Showing posts with label child. Show all posts
Showing posts with label child. Show all posts

Thursday, April 11, 2013

குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?(WEANING/COMPLEMENTARY FEEDING)







குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை  தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் .தண்ணீர் கூட தர தேவை இல்லை .

இதற்க்கு EXCLUSIVE BREAST  FEEDING  என்று பெயர் .கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை .ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .

  இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING  என்று பெயர் .








WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to  the baby (UNICEF)







WEANING  என்றால் முற்றிலும்  தாய்ப்பாலை  நிறுத்திவிட்டு  உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால்  தற்போது COMPLEMENTARY  FEEDING  என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது .



நான்கு மாதங்களுக்கு  பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை  செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன .


தலை நன்கு நிமிர்ந்து  நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு  பிறகே


குழந்தையின் எடை 5  மாதத்தில் பிறந்ததை போல்  இரு மடங்காக  அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும் . மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும்  இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும் .




குடலில் உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும்  4 -5  மாதங்களில்தான் .













எனவே 180 நாட்கள் முடிந்தபிறகே இணை உணவுகளை  ஆரம்பிப்பது  நல்லது .



      முதலில் ஏதேனும் ஒரு  தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது  பழகிய பிறகே  இரண்டு அல்லது  மூன்று  தானிய  கலவைகளை  சேர்த்து அரைத்து  தர வேண்டும் .

அரிசி சாதம் மிகவும் எளிதில் ஆரம்பிக்க சிறந்தது .ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்  மட்டும் தரவேண்டும் .படிப்படியாக  இந்த அளவை அதிகரிக்க வேண்டும் .


தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும் .


     ஒரு வயது வரை  உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை  போல் நூறு மடங்கு கலோரி  தேவை . அதாவது  6 கிலோ  குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு  தேவை .எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக  பாலும்  இணை உணவும்  தரவேண்டும் .



ஐஸ் போடாத வீட்டில் செய்த  பழச்சாறு  6  மாதம் முதல் தரலாம் . ஆரஞ்சு , ஆப்பிள்  சிறந்தது .


நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6  மாதம் முதல் தரலாம்


முட்டை - 7  -9  மாதங்களில் தரலாம் . முதலில்  மஞ்சள் கருவும்  பின்பே வெள்ளை  கரு தரவேண்டும் . ஏனெனில் வெள்ளை  கரு சில குழந்தைகளுக்கு  ஒவ்வாமையை  ஏற்படுத்தலாம் .


6 -8  மாதங்களில் மசித்த  உருளை கிழங்கு , மசித்த பருப்பு  ஆகியவற்றை தரலாம் .


மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி  ) 9 -12  மாதங்களில்  தரவேண்டும் .


ஒரு வயது ஆகும்போது  வீட்டில்  செய்யும் எல்லா   உணவுகளையும்  தரலாம் .


அசைவ  உணவை  ஒரு வயதுக்கு  பின்பே ஆரம்பிப்பது  நல்லது .(முட்டை சைவம் தானே ?!!)

ஒரு வயதுடைய  குழந்தை  அம்மா சாப்பிடும்  அளவில் பாதி அளவு  உணவு சாப்பிடவேண்டும்  .(மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )

ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி  தேவை .



தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன்  சேர்த்தே தரவேண்டும் .இரண்டு வயது வரை தருவது கட்டாயம் .அதற்க்கு மேல் கொடுப்பது  தனிப்பட்ட விருப்பம் .,( அப்துல் கலாம் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவர் )


COMPLEMENTARY  FEEDING -இணை உணவு  ஒரு மிகப்பெரிய  பகுதி  . முடிந்தவரை எழுதி உள்ளேன் .எனவே உங்க சந்தேகங்களை  பின்னுட்டத்தில்  தெரியபடுத்தவும் .

குழந்தைகளின் உயரம் & எடை


          AGE (years)       MALE (HT)     FEMALE (HT)    MALE(WT)      FEMALE(WT)                  

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :



குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது  எப்படி ?
குழந்தைகளுக்கு  மருந்து தரும் முன்  இரண்டு  விசயங்களை  நாம் கவனிக்க வேண்டும் I .வயது  II .எடை எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.
அதே போல்  வயதும்  மிக முக்கிய காரணி ஆகும் .பல  மருந்துகளின்  அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .
குழந்தைகளை உட்கார  வைத்தே மருந்து   தருவது நல்லது .படுக்க வைத்து  தரும் போது புரை  ஏறுதல்  என்று சொல்லப்படும்  மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .
மருந்து  கொடுக்கும் முன்  அதை  தருபவர் கைகளை  நன்கு சுத்தம்  செய்து கொள்ளவேண்டும் .

அளவுகள் :
குழந்தைகளின்  எடைக்கு  ஏற்பவே  மருந்துகளை  தரவேண்டும் .   மருத்துவர் சொன்ன அளவை  சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .
ஒரு சி.சி  என்பது  - ஒரு மிலி 
ஒரு டீ ஸ்பூன்  என்பது  -5  மிலி
அரை  டீ ஸ்பூன்  என்பது -2 .5  மிலி 
ஒரு டேபிள்  ஸ்பூன்  என்பது -15  மிலி 
(டீ யை  விட  டேபிள்  தான் பெருசு )


dropper  எனப்படும்  சொட்டு மருந்து போடும்  குழல் உபயோகிக்கும் போது  மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .
சொட்டுகுழலில் (dropper )  ஒரு மிலி  என்பது  15 -20  சொட்டுகள்  ஆகும் .
குழலின்  முழு அளவு  ஒரு மில்லி  ஆகும் .
குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .
மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என  கவனித்து  மருந்து  தரவேண்டும் .
மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில்  குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .
அதாவது  ௦.5  மிலி  என்பது  எண்ணிகையில்  10  சொட்டுக்கு சமம் .
ஒரு மில்லி  என்பது  எண்ணிகையில் 15 -20  சொட்டுக்கு சமம் .
(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20  சொட்டும் , சற்றே கூழ்  போன்ற மருந்துகள்  15  சொட்டும் இருக்கும் )

பாட்டில் மூடியில்  உள்ள  அளவுகள் சில நேரம்  மாறலாம் .எனவே நாம் மருந்துகளை  அளக்க  சுத்தமான  புது  சிரிஞ்  கொண்டு அளந்தால்  அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .



மருத்துகளை தோரயமாக  அளக்காமல் சரியாக அளந்து  தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே  மருந்து  தருகிறார் .எனவே அவர் எழுதிய  அளவை சரியாக தரவும் .
குறைவாக  கொடுத்தால் மருதின் வீரியம்  சரியான அளவில் கிடைக்காது.



அதேபோல்  எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ  அத்தனை வேளை  தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).
சுரத்திற்கு  தரப்படும்  பாரசிடமால்  மருந்தை 4 -6  மணி நேரத்திற்கு  ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html
ஆன்டி பயாடிக் மருந்துகளை  மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5  நாள் வரை  தரவேண்டும் ஜுரம்  நின்றாலும்  இதனை  தொடர்ந்து தரவேண்டும் .
dry syrup  எனப்படும்  பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர்  கலந்த பின்பே  உபயோகிக்க வேண்டும் .
சிலர்  அவ்வப்போது  பொடியை  எடுத்து அதில் சிறிது  தண்ணீர் கலந்து கொடுக்கும்  பழக்கத்தை  செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு  4 -7  நாட்கள்  மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி  மருந்து பாட்டிலின்  உரையில் குறிப்பிட பட்டிருக்கும் . 
ஒரு முறை வாங்கிய  மருந்தை மீண்டும் மீண்டும்  மருத்துவரை கேட்காமல்  தரக்கூடாது .
சில மருந்துகளை திறந்தபின்  குறிப்பிட்ட  நாள்கள்  தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி  தேதி  முடியாவிட்டாலும்  திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .
சில தடை  செய்யப்பட்ட  மருந்துகள்  கடைகளில்  கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை  இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது . 
உதாரணமாக நிமுசுலைட் என்ற  மருந்தை 
  குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது  என்று தடை செய்தும்  அது  மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html

அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும்  மருந்தை 12  வயதுக்கு குறைந்த  குழந்தைகளுக்கு  உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும்  தவறாக  பயன்படுத்த படுகிறது .

குழந்தைகளுக்கு வரும் வியர்க்குரு


வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர்.

பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச்சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல்சூட்டைத்தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து வீங்குகிறது.இது சிறுசிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.இதனுள் சில பாக்டீரியங்கள் வளருவதால் சிவந்து காணப்படும் மேலும் வியர்வை வெளியேறாமல் உள்ளே அடைத்துக்கொள்வதால் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும்.
தவிர்க்கும் வழிகள் : குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வைவராமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவை குறைக்கலாம்.அதற்கு குழந்தைகளை தினமும் தவறாமல் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும்;இரண்டுவேளை குளிப்பாட்டினால்கூட நல்லது.அப்படி முடியாவிட்டால் தண்ணீர்வைத்து துண்டுக்குளியல் செய்தால் கூட நல்லதுதான்.


சாதாரண டால்கம் பவுடரை அதிகம் உபயோகிக்ககூடாது ஏனெனில் அவைகள் வியர்வைசுரப்பிகளின் துளைகளை அடைத்துவிடுவதால் தொந்தரவு மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கேலமைன் உள்ள லோஷன்களை பயன்படுத்தலாம்.மேலும் மென்தால் உள்ள சிறப்பு பவுடர்களை பயன்படுத்தலாம்.


எப்போது மருத்துவரை அணுகுவது?
அதிக அளவில் ஏற்பட்டு எரிச்சல் அதிகரித்தாலோ அல்லது சீழ்ப்பிடித்து காய்ச்சல் வந்தாலோ மருத்துவரை உடன் உடன் அணுகவும்.குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.