ஆடாதோடையின் மருத்துவப் பயன்கள்
01 Aug 2011
பல்வேறு நோய்களைத் தீர்த்து, ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகின்றன. இத்தாவரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயைத் தீர்க்கும் சிறப்பு மருத்துவர்களாகும். குறிப்பிட்ட வேதிப்பொருளை தன்னகத்தே கொண்டு, குறிப்பிட்ட நோயைத் தீர்க்கும் வல்லமை கொண்டது நமது தாவரங்கள். ஆடாதோடை தாவரமானது நெஞ்சு சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதில் முன்னணி வகிக்கிறது. இருமல், சளி, காசம், மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குறைக்கிறது.ஆடாதோடை மிகுந்த குளிரான இடங்கள் தவிர மற்ற இடங்களில் தாராளமாக வளர்கிறது. இது சுமார் மூன்று முதல் ஐந்து மீட்டர் உயரத்தில், அதிக கிளைகளுடன், தழைத்து வளரும் தன்மையைக் கொண்டது. இலைகள் ஈட்டி போல காணப்படும்.
இலைகளில் உள்ள நரம்புகள் தெளிவாகத் தெரியும். பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படும்.
குணங்கள்
ஆடாதோடையில் எண்ணெய், கொழுப்பு, ரெசின் மற்றும் சில அமிலங்கள் உள்ளன. ஆடாதோடையின் இலை, பூ, வேர் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது. கபம் நீக்கி, சிறுநீர் பெருக்கி மற்றும் மூச்சுக்குழல் சீரமைப்பு போன்ற தன்மைகளைக் கொண்டுள்ளது.
சிறப்புத் தன்மைகள்
இதன் இலைகளிலுள்ள சில வகை காரச் சத்துக்களால் ஆடாதோடை இலை பூச்சியால் மற்றும் பிற காளான்களால் பாதிக்கப்படுவதில்லை. அதனால் பழங்களைச் சேகரித்து பாதுகாக்க, பொதிந்து வைக்கப் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்
இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து இதோடு தேன் கலந்து (ஒரு கரண்டி சாறுடன்) அருந்த இருமல் தீரும். ஒரு ஸ்பூன் ஆடாதோடை இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறு கலந்து ஒரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து அருந்தி வர ஆஸ்துமா குணமாகும்.ஆடாதோடைஇலைச்சாறு ஒரு கரண்டி அருந்த வயிற்றுப்போக்கு இரத்தப் பேதி குணமாகும். ஆடாதோடை இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் பூசி வர மூட்டுவலி குணமாகும்.ஆடாதோடைஇலைகளை அரைத்து சொறி, அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பூசி வர அரிப்பு குணமாகும். ஆடாதோடை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் சாறுடன், ஒரு ஸ்பூன் நெய் கலந்து, சிறிதளவு சீனி, இரு சிட்டிகை மிளகு கலந்து ஒரு ஸ்பூன் வீதம் ஒரு நாள் இரு வேளை வைத்து, மூன்று நாள் சாப்பிட இருமல், சளி தீரும். ஒரு கரண்டி ஆடாதோடை இலைச் சாறுடன், அரைக்கரண்டி இஞ்சிச்சாறு, அரைக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும். ஆடாதோடை இலைகளோடு வேர் (கைப்பிடி வீதம்) எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாள் இருவேளை வீதம் சாப்பிட மூச்சிரைப்பு குணமாகும்.ஆடாதோடை பூக்களை எடுத்து, கண்களை மூடிய பின்பு மேலே கட்டி ஒரு மணி நேரத்திற்குப் பின்பு எடுக்க கண் சிவப்பு கணண் வலி மாறும்.ஆடாதோடை இலைச்சாறை கைகளில், கால்களில் பூசிட கொசுக்கள் அருகில் வராது. ஆடாதோடை இலைச்சாறை வீட்டில் தெளிக்க ஈ, விஷப்பூச்சிகள் வராது. இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைவலி தீரும். கண் குளிர்ச்சி பெறும். காலை உணவுக்குப் பிறகு இரண்டு ஸ்பூன் ஆடாதோடை இலைச் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த சளி, ஆஸ்துமா தீரும்.
ReplyDeleteபயனுள்ளதாக உள்ளது.சுகப்பிரசவத்திற்கு உதவும் ஆடாதோடை!
www.manam.online/Health/2016-OCT-4/Atatotai-Medicinal-uses