Thursday, October 17, 2013

பலன் தரும் பத்து முத்திரைகள்

1. அறிவு முத்திரை:

ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

2. பூமி முத்திரை:

மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

3. நீர் முத்திரை:

சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

4. வாயு முத்திரை:

ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

5. சூன்ய முத்திரை:

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

6. சூரிய முத்திரை:

மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

7. வாழ்வு முத்திரை:

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

8. ஜீரண முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

9. இதய முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.

10. லிங்க சக்தி முத்திரை:

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!

பெண்கள் மருத்துவம்

பெண்கள் மருத்துவம்


​​​​கர்ப்பிணிகளுக்கு


1. கருஞ்சீரகம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதை நைசாக போடி செய்து அத்துடன் தேனையும் கலந்து அடி வயிற்றில் பூசி வந்தால் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுவலி குணமாகும். 


 2. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிற்று வழி ஏற்பட்டால் குங்குமப் பூவை குழைவாக அரைத்து அடி வயிற்றில் பூசுவதால் வயிற்று வழி நீங்கும். 



தாய்ப்பால் சுரக்க


3. சுத்தமான திடம் கோரோசனையைப் பாலில் கலக்கி காய்ச்சிய பின் சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெரும். 

 4. முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சமைத்து உண்டு வந்தால் தாய்மார்களுக்குப் பால் சுரக்கும். 



கண் உறுத்தல்


5. குங்குமப் பூவை தாய்ப்பாலில் இழைத்து கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்ணில் நீர் வருவது, கண் உறுத்தல் முதலான கண் வியாதி குணமாகும். 

வாய்ப்புண்

1. சுமார் இருபது மணத்தக்காளி இலையை காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்ட பிறகு அத்துடன் ஓரு டம்ளர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

2. அகத்திக் கீரையுடன் தேங்காய், பருப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதை உணவுடன் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப் புனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதை நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதுடன் கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 
பேன் தொல்லை

3. பாகற்காயிலிருந்து சாறு எடுத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற விட வேண்டும். பிறகு குளித்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம். 


இடுப்பு பிடிப்பு

இடுப்புப் பிடித்துக்கொண்டால் உட்காருவதற்கும், எலும்புவதற்கும் கஷ்டமாக இருக்கும். முருங்கைக் கீரையுடன் உப்பைச் சேர்த்து சாறு எடுத்து இடுப்பில் நன்றாகத் தேய்த்தால் இடுப்பு பிடிப்பு விட்டுப் போகும். மூன்று வேலை இதைச் செய்தால் நல்ல குணம் தெரியும். 

வயிற்றுப் பூச்சி

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் சரியாக சாப்பிட மாட்டார்கள். பூச்சிகளை வெளியேற்ற வேப்பிலையை இடித்துச் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து வேளைக்கு ஒரு ஸ்பூன் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும். 



சீதபேதி குணமாக

பசும்பாலை சுண்டக் காய்ச்சி அதில் மூன்று ஸ்பூன் கசகசாவை அரைத்துக் கலந்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இதில் 50 கிராம் நெய் சேர்த்து மூன்று வேலை சாப்பிட்டால் சீதபேதி  நின்றுவிடும்.



தலைவலி

இஞ்சிச் சாறு 25 மில்லியுடன் 250 மில்லி பால் கலந்து அடுப்பில் வைத்து நன்றாகத் காய்ச்ச வேண்டும். இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். தலைவலிக்கான அறிகுறி இருக்கும் போதே இதைச் சாப்பிடுவதால் முன்கூட்டியே தலைவலி வராமல் தடுக்கலாம். 

வயிற்றுப் போக்கு

வசம்பைத் தீயில் சுட்டு கரியாக்கி தாய்ப்பாலில் இழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு நிற்கும். 


பித்த வெடிப்பு

கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கு கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு அத்துடன் சுண்ணாம்பைச் செர்த்துகுழைக்க வேண்டும். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகி விடும். 



உடல் சூடு தணிய

அதிமதுரம் 25 கிராம் எடுத்துக்கொண்டு வெந்நீர் விட்டு அரைத்துத் தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட உடல் சூடும் தணிந்து விடும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை உட்கொள்ள வேண்டும். 



குமட்டல், வாந்தி

1. குமட்டல், வாந்தி, மயக்கம், மசக்கை, குழந்தைகள் வாந்தி இவைகளுக்கு எலுமிச்சப்பழச் சாரும் தேனும் சம அளவு கலந்து சாப்பிட்டால் குணம் காணலாம். 

2. குழந்தைகளுக்கும் 2 கரண்டி சாறு 2 தேன் கலந்து அருந்த வாந்தி நிற்கும். 

3. மசக்கைக்கு 15, 20 நாள் தினம் கொடுக்க மசக்கை நீங்கி உணவருந்தி கர்ப்பிணிகள் உடல் தேறலாம். 


தேன் மருத்துவம்

1. அதிக எடை கொண்டவர்கள் எலுமிச்சை பழச்சாரில் தேன் கலந்து அடிக்கடி குடித்தால் எடை குறையவும் 
ஆரோக்கியம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. 

2. உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டதாக இருந்தால், லேசான சுடுநீரில் தேன் கலந்து கொடுத்து தூங்க வையுங்கள். இது குழந்தைகளுக்கு நல்லது. 

3. ஒரு துண்டு இஞ்சியை இடித்து தேனில் போட்டு தினமும் பிழிந்து சாப்பிட்டால், குண்டு உடல் குறையும். 


தாய்ப்பால்

1. பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்துக் கழுவி அம்மியில்வைத்து அரைத்து ஒரு டம்ளர் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் குடித்தால் தாய்ப் பால் சுரக்கும்.

2. சீரகத்தையும், வெல்லத்தையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும். 



பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதை.

வயிறு வலிக்கு- வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லைவெந்தயத்தை வறுத்து பொடிசெய்து ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும். 

வாயு உபாதை- சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும். 

கடும்சளி இருமலுக்கு- அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு,மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும். 
- See more at: http://www.mailofislam.com/pengal_maruthuvam.html#sthash.pa0qsnuA.dpuf

Monday, October 14, 2013

மூலிகைகளும் அதன் பயன்களும்


*அருகம்புல்  :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய்  :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது
*கடுக்காய்  :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம்  :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா  :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான்  :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால்  :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை  :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை  :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி  :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ  :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி  :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ  :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை  :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய்  :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி  :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தயம் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை  :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி  :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை  :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை  :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா  :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை  :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ  :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி  :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
-
*சிறியாநங்கை  :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி  :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான்  :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு  :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி  :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி  :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை  :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை  :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன்  :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய்  :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு  :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி  :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை  :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை  :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு  :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை  :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகம் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர்  :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு  :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி  :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில்  :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
-
*பிரசவ சாமான்  :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான
இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
-
*கஸ்தூரி மஞ்சள்  :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு  :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு  :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி  :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை  :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
-

கீரையில் உள்ள சத்துக்கள்.

கீரையில் உள்ள சத்துக்கள்.....!!

1) வெந்தயக் கீரை :

கால்ஷியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப் போக்கும். (கீரைகளை நன்கு கழுவவும்)

2) புளிச்ச கீரை :

இரும்புச் சத்து 2.28 மி.கி. வைட்டமின் ஏ 2898 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். (கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும்)

3) முட்டைகோஸ் :

வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, ·போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.

4) முருங்கைக் கீரை :

வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்ஷியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி ஆகியவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

5) கறிவேப்பிலை :

வைட்டமின்ஏ 75000 மைக்ரோகிராம் கால்ஷியம் 830 மி.கி. ·போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.

6) புதினா கீரை :

போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.

7) கொத்தமல்லி :

கால்ஷியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்க வல்லது.

மணத்தக்காளி:

இரும்புச் சத்து 20.5 மி.கி., கால்ஷியம் 410 மி.கி., வைட்டமின் பி.சி உள்ளன. வாய்ப்புண் ஏற்படுவதைக் தடுக்கும்.

காய்கறி வாங்குவது எப்படி..?

945551_572953546068632_2092877964_n.jpg

காய்கறி வாங்குவது எப்படி..?

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல‍ முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல‍ மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல‍ சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.

Friday, October 11, 2013

வாதம்-பித்தம் -கபம்



”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

காடைக்கண்ணி - புல்லரிசி - Oats

காடைக்கண்ணி என்பது நெல்வகையா? பயறு வகையா என்று கேட்கும் காலம் வந்துவிட்டது. 70 நாட்களல் விளையக்கூடிய பயறு வகைகளைப் பார்த்திருக்கிறோம். அறுபதே நாளில் விளையக்கூடிய தானிய வகைகளைப் பெரும்பாலானோர் பார்த்திருக்கவே மாட்டார்கள். நான் கண்டெடுத்தேன். எப்போது? எங்கே? எப்படி?
நான் விவசாயம் செய்து கொண்டிருப்பவன். எங்கு என்ன ரகம் கிடைக்குமென்று ஆவலாய்த் தேடித் திரிபவன். பெரும்பாலும் நான் செய்யும் இயற்கை விவசாய முறைகளை எடுத்துச் சொல்லுபவன். படித்த அறிஞர்கள் பல நூல்களைப் படித்து யார் யார் என்னென் கூறியிருக்கிறார்கள் என்று மேற்கோள்காட்டிப் பேசுவார்கள். நீங்கள் செய்து அனுபவப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். இயற்கைவிவசாயம் பற்றிப் பேசுப் பல தொண்டு நிறுவனங்களுக்குப் பல கிராமங்களுக்கு என்னை அழைக்கின்றனர். அவ்வாறு அழைத்த தொண்டு நிறுவனங்களில் ஒன்று வையம்பட்டி அகிம்சா தொண்டு நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் பேசிவிட்டுப் புறம்படும்போது அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களையும், காடைக்கண்ணி, சிறுதினை ஆகிய தானியங்களில் கொஞ்சம் என்னிடம் கொடுத்தார்கள். ஆனால் அறுபது நாட்களில் விளையக்கூடியவை என்று எனக்குச் சொல்லவில்லை. எந்தப் பருவத்தில் விதைப்பதென்றும் என்னிடம் கூறவில்லை. காடைக்கண்ணியைப் பார்த்தவுடன் 65 ஆண்டுகளுக்கு முன் என் தோட்டத்தில் பயிரிட்டது, அதன்விதை, பயிர்ப்பருவம், பொதிப்பருவம், கதிர்ப்பருவம், கதிர் முற்றிய பருவம் அதை அறுவடை செய்த விதம், தானியத்தை பிரித்த விதம், வீட்டுக்குக் கொண்டு வந்து குலுக்கையில் போட்டது. அரிசி ஆக்கியது, சாப்பிட்டது, அதன் ருசி என் நினைவுக்கு வந்தது. அதை விதைத்ததிலிருந்து அறுபதே நாட்களில் அறுவடை வந்துவிடும். சிறிது நிலம் இரு,நதாலும் இடத்தை மாற்றி மாற்றிப் பயிரிட்டு உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
1953ல் கடுமையான வறட்சி பஞ்சம், கிணற்றில் நீர் நிலை குறைந்துவிட்டது. கிணற்றை ஆழப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆழப்படுத்தும்போது கிடைத்த நீரைப் புன்செய்யில் பாய்ச்ச வேண்டும். அதற்கான பயிர் என்னவென்று நினைத்தபோது குறுகிய காலப் பயிராகிய காடைக்கண்ணியும், தினையும் ஞாபகத்திற்கு வந்தது போலும் காடைக் கண்ணியையும், தினையையும் சேர்த்து விதைத்தோம்.
மூன்றாவது நாளில் முளைகொண்டது 20ஆம் நாளில் களை எடுத்தோம். பயிரில் 20க்கும் மேல் சிம்புகள் தென்பட்டன. 40வது நாளில் பூட்டை வாங்கியது. கதிர்கள் வெளித்தள்ளின. 60வது நாளில் அறுவடை செய்தோம். நெல்கதில் அடிப்பதுபோல் அடித்து வைக்கோல்களை மாடுகட்டிப் போரடித்தோம். தானியங்களைப் பிரித்தெடுத்தோம். நன்கு காயவைத்தக் குலுக்கைகளில் சேமித்து வைத்தோம்.
அந்தத் தானியத்தை இரண்டு முறைகளில் சமையல் செய்யலாம். அவிக்காமல் உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கிச் சமையல் செய்யலாம். இரண்டாவது முறை அந்தத் தானியத்துடன் சிறிது நீர் சேர்த்து குழைத்து பானையில் போட்டு அவித்து பக்குவமாக இறக்கிக் காயப் போட்டு உரலில் இட்டுக் குற்றி அரிசியாக்கிச் சமைத்து உண்ணலாம். அதற்கேற்ற காணப்பயிற்றுக் குழம்பும், புளி ஊற்றிய தோட்டத்திலுள்ள காய்கறிகளையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்ட பின்பு கையைக் கழுவினால் எருமைத் தயிர் விட்டுச் சாப்பிட்டால் கை எப்படி வழுவழுப்பாக இருக்குமோ அதே மாதிரி இருந்தது.
அந்தச் சோறு சாப்பிட்டால் உடம்பு தெம்பாக இருக்கும். கடினமான வேலை செய்யலாம். இந்த நினைவுடன் எனக்கு அகிம்சா தொண்டு நிறுவனத்தினர் கொடுத்த விதையை மருதோன்றி நடவு செய்த தோட்டத்தில் உள்ள இரண்டடி இடைவெளியில் உடனே வந்து விதைத்து நீர் பாய்ச்சப் பெற்றது. 20 நாளில் களை எடுக்கப்பட்டது. 60வது நாளில் அறுவடை செய்யப்பட்டது. அதனை விவசாய உலகம் என் பத்திரிகை நிருபர் பார்த்துப் பத்திரிகையில் எழுதியிருந்தார். எனக்கு நூற்றுக்கணக்கானோர் விதை கேட்டுப் போன் செய்தனர். எனக்குள்ள வேலைப் பளுவில் அவர்களுக்கு அனுப்ப முடியாது என எண்ணி அந்த விதையில் கொஞ்சம் தாளாண்மை உழவர் இயக்கத்திற்குக் கொடுத்துக் கேட்பவர்களுக்குக் கொடுத்து அதன்மூலம் கிடைக்கும் தொகையை இயக்கத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டினேன்.
பலர் இது விதை விற்பதற்கான தந்திரம் என்று கூறியதாகக் கூறினார்கள். என் ஊர் பக்கத்தில் தொட்டியபட்டியில் திரு. பொன்ராமலிங்கம் என்பவரக்குக் கொடுத்த விதையை மானாவரி நிலத்தில் விதைத்து அறுபதே நாளில் மகசூல் எடுத்ததை எனக்குத் தெரிவித்ததோடு உழவர் இயக்கத்துக கூட்டத்திலும் கூறினார்.
சிலர் அறுபது நாளில் விளைந்துவிட்டது. எப்படி அரிசியாக்குவது? எப்படிச் சமைப்பது என்று கேட்டார்கள். அவர்களுக்கு அரிசியாக்கும் விதத்தையும், சமைக்கும் விதத்தையும் கூறினேன்.
இத்தகைய தானியம் இன்னும் சில இடங்களில் மலையை ஒட்டிய பகுதிகளில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வேளாண்மை பல்கலைக் கழகம் உற்பத்தி செய்து அரசின் உதவியுடன் இதுபோன்ற புன்செய்த் தானியங்களாகிய காடைக்கண்ணி,தினை, குதிரைவாலி,¢ வரகு, இரும்புச் சோளம், கேழ்வரகு போன்ற தானியங்கள் வறட்சியைத் தாங்கி விளையும். பூச்சித் தாக்குதலுக்கு ஆளாகாது. மக்கள் தானியப் பற்றாக் குறையிலிருந்து விடுபடுவர். பெருவாரியான மானாவாரியான நிலங்களைக் கொண்ட தமிழகத்துக்குப் புன்செய்த் தானியங்களை ஓரினப் பயிராகப் போடாமல், கீழே படரும் பயிர்களாகிய கல்லுப் பயறு, காணப் பயறு, தட்டப்பயறு போன்ற பயறுவகைகளையும், சாமை, தினை, இரும்புச் சோளம் போன்ற தானியப் பயிர்களையும் சேர்த்துபோட்டுப் பலன் அனுபவித்ததை இப்போதுள்ள தலைமுறையினர் அறியாதவர்கள். அவர்களுக்குச் செயல்விளக்கப் பண்ணைகள் மூலம் அரசு இயந்திரத்தின் துணையுடனும், தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால், மக்கள் நஞ்சில்லா உணவு உண்பர். சத்துள்ள உணவு உண்பர். உணவுப் பற்றாக்குறை நீங்கும். நீர்வளம் காப்பாற்றப்படும். சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும்.

Thursday, October 10, 2013

வாழைத்தண்டு வசீகரம்!


மாற்றம் செய்த நேரம்:10/10/2013 3:46:22 PMValaittantinai get around the tough part, cut a circle to circle.

STR to launch his brother Kuralaras...
MORE VIDEOS
வாழைத்தண்டினை சுற்றியிருக்கும் கடுமையான பாகத்தை எடுத்துவிட்டு, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். நூல் நூலாக வரும் நாரை  எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கியதை பொடியாக வெட்டி சமையலுக்கு உபயோகிக்கும் வரை, சிறிது தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வெண்மை  மாறி கருக்காமல் இருக்கும். அதை நறுக்கி, நாரெடுத்து, சுத்தம் செய்தால் 8 சுவை உணவுகளைச் சட்டென செய்யலாம்.



வாழைத்தண்டு சாலட்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு.

எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை,  சிறிது உப்பு  சேர்த்து சாலட்டாக பரிமாறலாம்.


வாழைத்தண்டு பொரியல்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - சிறியது 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல்  - 1, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டை வேக வைக்கவும். பாசிப்பருப்பினை நனைய வைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.  பாசிப்பருப்பு பூப்பூவாக இருக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்  வற்றல் வதங்கியதும், வேகவைத்த வாழைத்தண்டினையும் சேர்த்து, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.

வாழைத்தண்டு சூப்

பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி அளவு வாழைத்தண்டினை வேக வைக்கவும். அத்துடன் இரண்டு சின்ன வெங்காயம் (வட்ட வட்டமாக வெட்டியது),  ஒரு பச்சை மிளகாய் (வட்டமாக பொடியாக நறுக்கியது) சேர்த்து வெந்ததும், ஒரு டீஸ்பூன் மைதா சேர்க்கவும். இரண்டு கொத்தமல்லி இலை கிள்ளிப்  போட்டு, சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.
* பொரியல், உசிலிக்கு வேக வைக்கும்போது அந்த நீரையும் எடுத்து மேற்குறிப்பிட்டவை சேர்த்தும் சூப் செய்யலாம்.

வாழைத்தண்டு துவையல்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், வெள்ளைப்பூண்டு  - 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, புளி -  சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பு, சீரகம், வெள்ளைப்பூண்டினை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து  வதங்கும்போது, நறுக்கிய வாழைத்தண்டினை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.  ஆறியதும் மிக்சியில் அரைத்துப் பரிமாறவும். காரம் தேவையான அளவு அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கலாம்.

வாழைத்தண்டு உசிலி

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் - தேவையான அளவு, தாளிக்க எண்ணெய்  - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வேக வைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப் பருப்பினை  மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் கரகரப்பாகவோ, மிகவும் நைஸாகவோ இல்லாமல் அளவாக அரைத்தெடுக்கவும்.  கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இட்டு தாளித்ததும் அரைத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பினை சேர்த்து  நன்றாக வதக்க வேண்டும். தேவையானால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்றாக வதங்கியதும், வேக வைத்து எடுத்த வாழைத்தண்டினைச்  சேர்த்து தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

வாழைத்தண்டு ரைஸ்

வாழைத்தண்டு உசிலியைக் கொஞ்சம் அதிகமாகச் செய்து எடுத்துக்கொண்டு, அதே வாணலியில் சாதத்தைச் சேர்த்து லேசாக புரட்டி எடுக்க  வாழைத்தண்டு ரைஸ் ரெடி. உசிலியில் தேங்காய்த்துருவல் சேர்ப்பதற்கு முன், சிறிது குடைமிளகாய் சேர்த்து சாதத்தில் கலந்தால் வாழைத்தண்டு  புலாவ் தயார்.

* நெய்யில் வறுத்தெடுத்த முந்திரியை நெய்யோடு சேர்த்து சாதத்தில் சேர்த்தால் மணமாக இருக்கும்.

வாழைத்தண்டு ஸ்பெஷல் மோர்

வாழைத்தண்டை சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டவும். ஜில் செய்த மீதி மோரில் வாழைத்தண்டுச் சாற்றை கலந்து,  இஞ்சிச்சாறு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.

வாழைத்தண்டு மகத்துவம்

நார்ச்சத்து, பொட்டாசியம் நிரம்பியது.
வயிற்றுப்புண், வயிற்றுக்கோளாறு, உப்புசம் நீக்கும்.
சிறுநீரகக்கல் உள்ளவர்களுக்கும் நல்ல பலன் தரும்.
வெப்பம் குறைக்கும்... நீர்க்கடுப்பு நீக்கும்.
தொடர்ந்து உணவில் சேர்க்கையில் பருமன் குறையும்... ஊளைச்சதை மறையும்.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் குறைக்கும்.
நீரிழிவுகாரர்களுக்கும் பயனுள்ளது.

பூப்பெய்திய பெண்களுக்கான உணவு

பூப்பெய்திய பெண்களுக்கான உணவு

மாற்றம் செய்த நேரம்:12/11/2012 1:03:39 PM

மகள் பூப்பெய்திய உடனேயே அவளது கல்யாணம் குறித்த கவலை பெற்றோரைப் பற்றிக் கொள்கிறது. மகளுக்கு பாத்திரங்களும் நகைகளும் சேர்ப்பதும், அவளது பெயரில் முதலீடு செய்வதும்தான் அவளது எதிர்காலப் பாதுகாப்புக்கான விஷயங்கள் என்பது பல பெற்றோரின் கருத்து. ஆனால், ஒரு பெற்றோருக்குக்கூட, மகளின் ஆரோக்கியம் எப்படியிருக்கிறது, அவளது உடல் திருமண வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறதா என்கிற நினைப்புகூட இருப்பதில்லை. உண்மையில் உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய சொத்து, நோயற்ற வாழ்க்கையும் ஆரோக்கியமும்தான்!

பூப்பெய்திய பெண்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கவே செய்கிறது. ஆனால், ‘அந்த வயதில் அப்படித்தான் இருக்கும்... கல்யாணமானால் எல்லாம் சரியாகி விடும்’ என்கிற நினைப்பில் அதை அலட்சியம் செய்கிறவர்கள்தான் அதிகம். ஆகவே அம்மாக்களே... உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கும் முன், மாதவிலக்கு கோளாறுகளைக் கண்டுபிடித்து, சரி செய்யப் பாருங்கள்.

‘பெரும்பாடு’ எனப்படுகிற அதிகப்படியான ரத்தப் போக்கு பல இளம் பெண்களையும் பாடாகப் படுத்துகிறது. உடலில் ‘அழல்’ எனப்படுகிற சூடு அதிகமாவதன் விளைவே இது. இதை சரி செய்ய முதல் கட்டமாக உடலைக் குளிர்ச்சியாக்க வேண்டும். கன்னிப்பெண்களின் உடல்நலம் காப்பதிலும், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்துவதிலும் சோற்றுக்கற்றாழைக்குப் பெரும் பங்குண்டு.

சித்த மருத்துவத்தில் சோற்றுக்கற்றாழைக்கு ‘கன்னி’ என்றே பெயர்!  சோற்றுக்கற்றாழையைப் பறித்து, மேல் தோலையும் முள்ளையும் நீக்கிவிட்டு, நடுவிலுள்ள நுங்கு போன்ற பகுதியை சுமார் பத்து முறைகள் தண்ணீரில் அலசுங்கள். பிறகு அதில் பனைவெல்லம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் உங்கள் மகளுக்குக் கொடுங்கள். பிற்பகலில் சோற்றுக் கற்றாழையை அரைத்து, நீர்மோரில் கலந்து கொடுங்கள். உடலுக்குள் குளிர்சாதன எந்திரம் பொருத்தினது போல அத்தனை குளுமையாக இருக்கும்.

உங்கள் வீடுகளில் எத்தனை நாளைக்கொரு முறை சமையலில் வாழைப்பூ இடம்பெறும்? 2-3 மாதங்களுக்கொரு முறை? அடுத்த முறை வாழைப்பூ வாங்கும் போது, ஒரு நிமிடம் அதை உற்றுக் கவனியுங்கள். கர்ப்பப்பையின் வடிவிலேயே இருப்பது தெரியும். வடிவில் மட்டுமின்றி, குணத்திலும் அது கர்ப்பப்பைக்கு நெருக்கமானது. வாழைப்பூவை அதன் துவர்ப்புச் சுவை மாறாமல் கூட்டாகவோ அல்லது வடையாகவோ செய்து வாரம் 2-3 முறை சாப்பிடுவது, அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

யூடியூபிலும் இணையதளத்திலும் பார்த்துவிட்டு, வாயில் நுழையாத பெயர்களில் கிடைக்கிற வெளிநாட்டுக் காய்கறிகளை எல்லாம் தேடித் தேடி வாங்கி சமைக்கிறீர்கள்தானே? உங்கள் வீட்டுக்கு கீரை கொண்டு வரும் அம்மணியிடம், அடுத்த முறை ‘இம்பூரல்’ இலை எடுத்துவரச் சொல்லுங்கள். அதை லேசாக எண்ணெயில் வதக்கி, உளுத்தம் பருப்பு,  மிளகு வறுத்துச் சேர்த்து, கல் உப்பு வைத்து அரைத்து, எலுமிச்சைச்சாறு சேர்த்து துவையலாக அரைத்துக் கொடுங்கள். மகளை மிரள வைக்கிற மாதவிலக்கு பிரச்னைகள் ஓடியே போகும்.

அடுத்தது மாதவிலக்கு நாள்களில் உண்டாகிற வலி. இதை ‘சூதக வலி’ என்கிறோம். கர்ப்பப்பையும், அதைச் சுற்றியுள்ள தசை நாண்களும் வலுவிழப்பதால், உண்டாகிற தசை இறுகல் வலி இது. இதற்கு மாதுளம் பழம் மிக அருமையான மருந்து. மாதுளம் பழமும் கிட்டத்தட்ட கர்ப்பப்பை வடிவிலும், அதன் பூ நுனியானது கருவாய் வடிவிலும் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? மாதுளை மணப்பாகு, மாதவிலக்கின் போதான அழற்சியைத் தவிர்த்து, வலியை நீக்கும்.

இப்போதும் கிராமங்களில் பூப்பெய்தும் இளம் பெண்ணுக்கு, உளுத்தங்களியும் உளுந்து வடையும் தருவது ஒரு சடங்காகவே நடைபெறுகிறது. நாகரிகத்துக்கு மாறிப்போன நகரத்துப் பெண்களுக்கு அதெல்லாம் தெரியாமல் போனதன் விளைவுதான், ‘இடைப்பூப்பு’ எனப்படுகிற மாதவிலக்கு சுழற்சியின் இடையிடையே ஏற்படுகிற உதிரப் போக்கும், கர்ப்பப்பை பலவீனமும்... கருப்பையின் உள்வரிச் சுவர் முறையாக உருவாகாமையாலும், அது உதிர்ந்து, முறையாக வெளியேறாத ‘தோஷ நிலை’தான் இதற்குக் காரணம். உளுத்த கர்ப்பப்பையை உரமாக்கி, மேற்சொன்ன பிரச்னைகளை சரியாக்க ஒரே மருந்து உளுந்து.

மாதம் தவறாமல் மாதவிலக்கு வந்தால்தான் ஆரோக்கியம். சிலருக்கு 3 மாதங்களுக்கொரு முறை வரும். திடீரென நின்று போகும். சூதகத் தடை என்கிற இந்தப் பிரச்னைக்குக் காரணம் ரத்தமின்மை.  பனைவெல்லம் சேர்த்த திராட்சைச்சாறும், பனைவெல்லப் பாகில் செய்த கருப்பு எள்ளுருண்டையும் இந்தப் பிரச்னையைக் குணப்படுத்தும்.  கடைசியாக வெள்ளைப்படுதல்... கர்ப்பப்பையை தூய்மையாக வைத்துக் கொள்ளாததே இதற்குக் காரணம். நமது உடலில் அமிலத்தன்மை, காரத்தன்மை என இரண்டு உண்டு.

இரண்டும் சம விகிதத்தில் இருக்க வேண்டும். அமிலத்தன்மை குறைந்து, காரத்தன்மை அதிகரித்தால், உடல் சூடும் அதிகமாகி, வெள்ளைப்பட ஆரம்பிக்கும். பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளும் சீக்கிரமே பற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க, உணவில் அடிக்கடி வெண்பூசணி, சுரைக்காய், முள்ளங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே...’ என இனி எந்தப் பிரச்னையையும் அலட்சியப்படுத்தாதீர்கள் அம்மாக்களே...

அந்த வயதில் நீங்கள் அலட்சியப்படுத்துகிற சின்ன விஷயம், உங்கள் மகளின் எதிர்காலத்தோடு விளையாடுவதற்கு சமம்... பூப்பெய்திய மகளிடம் மனது விட்டுப் பேசுங்கள். அவளது மாத சுழற்சி எப்படியிருக்கிறது எனக் கேளுங்கள். எது இயல்பானது, எது இயல்புக்கு மாறானது என எடுத்துச் சொல்லுங்கள்.

டாக்டர் தெ.வேலாயுதம் சொன்ன செய்முறைப்படி, 3 உணவுகளை இங்கே செய்து காட்டியிருக்கிறார் ‘ரெசிபி ராணி’ சந்திரலேகா ராமமூர்த்தி.

உளுத்தங்களி
என்னென்ன தேவை?
கருப்பு உளுந்து - கால் கிலோ,
பனைவெல்லம் - கால் கிலோ,
நல்லெண்ணெய் - 200 மி.லி.

எப்படிச் செய்வது?
உளுந்தை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, வடிகட்டி, மறுபடி அடுப்பில் வைக்கவும். அதில் உளுந்து பொடியை சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். நன்கு வெந்ததும், நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
வயதுக்கு வந்த பெண்களுக்குக் கொடுத்தால் இடுப்பு எலும்பு வளர்ச்சி பெறும். உடல் மெருகடையும். ரத்தப் போக்கு சிக்கல்கள் தீரும்.


முள்ளங்கி துவையல்
என்னென்ன தேவை?

முள்ளங்கி - 2,
புதினா இலை - 1 கைப்பிடி,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

முள்ளங்கியைத் தோல் நீக்கி, நறுக்கி, நெய் விட்டு வதக்கித் தனியே வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு  புதினா இலை, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். முள்ளங்கியுடன் சேர்த்து, உப்பு வைத்து அரைக்கவும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, மாதவிலக்கு நாள்களில் ஏற்படுகிற வயிற்றுவலியும் சிறுநீர் எரிச்சலும் சரியாகும்.


வாழைப்பூ கூட்டு

என்னென்ன தேவை?

ஆய்ந்து, சுத்தம் செய்து,
நறுக்கிய வாழைப்பூ - 2 கப்,
பயத்தம் பருப்பு - அரை கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிது, உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கடுகு - கால் டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பயத்தம் பருப்பை மலர வேக வைக்கவும். தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளிக்கவும். பிறகு அதில் வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வெந்ததும் பருப்பு சேர்க்கவும். உப்பும், அரைத்த விழுதும் சேர்த்து, அளவாகத் தண்ணீர் விட்டுக் கொதித்ததும் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.மாதவிலக்கு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் இது மருந்து.

இஞ்சி

இஞ்சி


இஞ்சி
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
இஞ்சி பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே (ஓலைச் சுவடி)
சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
இஞ்சி பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ”ரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே (ஓலைச் சுவடி)
சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

Wednesday, October 9, 2013

அக்குபங்சர் மருத்துவம் .

இன்றைய நவீன மருத்துவத்தில், அறுவை சிகிச்சை சிறந்த மருத்துவ பிரிவாக மதிக்கப் படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மனதிலும், அறுவை சிகிச்சை பற்றி ஒர் உயர்வான மதிப்பீடு உள்ளது என்பதனை மறுக்க இயலாது.
       நமது மண்ணின் மருத்துவமான, சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை பயன்பாட்டில் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. அகத்தியர் குணபாடம் எனும் சித்த மருத்துவ நூலில் அறுவை சிகிச்சைக் கருவிகள் குறித்து குறிப்புகள் உள்ளன. அதேபோல் ஆயுர்வேத மருத்துவர் சுஸ்ருதர் இன்றைய நவீன அழகு சிகிச்சையான ‘பிளாஸ்டிக் சர்ஜரி’க்கான மூலவர் என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. இதிலிருந்து பல்வேறு மருத்துவ முறைகளிலும் அறுவை சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது வெள்ளி டைமலை. இருப்பினும் நமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் நமது மருத்துவத்தை வளர்த்தெடுக்க பெருந்தடையாக இருந்து மண்ணுக்குள் புதைத்து விட்டது என்பதனை நாம் உணரவேண்டும். இன்றும் அதே நிலை தொடர் கிறது என்பதுதான் வேதனைக்குரிய செய்தி...
     சீன நாட்டின் மக்கள் மருத்துவமான அக்குபங்சர் மருத்துவம் பஞ்சபூத கோட்பாடின் அடிப்படையில் உடலியக்கதை சீர்படுத்தும் ஒரு முழுமையான மருத்துவமுறையாகும். அதாவது உடலில் பரவிச் செல்லும் சக்திபரிமாற்றத்தை ஒழுங்கு செய்து. அதன் வழி உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை செம்மைபடுத்தி நோய்களைக் களையும் ஒர் அற்புத இயற்கை வழி அறிவியலாகும்.
       உடல் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தை இரு பெரும் பிரிவாகப் பிரிக்காலம். 1. உள்வாங்குதல் 2.வெளித்தள்ளுதல். அதாவது நாம் உள்ளிழுக்கும் காற்று, உணணும் உணவு, அருந்தும் நீர் ஆகிய வற்றிலுள்ள சதுதுகளையும், சக்தியையும் உள்வாங் குதல் முதல்பணி, அடுத்து இரண்டாவதாக உள்ளி ழுக்கப்பட்ட பொருட்களில் இருந்து கிடைக்கும் சக்தி மற்றும் சத்துகள் தவிர்த்து பொருட் களையும், அணுக்களில் நடந்த வேதிமாற்றங்களுக் குப் பின் உண்டாகும் கழிவுகள் (Toxins), அணுக் களின் அழிவு (Dead cells), ஆகியவற்றால் உண்டா கும் அனைத்துக் கழிவுகளையும் சளி, மலம், சிறுநீர், வியர்வை ஆகிய வழிகளில் உடல் வெளித்தள்ளுகிறது.
       இவ்விரு பெரும் பணிகளில் ஏற்படும் தடை கள், சுணக்கம், சத்து அல்லது சக்தி பற்றாக்குறை, சக்தி அல்லது கழிவுகள் தேக்கம் ஆகியன நோய்நிலையை தோற்றுவிக்கறது உள்வாங்குதல் மற்றும் வெளித்தள்ளுதல் ஆகிய இருபணி களையும் மேற்கொள்ளும் உறுப்புகளை பட்டி யலிடுவோம்.
1.      நுரையீரல் - பெருங்குடல்
2.      சிறுநீரகம் - சிறுநீர்ப்பை
3.      கல்லீரல் - பித்தப்பை
4.      இருதயம் - சிறுகுடல்
5.      இருதயஉறை - மூவெப்பக்குழி
6.      மண்ணீரல் - இரைப்பை
       6 இணை உறுப்புகள் தம்முள் இணைந்து செயலாற்றிய முன் குறிப்பிட்ட இரு பெரும் பணிகளை மேற்கொள்கின்றன.
       அக்குபங்சர் மருத்துவத்தின் அடிப்படை விதிகளின்படி இந்த 12 உறுப்புகளை உடலின் மேற்புறம் அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளை தூண்டுதல் அளிப்பதன் வாயிலாக உள்ளுறுப்புகள் தம் பணிகளை இயல்புப் போக்கில் மேற்கொண்டு, உள்வாங்கலும், வெளித்தள்ளுதலும் ஒருங்கே நடைபெற்று உடலானது தம்மை ஒழுங்கு செய்துகொள்கிறது இதன்வழி, உடல் முழுமையும் தன்னை அனைத்து நிலைகலும் புதுப்பித்துக் கொள்கிறது. அதனால் நோய்நிலை மறைந்து விடுகிறது.
                இவ்வாறு உடல் இயக்கத்தை சீர் செய்வதன் வழியாக அறுவை சிகிச்கை செய்துதான் குணப் படுத்த இயலும் எனக் கருதப்படும் நோய்களை அக்குபங்சர் மருத்துவம் செய்தே குணப்படுத்தி விடலாம்.
  1. 1)     கண்புரை நோய் (Cataract):
                உடலின் அமிலத்தன்மை அதிகரிப்பில் தோன்றும் கண் வெண்படலமே இந்நோய். இதனை கண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை யின் மூலம் படலத்தை அகற்றுகின்றனர். துவக்க நிலை கண்புரை நோயினை அக்குபங்சரில் சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தலாம். தீட்டிய வெள்ளை அரிசி, மைதா, வெள்ளைரவை, வெள் ளைச் சீனி உணவுப்பட்டியலுக்கு வந்த பின்பே இந்த நோய் அதிகரித்திருக்கிறது.
புள்ளிகள் : ST1,GB2,ST43,SP10,GB14,GB21,SP9,ST37,EX2,UB2,LI4,LI11,LIV3
  1. 2)       டான்சில் கோள அழற்சி ( Tonsititis) :
                ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், பருவ மாறுதலை தாங்கும் திறன் இன்மை ஆகிய காரணங்களால் வாயின் உட்பகுதியில் அமைந் துள்ள டான் சில் கோளம் தனது பணி யான நோய் எதிர்ப்பு செயலை அதீத அள வில் மேற் கொள்ளும் போது வேக் காடு அடைந்து வீங்கி, சிவந்து வலி, விழுங்குவதில் சிரமம் ஆகிய குறிகளோடு, காய்ச்சல், தூக்க மின்மை ஆகிய தொந்தரவுகளும் காணப்படும். அதாவது நோய் எதிர்ப்புப் பணிகளை மேற் கொள்ளும் டான்சில் கோளம் பலவீனமடைந்துள்ள நிலையில், தேவை என்பது அதனை பலப்படுத்துவதே. ஆனால் நவீன மருத்துவம் அதனை அறுவை செய்து நீக்க பரிந்து ரைப்பதை என்ன சொல்வது? செரிமான மண்ட லத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள இக்கோளம், மண்ணீரலின் அதீத பணியினால் ஏற்படு கிறது. எளிமையான கூழ்வடிவ உணவினை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட புள்ளிகளை தூண்டு வதன் வழி அறுவை சிகிச்சையினை தவிர்க்கலாம்.
புள்ளிகள் : ST43,SP6,SP9,SP10,LI11,LI18,DU14
3)     தைராய்டு கோள வீக்கம் :
       கழுத்துப் பகுதியில், தொண்டையின் உட்பகுதியில் தீர்மானிக்கும் தைராக்சின் சுரப்பை உருவாக்கக் கூடியது. இதன் ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக பெருத்த உடலாகவோ, மெலிந்த தேகமாகவோ மாற்றிவிடும். இக்கோளம் வீங்கி பெருத்து தொண்டையின் செயல்பாட்டிற்கு பெரிதும் இடையூறாக மாறும் போது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
புள்ளிகள் : LI18,GB21,LI4,SP9,SP6,ST36,UB20.
4)     குடலிறக்கம் ( Hernia) :
       வயிற்றுத் தசைகள் பலவீனமடைந்து தளர்ந்து போகும்போது, உள்ளிருக்கும் உறுப்புக்கள் வெளித்தள்ளும் சூழல் ஏற்படுகிறது. இதற்கு மெல்லிய வலை போன்ற பொருளைவைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் தொடர் நிகழ்வாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை தவிர்த்து மற்ற வயிற்றுப் பகுதிகள், தொப்பூள் ஆகிய பகுதிகளில் இக்குறை பாடு தோன்ற பெரிதும் வாய்ப்பு உள்ளது. அச்சமயத்தில் அறுவை செய்ய இயலாது. போய் விடுகிறது என்பதே எதார்த்த நிலை. எனவே வயிற்றுத் தசைகளை வலுவூட்டும்படியாக அக்கு பங்சர் சிகிச்சை மேற்கொள்வதே சிறந்த வழி.
புள்ளிகள் :Ren12,Ren17,ST21,ST25,UB18,UB21 LIV8,GB21,ST36,UB25
5)     வயிற்றுப் புண் (Gastric Ulcer) :
       வயிற்றின் செரிமானத் தன்மையை சீர்குலைக்கும்படியாக தொடர்ந்து தின்பண்டங் கள் உண்பது, பசியற்ற நிலையிலும் உணவுண்பது, நேரம் தவறி உண்பது ஆகிய பழக்கத்தால் உணவு இரைப்பகுதியில் நீண்டநேரம் தங்கி, உடலின் வெப்பத்தால் புளித்து அதன் விளைவாக இரைப்பை, குடல் பகுதிகளின் சுவர்களின் மேல் படிந்துள்ள சளிச்சவ்வுப் படலம் பாதிக்கப்பட்டு உறுப்புக்களின் சுவர்களில் புண்கள் ஏற்படுகின்றன. கடுமையான நிலைக்கு மாறும்போது நவீன மருத்துவத்தால் புண்னை ஆற்ற இயலாததால் அறுவைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
           எளிய திரவ வடிவ உணவுகளை எடுத்துக் கொண்டு அக்குப்பங்சர் சிகிச்சை மேற்கொண்டு குணமானவர்கள் பலர். குறிப்பாக பால் உணவுகள், காரமற்ற மாவுப் பண்டங்கள் வயிற்றுப் புண் நோய்க்கு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மென்மேலும் புண்களை அதிகப்படுத்தவே உணவும், மாவுப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் தவிர்த்தலே இந்நோய் குணமாக உணவும்.
புள்ளிகள் :Ren12,ST21,ST25,UB20,UB21,SP6,ST36,ST43,GB43,ST34,P6
6)     குடல்வால் அழற்சி ( Appendicitis) :
          பெருங்குடலின் ஒரு பகுதியான குடல் வால் தம்முள் தேங்கும் அழுக்குகளால் வேக்காடு அடைந்து வீங்கி பெருத்துவிடுகிறது. இது கடுமையான வயிற்றுவலியை தோற்றுவித்துஇ நோயாளி யை மிகவும் சிரமத்துள்ளாக்கக் கூடியது. நவீன மருத்துவம் அறுவை சிகிச்சை செய்யாவிடில் உயிர் பிழைப்பது கடினம் என்கிறது.
       பழங்கள்( குறிப்பாக பப்பாளி), பழச்சாறுஇ இளநீர்இ காய்கறி சூப் ஆகிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அக்குபங்சர் சிகிச்சை செய்து குணமடையலாம். அதோடு, இளஞ்சூடான வெந்நீரில் உப்பு கலந்து இயற்கை இனிமா மூலம் தினமும் காலை மாலை என இருவேளை இனிமா எடுத்தல் அவசியம்.
புள்ளிகள் : Ex33,ST36,LI4,DU14.LI11,SP6,Ren12,ST25,ST29.
7)     மூலம் (Piles) :
       மலச்சிக்கல் தொடர்ந்து நீடிப்பதும், உணவில் எந்த ஒழுங்கும் இல்லாதோருக்குத்தான் மூல நோய் ஏற்ப்படுகிறது. மலம் தேங்குவதால் மலக்குடல் வேக்காடு அடைந்து குடற்சுவரின் மேற்புற அடுக்கு வீங்குவதால்ட ஏற்படும் நோயே மூல நோயாகும். இரத்தபோக்கு இருந்தோ இல்லாமலோ இந்நோய் நீடிக்கலாம். மலச் சிக்கலை சரிசெய்து வேக்காடு அடைந்த பெருங் குடல் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உதவியாக, மலம் தேங்காமலிருக்கும் வகையில் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், பழங்கள் என உணவு மாற்றம் செய்து அக்குபங்சர் சிகிச்சை மூலம் இந்நோயை குணப்படுத்தலாம்.
புள்ளிகள் : DU1,Ren1,UB32,UB54,SP6,DU6,UB57,GB34,ST42
8)     மண்ணீரல் வீக்கம் (Spleenomogaly) :
       புளிப்பான உணவுகள், பழையை உணவுகள், எந்நேரமும் நொறுக்குத்தீனி இவையே உணவுப் பழக்கமாக உள்ளோருக்கு மண்ணீரல் வீக்கம் ஏற்பட பெரிதும் வாய்ப்பு உள்ளது . இவ்வீக்கத்தை குணப்படுத்த நவீன மருத்துவத்திற்கு வழி தெரியாததால் அறுவை சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்ற பரிந்துரைக்கிறது.
       நம் உடலின் செரிமான மண்டலத்தினை கட்டுப்படுத்தவும், இரத்தம் உருவாகவும், நோய் எதிர்ப்புப் பணிகளுக்கான செல்களை உருவாக்கவ்ம் மண்ணீரல் பெரிதும் அவசியமான உறுப்பு என்பதை இங்கு கறிப்பிடுவது நல்லது.                                    புள்ளிகள் : LIV13,LIV14,GB24,GB26,ST21,UB20,SP6,SP9,SP4,ST36.
9)     கருப்பை நீர்கட்டிகள் (Cyst) : சினைப்பை நீர்க்கட்டிகள்
       மாதவிடாய் நீண்ட இடைவெளியில் வருதல், மாதவிடாயின் போது வலி, அதிக நாட்கள்நீடித்தல் ஆகிய குறிகளோடு காணப்படும் இக்கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
புள்ளிகள் : Ren6,Ren4,UB32,SP6,ST36,DU14,UB23,GB26.
10)     தொப்பை (Tammy) :
       வயிற்றுத் தசைப்பகுதியில் கொழுப்பு சேர்ந்து வயிறு பானை போல் பெருத்து நபரின் தோற்றத்தை மாற்றிவிடுகிறது. மாவுப்பண்டங்கள் , மதுபானங்கள், நாட்பட்ட உணவுகள், நேரந்தவறி உண்ணுதல், இரவு உணவு காலந்தாழ்த்துதல், உழைப்பின்மை ஆகிய காரணங்களால் தொப்பை பெருத்துவிடுகிறது. இன்று கொழுப்பைக் கரைத்து வெளியேற்றும் சிகிச்சை, வயிற்றுத் தசை அடுக்குகளை நீக்குதல் போன்ற அறுவை சிகிச்சை செய்து வயிறு குறைக்கப்படுகிறது. ஆனால் அக்குபங்சர் சிகிச்சையில் கத்தி தேவையில்லை என்பதை நீருபித்திருக்கிறது.
புள்ளிகள் : LIV13,Ren12,GB34,UB20,SP6,SP9,ST36,GB21.
11)     கருப்பை நழுவுதல் (Prolapsed Uterus) :
       கருப்பையின் தசைப்பகுதி வலுவிழந்து, அதன் இருப்பிடததை விட்டு நழுவி வெளியேறும் நிலை. இளவயது திருணமம், அடிக்கடி கருக் கலைதல், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தாது விடுவதால் அதன் தொடர்ச்சியாக, கருப்பைபுண் ஏற்பட்டு வலுவிழ்ந்துவிடுதல் சிசேரியன் பிள்ளைப்பேறுக்குப்பின் கருப்பை பலமிழத்தல் ஆகிய நிலைகளில் கருப்பை நழுவுதல் அல்லது வெளித்துருத்துதல் ஏற்படுகிறது.
புள்ளிகள் : Ren1,Ren6,UB31,UB32,UB33,UB34,SP6,ST36,GB34,GB21,UB18,UB23.
12)           மூட்டு மாற்று அறுவை (Knee Replacement Surgery) :
                மூட்டு எலும்பு சந்திப்புக்களில் ஏற்படும் வலி, அசைப்பதில் சிரமம், இறுக்கம் என தொந்தரவுகள் துவங்கி, எலும்புத் தேய்மானம் வரை சென்று விடுகிறது. துவக்கநிலை தொந்தரவு களுக்கு நவீன மருத்துவம் வலி நிவாரணிகளை பரிந்துரை செய்து தப்பித்துக்கொள்கிறது. நோயாளிகளும் வலி மறைந்தவுடன் நோய் குண மடைந்ததாக கருதி விடுகின்றனர். ஆனால் உடல் நிலையில் ஏற்படும் தொடர் பலவீனங்கள் மூட்டு எலும்புகள் சேதமடையும் வரை செல்வதை வலி நிவாரணிகள் தடுக்கப் போவதில்லை என்பதை உணரும் வாய்ப்பில்லை.
                உடலில் தேங்கும் அமிலத்தன்மை, மூட்டு சந்திப்புகளில் உயவு எண்ணெய்க்கு சமமான திரவத்தை வற்ற வைத்துவிடுகிறது. அதன் விளை வாக மூட்டுச் சவ்வுகள் பலவீன மடை கின்றன. மேலும் மூட்டுக்களின் சந்திப்புகளில் உள்ள குறுத் தெலும்புப் பகுதிகள் எளிதல் சேதமடைகின்றன. அதன் விளைவாக எலும்புத் தேள்மானம் அடைந்து அறுவைசிகிச்சைக்கு வாய்ப்பளிக்கிறது.
                ஆனால் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் எலும்பு சந்திப்புகளில் இயல்பாக இரலுக்க வேண்டிய திரவத்தை சுரக்கச் செய்து. சேதமுற்ற எலும்புகளை வளரச் செய்து குணமடையசந் செய்யலாம்.
புள்ளிகள் : ST43,LI4,UB18,UB23,SP10,ST34,UB40,LIV8,GB 21.
அறுவை சிகிச்சையினை தவிர்க்க விரும்புவோர்குறிப்பிட்ட நடைமுறைகளை கடைபிடித்தல் மிகவும் அவசியமானது.
  • எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே உண்ணுதல் வேண்டும்.
  • பழங்கள் காய்கறிகள் உணவில் அதிகம் இருத்தல் வேண்டும்.
  • தேவையற்ற பானங்களான பால் கலந்த தேநீர், காபி குளிர்பானங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • உணவு தானியங்களில் அரிசி உணவினை மிகவும் குறைத்து கோதுமை, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை போன்ற நார்ச்சத்து மிகுந்த தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளுதல் விரைவில் குணமடைய உதவும்.
  • இஞ்சி, மிளகு ஆகிய காரத்தன்மை (Alkaline) மிகுந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இரவு உணவினை 7 மணி அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பசிக்காத போது உணவினை தவிர்த்து விட்டு, இளநீர், கரும்புச்சாறு, பதநீர், போன் இயற்கை பானங்களை குடிக்கவோ, பழங்கள் உண்ணவோ செய்தல் நல்லது.
  • அறுவை சிகிச்சை ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் நடந்தேறிவிடும். ஆனால் அதன் பக்க விளைவுகள் ஆண்டுக்கணக்கில் துயரத்தை தரும். நமது அக்குபங்சர் மருத்துவம் செய்து குணமடைய கால எல்லையை எளிதில் வகுக்க இயலாது. ஆனால் பக்க விளைவு என்ற பயமின்றி குணமடைதல் உறுதி.
   மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோய்நிலை களுக்கு குறிப்பிட்டுள்ள அக்குபங்சர் புள்ளிகளை, அக்குபங்சர் மருத்துவர் அல்லாதார் பயன்படுத்து வதை தவிர்த்தல் வேண்டும் .
அக்குபங்சர் மருத்துவத்தை வேறு மாற்று மருத்துவத்துடன் இணைத்து பார்ப்பது விரைவில் குணமடைய உதவலாம்.