இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் பிற தளங்களில் படித்ததுவே. எனக்கு பிடித்தவற்றை ஒரு சேமிப்பாகவே இங்கு பகிர்கிறேன்.
Wednesday, July 17, 2013
Monday, July 15, 2013
ஆடாதோடை 3
ஆடாதோடையின் மருத்துவப் பயன்கள்
01 Aug 2011
பல்வேறு நோய்களைத் தீர்த்து, ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகின்றன. இத்தாவரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோயைத் தீர்க்கும் சிறப்பு மருத்துவர்களாகும். குறிப்பிட்ட வேதிப்பொருளை தன்னகத்தே கொண்டு, குறிப்பிட்ட நோயைத் தீர்க்கும் வல்லமை கொண்டது நமது தாவரங்கள். ஆடாதோடை தாவரமானது நெஞ்சு சம்பந்தமான நோய்களைத் தீர்ப்பதில் முன்னணி வகிக்கிறது. இருமல், சளி, காசம், மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்களைக் குறைக்கிறது.ஆடாதோடை மிகுந்த குளிரான இடங்கள் தவிர மற்ற இடங்களில் தாராளமாக வளர்கிறது. இது சுமார் மூன்று முதல் ஐந்து மீட்டர் உயரத்தில், அதிக கிளைகளுடன், தழைத்து வளரும் தன்மையைக் கொண்டது. இலைகள் ஈட்டி போல காணப்படும்.
இலைகளில் உள்ள நரம்புகள் தெளிவாகத் தெரியும். பூக்கள் வெண்மை நிறத்தில் காணப்படும்.
குணங்கள்
ஆடாதோடையில் எண்ணெய், கொழுப்பு, ரெசின் மற்றும் சில அமிலங்கள் உள்ளன. ஆடாதோடையின் இலை, பூ, வேர் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது. கபம் நீக்கி, சிறுநீர் பெருக்கி மற்றும் மூச்சுக்குழல் சீரமைப்பு போன்ற தன்மைகளைக் கொண்டுள்ளது.
சிறப்புத் தன்மைகள்
இதன் இலைகளிலுள்ள சில வகை காரச் சத்துக்களால் ஆடாதோடை இலை பூச்சியால் மற்றும் பிற காளான்களால் பாதிக்கப்படுவதில்லை. அதனால் பழங்களைச் சேகரித்து பாதுகாக்க, பொதிந்து வைக்கப் பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்
இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து இதோடு தேன் கலந்து (ஒரு கரண்டி சாறுடன்) அருந்த இருமல் தீரும். ஒரு ஸ்பூன் ஆடாதோடை இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறு கலந்து ஒரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து அருந்தி வர ஆஸ்துமா குணமாகும்.ஆடாதோடைஇலைச்சாறு ஒரு கரண்டி அருந்த வயிற்றுப்போக்கு இரத்தப் பேதி குணமாகும். ஆடாதோடை இலைகளை அரைத்து மூட்டு வலி ஏற்பட்ட இடங்களில் பூசி வர மூட்டுவலி குணமாகும்.ஆடாதோடைஇலைகளை அரைத்து சொறி, அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பூசி வர அரிப்பு குணமாகும். ஆடாதோடை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் சாறுடன், ஒரு ஸ்பூன் நெய் கலந்து, சிறிதளவு சீனி, இரு சிட்டிகை மிளகு கலந்து ஒரு ஸ்பூன் வீதம் ஒரு நாள் இரு வேளை வைத்து, மூன்று நாள் சாப்பிட இருமல், சளி தீரும். ஒரு கரண்டி ஆடாதோடை இலைச் சாறுடன், அரைக்கரண்டி இஞ்சிச்சாறு, அரைக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும். ஆடாதோடை இலைகளோடு வேர் (கைப்பிடி வீதம்) எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாள் இருவேளை வீதம் சாப்பிட மூச்சிரைப்பு குணமாகும்.ஆடாதோடை பூக்களை எடுத்து, கண்களை மூடிய பின்பு மேலே கட்டி ஒரு மணி நேரத்திற்குப் பின்பு எடுக்க கண் சிவப்பு கணண் வலி மாறும்.ஆடாதோடை இலைச்சாறை கைகளில், கால்களில் பூசிட கொசுக்கள் அருகில் வராது. ஆடாதோடை இலைச்சாறை வீட்டில் தெளிக்க ஈ, விஷப்பூச்சிகள் வராது. இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரை லிட்டர் நல்லெண்ணெயில் கால் லிட்டர் சாறு சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைவலி தீரும். கண் குளிர்ச்சி பெறும். காலை உணவுக்குப் பிறகு இரண்டு ஸ்பூன் ஆடாதோடை இலைச் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த சளி, ஆஸ்துமா தீரும்.
ஆடாதோடை 2
கற்ப மூலிகை
மரண மாற்று
மூலிகை ஆடாதோடை...
மரண மாற்று
மூலிகை ஆடாதோடை...
மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
இந்த வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.
இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது.
ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும்.
ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள். நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.
மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர்.
ஆடாதோடை இலை, தூதுவளை இலை (2010 மார்ச் இதழில் இதுபற்றி விரிவாகக் கூறியுள்ளோம்) சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும். சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம்பெறும். மேலும் இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு.
ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.
ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக மாற்றி அதனுடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புகைச்சல் குணமாகும்.
ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலை இவைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் பொடியில் தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், சுவாச காச நோய்கள் நீங்கும். ஆடாதோடை இலையைக் குடிநீர் செய்தோ, அல்லது பொடி செய்து தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம்கிடைக்கும். ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி அறவே நீங்கும்.
ஆடாதோடை இலை - 2, வெற்றிலை - 2, மிளகு - 5, சுக்கு - 1 துண்டு சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல்வலி, நெஞ்சுச் சளி நீங்கும்.
இண்டு, இசங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி , ஆடாதோடை, நறுக்குமூலம் இவற்றின் இலைகளைச் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இருவேளை, கஷாயம் செய்து அருந்தி வந்தால், ஈளை, இழுப்பு, இருமல், சுவாசகாசம், போன்றவை குணமாகும்.
காயவைத்த ஆடாதோடையிலை - 5, அதிமதுரம்-2 கிராம், திப்பிலி-1 கிராம், தாளிச பத்திரி - 1 கிராம், சிற்றரத்தை 1/4 கிராம் எடுத்து இடித்து பொடியாக்கி அதனை 500 மி.லி. நீர்விட்டு கொதிக்க வைத்து அது 200 மி.லி.யாக வரும்போது இறக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி நீங்கும். கோழை வெளியேறும். இரைப்பு நீங்கும்.
கழுத்து வலி, கை, கால் மூட்டு வலி, தோள்பட்டை வலி இவைகளுக்கு ஆடாதோடை காய்ந்த இலையுடன் வசம்பு, மஞ்சள், சுக்கு இவைகளை சம அளவு எடுத்து இடித்து அதனுடன் தவிடு சேர்த்து துணியில் கிளி பொட்டலமாகக் கட்டி சட்டியில் வைத்து சூடாக்கி வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் வலிகள் நீங்கும்.
ஆடாதோடை இலை, வேர்ப்பட்டை, கண்டங் கத்திரி, இண்டு இவற்றை காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் மண்டைக்குத்து, தொண்டைவலி, வறட்டு இருமல் போன்றவை நீங்கும். இந்த பொடியை தேனில் கலந்துகூட அருந்தலாம்
.
ஆடாதோடை 1
ஆடாதோடை இதன் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanica) ஆகும். இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.
உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

- சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
- இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
- இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
- இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும்.
- இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
- ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்
Thursday, July 11, 2013
குங்குமம் தயாரிப்பது எப்படி
குங்குமம் தயாரிப்பது எப்படி?
தேவையானவை:
1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் - ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு - 1 1/2 லிட்டர்
3)வெங்காரம் - 170 கிராம்
4)சீனாக்காரம் - 65-70 கிராம்
5)நல்லெண்ணை - 100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர் - வாசனைக்கு தேவையான சில துளிகள்
கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும். அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும் நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும். கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும் சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.
பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும். இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறைய பொறுமையும் பிடிக்கும் வேலையிது!
நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத்துணியால் கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்' செய்யவேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.
this process goes on & on till you get little கப்பி. fine powder -ஆக கிடைத்த மஞ்சள் பொடியை.... இனிமேல் 'குங்குமம்' என்றே அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.
இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும் கொடுக்கலாம். சிறு பிளாஸ்டிக் டப்பாவில் பக்கிங் செய்து விற்பனை செய்யலாம் எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.
"கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு
உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!"

Subscribe to:
Posts (Atom)