இன்றைய வாழ்க்கையில் கல்வியானது நூல்களிலிருந்தும் இணையத்திலிருந்தும் கற்பதாக இருக்கிறது. தேடுதல் உள்ள ஒருவன் இதன் மூலம் நிறையவே கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கல்வியின் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர ஒருவனது ஆளுமையையும் செயற்திறனையும் வளர்த்துக் கொள்ள முடியாது.
உதாரணத்திற்கு ஆசிரிய சேவையை எடுத்துக் கொள்வோம். அப் பணிக்கு வருபவர் பட்டப் படிப்பு பெற்றிருப்பார். இதனால் அவருக்குத் தேவையான கல்வி அறிவு கிட்டியிருக்கும். அத்துடன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் அல்லது கல்வியற் கல்லூரியில் பெற்ற பயிற்சியால் ஆசிரியப் பணிக்கான பிரத்தியேக அறிவும் அவரிடம் வளர்த்திருக்கும். ஆனால் அவ்வாறு கற்ற யாவரும் சிறந்த ஆசிரியராக வருவதில்லையே! இது ஏன்?
ஆனால் அந்த நபரானவர் தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியர் ஒருவரது குண இயல்புகளையும், கற்பிக்கும் முறைமைகளையும், மாணவர்களுடன் உரையாடும் பாணியையும்; முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் போலத் தன்னையும் வளர்த்தெடுக்க முயற்சி எடுப்பாராயின் அவர் சிறந்த ஆசிரியராகப் பரிணமிக்க முடியும். அதற்கு மேலாக அவரிடம் தனது சந்தேகங்களை நிவர்த்திக்க முடியுமாயின் மேலும் உதவியிருக்கும்.
அர்ச்சுனன் துராணாச்சாரியிடமிருந்து வில்வித்தையைக் கற்றான். ஆனால் வில்வித்தையை மாத்திரமின்றி தனது ஆளுமையையும் அவனால் வளர்த்துக் கொள்ள முடிந்தது. துரியோதனனும் அவரிடமே கற்றான். ஆனால் அவனால் அவனது குண இயல்புகளும் பண்புகளும் சொல்லும்படியாக அமையவில்லை. அது குருகுலக் கல்வி முறை.
சரியான முறையில் அதைப் பயன்படுத்தினால் அது ஒரு அற்புதமான முறை.
ஆனால் ஏகலைவன், துரோணாசாரியரிடம் நேரடியாகக் கற்று கொள்ளாமலே அர்சுணனை ஒத்த சிறந்த வில் வீரனாக மாறினான். இங்கு சிஸ்யர்கள் தங்கள் குருவின் வழிகாட்டலை வௌ;வேறு விதங்களில் பெற்றிருக்கிறார்கள்.
வழிப்படுத்தல் Mentoring
இன்று புதிதாக Mentoring பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கான சரியான தமிழ்ப்பதம் எதுவென்று தெரியவில்லை. வழிப்படுத்தல் எனக் கொள்வோம். அதிக அனுபவமும் knowledge உள்ள ஒருவர் தன்னிலும் அனுபவமும் அறிவும் குறைந்த ஒருவரை சரியான வழியில் நெறிப்படுத்துவது எனச் சொல்லலாம். மாறாக அவரைப் பார்த்து, அவரிடம் கேட்டு, அவரிடமிருந்து தன்னைத்தானே நெறிப்படுத்துவதாகவும் இது அமையும். இது இன்றைய வகுப்பறைக் கல்வி போலவோ ரியூசன் போன்றதோ அல்ல.
இதில் அறிவும் ஆற்றலும் அனுபவமும் மற்றொருவருக்கு ஊட்டப்படுவதில்லை. மாறாக அவர் அதைத் தானாகப் பெற்றுக் கொள்ளுமாறு வழிப்படுத்தப்படுகிறார். சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. கற்றல் உரையாடலுக்கு அப்பால், சவால்களை எதிர்கொள்வதையும் உள்ளடக்குகிறது.
வழிப்படுத்தல் என்பது பொதுவாக வழிநடத்துனர் Mentor மற்றும் mentee வழிப்படுபவர் ஆகிய இருவருக்கிடையேயான ஒருவகை உறவு எனலாம். ஒரு நாள் அல்லது குறிப்பிட்ட நாள் வரைக்கான உறவு அல்ல. தொடரும் உறவு, தங்கள் எதிர்பார்ப்பு நிறைவுறும் வரை தொடரும். ஆனால் இந்த இருவரில் எவராவது ஒருவருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில் எந்தவித மனக்கிலேசமும் இன்றி இடை நடுவில் கைவிடுவதும் சாத்தியமே.
வழிப்படுத்தலில் உள்ளடங்கும் இருவரும் பொதுவாக ஒரே துறையைச் சார்ந்தவர்களாகவே இருப்பர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், முகாமைத்துவம் சார்ந்தவர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், வாணிபம் செய்பவர்கள் என எத்துறை சாரந்தவர்களுக்கும் இது பயன்படலாம்.
இது வழமையான ஒரு கல்வி முறையல்ல என்பதைக் கண்டோம். முறைசாரது அறிவைக் கடத்துவது இதுவாகும். பொதுவாக அறிவை மாத்திரமின்றி அவரது தொழிற் திறனை விருத்தி செய்வதாகவும் அமைகிறது.
தங்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை விருத்தி செய்து, திறன்களை மெருகூட்டி, வினைத்திறனை அதிகரித்து சிறந்த முறையில் தொழில் ஆற்றலைப் பெறுவதற்கு வழிப்படுத்தல் நன்கு பயன்படும். தங்கள் துறையில் தமது விருப்பிற்கு உரிய ஒருவரைப் போல தங்களைத் தானே வளர்த்தெடுப்பதற்கான முயற்சியாகவும் காணலாம்.
வழிப்படுத்தலில் அவதானிக்க வேண்டியவை
வழிநடத்துனரும், வழிப்படுபவரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஒரே இடத்தில் வேலை வேலை செய்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில் அவை தொழில் முறைப் போட்டி பொறாமைகள், சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தல் போன்றவற்றிக்கு இட்டுச் செல்லக் கூடுமாதலால் வௌ;வேறு இடத்தைச் சேர்ந்தவர்களே விரும்பத்தக்கது. இரகசியம் பேணுதலும் நம்பிக்கையாக நடத்தலும் மிக முக்கியமாகும். வழிநடத்துனரும், வழிப்படுபவரும் சந்தர்பத்தை பயன்படுத்தி மற்றவரது வாய்ப்பு, வசதி, உழைப்பு போன்றவற்றை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முனையக் கூடாது.
வழிநடத்துனரும், வழிப்படுபவரும் பொதுவாக சுறுசுறுப்பாக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள். நேரம் அவர்களுக்கு பொன்னானது. எனவே மற்றவர் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காது வழிப்படுபவர் முன்முயற்சி எடுத்து பயன்பெற முனைய வேண்டும்.
அத்துடன் எழுதுவதிலும் ஏடுகளை பேணுவதிலும், நேரடியாகச் சந்திப்பதிலும் நேரத்தை செலவழிக்காது, டெலிபோன் உரையாடல், ஈ மெயில், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமே.
தொழிற்துறைகளில் வழிநடத்தல்
வழிநடத்துதல் என்ற பெயர் இல்லாவிட்டால் கூட பெரும்பாலான தொழில்களில் இது ஏற்கனவே செயற்படுகின்றது. தங்கள் தொழில் சார்ந்த கல்வித் தேர்ச்சி அல்லது பட்டப் படிப்புற்குப் பின்னர் தங்கள் தொழிலில் அனுபவமும் கல்வித் தேர்ச்சியும் பெற்றவரிடம் பயிலுனராக இருக்க வேண்டிய கட்டாயம் சில தொழில்களில் உள்ளது. சட்டத்தரணிகள், கணக்கியலாளர்கள் போன்றவர்கள் உதாரணங்களாகும். இவர்கள் அவ்வாறு பயிற்சி பெறாது தொழில் செய்ய முடியாது.
இத்தகைய பெரும் தொழில்களில் மட்டுமின்றி சாதாரண மேசன், தச்சுத் தொழில் போன்றவற்றில் கூட தகுதியானவரின் கீழ் தொழில் பயிலுனராக பயிற்சி பெற வேண்டியது கட்டாயம் அல்லாது போனாலும் அவசியமாகவே உள்ளது.
மருத்துவத்துறையைப் பொறுத்தவரையில் பட்டம் பெற்ற அனைத்து மருத்துவர்களும் உள்ளக பயிற்சி (Internship) பெற்ற பின்னரே வைத்தியர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.
அதற்கு அப்பால் சத்திரசிகிச்சை, பொது மருத்துவம், சருமநோய், மகப்பேற்று மருத்துவம், புற்றுநோய், போன்ற எந்த விசேட மருத்துவத் துறையையாவது தேர்ந்தெடுக்கும்போது அதற்கான விசேட பட்ட மேற்படிப்பு (Post graduate course) கற்கை நெறிகளுடன், அத்துறை சார்ந்த நிபுணரின் கீழ் பயிற்சி பெற வேண்டியதும் கட்டாயமாகும். ஆனால் முற்று முழுதாக வழிநடத்தல் என்று கொள்ள முடியாது. பாட நெறியோடு இணைந்தது.
குடும்ப மருத்துவத் துறையில் வழிநடத்தல்
பெரும்பாலான மக்கள் நோயுறும்போது முதலில் அணுகுவது தங்கள் குடும்ப மருத்துவரைத்தான். தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் நீண்ட காலமாக நெருக்கமாக அறிந்திருப்பதால் அவர் தங்களை அக்கறையோடு பார்ப்பார் என்ற நம்பிக்கையோடு நோயாளர்கள் அவர்களை நம்பிக்கையோடு அணுகுகிறார்கள்.
ஆனால் குடும்ப மருத்துவர்களாகப் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் அத்தகைய பயிற்சிகள் கிடைக்pன்றனவா? கசப்பான உண்மை இல்லை என்பதேயாகும். பட்டப் படிப்பை முடித்து மருத்துவராக வெளியேறிய மறுநாளே குடும்ப மருத்துவம் என்ற துறையை எந்த மருத்துவரும் இலங்கையில் தேர்ந்தெடுக்க முடிகிறது. விரும்பிய இடத்தில் தனியாக கிளினிக் ஆரம்பிக்க முடியும். ஆனால் மேலை நாடுகளில் இது முடியாது. குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பயிற்சி பெற்ற பின்னரே குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.
இலங்கையிலும் குடும்ப மருத்துவர்களுக்கான விசேட பட்ட மேற்படிப்புகளும், டிப்ளோமாக்களும் உண்டு. MD(Family medicine), DFM (Diploma in family medicine), MCGP (Member of college of general practioners)போன்றவை இங்கு உண்டு. இவற்றில் முதல் இரண்டும் மருத்துவ பட்ட மேற்படிப்பு நிறுவனத்தால் நடாத்தப்படுகிறது. மூன்றாவதான MCGP குடும்ப மருத்துவ கழகத்தினால் நடாத்தப்படுகின்றன. இவை யாவும் அங்கீகாரம் பெற்ற கற்கை நெறிகளாகும். இவை குடும்ப மருத்துவர்களுக்கான பாட நெறிகளாகும். ஆனால் இவை இல்லாமலும் குடும்ப மருத்துவராக பணியாற்ற முடியும்.
இப்பொழுது இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் தாங்கள் நடத்தும் MCCP பயிற்சியின் அங்கமாக வழிநடத்தலை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள். இலங்கையில் மருத்துவ கற்கை நெறிகளில் Mentoring எனப்படும் வழிநடத்தல் முதல்முதலாக இங்குதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வழிநடாத்தலில் உருவாகும் புதிய குடும்ப மருத்துவர்கள் தாங்கள் தொழிலை ஆரம்பிக்கும் நாள் முதலே நோயாளிகளை அன்புடனும் அர்ப்பணிப்புடனும், புரிந்துணர்வுடனும் நடத்துவர்கள், அவர்களது எதிர்பார்புகளை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். மருத்துவத்தின் ஏனைய துறைகளிலும் வழிநாடாத்தல் முக்கிய அங்கமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை
குழந்தைகளில் வழிநடத்தல்
இது தொழிற்துறை வழிகாட்டல் போன்றதல்ல. குழந்தைகளை வழிநடத்துவது பெற்றோர்களினதும் குடும்ப மூத்தோர்களின் ஆசிரியர்களினதும் பணியாக காலாகாலமாக இருந்து வருகிறது. வழிநடத்தல் என்ற பெயரை உபயோகிக்காமலே நாம் இதைச் செய்து வருக்கினறோம்.
ஆனால் சில குழந்தைகளுக்கு விசேட வழிநடத்தல் தேவைப்படுகிறது. சண்டை சச்சரவு குழப்பம் உள்ள குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகள், பாடசாலையில் பின்தங்கிய பிள்ளைகள், சமூக ஊடாடலில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் போன்றோருக்கு இவை அவசியம். உணர்வு பண்பாட்டியல் ரீதியான வழிநடத்தல் அக் குழந்தைகளுக்கு தேவைப்படும். சில மேலை நாடுகளில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
அப்பழுக்கற்ற மனதுடைய அக் குழந்தைகள், வழிநடத்துனரை தங்களது இலட்சிய புருஷனாகக் கருதி மதிப்பும் மரியாதையும் கொடுப்பர். அவர் பாதையில் தாங்களும் தொடர முனைவர். எனவே வழிநடத்தினராக இருப்பவர் நற்பண்பு நற்குணம் உடையவராக, தன்னலம் கருதாதவராக, சமூக உணர்வுள்ளவராக இருக்க வேண்டும். இதைத் தொழிலாகக் கருதாது தொண்டாகக் கருதி குழந்தைகளை வழி நடத்த வேண்டும்.
போதகர் மாணவன் என்ற நிலை போலன்றி நட்புணர்வுடன் அவர்களுடன் பழகும் போது அவர்கள் மனம் திறந்து பேசுவதுடன் .தங்களிடம் மறைந்துள்ள ஆற்றலை வெளிக் கொணரவும் முடியும். நீங்கள் ஒவ்வொருவருமே உங்கள் தேவைக்கு ஏற்ப வழிநடத்துனர் ஆநவெழச அல்லது அநவெநந வழிப்படுபவர் ஆக உங்களை அறியாது ஏற்கனவே செயற்பட்டிருக்கக் கூடும். வழிப்படுத்தல் பற்றிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதால் அதை மேலும் கச்சிதமாகச் செய்ய முடியும் என நம்புகிறேன்.
அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஐன்ஸ்டீன்
மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும்.
மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை தடை செய்கின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி என்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.
உழைக்கும் மக்களை மத ரீதியாக பிரித்து வைப்பதன் மூலம் ஆதாயத்தை அடையும் முதலாளித்துவம், தன் பிடியிலிருக்கும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயல்வதில்லை. இதைத் தாண்டி ஒரு சாதாரண மனிதனுக்கு நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை புரிய வைப்பதும், மனித சமூகமும் அது வாழும் பூமியும் முதலாளிகளுக்கு சொந்தமல்ல, மக்களுக்கு சொந்தமானது என்று தெளிய வைப்பதும் வேறு வேறு அல்ல.
இந்த ஆவணப்படம் நமது பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம், பேரண்டம் அனைத்தும் எப்படி தோன்றின, எந்த நிகழ்ச்சிப் போக்கிலிருந்து இந்த மாற்றங்கள் நடக்கின்றன, இவற்றின் முரண்பாடுகள் என்ன, இவற்றுக்கு தோற்றம்-அழிவு உண்டா, அற்பமான துகள்களும், தூசுகளும், வாயுக்களும் ஒரு வரலாற்றுக் காலத்தை படைக்கும் மேன்மையை எப்படி பெற்றன, நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை என்பது உண்மையா, இந்த பிரபஞ்சத்தை படைத்த மூலப்பொருட்கள் என்ன, நமது பூமி, சூரியக் குடும்பத்தின் தோற்றம், பெருவெடிப்பு குறித்து ஆதாரங்களுடன் அறிய முடியுமா என் ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கின்றது.
எனினும் மார்க்சியத்தின் இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு இந்தப் படம் மற்றவர்களை விட நன்கு பயன்படும். இயற்கையின் இயக்கவியல் இந்த உலகத்தின் தோற்றத்தில் எப்படி இயங்கியிருக்கிறது என்பதை காட்சி ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் புரிந்து கொள்வதற்கு இது உதவும்.
இயக்கம்தான், இயற்கையை சுருள் வட்டப் பாதை முன்னேற்றத்தில் இயங்க வைக்கிறது என்பதும் போராட்டமே, மனித குல நாகரீகத்தை மேம்படுத்தும் அச்சாணியாக இருக்கிறது என்பதும் தொடர்பற்றவை அல்ல. இதைத்தான் இந்தப் படத்திலிருந்து அறிவியலோடு சேர்ந்து நாம் அறிய வேண்டிய சமூகப் பார்வை.
இந்தப் படத்தை இத்தகைய தத்துவப் பார்வை விளக்கங்களுடன்தான் எழுத வேண்டும் என்று திட்டமிட்டாலும் நேரப் பிரச்சினை காரணமாக நடக்கவில்லை. என்றாலும் படத்தினை பார்த்து புரிந்து கொள்ளும் அளவுக்கு உரையாடலின் சாரத்தை தமிழில் கொண்டு வந்திருக்கிறோம். தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கும், தமிழோ, ஆங்கிலமோ தெரிந்தாலும் அறிவியல் தெரியாதவர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும். கட்டுரையைப் படித்து விட்டு படத்தை பாருங்கள்!
பிரபஞ்ச ரகசியத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியை அடையுங்கள்!
- வினவு
நாம் ஒவ்வொரு முறை வானை நோக்கும் போதும், நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா, எப்படி இயங்குகிறது என்ற கேள்விகளுடன் வியப்புடனே நோக்குகிறோம். இக்கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கிறது, நேசனல் ஜியாக்ரபியின் “பிரபஞ்சத்தின் விளிம்பை நோக்கிய பயணம்” என்ற ஆவணப்படம்.
ஒளியை விட அதிகமான வேகத்தில் செல்லும் இப்பயணம் கற்பனை தான் எனினும் அறிவியலில் இது வரை அறியப்பட்ட உண்மைகள், ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகள், சோதனைகளால் உறுதி செய்யப்பட்ட விதிகளினடிப்படையில், ஹப்பிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களுடன், கணினியின் வரைகலை தொழில்நுட்பமும் கைகோர்த்ததில் இப்பயணம் சாத்தியமாகியிருக்கிறது.
இப்பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பல பத்தாண்டுகளாக அழியாதிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் காலடித்தடங்களை கடந்து பாய்ச்சலில் செல்லும் பயணம் 4.2 கோடி கிலோமீட்டர்களில் பண்டைய கிரேக்கர்களின் காதல் தேவதையான வீனஸை (வெள்ளி நட்சத்திரம்) அடைகிறது.
பயணத்தின் முதலடி சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது காலடித்தடங்களை வைத்த நிலவில் ஆரம்பமாகிறது
தினமும் நமது நாட்களை காலை வரவேற்று, மாலையில் விடை கொடுக்கும் வெள்ளி கோளானது மனிதர்கள் வாழ தகுதியற்றதாக, வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு மிகுந்ததாக, அதாவது சீற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது. அதைக் கடந்தால் 9.1 கோடி கிலோமீட்டர்களில் முற்றிலும் இரும்பினாலான சிறிய கோளான புதனையும் (மெர்க்குரி) அதை சுற்றி வந்து கொண்டிருக்கும் மெசஞ்சர் (messenger) விண்கலத்தையும் நாம் காண்கிறோம்.
பின்னர் பயணத்தில் 15 கோடி கிலோமீட்டர்களில் நமது நட்சத்திரமான சூரியனை அடைகிறோம். சூரியன் நமது புவியைப் போலவோ மற்ற கோள்களைப் போலவோ திடநிலையில் இல்லை. அது ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் மைய ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து பதிமூன்று லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடுமளவு பெரிதாக பிரமாண்டமான பந்தாக இருக்கிறது. ஈர்ப்புவிசை கொடுக்கும் அழுத்தம் காரணமாக மையக்கருவில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு மிக அதிக அழுத்தமும் அதனால் அதிக வெப்பமும் அடைவதால் அங்கு பூமியிலிருக்கும் மொத்த அணு உலைகளையும், அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்க செய்வதை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான ஆற்றலுடன் அணுக்கரு பிணைப்பு நடைபெறுகிறது. அணு வினை ஒளியையும் வெப்ப ஆற்றலையும் வெளியிடுவதுடன் வாயுக்களை வெளிநோக்கித் தள்ளுகிறது. அதே வேளை மைய ஈர்ப்புவிசை வாயுக்களை உள்ளிழுக்கிறது. இவ்விரு எதிர் விசைகளின் சமநிலையில் சூரியன் மாபெரும் எரியும் வாயுக்கோளமாக இருக்கிறது. இந்த கணத்தில் சூரியன் தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டால் அதை நாம் அறிய 8 நிமிடங்கள் ஆகும்.
மையக்கருவின் வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியசும், மேற்பரப்பின் வெப்பநிலை சுமார் 5,700 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் இந்நட்சத்திரம் புவியில் உயிர்களின், ஆற்றலின், ஒளியின் மூலாதாரமாக இருக்கிற அதே வேளை நமது பூமியிலிருக்கும் அனைத்து உயிர்களையும் அழித்துவிடுமளவு அதிக ஆற்றலுள்ள, அயனியாக்கப்பட்ட வாயுக்கள்(பிளாஸ்மா) அடங்கிய மிகப்பரந்த சூரியக்கதிர் அலைகளை வெளியிடுகிறது. ஆனால் நமது பூமியின் காந்தப்புலம் நம்மை இப்பேரழிவிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறது.
அடுத்து நாம் ஒரு வால் நட்சத்திரத்தை பார்க்கிறோம். வால் நட்சத்திரங்கள், உறைந்த வாயுக்கள், பாறை மற்றும் தூசியை உள்ளடக்கிய அண்ட பனிக்கட்டிகளாகும். இவற்றில்உயிர் வாழ்வதற்கு தகுந்த சூழ்நிலை இல்லையெனினும், இவை தன்னகத்தே நம் பூமியில் உயிர்கள் உருவாவதற்கு அடிப்படை தேவையான தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை கொண்டிருக்கின்றன. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் பூமியில் மோதி அங்கு தண்ணீர் மற்றும் கரிம சேர்மங்களை விட்டு சென்றது இங்கு உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கலாம். அதே போல முன்னர் பூமியில் இதைப் போல் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தான் டைனோசர் இனமே அழிந்து போனது. அவ்வகையில் இவை படைக்கும் சக்தியாகவும், மீப்பெரும் அழிவு சக்தியாகவும் இருக்கின்றன.
இவ்வாறாக ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்ச்சிப் போக்குக்குள்ளும் இடையறாமல் நடக்கும் எதிர்மறைகளின் போராட்டம், ஒற்றுமையால் தான் இப்பிரபஞ்சம் முழுவதுமே இயங்குகிறது.
செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.
சூரியக் குடும்பத்தின் மையமான சூரியனிலிருந்து திரும்பி பயணித்தால் 22.7 கோடி கிலோ மீட்டர்களில், (அதாவது பூமியிலிருந்து சுமார் 7.5 கோடி கிலோமீட்டர்கள்) நாம் பார்க்கும் செவ்வாய் கிரகம் சற்றேறக்குறைய பூமியை ஒத்திருந்தாலும், அதன் பிரமாண்டமான புழுதிப்படலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் நாம் புவியில் கண்டது எதையும் ஒத்திராதது.
செவ்வாயை கடந்து சென்றால் எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம். இவற்றில் சில நூற்றுகணக்கான மைல்கள் நீள-அகலம் கொண்டவையாகும். சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான விண்கற்கள் ஈர்ப்புவிசையால் ஒன்றிணைந்து தான் பூமியை, நிலவை போல் கோள்களாகியிருக்கக் கூடும். எனில் இப்போது இவை தமக்கிடையிலான ஈர்ப்பு விசையால் ஒன்றிணையாமல் தடுத்து வைத்திருப்பது எது?
அது நமது சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோளும் சூரியனிலிருந்து 77.8 கோடி கிலோமீட்டர் தொலைவிலிருப்பதுமான வியாழனாகும். இதில் 1,321 பூமிகளை உள்ளடக்கி விடலாம். பூமியின் அளவை விட மூன்று மடங்கும் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதுமான செம்புயலில் ஏற்படும் இடி-மின்னல்கள் நம் பூமியில் ஏற்படுவதை விட 10,000 மடங்கிற்கும், அதிக சக்தியுடையதாகும். சற்று திரும்பினால் வியாழனின் நிலவுகளை- அதில் பனிபடர்ந்த யுரோபாவையும் – நாம் காண்கிறோம்.
அங்கிருந்து பாய்ச்சலில் முன்னேறினால் 142 கோடி கிலோமீட்டர்களில் சனிக்கோளை அடைந்து அதன் அற்புதமான வளையங்களை அவை எப்படி உருவாகின என நாம் வியந்து கொண்டிருக்கும் போது சனியின் துணைக்கோளான (நிலவான) டைட்டனை பார்க்கிறோம். டைட்டனில் நமது புவிக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தேவைப்படும் பெட்ரோலியம், மீத்தேன் படலம் இருக்கிறது.
அதன் பின் 287 கோடி கிலோமீட்டர்களில் நமது சூரியக் குடும்பத்திலேயே அதிகமான அச்சு சாய்வுடன் இருக்கும் பெரிய வாயுக் கோளமான யுரேனசை கடந்து செல்கிறோம். தொடர்ச்சியாக யுரேனசைப் போலவே இருக்கும் நெப்டியூனையும் அதன் நிலவான டிரைட்டனையும் கடக்கிறோம்.
எரிகற்கள் எனப்படும் சிறு விண்கற்கள் மண்டலத்தை கடக்கிறோம்
பின்னர் 590 கோடி கிலோமீட்டர்களில் தொலைதூர பனிக்கோள் (இப்போது கோள் இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது) புளூட்டோவைக் காண்கிறோம். இது சூரியனை சுற்றிவர 248 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. நமது சூரியக் குடும்பம் இத்துடன் முடிந்து விட்டதா? இன்னும் நமது சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்கற்கள் இருக்கின்றனவா?
இப்போது நாம் 1977-ம் ஆண்டு பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட வோயேஜர் விண்கலத்தை காண்கிறோம். இது தற்போது சூரியக் குடும்பத்தை தாண்டி நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியில் தனது பயணத்தை தொடர்கிறது.
அதையடுத்து தொலை தூர சிறு கோள் ஒன்று சூரியனை சுற்றுகிறது. சேத்னா (sedna) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனிலிருந்து சுமார் 930 கோடி மைல்கள் தொலைவில் இருப்பதுடன் சுற்றிவர 10,000 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.
நமது சூரியன் எப்படி தோன்றியது, இப்படியே நீடித்திருக்குமா? அழிந்தால் அதன் பின் என்னவாகும், நமது பூமியின் நிலை என்னவாகும், என்பவற்றை அறிய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
இப்போது நம் குடும்பத்திலிருக்கும் அனைத்து கோள்களையும் சந்தித்து விடை பெற்றுக்கொண்டு, நமது வீட்டிலிருந்து வெளியில் காலடி எடுத்து வைக்கிறோம். தொடரும் நமது பயணம் நட்சத்திரங்களுக்கிடையிலான வெளியை அடைகிறது. இங்கு நமது சூரியனைப் போல கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா?
இப்பிரபஞ்சம் எல்லையில்லா சாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
அடுத்து சுமார் 45 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் (4.5 ஒளிஆண்டுகள்) தொலைவில் இருக்கும் நமது அண்டை நட்சத்திர மண்டலமான ஆல்பா சென்சூரி என்ற நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இது மூன்று விண்மீன்கள் அடங்கிய அமைப்பாகும். மூன்று நட்சத்திரங்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன.
இந்த தொலைவுக்குபின் நீளத்தின் அளவைகளான கிலோமீட்டரும், மைல்களும் மீச்சிறு அளவாகி பொருளற்றதாகி விடுகிறது. இதன்பின் தொலைவை அளக்க ஒளிஆண்டு என்ற வேறு அளவை பயன்படுத்தவேண்டும். ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்கும் ஒளி, ஓராண்டில் கடக்கும் 9.46 லட்சம் கிலோமீட்டர் தொலைவே ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது.
நமது பயணம் 10.5 ஒளிஆண்டுகளை அடையும் போது எப்சிலோன் எரிடனி என்ற இளம் நட்சத்திர மண்டலத்தை காண்கிறோம். இந்நட்சத்திரத்தின் தூசியும், பனியும் கலந்த பிரமிக்கத்தக்க வளையங்களில் கோள்கள் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற செயல்முறையால்தான் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நமது சூரியக் குடும்பம் உருவானது.
வால் நட்சத்திர மோதல்
மேலும் பயணிக்கும் போது 20.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் நமது சூரியனை ஒத்த வயதுடைய கிலீஸ்-581 (Gliese581) என்ற நட்சத்திரத்தை காண்கிறோம். இந்த நட்சத்திர மண்டலத்தில் ஏறக்குறைய நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான அதே தூரத்தில் ஒரு கோள் இருக்கக் காண்கிறோம். இக்கோள் உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகளை பெற்றிருக்கலாம், அங்கு உயிரினங்களும் இருக்கலாம். அவை தமது தொலைக்காட்சிகளை இயக்கி நாம் பூமியில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளை இப்போது இங்கு பார்த்துக் கொண்டிருக்கலாம்.
நாம் இதுவரை பார்த்ததிலேயே அதிக பிரகாசமான வானில் மிகப்பிரகாசமான விண்மீன்களில் 9-ம் இடத்தில் இருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தை (betelgeuse star) பார்க்கிறோம். ஆனால் இது நட்சத்திரம் அல்ல, நட்சத்திரத்தின் அடுத்த நிலை, இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red SuperGiant) எனப்படுகிறது. இது நமது சூரியனை விட 600 மடங்கு பெரியது. இன்றிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் இவ்விண்மீன் வெடித்து சிதறிவிடும்.
1344 ஒளியாண்டுகள் தொலைவில் நாம் ஒரு விண்மீன் தொழிற்சாலையை காண்கிறோம். ஓரியன் இருண்ட மேகத்திரள், அதன் ஆழத்தினுள் ஒரு ஒளித்துளி அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உள்ளிழுத்து அழுத்தி வெப்பமடைய செய்கிறது. இந்த வெப்பமும் அழுத்தமும் அணுவினையை தூண்டுவதற்கு போதுமானதாக இருக்கிறது. ஒரு நட்சத்திரம் பிரசவிக்கிறது. ஓரியன் நெபுலா – இங்குதான் நமது சூரியனைப் போல் சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான விண்மீன்கள் உருவாகி கொண்டிருக்கின்றன- பிறக்கின்றன.
ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம்.
இப்போது ஒளிரும் வாயுக் கூட்டத்தை – நிறமுகிழை- கடந்து செல்கிறோம். பிரபஞ்சத்தின் மூலப் பொருட்களான ஹைட்ரஜனும், ஹீலியமும் பச்சை, ஊதா நிறங்களிலும், உயிர்கள் தோன்ற, உயிர் வாழ அடிப்படையான ஆக்சிஜனும், நைட்ரஜனும் சிவப்பு, நீல நிறங்களில் காட்சியளிக்கின்றன. கோள்களும், அவற்றில் உயிரினங்களும் தோன்ற விண்மீன்கள் தமது நிலையை மறுத்து வெடித்து சிதற வேண்டும். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் விண்மீன்களில் நடைபெற்ற அணுக்கரு கூட்டிணைவால் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் நம்முடைய குடும்ப கிளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. விண்மீன்கள் தான் நம்முடைய மூதாதையர்.
இந்நிற முகிழ்களின் நடுவில்-வெள்ளை குள்ளன் (White Dwarf) ஒருவன் இருக்கிறான். இதில் ஒரு தேக்கரண்டி அளவு நமது பூமியில் ஒரு டன் எடை இருக்குமளவு அடர்த்தி மிகுந்ததாகும்.
நட்சத்திரத்தின் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். இப்போது அது அளவில் 100 மடங்குக்கும் மேல் விரிவடைந்து அது தனது நட்சத்திர நிலையிலிருந்து மாறி சிவப்பு அசுரன் நிலைக்கு செல்கிறது. எரிபொருளின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் விண்மீனின் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றிலிருந்து சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு பின் நமது சூரியன் தற்போது இருக்கும் அளவை விட 100 மடங்கு பெரிதாகி பூமியை விழுங்கி செவ்வசுரன் நிலையை அடையும்.
கருந்துளை
நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பின் ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத்துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம் எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது செவ்வசுரன் நிலையை மறுத்து வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்கள் இந்நிலையைப் பெறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு பின் நமது சூரியனும் இந்நிலையை வந்தடையும்.
சூரியனை விட அதிக நிறையுள்ள விண்மீன்களில் ஹீலியம் எரிபொருளும் தீர்ந்து கார்பன் ஆன பின் மேலும் அணுப்பிணைப்பு நடக்க அதன் நிறையும் – ஈர்ப்பு விசையும் போதுமானதாக இருப்பதால் தொடர்ந்து அணுப்பிணைப்பு நடந்து அதிக நிறையுள்ள தனிமங்கள் உருவாகின்றன. இந்நிலை பெரும் சிகப்பு அசுரன் (Red Super Giant) எனப்படுகிறது. நாம் சற்று முன்பு பார்த்த திருவாதிரை நட்சத்திரம் பெரும் சிவப்பு அசுரன் நிலையில் தானிருக்கிறது.
இச்செயல் முறையால் தொடர்ந்து நிறை அதிகரித்துக் கொண்டே செல்வதால் ஒரு கட்டத்தில் ஈர்ப்பு விசை அதிகரிக்கிறது. அதனால் அது தன் சொந்த எடையை தாங்க முடியாமல் வெடித்து சிதறும். இது சூப்பர் நோவா எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் முழுவதுமே இதைப்போல் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறி வெளியிட்ட வாயுக்கள், துகள்களிலிருந்து தான் தோன்றியது.
வெடித்து சிதறும் நட்சத்திரத்தின் மையக் கருவில் உள்ள அணுத் துகள்கள் ஒன்றிணைந்து அடர்த்தியான நியூட்ரான்களாகின்றன. இது நியூட்ரான் நட்சத்திரம் எனப்படுகிறது. இதில் இருக்கும் துகள்களின் அடர்த்தி மிக மிக அதிகம். இதில் ஒரு தேக்கரண்டி, நமது பூமியில் ஒரு லட்சம் டன் எடையிருக்கும். இங்கு நாம் பல்சார் (Pulsar) என்ற ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரத்தை பார்க்கிறோம். இது நமது பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரம் மடங்கு அதிகமான காந்தப்புலத்தையும், ரேடியோ மின்காந்த அலைகளையும் வெளியிடுகிறது.
லட்சக் கணக்கான விண்மீன்கள்
விண்மீன்களின் அளவில் இருக்கும் வேறுபாடும் அதன் அடுத்த நிலைப் பண்பை தீர்மானிக்கிறது. நட்சத்திரம் அதையும் விட அதிக நிறையுடன் இருக்கும் பட்சத்தில் இந்நியூட்ரான் நட்சத்திரங்களின் அளவும் நிறையும் அதிகமாக இருக்கும் அதனால் அதன் மையம் மேலும் மேலும் சுருங்குகிறது. அதன் அடர்த்தியும் ஈர்ப்பு விசையும் மிக மிக அதிகரித்து வேறு நிலையை அடைகிறது. இந்நிலை கருந்துளை (Black Hole) எனப்படுகிறது.
இப்பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களுமே ஒளியை பிரதிபலிக்கின்றன. அப்பிரதிபலிப்பையே நாம் கண்ணால் காண்கிறோம். இக்கருந்துளையின் ஈர்ப்புவிசை ஒளியின் துகளையும் ஈர்த்து விடுமென்பதால், இதைக் காண இயலாது. இதன் ஈர்ப்பிலிருந்து விண்மீன்கள் உட்பட எதுவும் தப்பிச்செல்ல முடியாது. இதில் ஒரு குண்டுமணியளவு பூமியில் ஒரு கோடி டன் எடையிருக்கும்.
நாம் இப்போது நமது விண்மீன் திரளான பால்வெளியைப் பார்க்கிறோம். இதன் நடுவில் மிகப் பிரமாண்டமான மீப்பெரும் கருந்துளை இருக்கிறது. அதை சுற்றி தான் நம் சூரியன் உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்களும், பல சிறு கருந்துளைகளும், நியூட்ரான் நட்சத்திரங்களும், பிறவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பால்வெளியில் 1000-லிருந்து 4000 விண்மீன்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாம் இப்போது 25 லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் நாம் நமது அண்டை விண்மீந்திரளான அன்ட்ரோமெடாவை (Andromeda) காண்கிறோம். இங்கிருந்து பூமியை பார்த்தால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்க நிலத்தில் நடப்பதை காண முடியும்.
இந்த அண்டத்தின் மிக சக்தி வாய்ந்த குவாசார் - 100 கோடி சூரியன்களின் நிறையுடையது
இப்போது இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்டு அளப்பரிய ஆற்றலை வெளியிடுகிண்றன. விண்மீன் திரள்கள் அழிகின்றன. ஆனால் அதன் இயக்கம் நின்றுவிடுவதில்லை. புதிய திரள்கள் புதிய வடிவத்தில், புதிய நட்சத்திரங்களுடன் மீண்டும் பிறக்கிறது. பிறப்பு-இறப்பு, படைப்பு-அழிவும் கொண்ட முடிவில்லா சுழற்சியே பிரபஞ்சம் முழுவதையும் பிணைக்கும் இழையாக இருக்கிறது. இதைப்போல் கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் நமது பிரபஞ்சத்தில் இருக்கின்றன.
நமது பயணம் மேலும் தொடர்கிறது. 200 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் கோடிக் கணக்கான சூரியன்களின் நிறையைக் கொண்ட மீமீப்பெரும் கருந்துளையைக் காண்கிறோம். அது அதைச் சுற்றியுள்ள நட்சத்திரங்களை பிய்த்து உள்ளிழுத்து விழுங்குகிறது. மொத்த விண்மீன் திரளையும் இது விழுங்கி விடக்கூடும்.
அண்டத்தின் எல்லை – 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அண்ட பெருவெடிப்பு
இப்போது 1400 கோடி ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கிறோம். இப்போது திரும்பி பார்த்தால் சுமார் 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பெருவெடிப்பை காணமுடியும். இப்பெருவெடிப்பிலிருந்து தான் மீச்சிறு கோளத்தில் அளப்பறிய அழுத்ததுடன் இருந்த அளப்பறிய ஆற்றல் வெடித்து கிளம்பியது. அதிலிருந்து தான் நமது இடம், காலம், வெளி, பிரபஞ்சம் அனைத்தும் தோன்றின. இது வரை பிரபஞ்சம் முழுவதிலும், பொருள் ஆற்றலாக மாறுவதை கண்ட நாம் இங்கு ஆற்றல் பொருளாக மாறுவதை காண்கிறோம்.
பெருவெடிப்பின் ஒளி அண்டம் முழுமையும் இன்றும் விரிந்து பரவிக் கொண்டிருக்கிறது. பூமியில் அதை நாம் தொலைக்காட்சி இரைச்சலாக பார்க்கிறோம். நமது பயணத்தில் கண்ட கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் முதலான அனைத்து அற்புதங்களும், பெருவெடிப்பிலிருந்து சிதறி பயணிக்கும் துகள்கள்தான். இப்போதுதான் நாம் நினைத்ததை விட எவ்வளவு சிறியவர்கள், பலவீனமானவர்கள் என்று புரிந்து கொள்கிறோம். ஆனால், இந்த பயணத்தின் ஊடாக நாம் இந்த அண்டத்தின் அற்புதங்களை அனுபவித்தோம். அந்த சாதனையை கொண்டாடுவோம்.
நள்ளிரவில், ஓர் நடுக்காட்டில் நான்முகன் என்னிடம் நன்றாய்ச் சிக்கினான். நானோ பொடியன்.நாயகன் அடியன். நழுவ விடாமல் அவனை நலம் விசாரிக்கத் துவங்கி விட்டேன்.
தமிழ் கலாச்சாரங்களை தூக்கி சாப்பிட்டு விடுகிற மாதிரி ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தோடு, ஆமீஷ் ( Amish) என்ற ஒரு பிரிவினர் (sect) வாழ்ந்து வருகிறார்கள். அவர்களே இங்கே - இதே அமெரிக்காவில் இருக்கும் போது - நாங்கள், நம்மூரு கலாச்சாரத்தைப் பின் பற்ற தடை என்ன? சொல்லுங்க...
அவர்களை பற்றி நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டியிருப்பதால், காமெடி கீமெடி பண்ணாமல், செய்திகளை மட்டும் இந்த பதிவில், தொகுத்து தந்து இருக்கிறேன்.
Amish Mennonites என்ற ஒரு குழுவினர், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஒரு சபையை (denomination) சார்ந்தவர்கள். எளிமையான வாழ்க்கை முறை - உடலை முழுவதும் மறைக்கும் எளிய ஆடை - எந்த வித நவநாகரீக தொழில்நுட்ப முறைகளையும் ஏற்று கொள்ளாது, இன்றும் இயற்கையோடு ஒத்து வாழ்பவர்கள்.
1693 ஆம் ஆண்டு, Switzerland ல் Jakob Ammann என்பவரால் தான் இந்த ஆலய சபை முறை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆமானை பின்பற்றியவர்கள், ஆமிஷ் என்றழைக்கப்பட்டார்கள். அதுவே இன்று வரை தொடர்கிறது.
18 நூற்றாண்டில், இதில் பலர், அமெரிக்காவில் பென்சில்வேனியா ( Pennsylvania ) என்ற மாநிலத்திற்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். அன்றைய வாழ்க்கை முறையையே இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின்பற்றி வருகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதா? அமெரிக்காவின் சாயல் இவர்களை பாதிக்கவில்லை.
2010 இல் எடுக்கப்பட்ட கணக்குப் படி, கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மட்டும் சுமார் 2, 50, 000 ஆமிஷ் மக்கள் இன்னும் அந்த வாழ்க்கை முறைப்படி வாழ்வதாக சொல்கிறார்கள்.
தங்கள் பிரிவைச் சார்ந்தவர்களைத் தவிர, இவர்கள் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை. இவர்கள் எல்லோரும், அந்த அந்த மாநிலத்தில் ஒரே colony யாக சேர்ந்து வாழ்கிறார்கள். ஒரு காலனி என்பது - 20 - 40 குடும்பங்கள் கொண்டதாக இருக்கும். அடுத்த வீடுகளில் வசித்தாலும், கூட்டு குடும்பத்து முறைப்படி மாதிரிதான், ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள்.
தங்களுக்கு வேண்டிய பெரும்பாலான உணவு தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி, காய்கறி பயிர் உற்பத்தி எல்லாம் அவர்களின் கைவேலைகளே.
இவர்கள் தச்சு வேலை செய்வதில் வல்லுனர்கள். தங்கள் வீடுகளை, அவர்கள் குழுவினரின் உதவியுடன் தாங்களே கட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் தச்சு வேலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மர மேஜைகள், நாற்காலிகள் போன்ற பொருட்களை தங்கள் காலனி பக்கமே கடையாக போட்டு விற்கவும் செய்வார்கள். பெண்களும் தையல் குறிப்பாக quilting என்ற கலையில் தேர்ந்த பயிற்சி பெற்றவர்கள்.
இப்படி தனித்து வாழ்வதால், இவர்களுக்கு மற்ற கலாச்சாரத்தைக் கண்டு எந்த வித தூண்டுதலும் (temptation) இருக்காது போல. இவர்கள் வாழ்க்கை முறைக்கு, இவர்கள் நகரங்களில் இல்லாமல் சின்ன சின்ன கிராமங்களில் தான் தங்கி இருக்கிறார்கள்.
அவர்களது மத விதிகள், அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டும் கட்டுப்படுத்தாது - அவர்களது அன்றாட வாழ்க்கை முறைக்கும் சட்ட திட்டங்களை வகுத்து உள்ளது.
அவற்றில், முக்கிய பத்து விதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
1. அவர்கள் உடைகள் கவர்ச்சியான நிறத்தில் - முறையில் - இல்லாமல், ( பொதுவாக கருப்பு நிறம், நீல நிறம்) எளிய முறையில் தைத்து இருக்கப்பட வேண்டும்.
ஆமீஷ் இளம்பெண்கள்:
2 . எந்த காரணம் கொண்டும் மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. அதனால், எந்த வித நவீன சாதனங்களும் உபயோகிக்க கூடாது. தொலைகாட்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் கூட இவர்கள் பயன்படுத்துவது இல்லை.
அவர்களின் சமையல் அறை: எல்லாம் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஜாம் மற்றும் பொருட்கள்:
இவர்கள் செய்யும் ரொட்டிகள் மிகவும் பிரபலமானவை. fridge இல்லாததால், உணவு பதார்த்தங்கள் பதப்படுத்தப்படுகின்றன:
3. கார் போன்ற எந்த வித நவீன பயண வசதிகளையும் பயன்படுத்தக் கூடாது. குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் அல்லது சைக்கிள் போன்ற வாகனங்களில் தான் அவர்கள் இன்றும் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். (எங்கள் ஊர்ப் பக்கம் அடிக்கடி பார்த்து இருக்கிறோம். நான் இருக்கிறது ஒரு கிராமம் என்று தெரிந்து போச்சா!)
4. தொலைபேசிகள் மற்றும் அலைபேசிகள் பயன்படுத்தக் கூடாது. சில ஆமீஷ் வியாபாரிகள் (குடும்பங்கள் அல்ல) , சில சமயம் தங்கள் வியாபாரத்துக்கு மட்டும் அலைபேசி சில சமயங்களில் பயன்படுத்துவது பழக்கத்துக்கு வந்துள்ளது.
5. அஹிம்சை முறைகளைத்தான் பின் பற்ற வேண்டும். இதனால், இவர்கள் எந்தவித ராணுவ சேவைகள் செய்வது இல்லை.
6. அதை பின்பற்ற விருப்பமில்லாதவர்கள், ஆமீஷ் வாழ்க்கை முறையை விட்டு விட்டு, அந்த காலனியையும் விட்டு விலகி சென்று விட வேண்டும். அங்கேயே இருந்து கொண்டு புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது. மீறி, குடும்பத்துடன் தங்க விளைந்தால், சபையே இவர்களை விலக்கி வைத்து விடும். (நம்ம ஊரு பக்கம், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவது போல.....)
அவங்களுடைய பார்கிங் லாட்:
7. குழந்தைகளையும் அவர்களே தங்கள் காலனியில் நடத்தும் - ஒரு அறை கொண்ட பள்ளிக்கூடத்திலேயேதான் கல்வி கற்க அனுப்ப வேண்டும். அதுவும் அவர்கள் கல்வி முறை, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே. அதன் பின், வாழ்க்கை கல்வி என்ற பெயரில் அவர்கள் வாழ்க்கை முறைக்குத் தேவையான விவாசய செய்முறை (usually organic living) - தச்சு வேலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்முறை எல்லாம் கற்றுத் தரப்படும்.
குழந்தைகளுக்கு கட்டாய கல்வி முறையை சட்டமாக கொண்டுள்ள அமெரிக்க அரசாங்கம், இவர்கள் குழந்தைகளை , அமெரிக்க கல்விகூடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு போட்ட பொழுது, 1972 ஆம் ஆண்டு, அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றம், இவர்களின் குழந்தைகளை கட்டாய கல்விக்கு வலியுறுத்துவது, Free Exercise Clause of the First Amendment விதிமுறையை மீறுவதாக அமைந்து விடும் என்று தீர்ப்பு கூறி விட்டது.
8. உலகப் பிரகாரமான கேளிக்கைகள் (சினிமா உட்பட) மற்றும் விளையாட்டுக்கள் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இன்னும் பம்பரம் விடுதல், roller skating போன்ற விளையாட்டுக்கள் தான் இங்கே பிரசித்தம். பொழுதுபோக்கு முறைக்காக, இறைவனைத் துதித்து பாடும் பாடல்களை, அவர்களே கைகளால் செய்யப்பட இசைக்கருவிகள் கொண்டு இசைத்துப் பாடிக் கொள்வார்கள். அதற்கேற்ப, பவ்யமாக ஆடிக் கொள்வார்கள்.
எங்க ஊரு பக்கம் உள்ள ரோடு sign . காரில் வேகமாக வருபவர்கள், கவனமாக ஓட்ட வசதியாக:
9. இயேசு கிறிஸ்துவை மட்டுமே வாழ்கையின் ஆதாரமாக கொண்ட நம்பிக்கை உடையவர்கள். அவர்களுக்கென்று உள்ள ஆலயம் செல்வதும், கூட்டு பிரார்த்தனைகள் செய்வதுமே முதன்மையானதாக கருதப்பட வேண்டும்.
10. பணிவும் அடக்கமுமே ( humility) எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும். தலைக்கனம், பெருமை, ஈகோ, பகட்டு எதற்கும் இடம் கொடுக்க கூடாது. எல்லாவற்றிலும் எளிமை வேண்டும்.
இவர்கள் தாங்களாக புகைப்படங்கள் கூட எடுத்து வைத்துக் கொள்வதில்லை. புகைப்படங்கள் எல்லாம், தம்மை அழகாக காட்டிக் கொள்ள தூண்டி விடும் தற்பெருமைக்குள் (personal vanity) தன்னை தள்ளிவிடக் கூடும் என்று கருதுகிறார்கள். இறைவன் படைப்பில், எல்லோரும் அழகானவர்கள் தான் என்று நம்புகிறார்கள்.
மற்றவர்கள் (ஆமீஷ் மக்கள் அல்லாதவர்கள்) தங்கள் ஆல்பத்துக்காக, இவர்களை புகைப்படம் எடுக்க , இவர்கள் சம்மதம் வாங்கி எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவருக்கொருவர் உதவியாக இருத்தல் - குழந்தைகள் வளர்ப்பில் மற்றும் அன்றாட தேவைகளுக்கு, சமூகமாக ஒன்றுபடல் - இறைவன் ஆராதனை மட்டுமே தங்கள் வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.
மாட்டுக்குப் பதிலாக குதிரை அல்லது கழுதை வைத்து விவசாயம் நடைபெறுகிறது:
தங்கள் வேலைகள் அனைத்தையும் தாங்களே செய்து கொள்ளும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை கொண்டவர்கள். இன்னும் கடும் உடல் உழைப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால், பொதுவாக மற்றவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் இவர்களுக்கு வருவதில்லை. அப்படியே நோய்வாய்ப்பட்டாலும், கைமருத்துவம் தான் நம்பி இருக்கிறார்கள். அதையும் மீறி வரும் பொழுது, இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள். மிகவும் அபூர்வமாகத் தான் வெளிமருத்தவம் நாடி, அவர்களுக்கென்று சபை சம்மதம் தெரிவித்து உள்ள குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு செல்வது உண்டு.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண முறை கொண்டவர்கள். விவாகரத்து என்பதே இவர்களில் கிடையாது.
அவர்களில் ஒருவரை சந்தித்த பொழுது, நவீன வசதிகளை எதற்காக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டோம். அவர் சொன்ன பதிலில் இருந்து நான் இன்னும் மீளவில்லை:
" நவீன வசதிகள் எல்லாம் - மின்சாரம் பயன்படுத்துவது உள்பட - மனிதர் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் இயங்கச் செய்ய வைப்பதாகவே உள்ளது. (It encourages independent style of living.) எங்கள் சமூகத்தை சார்ந்து வாழும், கூட்டு வாழ்க்கை முறையை விட்டு விட்டு, தனி மனித - தனி குடும்ப வசதி முறைக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக மாற்றி விடக் கூடியதாக உள்ளது. அது மட்டும் அல்ல, அந்த பொருட்கள் நம்மை அடிமையாக்கி, நம் குடும்பங்கள் - நம் சந்தோசம் - என்று நினைப்பதை விட்டு விட்டு, என் குடும்பம் - என் சந்தோசம் - என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை கொண்டு சென்று விடக் கூடும். எனது அடுத்த வீட்டாருடன், சகோதரத்துவ குணத்துடன் பழக வைக்க விடாமல், அவர்களையே என் போட்டியாளர்களாக கருத வகை செய்து விடும். அந்த பொருட்களை பயன்படுத்துவது, நமது வசதிகளைப் பெருக்குவதாக முதலில் தோன்றினாலும், நமது பணத்தேவைகளையும் அதை விட பலமடங்கு பெருக்கி, எளிய வாழ்க்கை முறையில் கிடைக்கும் மகிழ்ச்சி - நிம்மதி கிடைக்க வழியில்லாமல் செய்து விடும், "
"ஏகம் பரம்பொருள்' -அதாவது பரம்பொருள் என்பது ஒன்றேயாகும். ஒரு செல் உயிரிலிருந்து, கோடானுகோடி அணுக்களாலான மானுட ஜீவன் வரை ஆத்ம சொரூபனாய் வீற்றிருந்து அரசாள்பவன் அந்த சிவனேயன்றி வேறில்லை. "அவனின்றி அணுவும் அசையாது' என்பது எவ்வளவு அற்புதமான வரி!
அவனே மூல அணுவாய் வீற்றிருக்கிறான்; அவனே அணுவாகவும் ஆற்றலாகவும் வீற்றிருக் கிறான்; அவனே படைக்கிறான்; அவனே காத்த ருள்கிறான்; அவனே அழிக்கிறான். "நாம்' என்று சொல்லுவதற்கு ஒரு துளி "சுயம்'கூட நம்மிடம் இல்லை. நாம் முத்தொழில் வித்தகனாம் அந்த ஈசனால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள்; அவ்வளவுதான்.
இந்த அண்டமெல்லாம் அரசாளும் வல்லமை பெற்றவன் அவன் ஒருவன்தான். அவனுடைய அடி, முடி காண எவராலும் இயலாது. எல்லா உயிர்களிலும் தன்னுடைய ஈசத்துவத்தை ஆத்மாவாய் -அதாவது உயிராய் நிறைத்து இந்த உடம்பெனும் ரதத்தை ஓட்டிக் கொண்டிருப்பவன். நம்மை பல்வேறு பிறவிகளுக்கு உட்படுத்தி, பக்குவம் செய்து, கடைசியில் ஈசத்துவம் பெற்ற பொருளாக்கிப் பிரபஞ்சத்தில் கரைக்கும் எம் பிரான் சிவனைச் சரணடைந்து வணங்குவோம்.
சமயம் வளர்த்த பெரியார் ஞானசம்பந்தர், "நான்கு வேதங்களும் எல்லாவற்றிலும் உள்ளிருந்து இயக்கும் மெய்ப்பொருள் நீயே என்று கூறிப் புகழ்கிறது. வேதங்களின் முடிவே இப்படியா னால் எனக்கென்று ஒரு கருத்துமில்லை. உன்னில் மனம் உருகி, காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, உன்னில் ஒன்றி, உறவாடி, உன்மேல் பித்தாகி, "நமசிவாய' என்னும் நாமத்தை உயிரில் பதிக்கிறேன். எல்லாம் வல்ல சிவனே! என்னை நன்னெறிப்படுத்துவாய்' என்று இறைஞ்சுகிறார்.
மாணிக்கவாசகரோ, "இந்த உலகம் தோன்றிய நாள் முதலாய் எத்தனை பிறவிகள் பிறந்தேன், எப்படி இருந்தேன் என்பதை நான் அறியேன். இப்பிறவியில் உன் திருவடியை இறுகப் பற்றி விட்டேன். இறைவா! இனி பிறவாமை மருந்தை எனக்குக் கொடுத்து விடு. நான் பிறந்து பிறந்து இளைத்து விட்டேன். செல்வனாய்ப் பிறந்து செழித்தும், ஏழையாய்ப் பிறந்து ஏங்கியும், காமுகனாய்ப் பிறந்து காமத்தீயில் உழன்றும், வஞ்சகனாய்ப் பிறந்து பிறரை வஞ்சித்துப் பிழைத்தும், பலருக்குத் தந்தையாய், பலருக்குப் பிள்ளையாய், ஆணாய், பெண்ணாய், அலியாய் பிறந்து அழுந்தி ஓய்ந்து விட்டேன்.
இந்த உலகத்து இன்ப மெல்லாம் நிலையில்லாதது என்பதை உணர்ந்து கொண்டேன். எனையாளும் சிவனே! பசி, தாகம், உறக்கம், நோய் நீக்கி என்னை சுத்த மாக்கு. நரை, திரை, பிணி, சாக்காடு நீக்கி, இந்த உடல் பிறவி என்னும் மாயவினையிலிருந்து என்னைக் காப்பாற்று. முழுமுதல் கடவுளே! உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. எனக்குப் பிறவாமை அருளி உன்னில் அணைத் துக் கொள்' என்று இறைஞ்சுகிறார்.
நாம் பிறவாமை என்னும் நிலைக்குச் செல்ல பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. அதனால்தான் நாம் வசிக்கும் இடத்தில் நரை, திரை, பிணி நீக்கும் நெல்லி மரங்களைப் படைத்து, நம்முள் நாதனாய்ப் பாய்ந்து நம்மைக் காத்தருள்கிறார் ஈசன். அத்தகைய நாதன் உறையும் பெருநெல்லியைச் சரணடைந்து வணங்கு வோம்.
புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லா விட்டால்கூட, அத்தலங்களில் உள்ள தல விருட்சங்களை வழிபட்டால் போதும்; அந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்த திருப்தி பெறுவோம்.
பின்வரும் கோவில்களில் நெல்லி தல விருட்சமாய் வணங்கப்பட்டு வருகிறது. கடலூர் திருநெல்வாயிலில் உள்ள உச்சிவனேஸ்வரர் சிவாலயத்திலும்; தஞ்சாவூர்- பழையாறை சோமநாதர் சிவாலயத்திலும்; பெரம்பலூர்- ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் சிவாலயத் திலும்; திருவாரூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநெல்லிக்கா என்னும் ஊரில் உள்ள நெல்லிவனநாதர் ஆலயத்திலும் தெய்வங்களுக்கு நிகராய் நெல்லி மரத்தினையும் பக்தர்கள் வணங்கி வலம் வருகின்றனர்.
நாமும் அகப்பிணி போக்கும்- சதாசிவன் உறையும் நெல்லியைச் சரணடைந்து, அதை மருந்தாக்கி உடலோம்பல் செய்யும் முறையை அறிய முனைவோம்.
முக்குற்ற நோய்கள் விலக...
சில நோய்களுக்குக் காரண- காரியம் கண்டறிய இயலாமல் நவீன மருத்துவர்கள் திண்டாடுவதைக் காண்கிறோம். சித்தர்கள் வகைப்பாடு செய்துள்ள முக்குற்ற நோய்களின் பட்டியல் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம்.
நீங்கள் நெடுநாட்களாக ஏதேனும் நோயினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை யும் உங்கள் நோயையும் பார்த்து மருத்துவர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்களா? கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு எளிய மருத்துவம் சித்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லி மரத்தின் வேரை 20 கிராம் அளவில் எடுத்து, அத் துடன் 20 வால்மிளகு சேர்த்து விழுதாய் அரைத்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மாலை இருவேளையும் உணவுக்கு முன்பாக மூன்று தினங்கள் சாப்பிட்டு வாருங்கள். லேசாய் பேதி காணும்; பயம் வேண்டாம். நெல்லி மரத்தின் வேர் உங்களை வசியப்படுத்திவிடும். உங்கள் நோய் எதுவாக இருந்தாலும் கட்டுக்குள் வருவதை நீங்களே உணர்வீர்கள்.
அறுபதிலும் இளமையைப் பெற...
ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.
நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.
இதற்கெல்லாம் நேரமில்லாவிட்டால், நேரே ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற "சயவனபிராச லேகியம்' அல்லது "நெல்லிக்காய் லேகியம்' எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை வருடக் கணக்கில் சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.
சர்க்கரை நோயா?
நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் உடம்பின் கட்டுத்தன்மையை இளக்கும் தன்மையாய் மாற்றும் ஒரு வகை நோயாகும். துவர்ப்பு மட்டுமே உடலை மீண்டும் கட்டும் தன்மைக்குக் கொண்டு செல்லும். நெல்லிக்காய் சர்க்கரை நோயை மட்டுமல்ல; உடலை மேம்படுத்த நினைக் கும் அனைவருக்கும் அமிர்த சஞ்ஜீவினியாய் வேலை செய்யும்.
நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
கடைகளில் "நிஷா ஆமலகி சூரணம்' என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதனையும் வாங்கி உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய் தைலம்!
பச்சை நெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, கற்றாழைச்சாறு, சிறுகீரைச்சாறு, பசும்பால், செவ்விளநீர் ஆகியவற்றை வகைக்கு 300 மி.லி. எடுத்துக் கொள்ளவும். அதிமதுரம், கோஷ்டம், ஏலம், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை, சோம்பு, வால்மிளகு ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்துத் தூள் செய்து, ஆவின்பால், செவ்விளநீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் நல்லெண்ணெய்யுடன் மேற்சொன்ன சாற்றையும் அரைத்த விழுதினையும் கலந்து அடுப்பிலேற்றி, சிறு தீயாய் எரித்து, தைல பதத்தில் இறக்கிவிடவும்.
இந்தத் தைலத்தை தினசரி தேய்த்து வர, தலைமுடி கொட்டுதல், இளநரை போன்றவை மறையும். கண் நோய்கள் அனைத்தும் தீரும். வெட்டைச்சூடு, கை, கால் எரிச்சல், உடம் பெரிச்சல் போன்றவை தீரும். பித்தத்தினால் உண்டாகும் தலைவலியும் தீரும்.
பித்தம் தணிய...
நெல்லிமுள்ளி, வில்வம், சீரகம், சுக்கு, சிற்றா முட்டி வேர், நெற்பொறி ஆகியவற்றை வகைக்கு 15 கிராம் அளவில் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீ ரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் 100 மி.லி. வீதம் மூன்று மணிக்கொரு முறை மூன்று வேளை சாப்பிட எப்பேர்ப்பட்ட பித்த உபாதை களும் தணியும்.
நெல்லிக்காயை பகல் வேளையில் அடிக்கடி உண்டு வந்தால், அது ஒரு தேவ மருந்தாகவே நம் உடம்பில் செயல்படும். நெல்லிக்காய் உண்பதால் குடி, புகை, போதையை மறக்கலாம். கபநோய், சைனஸ் போன்ற கோளாறுகளும் தீரும். வாந்தி, மயக்கம், தலைசுற்றல், மலச்சிக்கல், சர்க்கரை வியாதி போன்றவை நீங்க சித்தர்கள் அருளிய அமுதம் நெல்லிக்கனியே ஆகும்.
கருநெல்லி- காயகற்பம்
நூறாண்டு இளமையுடன் வாழ சித்தர்கள் அருளிய கருநெல்லியை சிவனின் அம்சமாகவே காணுங்கள். இன்று காண்பதற்குக்கூட கருநெல்லி கிடைக்காத நிலை!
கருநெல்லி- உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும். உடம்பெல்லாம் ஒளி உண்டாகும். ஒருவித தேஜஸ், வசியம், பொருள் சேர்க்கை அனைத்தும் உண்டாகும். கண்டவ ரெல்லாம் விரும்பும் திகட்டாத திருமேனியைப் பெறலாம். அத்தகைய கருநெல்லி சோழ தேசத்தில் ஆதிக்கும் பகவானுக்கும் மகனாய்ப் பிறந்து அர சாண்ட அதியமானுக்கு தகடூர் மலைச்சாரலில் கிடைத்தது. கிடைத்தற்கரிய கருநெல்லியை தன் பொற்கரங்களால் ஏந்திய அதியமான், ஆத்திசூடி பாடி தமிழ் வளர்த்த ஔவையார் முன் நின்றான்.
""ஔவைப் பிராட்டியாரே... தாங்கள் இக்கருநெல்லிக் கனியுண்டு, உடல் நலம் பெற்று தமிழ் வளர்த்துச் செல்ல வேண்டும்'' என்றான்.
ஔவையாரோ, ""நீ சாப்பிட்டால் உன்னை அண்டிப் பிழைக்கும் கோடானு கோடி உயிர் களும் நிறைவுடன் வாழ இயலுமே!'' என்றார்.
""அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகனுக்கே பாடம் சொன்ன ஔவையே! ஆட்சி என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் உம் கரம் பட்டு வளர்த்த தமிழ் வானைமுட்டி வளர்ந் தோங்கும். கருநெல்லி தங்களுக்குரியதே. மறுக் காமல் உண்பீர்'' என மனமுவந்து தந்தான்.
ஔவையாரும் மகிழ்வுடன் கருநெல்லி உண்டு தமிழுக்குத் தலையாய சேவை செய்தார். அந்தக் கருநெல்லி கிடைக்காவிட்டாலும் இக்கலியுகத்தில் காணும் பெருநெல்லி உண்டு, பேரிளமை கொண்டு பெருவாழ்வு வாழ்வோம். வாழ்க வளமுடன்!