Showing posts with label நெல்லிக்காய். Show all posts
Showing posts with label நெல்லிக்காய். Show all posts

Wednesday, January 8, 2014

நெல்லிக்காய்



25
சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா

                  "ஏகம் பரம்பொருள்' -அதாவது பரம்பொருள் என்பது ஒன்றேயாகும். ஒரு செல் உயிரிலிருந்து, கோடானுகோடி அணுக்களாலான மானுட ஜீவன் வரை ஆத்ம சொரூபனாய் வீற்றிருந்து அரசாள்பவன் அந்த சிவனேயன்றி வேறில்லை. "அவனின்றி அணுவும் அசையாது' என்பது எவ்வளவு அற்புதமான வரி!

அவனே மூல அணுவாய் வீற்றிருக்கிறான்; அவனே அணுவாகவும் ஆற்றலாகவும் வீற்றிருக் கிறான்; அவனே படைக்கிறான்; அவனே காத்த ருள்கிறான்; அவனே அழிக்கிறான். "நாம்' என்று சொல்லுவதற்கு ஒரு துளி "சுயம்'கூட நம்மிடம் இல்லை. நாம் முத்தொழில் வித்தகனாம் அந்த ஈசனால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள்; அவ்வளவுதான்.

இந்த அண்டமெல்லாம் அரசாளும் வல்லமை பெற்றவன் அவன் ஒருவன்தான். அவனுடைய அடி, முடி காண எவராலும் இயலாது. எல்லா உயிர்களிலும் தன்னுடைய ஈசத்துவத்தை ஆத்மாவாய் -அதாவது உயிராய் நிறைத்து இந்த உடம்பெனும் ரதத்தை ஓட்டிக் கொண்டிருப்பவன். நம்மை பல்வேறு பிறவிகளுக்கு உட்படுத்தி, பக்குவம் செய்து, கடைசியில் ஈசத்துவம் பெற்ற பொருளாக்கிப் பிரபஞ்சத்தில் கரைக்கும் எம் பிரான் சிவனைச் சரணடைந்து வணங்குவோம்.

சமயம் வளர்த்த பெரியார் ஞானசம்பந்தர், "நான்கு வேதங்களும் எல்லாவற்றிலும் உள்ளிருந்து இயக்கும் மெய்ப்பொருள் நீயே என்று கூறிப் புகழ்கிறது. வேதங்களின் முடிவே இப்படியா னால் எனக்கென்று ஒரு கருத்துமில்லை. உன்னில் மனம் உருகி, காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்கி, உன்னில் ஒன்றி, உறவாடி, உன்மேல் பித்தாகி, "நமசிவாய' என்னும் நாமத்தை உயிரில் பதிக்கிறேன். எல்லாம் வல்ல சிவனே! என்னை நன்னெறிப்படுத்துவாய்' என்று இறைஞ்சுகிறார்.

மாணிக்கவாசகரோ, "இந்த உலகம் தோன்றிய நாள் முதலாய் எத்தனை பிறவிகள் பிறந்தேன், எப்படி இருந்தேன் என்பதை நான் அறியேன். இப்பிறவியில் உன் திருவடியை இறுகப் பற்றி விட்டேன். இறைவா! இனி பிறவாமை மருந்தை எனக்குக் கொடுத்து விடு. நான் பிறந்து பிறந்து இளைத்து விட்டேன். செல்வனாய்ப் பிறந்து செழித்தும், ஏழையாய்ப் பிறந்து ஏங்கியும், காமுகனாய்ப் பிறந்து காமத்தீயில் உழன்றும், வஞ்சகனாய்ப் பிறந்து பிறரை வஞ்சித்துப் பிழைத்தும், பலருக்குத் தந்தையாய், பலருக்குப் பிள்ளையாய், ஆணாய், பெண்ணாய், அலியாய் பிறந்து அழுந்தி ஓய்ந்து விட்டேன்.

இந்த உலகத்து இன்ப மெல்லாம் நிலையில்லாதது என்பதை உணர்ந்து கொண்டேன். எனையாளும் சிவனே! பசி, தாகம், உறக்கம், நோய் நீக்கி என்னை சுத்த மாக்கு. நரை, திரை, பிணி, சாக்காடு நீக்கி, இந்த உடல் பிறவி என்னும் மாயவினையிலிருந்து என்னைக் காப்பாற்று. முழுமுதல் கடவுளே! உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. எனக்குப் பிறவாமை அருளி உன்னில் அணைத் துக் கொள்' என்று இறைஞ்சுகிறார்.

நாம் பிறவாமை என்னும் நிலைக்குச் செல்ல பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது. அதனால்தான் நாம் வசிக்கும் இடத்தில் நரை, திரை, பிணி நீக்கும் நெல்லி மரங்களைப் படைத்து, நம்முள் நாதனாய்ப் பாய்ந்து நம்மைக் காத்தருள்கிறார் ஈசன். அத்தகைய நாதன் உறையும் பெருநெல்லியைச் சரணடைந்து வணங்கு வோம்.

புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லா விட்டால்கூட, அத்தலங்களில் உள்ள தல விருட்சங்களை வழிபட்டால் போதும்; அந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்த திருப்தி பெறுவோம்.

பின்வரும் கோவில்களில் நெல்லி தல விருட்சமாய் வணங்கப்பட்டு வருகிறது. கடலூர் திருநெல்வாயிலில் உள்ள உச்சிவனேஸ்வரர் சிவாலயத்திலும்; தஞ்சாவூர்- பழையாறை சோமநாதர் சிவாலயத்திலும்; பெரம்பலூர்- ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் சிவாலயத் திலும்; திருவாரூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநெல்லிக்கா என்னும் ஊரில் உள்ள நெல்லிவனநாதர் ஆலயத்திலும் தெய்வங்களுக்கு நிகராய் நெல்லி மரத்தினையும் பக்தர்கள் வணங்கி வலம் வருகின்றனர்.

நாமும் அகப்பிணி போக்கும்- சதாசிவன் உறையும் நெல்லியைச் சரணடைந்து, அதை மருந்தாக்கி உடலோம்பல் செய்யும் முறையை அறிய முனைவோம்.

முக்குற்ற நோய்கள் விலக...

சில நோய்களுக்குக் காரண- காரியம் கண்டறிய இயலாமல் நவீன மருத்துவர்கள் திண்டாடுவதைக் காண்கிறோம். சித்தர்கள் வகைப்பாடு செய்துள்ள முக்குற்ற நோய்களின் பட்டியல் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம்.

நீங்கள் நெடுநாட்களாக ஏதேனும் நோயினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை யும் உங்கள் நோயையும் பார்த்து மருத்துவர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்களா? கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு எளிய மருத்துவம் சித்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லி மரத்தின் வேரை 20 கிராம் அளவில் எடுத்து, அத் துடன் 20 வால்மிளகு சேர்த்து விழுதாய் அரைத்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மாலை இருவேளையும் உணவுக்கு முன்பாக மூன்று தினங்கள் சாப்பிட்டு வாருங்கள். லேசாய் பேதி காணும்; பயம் வேண்டாம். நெல்லி மரத்தின் வேர் உங்களை வசியப்படுத்திவிடும். உங்கள் நோய் எதுவாக இருந்தாலும் கட்டுக்குள் வருவதை நீங்களே உணர்வீர்கள்.

அறுபதிலும் இளமையைப் பெற...

ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.

நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.

இதற்கெல்லாம் நேரமில்லாவிட்டால், நேரே ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற "சயவனபிராச லேகியம்' அல்லது "நெல்லிக்காய் லேகியம்' எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை வருடக் கணக்கில் சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.

சர்க்கரை நோயா?

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் உடம்பின் கட்டுத்தன்மையை இளக்கும் தன்மையாய் மாற்றும் ஒரு வகை நோயாகும். துவர்ப்பு மட்டுமே உடலை மீண்டும் கட்டும் தன்மைக்குக் கொண்டு செல்லும். நெல்லிக்காய் சர்க்கரை நோயை மட்டுமல்ல; உடலை மேம்படுத்த நினைக் கும் அனைவருக்கும் அமிர்த சஞ்ஜீவினியாய் வேலை செய்யும்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.

கடைகளில் "நிஷா ஆமலகி சூரணம்' என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதனையும் வாங்கி உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

நெல்லிக்காய் தைலம்!

பச்சை நெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணிச் சாறு, கற்றாழைச்சாறு, சிறுகீரைச்சாறு, பசும்பால், செவ்விளநீர் ஆகியவற்றை வகைக்கு 300 மி.லி. எடுத்துக் கொள்ளவும். அதிமதுரம், கோஷ்டம், ஏலம், கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய், சாதிப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், இலவங்கப்பத்திரி, இலவங்கப்பட்டை, சோம்பு, வால்மிளகு ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் எடுத்துத் தூள் செய்து, ஆவின்பால், செவ்விளநீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் நல்லெண்ணெய்யுடன் மேற்சொன்ன சாற்றையும் அரைத்த விழுதினையும் கலந்து அடுப்பிலேற்றி, சிறு தீயாய் எரித்து, தைல பதத்தில் இறக்கிவிடவும்.

இந்தத் தைலத்தை தினசரி தேய்த்து வர, தலைமுடி கொட்டுதல், இளநரை போன்றவை மறையும். கண் நோய்கள் அனைத்தும் தீரும். வெட்டைச்சூடு, கை, கால் எரிச்சல், உடம் பெரிச்சல் போன்றவை தீரும். பித்தத்தினால் உண்டாகும் தலைவலியும் தீரும்.

பித்தம் தணிய...

நெல்லிமுள்ளி, வில்வம், சீரகம், சுக்கு, சிற்றா முட்டி வேர், நெற்பொறி ஆகியவற்றை வகைக்கு 15 கிராம் அளவில் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீ ரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் 100 மி.லி. வீதம் மூன்று மணிக்கொரு முறை மூன்று வேளை சாப்பிட எப்பேர்ப்பட்ட பித்த உபாதை களும் தணியும்.

நெல்லிக்காயை பகல் வேளையில் அடிக்கடி உண்டு வந்தால், அது ஒரு தேவ மருந்தாகவே நம் உடம்பில் செயல்படும். நெல்லிக்காய் உண்பதால் குடி, புகை, போதையை மறக்கலாம். கபநோய், சைனஸ் போன்ற கோளாறுகளும் தீரும். வாந்தி, மயக்கம், தலைசுற்றல், மலச்சிக்கல், சர்க்கரை வியாதி போன்றவை நீங்க சித்தர்கள் அருளிய அமுதம் நெல்லிக்கனியே ஆகும்.

கருநெல்லி- காயகற்பம்

நூறாண்டு இளமையுடன் வாழ சித்தர்கள் அருளிய கருநெல்லியை சிவனின் அம்சமாகவே காணுங்கள். இன்று காண்பதற்குக்கூட கருநெல்லி கிடைக்காத நிலை!

கருநெல்லி- உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும். உடம்பெல்லாம் ஒளி உண்டாகும். ஒருவித தேஜஸ், வசியம், பொருள் சேர்க்கை அனைத்தும் உண்டாகும். கண்டவ ரெல்லாம் விரும்பும் திகட்டாத திருமேனியைப் பெறலாம். அத்தகைய கருநெல்லி சோழ தேசத்தில் ஆதிக்கும் பகவானுக்கும் மகனாய்ப் பிறந்து அர சாண்ட அதியமானுக்கு தகடூர் மலைச்சாரலில் கிடைத்தது. கிடைத்தற்கரிய கருநெல்லியை தன் பொற்கரங்களால் ஏந்திய அதியமான், ஆத்திசூடி பாடி தமிழ் வளர்த்த ஔவையார் முன் நின்றான்.

""ஔவைப் பிராட்டியாரே... தாங்கள் இக்கருநெல்லிக் கனியுண்டு, உடல் நலம் பெற்று தமிழ் வளர்த்துச் செல்ல வேண்டும்'' என்றான்.

ஔவையாரோ, ""நீ சாப்பிட்டால் உன்னை அண்டிப் பிழைக்கும் கோடானு கோடி உயிர் களும் நிறைவுடன் வாழ இயலுமே!'' என்றார்.

""அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகனுக்கே பாடம் சொன்ன ஔவையே! ஆட்சி என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் உம் கரம் பட்டு வளர்த்த தமிழ் வானைமுட்டி வளர்ந் தோங்கும். கருநெல்லி தங்களுக்குரியதே. மறுக் காமல் உண்பீர்'' என மனமுவந்து தந்தான்.

ஔவையாரும் மகிழ்வுடன் கருநெல்லி உண்டு தமிழுக்குத் தலையாய சேவை செய்தார். அந்தக் கருநெல்லி கிடைக்காவிட்டாலும் இக்கலியுகத்தில் காணும் பெருநெல்லி உண்டு, பேரிளமை கொண்டு பெருவாழ்வு வாழ்வோம். வாழ்க வளமுடன்!

Friday, April 12, 2013

நெல்லிக்காய்


உடலுக்கு சக்தியை தரவல்ல நெல்லிக்காய்

நீண்டகாலம் வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில், தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான் கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் – சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய் உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. முடி உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது.
கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.
உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.
அடங்கியுள்ள சத்துக்கள்
புரதம் – 0.4 கி
கொழுப்பு – 0.5 கி
மாச்சத்து – 14 கி
கல்சியம் – 15 மி.கி
ஸ்பரஸ் – 21 மி.கி
இரும்பு – 1 மி.கி
நியாசின் – 0,4 மி.கி
வைட்டமின் ´பி1` – 28 மி.கி
வைட்டமின் ´சி` – 720 மி.கி
கலோரிகள் – 60
இதுபோன்ற பல்வேறு நன்மைகளை உடைய இந்த நெல்லிக்காய், முதுமையை தடுத்து நம்மை இளைமையாக வைத்திருக்க உதவுகிறது. ஏராளமான பயன்களை கொண்ட நெல்லிக்காய், தாராளமாக கிடைக்க கூடியது. எனவே, நீங்களும் நெல்லிக்காயை 

Monday, February 18, 2013

இஞ்சித்தேன். அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி




சென்னைக்கு சென்ற போது பலாப்பட்டறை ஷங்கருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் இந்த இஞ்சித்தேன் அருமையை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு வலைதளங்களில் பார்த்த போது தங்கம் பழனி என்பவர் அருமையாக பல விசயங்களை எழுதிக் கொண்டு வருவதையும் பார்க்க முடிந்தது.  பல நண்பர்களுடனும் இது குறித்து பேசி கடைசியாக இஞ்சித் தேன் மூலம் நாலைந்து மாதமாக குடும்பத்தில் பறந்து கொண்டிருந்த காந்தித்தாத்தாவை தற்போது தான் நிறுத்த முடிந்ததுள்ளது.

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (சிலர் காய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  ஆனால் இஞ்சியை காய வைத்தால் சுக்கு என்று மாறி அதன் தன்மையும் மாறி விடும் என்றும் சொல்கின்றார்கள்) அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.  இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்கு சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். மூடியுள்ள பாத்திரத்தை வெயிலில் வைத்து விடுங்க. மூன்று நாளில் இஞ்சி தேனை நன்றாக ஊறிஞ்சி விடும். 

காலையில் பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் எடுத்து (தேனும் இஞ்சியும் சேர்ந்து இருக்க வேண்டும்) சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள்?.

முக்கியமான நோய் எதிர்ப்புசக்தி உருவாகும். எதிரிகளை சமாளிக்க பணத்தைப் போல மனமும் உடலும் உறுதியாகத்தானே இருக்க வேண்டும். 

பருவநிலை மாற்றத்தில் வரும் சளித் தொந்தரவு காணாமல் போய்விடுகின்றது.

எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க. ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம். விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது. 

தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தை தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாக பசியெடுக்கும். தேனின் மருத்துவ குணங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை. 

அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி

அடுத்து அனைவரும் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது நெல்லி.  இப்போது இதுவும் தேன் நெல்லி என்கிற ரீதியில் வந்து கொண்டிருக்கின்றது. காசைக் கொடுத்து ஏமாறாமல் நாமே முழு நெல்லிக்காய் வாங்கி வந்து நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தினந்தோறும் ஒன்றாக பச்சையாக சாப்பிடலாம்.  குழந்தைகளுக்கு சாறாக மாற்றி தினந்தோறும் அரை டம்ளர் கொடுத்து வரலாம்.

இதிலும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி. இதிலும் கதை கதையாக எழுத வேண்டிய ஏராளமான சமாச்சாரங்கள். இயற்கை மருத்துவம் குறித்து ஏராளமான வலைப்பூக்கள் உள்ளது. தேடிப்பாருங்கள்.

நெல்லிக்காய்


ஐந்து நெல்லிக்காயை எடுத்து சாறு பிழிந்து அதே அளவு எலுமிச்சம்பழம் சாறு கலந்து 2 ஸ்பூன் தேன் விட்டு அரை குவளை சுடுநீர் கலந்து காலையில் பருகினால் நோய்கள் அண்டாது. பித்தம், கிறுகிறுப்பு, மயக்கம், பைத்தியம், மனத்தடுமாற்றம் சோகை இவற்றிற்கு நெல்லிச்சாறு அருமருந்து. குடல் வலுவடைய வேண்டுமா? ஒரு அவுன்சு நெல்லிச்சாறுடன் அரை அவுன்சு தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் ஜீரணசக்தி அற்புதமாக விளங்கும். விடாத விக்கல் நிற்க வேண்டுமா? நெல்லிச்சாறுடன் கொஞ்சம் அரிசி, திப்பிலிப்பொடியைக் கலந்து உண்ணுங்கள். எஃகு நரம்பு வேண்டுமா? ஒரு கரண்டி நெல்லிச்சாறுடன் பசு நெய் சேர்த்து காலையில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். இளமை குன்றாதிருக்க தேனில் நெல்லிக்கனியை ஊற வைத்துக் காலை, மாலை தினமும் உண்டுவந்தால் பலன் கிடைக்கும். நெல்லி கிடைக்காத காலங்களில் லேகியம், ஜாம், வற்றல் செய்து பயன்படுத்தினாலும் அவையும் நன்மை தரும். அரு நெல்லிக்கனி குளிர்ச்சி தரும். பித்தத்தைச் சமன்படுத்தும், காயை அரைத்து மோரில் கலக்கி குடித்தால் மஞ்சள்காமாலைநோய் குணமாகும். கரு நெல்லி என்ற வகை அபூர்வமானது. நெடுநாள் வாழ வைக்கும் தாதுப்பொருட்கள் இதில் உண்டு.