்*.
இரண்டும் ஒருவனே
அவன்,
இராஜராஜ சோழன்.

- சிம்ம வாகனி. 

*பத்துக் கோடியில் ஒருவன்


மேலே உள்ள படம்.. தஞ்சை பெரிய கோயில் மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம். அந்த ஓவியத்தில் உள்ளவர்கள் அரசு அலுவலர்கள். பெண்கள் இழுத்து போர்த்திக் கொண்டு பாரம்பரிய உடை அணிந்தால் கலாச்சார சீர்கேடு ஏற்படாது என துள்ளிக் குதிக்கும் ஆண்கள்.. 1000 ஆண்டுக்கு முற்பட்ட உடையை அணிந்து கலாச்சாரத்தைப் போற்றி பாதுக்காக்கலாமே!!

Sunday, February 24, 2013

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 6 )


சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 5) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

மூலிகை மணி என்ற மூலிகை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சம்பந்தமான இதழ்கள் அப்போது தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.அவற்றுக்கு எமது சித்தப்பாவான திரு இராமையா அவர்கள் (எலும்பு முறிவிற்குப் பற்றிடலில் உள்ள நோயாளர் இவரே ) ஆயுள் சந்தாதாரராகச் சேர்ந்து அது வரை வெளி வந்த பல ஆண்டுகள் இதழ்களை வாங்கி வைத்திருந்தார் .அவற்றை சிறு வயது முதலே படித்து வந்ததாலேயே சித்த மருத்துவத்தில் எமக்கு இவ்வளவு ஈடுபாடு ஏற்பட்டது(பரம்பரை என்பது வேறு சேர்ந்து கொண்டது).
அந்த மூலிகை மணி இதழில் 1971 ஆம் ஆண்டு ஜூன் மாத இதழில் வெளியான கார்ட்டூனை இங்கே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.
நன்றி :-மூலிகை மணி
முதன் முதலில் செயற்கை இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது எதற்காக என்று தெரியுமா????சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக அல்ல!!!ஆங்கில வைத்தியத்தில் ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்பு மனித உடலில் ஒரு  சத்திர சிகிச்சை ( OPERATION ) செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிறைய முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.அதில் முக்கியமான ஒன்று உடம்பில் கத்தியால் கீரி காயம் உண்டாகி இரத்தம் வெளிப்பட்ட அடுத்த வினாடி உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வினாடிக்கு வினாடி ஏறி அளவு கடந்த மிக அதீதமான நிலையை எட்டிவிடும்.எடுத்துக்காட்டாக 600 மிகி முதல் 900 மிகி வரை எட்டும்.இது ஏன் நிகழ்கிறது.
உடல் கிழிக்கப்பட்டு திறந்த நிலையில் , கிருமிகள் உடலின் உள்ளே   நுழையாமல் இருக்கவும் ,காயம் ஆறப் போராடவும் உடல் தயாராகும் நிலைதான் இந்த சர்க்கரை அளவு அதிகரித்தல்.இது போன்ற சத்திர சிகிச்சை ( OPERATION ) செய்ய இயற்கையாக உயரும்  சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கத்தான் முதன் முதலில் இன்சுலின் பயன்பட்டது .
ஒரு நாய் உங்களை விரட்டுகிறது.அந்த பயத்தில் உடனே உங்களால் தாவிக் குதிக்க முடியாத உயரத்தை நீங்கள் சர்வ சாதாரணமாகத் தாவுவீர்கள்.ஓட்டமோ ஒரு குதிரை  ஓடும் வேகத்தைவிட அதிக வேகமாக ஓடுவீர்கள்.இந்த மாயா ஜாலக் காரியங்களையும் செய்வது நம் உடலில் சிறு நீரகத்தின் உச்சியில் உள்ள தொப்பிச் சுரப்பி,  என்ற அட்ரீனலீன் சுரப்பிதான் அது.
நாய் விரட்ட ஆரம்பித்தவுடன் அட்ரீனல் சுரப்பி அட்ரீனலீனை சுரப்பதால் ,உடலில் இது வரை சேர்த்து வைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட சர்க்கரை அனைத்தையும் அவிழ்த்து இரத்தத்தில் கொட்ட ஆரம்பிக்கிறது .எடுத்துக்காட்டாக 600 மிகி முதல் 900 மிகி வரை எட்டும்.இதயம் அட்ரீனலீன் உதவியினால் இந்தச் சர்க்கரையை உபயோகித்து தன் வேகத்தை அதிகரித்து,(இதயம் தான் இயங்க இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையில் இருந்தே தனக்கு சக்தியை பெறுகிறது) ,இரத்த ஓட்ட வேகத்தை அதிகரிக்கிறது .உடலில் உள்ள தசைகள் அனைத்தும் , இந்த அதிகரிக்கப்பட்ட சர்க்கரையினால் மிக வேகமாக செயல்பட்டு ஆபத்திலிருந்து தப்பிக்கிறது.இந்த உடலின் அதீத செயல்பாட்டை உபயோகித்துத்தான் ஓட்டப் பந்தய விளையாட்டுக்களில் , ஊக்க மருந்தால், தட கள வீரர்கள் வெல்ல முயற்சிப்பதும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர்களுக்கு ஆபத்து சமயத்தில் மேற்கண்ட எதுவும் நிகழாது.உதாரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ளவர் கடுமையான விபத்தில் சிக்கி அதிக இரத்தப் போக்கில் இருப்பவருக்கு அவரது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காததால், இரத்தப் போக்கு தடுக்கப்படாது விடப்படும் , அதனால் அதிக இரத்தப் போக்கினாலேயே அவர் உயிரிழக்கலாம்.
எனவே மேற்கண்ட இரு உதாரணங்களில் இருந்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைத்தல் என்பதே கேலிக் கூத்து என்பதையும் , இதனால் அந்த நபர் உயிரிழக்கும் ,சாத்தியக் கூறுகள்தான் அதிகம் ஆகின்றன. இத்தனையிலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ள அவர் பிழைத்திருந்தாலும் ,  உடலின் இயக்க வேகத்தை அதிகரிக்க , அதிகரிக்கும் இதயத்துடிப்பால் இதயத்துக்கு சக்தியளிக்கும் சர்க்கரை இரத்தத்தில் உயராததால்  இதயம் சக்தியிழந்து (இதயம் தான் இயங்க சக்தியை  இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையில் இருந்தே பெறுகிறது, உடலின் வேகம் அதிகரிக்கும் போது உடலில் உள்ள மற்ற உறுப்புக்களும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுவதால்) , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்துள்ள நபரின் இதயம் இயங்க இயலாத அளவில் இரத்தத்தில் சர்க்கரை இருக்கும்  நிலையில் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தும் போது இதயத்  தாக்கு ( HEART  ATTACK )நேரிடுகிறது.
ஆங்கில  மருத்துவர் சொல்வார் “நானும் எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டேன்.கடைசியில் இதயத்தாக்குதல் வந்ததால் நோயாளர் இறந்துவிட்டார். கடவுள் அவருக்கிட்ட ஆயுள் அவ்வளவுதான் ” என்பார். ஆங்கில மருத்துவம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று கடைப்பிடித்த வைத்திய முறைதான் இந்த இறப்புக்கு காரணம் என்று உணராமல் ,நாமும்  “இதயத்  தாக்கு ( HEART  ATTACK ) வந்துவிட்டால் அவ்வளவுதான் ஒன்றும் செய்ய இயலாது ”என்று சொல்லிக் கொண்டே உச்சுக் கொட்டிக் கொண்டே போய் அவரை சுடு காட்டில் அடக்கம் செய்துவிட்டு அத்துடன் அவரை மறந்துவிடுவோம்.நமக்கும் ஒரு நாள் இந்த நிலைதான் என்பதை அடியோடு மறந்துவிடுவோம் .என்னே நமது அறிவீனம்.
தரமில்லாத சர்க்கரைக்கு கணையம் இன்சுலின் தராது .இன்சுலின் தரப்படாத சர்க்கரை உடலைவிட்டு வெளியேறியே தீரும்.அவையத்தனையும் வீணான சர்க்கரயே. ஆங்கில மருத்துவம் உடலில் சுற்றும் தரமற்ற சர்க்கரைக்கு  தரும் , தன்னிச்சையான இன்சுலினால் தரமற்ற சர்க்கரை உடலின் செல்களுக்குள் நுழையும். விளைவு செல்கள் அனைத்தும் அழுகிச் சாகும்.உடலின் பல பகுதிகளிலும் , ஏற்கெனவே இரத்தத்தில் சர்க்கரையினால் சூழப்பட்ட ஹீமோகுளோபினால் உடலின் செல்களுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் சாகும் செல்களோடு , தரமற்ற சர்க்கரை உள்ளே நுழைவதால் அழுகி இறக்கும் செல்களும்  சேர உடலின் பல பாகங்களிலும் பல குறைபாடுகள் நிகழ்கின்றன.
சிலர் கேள்வி கேட்பார்கள் “ நான் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டே , இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டே , சித்த மருந்துகளை சாப்பிடுகிறேன்” என்பார்கள். அவர்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. உடலில் கெட்டுப் போன சர்க்கரையை செல்களுக்குள் தள்ளும் வேலையைச் செய்து கொண்டே செல்களை எந்த விதத்தில் சரி செய்ய இயலும்.அல்லோபதி மருந்துகளை (அவற்றை மருந்துகள் என்று சொல்வதே தவறு , விஷங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் ) எடுப்பதே தவறு என்று நான் மீண்டும், மீண்டும்  நிரூபணங்களோஒடு சொல்லி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள்  கேலிக் கூத்துதான்.
கீழுள்ள காணொளிக் காட்சியைக் காணுங்கள். அதில் உடலில் உள்ள செரிக்கப்படும் பொருட்களுக்கு ஏற்ற வகையில் செரிமானத்திற்கு உதவும் , பித்த நீர் ( BILE ), பாங்க்ரியானிக் செரிமான நீர்களை(PANCREANTIC JUICES  ) அசினார் செல்கள்  (ACINAR CELLS ) சுரந்து டியோடினம் வழியாக நுழைவதை சுட்டிக் காட்டுவதைப் பாருங்கள்.உடலில் சர்க்கரை அளவு குறைவானால் அதிகமாக்க உடலின் கணையத்தில் உள்ள பாங்கிரியாட்டிக் ஐலெட்ஸ் (PANCREATIC AISLETS ) என்ற இடங்களில் உள்ள ஆல்பா செல்கள் (ALPHA CELLS ) குளூகோகான் (GLUCAGON )என்ற நீரைச் சுரந்து உடலில் உள்ள சேமிப்பு சர்க்கரையை எடுத்து  இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக்கும்.
உடலில் சர்க்கரை அளவு  அதிகமானால் குறைக்க (PANCREATIC AISLETS ) என்ற இடங்களில் உள்ள பீட்டா செல்கள் (BETA CELLS )இன்சுலினை (INSULIN ) சுரந்து உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க, செல்களுக்குள் சர்க்கரை உள்ளே நுழைய அனுமதி கொடுத்து இரத்தத்தில் இருந்து செல்களுக்குள் சர்க்கரையை அனுப்புகின்றது .
இந்த இரண்டு செயல்களையும் கட்டுப்படுத்த டெல்டா செல்களில் ( DELTA CELLS ) உள்ள சோமாட்டோஸ்டேட்டின் ( SOMATOSTATIN) சுரந்து சமிக்கைகளைப் (SIGNALS ) புரிகிறது.இப்படி சர்க்கரை அளவு கூடினாலும் குறைந்தாலும் , கெட்ட சர்க்கரை இருந்தால் வெளியேற்றவும்,நல்ல சர்க்கரையை வீணாக்காமல் சேமித்து வைக்கவும் நம்முடலிலேயே சகல வசதிகளுடன் அமைப்புகள் இருக்க, இவற்றை சரியாக செயல்பட வழி செய்தால் போதாதா??? ஆங்கில மருத்துவம் இந்த நாளமில்லாச் சுரப்பிகளின் இடையில் புகுந்து குழப்பங்கள் விளைவிப்பதால்தான் உடல் நலிந்து , ஆங்கில மருந்துகளால் படாத பாடுபட்டு , உள்ளுறுப்புக்களும் முழுவதும் கெட்டு நோயாளர் படாத பாடுபட்டு முடிவில் அத்தனை பொறிகளும் , புலன்களும் கெட்டு இறந்தே போகிறார்.
பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்7) ல் தொடரலாம்.

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 5 )


சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 4) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

உணவு எச்சிலுடன் கலந்து உட்கொள்ளப்படும் போது உணவை எச்சில் ஜீரணத்துக்கு தயார் செய்வதுடன் ,வயிற்றின் உள்ளுறுப்புகளுக்கு தகவல் அனுப்பி வயிற்றில் விழும் உணவுக்கேற்ற வலிவுள்ள ஜீரண நீர்களை சுரக்க வைக்கிறது.  வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவை கரைத்து அன்ன ரசமாக்கி,(சர்க்கரையாக்கி) இரத்தத்தில் கலக்கும் போது , ஹைட்ரோ குளோரிக் அமிலமும் தன் தன்மையை விட்டு எச்சிலில் உள்ள சுண்ணாம்புச் சத்தால் அமிலம் (அமிலமும் காரமும் வினைபுரிந்து உப்பையும் தண்ணீரையும் உண்டாக்கும்) தண்ணீராக மாறிவிட வேண்டும் . இல்லையேல் அந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் குடலின் சுவர்களை அரிப்பதுடன் , புண்ணாக்குவதுடன் , அமிலத் தன்மை இரத்தத்திலும் ஊடுருவ ஏதுவாகும் .
வெண்புள்ளி நோய் குணமாவதற்கு வீட்டு வைத்தியத்தில் என்ன மருந்து தெரியுமா கூறியிருக்கிறார்கள்.கருவேப்பிலைக் கொழுந்தும் , கீழா நெல்லி இலைக் கொழுந்து ஒரு கைப்பிடியும் காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வர குணமாகும் என்பதோடு சர்க்கரை நோயும் கட்டுப்படும்.அது மட்டுமல்ல ஈரல் நோய்களும் குணமாகும் , அது மட்டுமல்ல உடலில் உள்ள கழிவுகளையும் இவை நன்றாக நீக்கும்.
மேலும் கீழ்க்கண்ட இந்த இணைப்பில் வெள்ளைச் சர்க்கரையான சீனியை தவிர்த்தால் , விளையும் நன்மைகளுள் ஒன்று வெண்குஷ்டம் குணமாதல்.உடலெங்கும் கேடுகள் செய்யும் வெள்ளைச் சர்க்கரையான சீனியைத் தவிர்ப்போம்.
http://maravalam.blogspot.in/2011/10/blog-post_19.html
மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் கூறி இந்தப் பதிவை முடிக்கிறேன்.
சமஸ்கிருத மொழியில் “லங்கணம் பரம ஔஷதம்” என்பார்கள். அதாவது “பட்டினியே சிறந்த மருந்து” என்பார்கள். மூன்று வேளையும் , வேளை தவறாமல் உண்டால் உடம்பு வியாதிகளின் கூடாரமாகும் .அப்படி உண்ணுவதே வேலையாக உண்ணாமல் நன்றாகப் பசித்த பின் (காலை உணவுக்குப் பின் பசிக்கவில்லையானால் அன்று முழுவதும் சாப்பிடவே சாப்பிடாதீர்கள்) மட்டுமே உண்ணுங்கள்.
காலை உணவை எக்காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காமல், அவசரம் அவசரமாகச் சாப்பிடாமல், நிதானமாக காலை 7 மணி முதல் 9 மணிக்குள் கண்டிப்பாகச் சாப்பிட்டுவிடுங்கள்.ஏனெனில் வயிறு சக்தி நாளம் இயங்கும் நேரம் இதுவே.
பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்6) ல் தொடரலாம்.

வெண்புள்ளி


வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.


"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும்ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.

 
முகம் சுழிக்கும் முன்னே முத்தொன்றுப் பெற்றுக் கொடுத்தாள் எங்கள் கையில். புதிய உயிர் ஒன்றின் வரவால் புத்துயிர் பெற்றது எங்கள் வாழ்க்கை. எல்லாம் இன்பமயம். யாருக்குமே எந்தக் குறையுமில்லை மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளிதவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை  அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு????  வழக்கம்போல் தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள்.  அவள் முகத்தில் சிரிப்பு  இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.


சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா? என்று கேட்டார்.

“ சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் என்றாள். 

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா என்றார்.

ப் பூ .... இவ்வளவுதானா?  என்றாள்.

நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு என்றார்.

பத்தியம் ஏதேனும் உண்டா? என்றாள்

சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை (White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது  என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.
 “உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா என்றாள்.
இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா?  என்றேன்.
அதற்கு போட்டோக்களும் தருகிறேன் மாமா என்றாள்.

எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள் என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக.

மது. இராமகிருஷ்ணன்
இயற்கை விவசாயி
சந்தோஷ் பார்ம்ஸ்
பொள்ளாச்சி -642 114.

திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)

இணைப்பு
பலருக்கும் பயன்பட இணைய தளத்தில் இதனை இணைக்க பாடுபட்ட அண்ணன் திரு வின்சென்ட் மற்றும் அண்ணன். திரு ஓசை செல்லா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகள்.
மது. இராமகிருஷ்ணன். ஹேமா உமாசங்கர்.

மக்கள் பயனுற வேண்டும் என்ற உன்னத எண்ணத்துடன் வாழ்வில் நடந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டு நமது பாட்டி வைத்தியம் எளிமையானது, சிறப்பானது, அதிக செலவில்லாதது மற்றும் பின்விளைவு இல்லாதது  என்ற நம்பிக்கையை விதைத்த அண்ணன் திரு. மது. இராமகிருஷ்ணன், திருமதி. ஹேமா உமாசங்கர் இருவரின் குடும்பங்களுக்கும் உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். வைத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.

VIDHYA'S PHOTOS.