Thursday, April 11, 2013

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :



குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ?
குழந்தைகளுக்கு  மருந்து தரும் முன்  இரண்டு  விசயங்களை  நாம் கவனிக்க வேண்டும் I .வயது  II .எடை எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.
அதே போல்  வயதும்  மிக முக்கிய காரணி ஆகும் .பல  மருந்துகளின்  அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .
குழந்தைகளை உட்கார  வைத்தே மருந்து   தருவது நல்லது .படுக்க வைத்து  தரும் போது புரை  ஏறுதல்  என்று சொல்லப்படும்  மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .
மருந்து  கொடுக்கும் முன்  அதை  தருபவர் கைகளை  நன்கு சுத்தம்  செய்து கொள்ளவேண்டும் .

அளவுகள் :
குழந்தைகளின்  எடைக்கு  ஏற்பவே  மருந்துகளை  தரவேண்டும் .   மருத்துவர் சொன்ன அளவை  சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .
ஒரு சி.சி  என்பது  - ஒரு மிலி 
ஒரு டீ ஸ்பூன்  என்பது  -5  மிலி
அரை  டீ ஸ்பூன்  என்பது -2 .5  மிலி 
ஒரு டேபிள்  ஸ்பூன்  என்பது -15  மிலி 
(டீ யை  விட  டேபிள்  தான் பெருசு )


dropper  எனப்படும்  சொட்டு மருந்து போடும்  குழல் உபயோகிக்கும் போது  மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .
சொட்டுகுழலில் (dropper )  ஒரு மிலி  என்பது  15 -20  சொட்டுகள்  ஆகும் .
குழலின்  முழு அளவு  ஒரு மில்லி  ஆகும் .
குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .
மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என  கவனித்து  மருந்து  தரவேண்டும் .
மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில்  குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .
அதாவது  ௦.5  மிலி  என்பது  எண்ணிகையில்  10  சொட்டுக்கு சமம் .
ஒரு மில்லி  என்பது  எண்ணிகையில் 15 -20  சொட்டுக்கு சமம் .
(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20  சொட்டும் , சற்றே கூழ்  போன்ற மருந்துகள்  15  சொட்டும் இருக்கும் )

பாட்டில் மூடியில்  உள்ள  அளவுகள் சில நேரம்  மாறலாம் .எனவே நாம் மருந்துகளை  அளக்க  சுத்தமான  புது  சிரிஞ்  கொண்டு அளந்தால்  அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .



மருத்துகளை தோரயமாக  அளக்காமல் சரியாக அளந்து  தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே  மருந்து  தருகிறார் .எனவே அவர் எழுதிய  அளவை சரியாக தரவும் .
குறைவாக  கொடுத்தால் மருதின் வீரியம்  சரியான அளவில் கிடைக்காது.



அதேபோல்  எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ  அத்தனை வேளை  தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).
சுரத்திற்கு  தரப்படும்  பாரசிடமால்  மருந்தை 4 -6  மணி நேரத்திற்கு  ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html
ஆன்டி பயாடிக் மருந்துகளை  மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5  நாள் வரை  தரவேண்டும் ஜுரம்  நின்றாலும்  இதனை  தொடர்ந்து தரவேண்டும் .
dry syrup  எனப்படும்  பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர்  கலந்த பின்பே  உபயோகிக்க வேண்டும் .
சிலர்  அவ்வப்போது  பொடியை  எடுத்து அதில் சிறிது  தண்ணீர் கலந்து கொடுக்கும்  பழக்கத்தை  செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு  4 -7  நாட்கள்  மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி  மருந்து பாட்டிலின்  உரையில் குறிப்பிட பட்டிருக்கும் . 
ஒரு முறை வாங்கிய  மருந்தை மீண்டும் மீண்டும்  மருத்துவரை கேட்காமல்  தரக்கூடாது .
சில மருந்துகளை திறந்தபின்  குறிப்பிட்ட  நாள்கள்  தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி  தேதி  முடியாவிட்டாலும்  திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .
சில தடை  செய்யப்பட்ட  மருந்துகள்  கடைகளில்  கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை  இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது . 
உதாரணமாக நிமுசுலைட் என்ற  மருந்தை 
  குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது  என்று தடை செய்தும்  அது  மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html

அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும்  மருந்தை 12  வயதுக்கு குறைந்த  குழந்தைகளுக்கு  உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும்  தவறாக  பயன்படுத்த படுகிறது .

குழந்தைகளுக்கு வரும் வியர்க்குரு


வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர்.

பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச்சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல்சூட்டைத்தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து வீங்குகிறது.இது சிறுசிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.இதனுள் சில பாக்டீரியங்கள் வளருவதால் சிவந்து காணப்படும் மேலும் வியர்வை வெளியேறாமல் உள்ளே அடைத்துக்கொள்வதால் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும்.
தவிர்க்கும் வழிகள் : குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வைவராமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவை குறைக்கலாம்.அதற்கு குழந்தைகளை தினமும் தவறாமல் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும்;இரண்டுவேளை குளிப்பாட்டினால்கூட நல்லது.அப்படி முடியாவிட்டால் தண்ணீர்வைத்து துண்டுக்குளியல் செய்தால் கூட நல்லதுதான்.


சாதாரண டால்கம் பவுடரை அதிகம் உபயோகிக்ககூடாது ஏனெனில் அவைகள் வியர்வைசுரப்பிகளின் துளைகளை அடைத்துவிடுவதால் தொந்தரவு மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கேலமைன் உள்ள லோஷன்களை பயன்படுத்தலாம்.மேலும் மென்தால் உள்ள சிறப்பு பவுடர்களை பயன்படுத்தலாம்.


எப்போது மருத்துவரை அணுகுவது?
அதிக அளவில் ஏற்பட்டு எரிச்சல் அதிகரித்தாலோ அல்லது சீழ்ப்பிடித்து காய்ச்சல் வந்தாலோ மருத்துவரை உடன் உடன் அணுகவும்.குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.

ஆவாரம் பூ..!




பூக்களின் அழகும், நறுமணமும் எத்தகை யோரையும் மயக்கும் தன்மை கொண்டது. பூக்களில் மறைந்துள்ள மருத்துவத் தன்மையை நம் முன்னோர்கள் அறிந்து கொண்டால் தான் அதை இறைவனுக்கு பூஜிக்க பயன்படுத்தினர்.

கடந்த இதழில் அல்லியின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டோம். இந்த இதழில் ஆவாரம் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்துகொள்வோம்.

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ

என்ற பழமொழி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதிலிருந்தே இதன் மருத்துவப் பயனை அறியலாம். ஆவாரம் பூ உயிர்க்காக்கும் மருந்தாகும்.

மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூவின் செடி குத்துச்செடி இனத்தைச் சேர்ந்தது. இதனை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Aavaarai

English - Tanner’s cassia

Telugu - Tangedu

Malayalam - Aveeram

Sanskrit - Avartaki

Botanical Name - Cassia auriculata

தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்

மங்காத நீரை வறட்சிகளை - அங்கத்தாம்

மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்v பூவைசேர் ஆவாரம் பூ
(அகத்தியர் குணபாடம்) நீரிழிவு நோய், சருமத்தில் உண்டாகும் வறட்சி, சருமத்தில் உப்புப் படிதல், மற்றும், வியர்வையால் உண்டாகும் துர்நாற்றம், இவைகளை நீக்கி தங்கம் போன்ற மேனியைக் கொடுக்கும்.

ஆவாரம் பூ நரம்பிலுள்ள உப்புத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.

நீரிழிவு நோய் கட்டுப்பட

2025ம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 68 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய மக்கள்தான் இதற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் அந்த நிறுவனத்தின் அறிக்கை மேலும் கூறுகிறது.

நீரிழிவு நேயைக் கட்டுப்படுத்த அன்றே நம் சித்தர்கள் பல மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். அதில் ஆவாரம் பூவும் ஒன்று. ஆவாரம் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரையை குறைக்க ஆவாரம் பூ சிறந்த மருந்தாகும்.

ஆவாரம் பூ, குப்பைமேனி இலை, பூவரசு இலை, செம்பருத்தி இலை சம அளவு எடுத்து, அரைத்து சருமத்தில் முழங்காலுக்குக் கீழே பூசி வந்தால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கால் பகுதி உணர்ச்சிபெறும்.

மேனி பளபளக்க

ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மேனி தங்கம் போல் பளபளவென்று இருக்கும். சரும நோய்கள் ஏதும் அண்டாது.

கற்றாழை நாற்றம் மாற

சிலருக்கு வியர்வையில் கற்றாழை நாற்றம் கலந்து வீசும். இதனால் இவர்கள் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த கற்றாழை நாற்றத்திற்குக் காரணம் உடலில் உள்ள வியர்வைத் துளைகளில் படிந்துள்ள கிருமிகளே.

இவர்கள் ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் பனைவெல்லம், சுக்கு சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை டீ போல அருந்தி வந்தால் வாசனை திரவியம் இன்றி உங்கள் மேனி நறுமணம் வீசும்.

உடம்பில் உப்பொரிதல் மாற

சிலருக்கு உடம்பில் வியர்வை அப்படியே படிந்து உப்புப் படிவமாக மாறும். உடலெங்கும் வெள்ளைத் திட்டுக்களாக படிந்து இருக்கும். இவர்கள் ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் சீயக்காய் தூள் சேர்த்து குளிக்கும் முன் உடலெங்கும் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடம்பில் உப்பொரிதல் மாறும்.

உடல் சூடு தணிய

உடல் சூட்டால் பித்தம் அதிகரித்து உடலில் இரத்தம் மாசடைந்து நோய்கள் பல ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த உடல் சூடு தணிய ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு படிப்படியாக குறையும்.

தலைமுடி உதிர்வதைத் தடுக்க

ஆவாரம் பூ மேனியை பளபளப்பாக வைப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன் படுகிறது.

ஆவாரம்பூவை காயவைத்து அதனுடன் சீயக்காய், சிறுபயறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து கூந்தல் நீளமாக வளரும்.

வெள்ளைப்படுதல் உள்ள பெண்கள் ஆவாரம் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

ஆவாரம் பூவின் வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது என்று பல ஆய்வறிக்கைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அணtடி ஞீடிச்ஞஞுtடிஞி, ச்ணtடி ணிதுடிஞீச்ணt குணங்கள் ஆவாரம் பூவிற்கு உண்டு என்று தற்போது நடைபெற்று வருகின்ற ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எங்கும் கிடைக்கும் எளிய மருந்தான ஆவாரம்பூவை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

சர்க்கரை நோய் - சிறுகுறிஞ்சான்


சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான்

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

ஜிம்னீமாவில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.

சர்க்கரைக் கொல்லி :

சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.

விதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

விஷக்கடி போக்கும் :

வண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். (Gymnema) நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

துளசி



 துளசி            துளசி


 மருத்துவக் குணங்கள்:

  •     தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

  •     இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  •     பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

  •     துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

  •     துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

இல்லை! இல்லை !!இல்லை !!!


  • அரேபியாவில் ஆறுகள் இல்லை
  • அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.
  • ஆமைக்குப் பற்கள் இல்லை.
  • இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.
  • இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.
  • இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.
  • இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
  • ஈசலுக்கு வயிறு இல்லை.
  • உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.
  • ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.
  • ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.
  • ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.
  • கடலில் முதலைகள் வாழ்வதில்லை.
  • பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.
  • பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.
  • மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.
  • மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.
  • யமுனை நதி கடலில் கலப்பதில்லை.
  • யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
  • வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.
  • ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
  • ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.
  • கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.
  • குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.
  • குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.
  • பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.
  • பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்


உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்


'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.

இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.

இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..

இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.

இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.

மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
வாழைப்பூ:
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

வாழைத்தண்டு:
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

வாழைக்காய்:
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

பாகற்காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சேப்பங்கிழங்கு:
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

பீட்ரூட்:
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.

வெண்டைக்காய்:
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

கோவைக்காய்:
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.

முருங்கைக் காய்:
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.

சுண்டைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

சுரைக்காய்:
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

குடைமிளகாய்:
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.

சௌசௌ:
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

அவரைக்காய்:
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

காரட்:
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்::
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கத்தரி பிஞ்சு:
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.