அனுபவ வைத்தியம் - 1
வாதம்-பித்தம்- கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம்அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .
இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம் பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய் ,காயம் ,உளுந்தம் பருப்பு வறுத்து வைத்துப் புளி,உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும்.இது இட்லி,தோசை,மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி -சாதத்தில் பிசைந்து எண்ணெய் விட்டு சாப்பிடலாம் .
வாய்வு-பித்தம்-கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது.இதனை வாரம் ஒருமுறை சாபிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.எனவேதான் பண்டைய நாளில் அப்பளம் செய்யும் போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள் .உணவே மருந்து என்று உண்டார்கள் வென்றார்கள். நன்றி
கனிமொழி இதழ்
கே.பாலசுந்தரி. எம் .ஏ மாங்குடி
அனுபவ வைத்தியம் - 2
நவீன உணவு கலாச்சாரம் அடிக்கடி ஓட்டல் சாப்பாடு போன்றவற்றால் செரிமானமின்மை புளித்த ஏப்பம் ,குமட்டல், பசிஇன்மை,போன்றவற்றை ஏற்படுத்துகிறது .அதற்கு என்று மாத்திரைகளை நாட வாலுபோயி ... கத்திவந்தது டும்...டும்....என்பது போல புதிய தொந்தரவுகள் இதற்கு எளிமையான மருந்து இஞ்சி.
100 கிராம் இஞ்சியைத் தோல்சீவி மெல்லியதாக நறுக்கவும். அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு இஞ்சி நனையும் வரை எலும்பிச்சை சாறு விடவும். சிறிது உப்பு போட்டுக் கிளறி வெயிலில் வைக்கவும் .(இந்துப்பு சேர்த்தால்கஊடுதல் நலம் ) சாறு சுண்டி உலர்ந்ததும் நன்கு காயவைதுப் பத்திரப் படுத்தவும்.
மேற்படி தொந்தரவு ஏற்படும் போது சிறிது வாயில் அடக்கிக் கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும் .
நன்றி
கனிமொழி இதழ்
கே.பாலசுந்தரி. எம் .ஏ மாங்குடி
அனுபவ வைத்தியம் -3
மழைக்காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்கும் தருணம்.இந்த பருவ நிலை மாற்றத்தின் பொது அதிகம் தாக்கும் நோய் வயிற்றுப்போக்கு .இதைக் காலரா என்றும் சொல்வதுண்டு.
இது மிகவும் கொடுமையான வியாதி.நீர்சத்து இழப்பால் பெரும் பதிப்பு ஏற்படும். இதற்கு எளிமையான மருந்து. அதே சமயம் துரித நிவாரணம் தருவது புளியம்பட்டை. முற்றிய புளிமரத்துப் பட்டையை நாலு விரக்கடைஅளவு வெட்டி எடுத்து அடுப்பில் போட்டு நன்கு எரிக்கவும். தணலாக மாறியபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு மூடிவிடவும்.சூடு ஆறியபின் திறந்தால் சாம்பலாக இருக்கும்.அதை தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட நன்கு குணம் தெரியும். ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு இரண்டுசிட்டிகை மருந்தை சிறிது தேனும் வெந்நீரும் கலந்து சங்கால் புகட்டலாம் .
அதன் கூடவே உப்பு -சர்க்கரை `கலந்த வெந்நீரை அடிக்கடிக் கொடுத்து வர நீர்சத்து இழப்பு சமன் செய்யப்படும் .
நன்றி
கனிமொழி இதழ்
கே.பாலசுந்தரி. எம் .ஏ
அனுபவ வைத்தியம் -4
சிறுநீரகக்கல்
தற்போது அனைவரையும் வாட்டும் நோய் இதற்குப் பலகாரணங்கள் உண்டு. முக்கியமாகக் குடிநீர் குறைபாடுகள். குடிநீர் சுத்திகரிப்பிற்காகப் பல கருவிகள், பாட்டில் குடிநீர் என பலதீர்வுகள் இருந்தாலும் சரியான தீர்வு அனைவரையும் சென்றடையவில்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கு என்னதான் தீர்வு?
வாழைத் தண்டு! இதை இடித்து சாறு பிழிந்து அருந்தி வர கல் கரையும். இதை அனைத்து மருத்துவ முறைகளுமே ஏற்றுக் கொள்கின்றன. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி குடல் சுத்திகர்ப்புக்கு வழி வகுக்கும்.
வாழைத் தண்டை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டுவர சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கலாம். பொரியல்-கூட்டு-பச்சடி-சாம்பார் எனப் பல ஐட்டங்கள் மாற்றி மாற்றி செய்து சாப்பிடலாம். உணவையே மருந்தாக்கி உடல் நலம் காக்கணும்.
அனுபவ வைத்தியம் -5
உடல் வெப்பம்!
இது அதிகரித்தால் வயிறுவலி - வாய்ப்புண் - கண் எரிச்சல் முதலியவை தலைதூகும். இதற் அற்புத நிவாரணி அகத்திக்கீரை!
அகத்தீ எனப்படும் உட்கட்டைத் தணிப்பதால் இதற்கு அகத்தீ என்ற காரணப்பெயர். இதைப் வொரியல் கூட்டு - சூப் செய்து சாப்பிட வயிற்று வலி வாய்ப்புண் குணமடையும்.
அக்கி எனப்படும் சிரங்கு வந்தால் அகத்திக்கீரையை அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பூசி வர அக்கித் தானே காய்ந்து உதிர்ந்து விடும்.
இதன் சாறும் தேங்காய் எண்ணையும் சம அளவு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத்தடவிவர கூந்தல் செழித்து வளரும். குறிப்பாக இளநரை மறையும். மூளை உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மண்டையில் ஏற்படும் கொதிப்பு அதன் காரணமாக ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும்.
இது அதிக சத்து உள்ளது. எனவே தான் ஏகாதசி அன்று பட்டினி கண் விழிப்பு செய்து மறுநாள் பாரணை செய்து விரதம் முடிக்கும் போது கட்டாயமாக அகத்திக்கீரையும் நெல்லிக்காயும் உணவில் சேர்ப்பது வழக்கம். பட்டினி கிடந்தகுடலின் உஷ்ணத்தைத் தணிக்கவும் முதல் நாள் பட்டினியால் ஏற்பட்ட சத்து இழப்புகளை ஈடுகட்டவும் இந்த ஏற்பாட்டினை நம் முன்னோர் கடை பிடித்தனர்.
அனுபவ வைத்தியம் -6
சூடு
உடம்பில் சூடு அதிகம் ஏற்பட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் வேக்காளம் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் குறிப்பாக மூளையை அதிகம் பயன்படுத்தும் அலுவல் இருப்பவர்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் இதற்கு அற்புத நிவாரணி மணத்தக்காளி.
இந்தக் கீரையை வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கழுநீரில் பானம் செய்து சாப்பிட விரைவில் நிவாரணம் கிட்டும். கீரையை வெற்றிலைப் பாக்குபோல் வெறும் வாயில் குதப்ப வாய்ப்புண் தீரும். கூட்டு செய்யலாம், இதன் காயை வற்றல் செய்து சாப்பிட இதய வலி குறையும், இந்த வற்றல் மிளகாய் இரண்டையும் வறுத்து உப்பு சேர்த்துப் பொடித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு சாதத்தில் எண்ணை விட்டுக் கலந்து சாப்பிட வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலி குறையும். இதைப் பூண்டு சேர்த்துக் குழம்பு செய்து சாப்பிட நல்ல செரிமாணம் ஏற்படும். பசியைத் தூண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடக் கொடுத்தால் மூளைச் சூடு குறைந்து படிப்பில் நல்ல தெளிவு ஏற்படும்.
சளி
சளி பிடித்தால் சனியன் பிடித்ததுபோல என்பது பழமொழி. அதுவும் நெஞ்சுச் சளி என்றால் மிகவும் தொல்லை, இருமல், சுசாசிப்பதில் சிரமம் கூடவே மலச்சிக்கல்.
இதற்கு அற்புத நிவாரணி ஆடு தொடா இல்லை - ஆடு தொடா இலைக்கு வாசிகா என்று வடமொழியில் பெயர். சித்தமருத்துவத்தில் தெற்குத்தனி இடம் உண்டு. வாசாவா வாசகாகிஷ்டம் போன்ற மருந்துகளின் மூலப்பொருள் ஆடாதோடை தான்.
இதன் துளிர் சிறிது எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தி வர சளி தொல்லை நீங்கும். இதன் வேரை இடித்து சலித்து வைத்துக் கொண்டு சிறிதளவு எடுத்துத் தேன்விட்டுக் குழைத்துச் சாப்பிட துரித நிவாரணம் கிட்டும், சிறுவர் முதல் முதியவர் வரை தேனைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வரும் ப்ரைமரிக்காம்ப்ளக்ஸ் அதாவது டி.வி.யின் ஆரம்பநிலை. இதற்கும் ஆடு தொடா இலை - வேர் அத்தனையும் சிறந்த மருந்து ஆகும்.
நோய்க்கு ஏற்ப ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம். நிச்சயம் குணம் கிட்டும்.
அனுபவ வைத்தியம்-7
காய்ச்சல் வந்தபின் இருமல் வருவது வழக்கம். காய்ச்சல் வரும்முன்னே இருமல் வரும் பின்னே என்று புதுமொழி கூறலாம். இருமும் போது சிறுநீர்க் கசிவு ஏற்படுதித் தர்ம சங்கட நிலை. இதற்கு நிவாரணம் மா இலை. முக்கனியில் மூத்த கனி தரும் மாவிலைக் கொழுந்து 10 அல்லது 15 எடுத்துக் கிள்ளிப் போட்டு 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 1/4 லிட்டராக சுண்டியவுடன் அந்த நீரில் தேன் சேர்த்து மூன்று வேளை பருகவும். இப்படி மூன்று நாட்கள் அருந்திவர நல்ல குணம் கிடைக்கும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
தேள் கொட்டினால் கொட்டிய இடத்தில் மாங்காய்ப் பாலை வைத்துத் தேய்க்க உடன் வலி நீங்கும். மாம்பூவை சேகரித்து உலர வைத்து தலையில் சாம்பிராணி போடுவது போல் புகையை விட்டால் கொசு வராது.
மாவிலை நல்ல கிருமி நாசினி. எனவேதான் நாள் கிழமை திருவிழாப் பந்தல்களில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். அத்துடன் புனித நீர்த் தெளிக்கும் சடங்குகளிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மாவிலைப் பயன்படுத்துகிறோம். மாமரத்து சுள்ளிகளை யாகங்களில் பயன்படுத்துவது சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவே.
இந்த விஞ்ஞான உண்மைகளை மெய்ஞ்ஞானத்துடன் கலந்த நம் முன்னோர் எத்தனை சிறந்த அறிஞர்கள்.
அனுபவ வைத்தியம்-8
உடலில் பித்தம் - வாதம் - கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாகத் திகழும். ஏதாவது ஒன்று கூடினாலோ அல்லது குறைந்தாலோ வியாதிதான். பித்தம் அதிகரிக்கும் போது உபரியாக சுரக்கும் பித்த நீர் பித்தப் பையிலேயேத் தங்கினால் கற்களாக மாறும். குடலில் தேங்கினால் குடற்புண் ஏற்படும். இது தீவிரமாக மாறி புற்று நோயாக மாறும் அபாயமும் ஏற்படும். எனவேதான் பழங்காலத்தில் பேதி மருந்து சாப்பிடும் முறை இருந்தது. இது அதிகப்படி கபம் - வாயு - பித்தம் ஆகியவற்றை வெளியேற்றிவிடும். அது தற்போது சாத்தியமும் இல்லை. எனவே இதற்கு என்னதான் வழி?
நூறு கிராம் இஞ்சியை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கவும், அத்துடன் பத்து கிராம் இந்துப்பு சேர்த்து கலக்கவும். அதன்மீது நான்கு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வெயிலில் வைக்கவும். நீர் சுண்டி ஊறுகாய் பதத்தில் வந்ததும் பாட்டிலில் பத்திரப்படுத்தி சிறிது சாப்பிட பித்தம் காரணமாக ஏற்படும் உபாதைகள் குறையும்.
அனுபவ வைத்தியம்-9
கோடையின் வெப்பம் ஆரம்பித்துவிட்டது. உடல் சூடு, கண் எரிச்சல், வயிற்றில் வலி என பல வெட்கை நோய்கள். இதைக் கட்டுப்படுத்துவது சோற்றுக் கற்றாழை.
இதைக் கீறி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தலையில் தேய்த்துக் களிக்க மூளையில் சூடு குறையும். இதை மோரிலோ அல்லது நீராகாரத்திலோ கலந்து உள்ளுக்கு சாப்பிட குடல் சூடு, மூலம், உடல் எரிச்சல் குறையும். இதை இரண்டாகக் கீறி உள்ளே வெந்தயத்தைத் தூவி இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும். மூன்றாம் நாள் வெந்தயம் முளைத்து விடும். அதை உலர வைத்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்துத் தலைக்குத் தடவி வர கூந்தல் செழித்து வளரும்.
அனுபவ வைத்தியம்-10
கோடை வெப்பம் காரணமாக வரும் நோய் மஞ்சட்காமாலை. குடிநீர் சரியாக கிடைப்பது அரிது. கண்ட கண்ட தண்ணீர் பருகுவதால் எல்லோரையும் தாங்கும் வியாதி இது.
ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் முற்றிய நிலையில் உயிருக்கு ஆபத்து. இதற்கு அற்புத நிவாரணி கீழா நெல்லி. இதனை அலோபதி மருத்துவமும் மறுப்பது இல்லை. பெரும்பாலான மருந்துகள் கீழாநெல்லியிலே மூலப்பொருளாக அமைகிறது.
இது சிறிய செடி வகை நெல்லி இலை போன்ற அமைப்பு. இலையின் அடியில் சிறிய நெல்லிக்காய் போன்ற காய்கள் இருக்கும். இந்த செடியை வேரோடு எடுத்து அரைத்துப் பசும்பால் விட்டு கரைந்து சாப்பிட நல்ல குணம் கிடைக்கும்.
உப்பு, புளி, காரம் தவிக்க வேண்டும். இதை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க மூளை குளிர்ச்சி அடையும். இதன் சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தடவி வர செழித்து அடர்ந்து வளரும்.
அனுபவ வைத்தியம்-11
மனிதனின் தேவைகள் இரண்டு. ஒன்று வருமானம். மற்றொன்று செரிமானம். வருமானம் இல்லையேல் உணவு இல்லை. செரிமானம் இல்லையென்றால் எவ்வளவு வருமானம் வந்தும் என்ன பயன்? சாப்பாடு இருந்தும் சாப்பிட இயலாத அவசர நிலை 'செரிமானத்'திற்கு நல்ல மருந்து 'இருவாட்சி'.
இரட்டை இலைகளுடன் கூடிய கத்துச் செடி வகை இது. மஞ்சள் நிறப் பூக்கள் நள்ளிரவில் பூக்கும். அதாவது இருள் ஆட்சி செய்யும் நள்ளிரவில். எனவே இதற்கு இருவாட்சி என்னும் காரணப் பெயர்-இது மருவி 'திருவாட்சி' என்று அழைக்கப்படுகிறது. இதன் பூக்கள் இறைவனுக்கு உகந்தது.
இதன் இலையை வதக்கி அத்துடன் உப்பு - புளி - காயம் - உளுத்தம் பருப்பு வறுத்து சேர்த்துத் துவையல் அரைத்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வர செரிமானம் ஏற்படும் - சிறு குழந்தைகளுக்கு மேற்படி இலையுடன் ஓமம் சேர்த்துச்சாறு காய்ச்சி வைத்துக் குடிக்க நல்ல நிவாரணம் கிட்டும்.
அனுபவ வைத்தியம்-12
தற்கால வாழ்வில் அதிக பரபரப்பு. அதன் காரணமாக படபடப்பு (டென்ஷன்) உயர் ரத்த அழுத்தம். முடிவில் இதயத்தில் பிரச்சனை. அதிக அளவில் இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகளும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதய நோயை எளிதில் கட்டுப்படுத்தும் எளிய மருந்து 'செம்பருத்தி'. இந்தப் பூவை பாலில் இட்டுக் காய்ச்சி அருந்திவர இதய நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கிடைக்கும்போது சேகரித்து உலர்த்தியும் உபயோகிக்கலாம்.
இதன் இலையை அரைத்து தலைக்குத் தேய்த்துவர மூளை குளிர்ச்சி அடையும். முடி செழித்து வளரும். பூக்களைத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வரக் கூடுதல் நன்மை கிடைக்கும்.
கைப்பிடி அளவு ஊறவைத்தப் புழுங்கல் அரிசி, மேற்படி இலை பிடி, அளவு, உப்பு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிடல் குடல் உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் தீரும்.
வயிற்றுப் புண்
அறு சுவையும் சமச்சீர் அளவில் அமைந்தால் தான் நல்ல ஆரோக்கியம் கிட்டும். அதை நாம் தற்போது மறந்து விட்டோம். முக்கியமாக துவர்ப்பு உணவை தவிர்த்து விட்டோம். அதன் காரணமாக அனைவரும் குடற்புண், இரைப்பைப்புண் என்று மருத்துவரிடம் ஓடும் நிலை. இது குழந்தைகள் - பெரியோர் -முதியோர் என எல்லாத் தரப்பினரையும் ஆட்டும்விக்கும் நோய். இதற்கு அற்புத நிவாரணி வாழைப்பூ.
இதைப் பருப்புடன் சேர்த்துப் பொரியல், கூட்டு அல்லது துவையல் என அடிக்கடி சாப்பிட்டு வர வயிற்றுப் புண்ணைத் தவிர்க்கலாம். வாழைப்பூவின் உள் மொட்டைக் குழந்தைகளுக்கு பாட்டிகள் பச்சையாக உண்ணக் கொடுப்பது வழக்கம். குழந்தைகளும் அதனை விரும்பிச் சாப்பிடுவர். தற்போது இந்தப் பழக்கங்களைக் கைவிட்டதால வந்த விளைவே மேற்படி நோய்கள்.
இதை இடித்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நோய்கள் மட்டுப்படும். வாழையின் மருத்துவக் குணத்தை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் நீத்தார் நினைவுச் சடங்குகளின் போது வாழையிலை, காய்,பூ,கனி, தண்டு அனைத்தையும் பயன்படுத்தி வந்தார்கள்.
அனுபவ வைத்தியம்-13
மழைக்காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்கும் தருணம். இந்த பருவ நிலை மாற்றத்தின் போது அதிகம் தாக்கும் நோய் வயிற்றுப்போக்கு. இதைக் காலரா என்றும் சொல்வது உண்டு.
இது மிகவும் கொடுமையான வியாதி. நீர்ச்சத்து இழப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும். இதற்கு எளிமையான மருந்து. அதே சமயம் துரித நிவாரணம் தருவது புளியம்பட்டை, முற்றிய புளியமரத்துப் பட்டையை நாலு விரற்கடை அளவு வெட்டி எடுத்து அடுப்பில் போட்டு நன்கு எரிக்கவும். தணலாக மாறியபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு மூடி விடவும். சூடு ஆறிய பின் திறந்தால் சாம்பலாக இருக்கும். அதை தேனில் குழைத்து முதல் மூன்று வேளை சாப்பிட நன்கு குணம் தெரியும். ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இரண்டு சிட்டிகை மருந்தை சிறிது தேனும் வெந்நீரும் கலந்து சங்கால் புகட்டலாம்.
அதன் கூடவே உப்பு - சர்க்கரை (சீனி) கலந்த வெந்நீரை அடிக்கடிக் கொடுத்து வர நீர்ச்சத்து இழப்பு சமன் செய்யப்படும்.
அனுபவ வைத்தியம்-14
மழைக்காலம் வரப் போகிறது கூடவே சளிக்காலமும் வந்து விடும். அதுவும் குழந்தைகள் மழையில் நனைந்து விளையாடி சளி, சுரம், இருமல் என பல தொந்தரவுகள். இதற்கு வருமுன் காத்தலாக தினமும் காலை, மாலை இரண்டு ஓமவல்லி இலைகளை சாப்பிட்டு வந்தால், இவை வரவிடாமல் தடுக்கும். ஒருவேளை வந்து விட்டால் ஓமம், ஓமவல்லி, தூதுவளை,
ஆடாதோடா அனைத்தையும் கஷாயமாக வைத்துத் தேன்விட்டு சாப்பிடலாம். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
அத்துடன் தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் அடிக்கடி மருத்துவரை நாடவேண்டிய அவசியம் இருக்காது.
நவீன உணவு கலாச்சாரம் அடிக்கடி ஓட்டல் சாப்பாடு போன்றவற்றால் செரிமான மின்மை, புளித்த ஏப்பம், குமட்டல், பசியின்மை போன்றவை ஏற்படுகிறது. அதற்கு என்று மாத்திரைகளை நாட வாலுபோயி... கத்தி வந்தது டும்...டும்... என்பது போல புதிய தொந்தரவுகள். இதற்கு எளிமையான மருந்து இஞ்சி.
100 கிராம் இஞ்சியைத் தோல்சீவி மெல்லிதாக நறுக்கவும். அதை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு இஞ்சி நனையும் வரை எலுமிச்சை சாறு விடவும். சிறிது உப்பு போட்டுக் கிளறி வெயிலில் வைக்கவும். (இந்துப்பு சேர்த்தால் கூடுதல் நலம்) சாறு சுண்டி உலர்ந்ததும் நன்கு காய வைத்துப் பத்திரப் படுத்தவும்.
மேற்படி தொந்தரவு ஏற்படும் போது சிறிது வாயில் அடக்கிக் கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அனுபவ வைத்தியம்-15
மனிதனின் எதிரிகள் இரண்டு, ஒன்று மனச்சிக்கல், இரண்டு மலச்சிக்கல். பலவித நோய்களுக்கும் காரணம் மலச்சிக்கலே. இதற்கு அற்புத நிவாரணி கடுக்காய். திப்பிலி - சுக்கு - கடுக்காய் இணைந்த சூரணம் மிகவும் சக்தி வாய்ந்தது. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என நம்முன்னோர் கூறி இருக்கின்றனர்.
கடுக்காய் கஷாயம் அல்லது பொடியை இரவு சாப்பிட்டால் காலையில் எளிதாக கழிவுகள் வெளியேறும். குடல் சுத்தமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும். கடுக்காயை இழைத்துப் பற்றுப் போட சேற்றுப்புண் குணமாகும். இதை தேங்காய் எண்ணெய் சேர்த்துத் காய்ச்சித் தலைக்குத் தடவி வர முடி உதிர்தல் குறையும்.
அனுபவ வைத்தியம்-16
நம் நல வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது வாழை. எனவே நலவாழ்வு தரும் இதற்கு வாழை என்ற காரணப் பெயர் அமைந்தது எனலாம். இதன் இலை, பூ, காய், பழம், தண்டு, பட்டை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.
இதன் சிறப்பை உணர்த்தவே அனைத்து மங்கல நிகழ்வுகளிலும் வாழை மரம் கட்டுகிறோம். வாழை இலை சிறுநீர் பெருக்கி. அத்துடன் உடலில் உள்ள கெட்ட நீர்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவேதான் அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை விளக்கெண்ணெய் தடவிய வாழை இலையில் படுக்க வைக்கிறோம். தற்போதைய மூலிகைக் குளியல் மருத்துவ முறையிலும் வாழை இலை பயன்படுகிறது.
பண்டைய நாட்களில் நம் முன்னோர் வாழை இலையில் தான் உணவு அருந்துவது வழக்கம். சூடான உணவை இலையில் வைக்கும்போது இலை சற்றே வெந்து அதன் மருத்துவகுணம் உணவில் கலந்து விடும். எனவேதான் பண்டிகை விரதம் போன்ற நாட்களில் கட்டாயம் வாழை இலையில் சாப்பிடுகிறோம். அதோடு படையல் செய்த இலையை அடுத்தவர்க்குக் கொடுக்கக்கூடாது. வீட்டில் உள்ளவர்களே சாப்பிட வேண்டும் என மறைமுகக் கட்டுப்பாடுகள். எனவே சூடான உணவை இலையில் பொதித்து சாப்பிட்டு வர பல்வேறு வியாதிகள் குணமாகும்.
சிறுகுழந்தைகளுக்கு வாழை இலையைக் குடிநீராக்கிக் கொடுக்கலாம். அத்துடன் வாழை இலை கொழுக்கட்டை, வாழை இலை வடகம் செய்து அனைவரும் சாப்பிட உணவே மருந்தாகி நலவாழ்வு கிட்டும். வாழையடி வாழையாக வளமான வாழ்வு கிட்டும்.
அனுபவ வைத்தியம்-17
உஷ்ணத்தால் வயிறு வெந்து புண் ஏற்படும்போது வயிற்றுவலி - பசி இன்மை, செரிமானக் கோளாறு எனப் பல உபாதைகள். வயிற்றுப் புண்ணுக்கு அற்புத நிவாரணி வெந்தயம். வேக்காளத்தை நீக்கும். அயன் சத்து நிரம்பியது. எனவே வெந்தயம் என்ற காரணப் பெயர்.
வெந்தயத்தைச் சற்றே வறுத்துப் பொடி செய்து காலை மாலை 1 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகள் இதன்படி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு மட்டுப்படும்.
பச்சரிசி நெய் வெந்தயம் பூண்டு தேங்காய்ப்பால் சேர்த்துக் கஞ்சி செய்து சாப்பிட்டால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வயிற்று வலி நீங்கும். இதை எல்லோருமே சாப்பிடலாம். உளுந்து சேர்க்காது வெந்தய தோசை செய்து சாப்பிடலாம். இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர வயிற்றுப்புண் நம்மை நெருங்காது.
மேலும் வெந்தயத்தை முதல்நாள் ஊறவைத்து மறுநாள் அரைத்து தலை முழுகி வர மூளை குளிர்ச்சி அடையும். பொடுகு மறையும். இதைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்துத் தலைக்குத் தடவி வர கூந்தல் செழித்து வளரும்.
அனுபவ வைத்தியம் -18
பொதுவாக நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால் தான் பல்வேறு நோய்களின் தாக்குதல். அப்படிப்பட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கும் அற்புத நிவாரணி நெல்லிக்காய். எனவே தான் ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனி வழங்கினான். ஒரு ஆப்பிளை விட ஒரு நெல்லிக்காயில் சத்து அதிகம். எனவேதான் ஏழைகளின் ஆப்பிள் என்று இதற்குப் பெயர். நெல்லிக்காய் லேகியம் மிகச் சிறந்த மருந்து. இது காயகல்ய மூலியை. அதாவது எவ்வளவு நாட்கள் ஆனாலும் இதன் குணம் மாறாது.
இதனை வற்றலாகக் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது கருப்பட்டி தேன் விட்டு லேகியமாகக் கிளறி சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். ஊறுகாய் துவையல், பச்சடி செய்து சாப்பிடலாம். நெல்லிவற்றலும் மஞ்சலும் சேர்த்து சூடு செய்து நெஞ்சு முகம் கழுத்தில் பற்றுப் போடசளி, சைனஸ், மூச்சுத் திணறல் குணமாகும். இந்த வற்றலை ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர சூடு நீங்கி கூந்தல் செழித்து வளரும். தலையில் அழுக்கு பொடுகு பேன் நீங்கும்.
அனுபவ வைத்தியம்-19
நமது உடலில் வலிவு குன்றும் போது ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைந்து வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை ஆங்கிலத்தில் ஈசனோபீலியோ என்று கூறுவார்கள்.
இதன் காரணமாக சளித் தொந்தரவு, அடிக்கடி சுரம் என்று வாட்டி வதைக்கும். உடல் அசதி, சோர்வு என தொடரும் தொல்லைகள். இதற்கு எளிமையான மருந்து வேளைப்பூ, இலை, மற்றும் விதை. இது செடி ரகம் உச்சியில் மெல்லி வெண்ணிற இதழ்கள் கொண்ட பூக்கள் பயத்தங்காய் போன்ற காய்கள், ஐந்து இதழ்களுடன் கூடிய இலைகள்.
இந்தப் பூக்களை வெற்றிலையில் வைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும். இதன் இலைகளை வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.இதன் விதைகளை மிளகாயுடன் வறுத்து உப்பு சேர்த்துப் பொடித்து சோற்றில் கலந்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்.
சிறுகுழந்தைகளுக்குப் பூவைக் கஷாயம் வைத்துக் கொடுக்க நல்ல பலன் கிட்டும்.
அனுபவ வைத்தியம்-20
ஒவ்வாமைக்கு அற்புத நிவாரணி மிளகு. 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. எனவேதான் விஷக்கடிக்கு மிளகு மந்திரித்துக் கொடுப்பது என்ற வழக்கம் ஏற்பட்டது.
மிளகை அரைத்துச் சூடு செய்து பற்றுப் போடத் தலைவி - மூட்டு வலி நீங்கும். மிளகையும் ஜீனியையும் கருக்கிக் கஷாயம் வைத்து சாப்பிட உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் நீங்கும். மிளகை ஊசியில் கோர்த்து விளக்கில் காட்டி அந்தப் புகையை மூக்கில் இழுக்க மண்டையில் நீர்க்கட்டு (சைனஸ்) நீங்கும். மிளகைப் பசும்பால் விட்டு அரைத்து சூடு செய்து தலையில் தேய்த்து தலைமுழுகி வர தூக்கமின்மை, மனஅழுத்தம், தலைபாரம், உற்சாகமின்மை அகலும்.
எனவேதான் துக்க வீட்டில் மூன்றாம் நாள் அன்று ரத்த சம்மந்தம் உடைய நெருங்கிய உறவுகள் மிளகுப்பால் தேய்த்துத் தலை முழுக வேண்டும் என்று சம்பிரதாயம் ஏற்படுத்தினர் நம் முன்னோர். அத்துடன் மிளகுப் பொடி - மிளகு ரசம், மிளகுக் குழம்பு செய்து சாப்பிட உடல்நலம் சிறக்கும்.
அனுபவ வைத்தியம்-21
வாயுவினால் பல தொல்லைகள். இதில் மூட்டு வாதம் எனும் கீல்வாதம் மிகவும் தொல்லை கொடுக்கக்கூடியது. கை கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. வலி உயிர் போகும். இதற்கு சிறந்த நிவாரணி.
வாத நாராயணன்!
ஆக்கல் பிரமன் - அழித்தல் சிவன் - காத்தல் நாராயணன். வாத நோயிலிருந்து நம்மைக் காப்பதால் இந்தக் காரணப்பெயர். இது மர வகையைச் சேர்ந்தது. இந்தக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வாதநோய் முற்றிலும் குணமாகும். மேலும் வீக்கம் இருந்தால் இந்த இலையை வெந்நீரில் இட்டு நன்கு கொதித்த பின் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும். இந்த இலையை வதக்கியும் ஒத்தடம் கொடுக்கலாம். இலையை அரைத்து சூடு செய்தும் பற்றுப்போடலாம்.
அனுபவ வைத்தியம்-22
மார்புச் சளியால் அவதிப்படும்போது மூச்சுத்திணறல்-லேசாய் காய்ச்சல், குளிர் இருமல் போன்றவையும் கூட்டணி அமைத்து வாட்டும். இதற்குச் சிறந்த நிவாரணி கல்யாண முருங்கை. இது மரவகையைச் சார்ந்தது. சிவப்பு நிற பூக்களும், முருங்கைக்காய் போன்ற காய்களும் கொண்ட கிளைகளில் முள் உண்டு. எனவே முள் முருங்கை என்ற பெயரும் உண்டு.
இதன் இலையை நசுக்கி இரண்டு சங்கு சாறு எடுத்து அத்துடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட சளி எளிதில் வெளியேறும். இந்தச் சாற்றில் பழுக்கக் காயவைத்த இரும்புக்கரண்டியை முக்கிக் கொடுத்தால் கூடுதல் நிவாரணம். அப்போது சற்று இரும்புச்சத்து சேர்கிறது. எனவேதான் இந்த ஏற்பாடு. திருஷ்டி - பயந்த குணம் போகும் என்று மறைமுகமாகக் கூறுவார்கள் பெரியவர்கள்.
ஊறவைத்தப் புழுங்கல் அரிசி ஒரு கைப்பிடி இந்த இலை கைப்பிடி அளவு இவை இரண்டையும் மசிய அரைத்து உப்பு - மிளகு - சீரகம் தட்டிப் போட்டு அடை சுட்டு சாப்பிட பெரியவர்களுக்கு சளி எளிதில் வெளியேறும். நன்கு பசி எடுக்கும்.
அனுபவ வைத்தியம்-23
வாதம்-பித்தம்-கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாதம் அதிகரித்தால் உடல் வலி - பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு பசியின்மை, வாந்தி, தூக்கம் இன்மை, கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு.
இந்த மூன்றையுமே கட்டிப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம் பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய், காயம், உளுத்தம் பருப்பு வறுத்து வைத்துப் புளி, உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும். இது இட்லி, தோசை, மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி - சாதத்தில் பிசைந்து எண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
வாய்வு - பித்தம் - கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது. இதனை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும். எனவேதான் பண்டைய நாளில் அப்பளம் செய்யும்போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள். உணவே மருந்து என்று உண்டார்கள். வென்றார்கள்.
வாதம் - பித்தம் - கபம் மூன்றும் நம் உடல் நிலையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.
பித்தம் அதிகரிக்கும்போது உடல் நலக்குறைவு ஏற்படும். வாய்க்குமட்டல், தலை சுற்றல், பசி, ருசியின்மை - தூக்கமின்மை ஆகியவை ஏற்படும். இதைக் கட்டுப்படுத்தும் அற்புத நிவாரணி வேப்பம்பூ. இதைக் கோடைக்காலத்தில் சேகரித்துக் காயவைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை வறுத்துப் புளி மிளகாய் உப்பு சிறிது வெல்லம் சேர்த்துத் துவையல் செய்து சிறிது வாயில் அடக்கிக் கொண்டால் நல்ல குணம் கிடைக்கும். வெந்தய ரசம் வைக்கும் போது வெங்காயத்திற்குப் பதிலாக வேப்பம்பூவைச் சேர்த்து ரசம் வைக்கலாம்.
பூர்வீக மருந்து
ஆட்கொல்லி நோயின்
அச்சுறுத்தல் ஏற்பட்டு
ஆண்டுகள் பல ஆயினும்
முற்றிலும் குணப்படுத்த
முழுமையான மருந்தில்லை என்பதே
மூச்சு முட்ட வைக்கும் உண்மை
பாலியல் நோய்க்கு
பாதுகாப்பான உறவை மட்டுமே
பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்
ஆட்கொல்லி நோயை
அறவே நீக்கும்
அற்புத மருந்தொன்று ஒன்று
பழைய மருந்து ஆனாலும் -நன்கு
பலனளிக்கும் மருந்து
பலருக்கும் தெரியாத மருந்து.
எம்மவர் கண்ட மருந்து - இது
எப்போதும் பலனளிக்கும் மருந்து
எந்நாட்டவர்க்கும் ஏற்ற மருந்து - நம்.
புண்ணிய பாரதம் கண்ட
பலனடக்கம் எனும்
பூர்வீக மருந்து.
-மாங்குடி பாலா.
அனுபவ வைத்தியம்-24
....தும்பிக்கையான்....
"கையான் தகரை", இதைக் கரிசலாண்கண்ணி என்றும் கூறுவர். நீர் நிரம்பிய இடங்களில் செழித்து வளரும். சொரசொரப்பான இலையும் வெள்ளைப் பூக்களும் கொண்டது இது கல்லீரல், பித்தப்பை நோய்களைக் குணப்படுத்தும் அற்புத மூலிகை.
மஞ்சள்காமாலை வந்தவர்கள் கீழாநெல்லிச் சாற்றுடன் இதன் சாற்றையும் அருந்திவர நல்ல பசி எடுக்கும். துரித நிவாரணம் கிட்டும். இதனால் பல் துலக்கினால் ஈறுகள் பலப்படும். வாய்ப்புண், வாய் துர்நாற்றம் அகலும்.
உமிழ்நீர் சுரப்பிகள் சரிவர வேலை செய்யாத போது தொண்டையில் கசப்பும், குமட்டலும் இருக்கும். இந்த இலையை அடிநாக்கில் சுவை மொட்டுகள் மீது அழுத்தித் தேய்த்து வர சுரப்பிகள் நன்கு வேலை செய்து கசப்பு மாறும். தொண்டையில் உள்ள கோழையும் வெளியேறும்.
இதன் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கூந்தல் செழித்து வளரும். சாற்றை நேரடியாகத் தலையில் தேய்த்துக் குளிக்க மூளைக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். நல்ல உறக்கம் வரும்.
அனுபவ வைத்தியம்-25
முழங்கால் முழுங்கைகளில் அடிக்கடி வலி ஏற்படும், நீட்டவோ மடக்கவோ, அதிக சிரமம்-வலி உயிர்போகும். எந்தந்த தைலம் தேய்த்தாலும் சிறிது நேரம் தான் கேட்கும் பின் முன்னிலையிலும் அதிகமான வலி. இதற்கு முடக்கற்றான் நல்ல மருந்து. முடக்குவாதம் போக்கும் மூலி இது. எனவே முடக்கு அற்றான் என்ற காரணப்பெயர்.
இந்த இலையை கைப்பிடி அளவு 4 மிளகாய் வற்றல் சிறிது உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சிறிது அனைத்தையும் வறுத்து உப்பு, புளி சேர்த்து சாப்பிட்டுவர வலி நீக்கும்.
இந்த கீரையை கைப்பிடி அளவு 1 டம்ளர் தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.
இந்த கீரையுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொதிக்க வைக்க வைத்து மேல் பூச்சாகவும் உபயோகிக்கலாம்.
புழுங்கல் அரிசி சிறிது வெந்தயம் முடக்கு அற்றான் இலை அனைத்தையும் முதல் நாள் அரைத்து வைத்து மறுநாள் தோசை வார்க்கலாம்.வாரம் ஒரு முறை முடக்கு அற்றான் இலையை உணவோடு உண்டு வந்தால் முடக்குவாதம் மெல்ல, மெல்ல விலகும்.
அனுபவ வைத்தியம்-26
....துப்பார் திருமேனி தும்பி....
இந்தத் தும்பை ஒரு அற்புதமான மருந்து. காலில் முள் தைத்தால் சமயத்தில் அறுவை சிகிச்சை வரை நிலைமை மோசமாவது கண்கூடு. இதற்கு எளிய மருந்து தும்பை.
10 தும்பை இலைகயை வெற்றிலையில் வைத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். அத்துடன் சுண்ணாம்பில் அவர் அவர் எச்சிலைச் சேர்த்துச் குழப்பி முள் தைத்த வாயில் அப்பவும். வீக்கம் வடிந்து முள் மேலே வந்து விடும். ஆணி விழுந்து இருந்தாலும் மேற்படி முறையில் பிரயோகம் செய்யக் காலப்போக்கில் ஆணி கரைந்துவிடும். கற்பனை அல்ல அனைத்தும் நிஜம்.
தும்பைச் செடியை வேரோடு பறித்து அரைத்துப் பூசி வர சரும நோய்கள் அகலும். பிடி தும்பைப் பூவை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சித் தலை மூழ்கி வர மண்டைக்கனம் - சைனஸ் அகலும். புகையிலைப் பொருட்கள் தவிர்ப்பது நலம்.
அனுபவ வைத்தியம்-27
ஆறாத ரணங்கள்
கெண்டைக்காலில் முதலில் கொப்புளம் ஏற்படும். பின்னர் புண்ணாகி நீர் வடியும். எவ்வளவு வைத்தியம் செய்தாலும் மீண்டும், மீண்டும் தலைகாட்டும். காலே நிறம் மாறிக் கருத்துவிடும். வில்லங்கமான சரும வியாதி இது. குழந்தைகளுக்கு வந்தால் 'கால்கடுவன்' என்று பெயர். பெரியவர்களுக்கு வந்தால் நரம்புச் சிலந்தி என்று பெயர். இது நீர்பட்ட இடமெல்லாம் பரவும். இதற்கு அற்புத மருத்துவம் காண்போமா?
சுடுசோற்றில் புளித்தத் தயிர்விட்டுப் பிசைந்து மிதமான சூட்டில் புண்மீது அப்பவும். அதன் மீது பூவரசன் இலையை ஒட்டி நன்கு கட்டவும். மறுநாள் வெந்நீர் ஊற்றிப் புண்ணை நன்கு கழுவவும். மேலே உள்ள அழுக்குகள் நீங்கிப்புண் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் மீது நன்கு கனிந்த பப்பாளிப்பழத்தைப் பிசைந்து அப்பவும். அதன் மீது வெற்றிலையை ஒட்டிக்கட்டவும். உள்ளே உள்ள துர்நீர் வடிந்து வீக்கம் குறையும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும். மீண்டும் வராது.
அனுபவ வைத்தியம்-28
இது நாகரீக உலகம். எனவே வீட்டில் கழிப்பறை, குளியல் அறை வரை வழவழப்பான மொசைக் தரை. இது காலத்தின் கட்டாயம். இதன் மறுபக்கம் முதியோரும், குழந்தைகளும் அடிக்கடி வழுக்கி விழுவது. இதற்குப் பெரிய அளவில் எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவம் என மொசைக் தரைச் செலவுடன் போட்டியிடும் மருத்துவச்செலவு.
எலும்பு முறிவு இன்றி நரம்பு பிசகுதல், தசை பிறழ்தல், ரத்தக்கட்டு போன்றமைக்கு எளிமையான மருத்துவம் காண்போமா?
ஒரு கைப்பிடி அளவு நெல்லை மண்சட்டியில் இட்டு கருகும் வரை வறுக்கவும். பின்பு நைசாகப் பொடிக்கவும். காப்பித்தூள் கலரில் பொடி இருக்கும். சாதம் வடித்த சூடான கஞ்சியில் சிறிது எடுத்து மேற்படிப் பொடியை அதில் கலக்கவும். சேறு பதத்தில் கலந்து மிதமானச் சூட்டில் பற்றுப் போடவும்.
அரிசி கழுவிய கழுநீரில் புளிய இலை - ஒதியன் இலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். மறுநாள் அதை சூடு செய்து பற்றுப்போட்டதை நன்கு கழுவவும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும்.
அனுபவ வைத்தியம்-29
பழங்காலத்தில் மூலிகைப் பற்றிய குறிப்புகளை இருபொருள் உடைய பாடல்களாகவே கூறி இருக்கின்றனர். உதாரணமாக...
"வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலரான்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூங்கொண்
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு."
-மூதுரை.
மாமலரான்: தாமரைப்பூவுக்கு வாக்கு - மனம் - நோக்கம் - உடல் அனைத்தையும் சரி செய்யும் குணம் உண்டு. இது விநாயகர் துதி மட்டுமல்ல. வியாதி நீக்கும் பச்சிலைகள் பற்றிய பாடலும் கூட.
துப்பார்=துளசி, திருமேனி=குப்பைமேனி, தும்பி=தும்பை, கையான்=கையான்தகரை. திரு என்ற அடைமொழியுன் கூடிய குப்பை மேனிப் பற்றி பார்ப்போமா?
நமக்கு, சமயத்தில் சக்திக்கு மீறிய வேலைகளை உள்ள வலுவால் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம். அப்போது கூடுதல் சக்தி வேண்டி பல்வேறு சுரப்பிகளும் அதிக திரவங்களைச் சுரக்கின்றன. வேலை முடிந்ததும், மீதி இருக்கும் திரவங்களால் உடல் சோர்வு, மனச்சோர்வு, கை கால் வலி. அசதி, பசி, ருசியின்மை, எதிலும் பற்றின்றி விரக்தி போன்ற பக்க விளைவுகள் அதாவது நமது உடலில் நெகிழும் தன்மை அதிகரித்து விடுகிறது. இதைத் பொதுவாக "நெகிழ்ச்சி" என்கிறோம். "கண் திருஷ்டி" என்கிறோம். இதற்கு அருமையான மருந்து குப்பைமேனி.
இதன் வேரை நசுக்கி அத்துடன் இரண்டு தேக்கரண்டி சீனியைச் சேர்த்துக் கருக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். அரை டம்ளராக சுண்டியதும் சிறிது தேன் விட்டு மூன்று வேளை அருந்த உடல் பழைய நிலை அடையும்.
இதன் இலையை மசியல் செய்து சாப்பிட குடற்புண் குணமாகும். இந்த இலையுடன் சிறிது உப்பு பூண்டு சேர்த்து அரைத்துப்பற்றுப் போட சொரி, சிரங்கு, தேமல் குணமாகும்.
அனுபவ வைத்தியம்-30
இன்று எளிய அனுபவ வைத்திய முறைகளை மக்கள் மறந்து விட்டனர். எனவே சின்னச் சின்ன விஷயத்துக்கும், மருத்துவமனை செல்லும் நிலை. எனவே பழமையான, எளிமையான அனுபவ வைத்திய முறைகளைப் பார்ப்போமா?
செரிமானக் கோளாறு:
பசியின்மை - ருசியின்மை - புளித்த ஏப்பம் - நெஞ்செரிச்சல் - வயிற்று உப்புசம். இந்தக் கோளாறுகள் இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் ஏற்படும் ஒரு வியாதி. இது முற்றினால் வயிற்றுப்புண் (அல்சர்) ஏற்படும்.
இதற்கு எளிமையான மருந்து சீரகம். சீராக உள் உறுப்புகளைக் காப்பதால் இதற்குச் சீரகம் என்ற காரணப்பெயர்.
நூறு கிராம சீரகத்தை மண்சட்டியில் காப்பிபொடி நிறம் வரும் வரை நன்கு வறுக்கவும். அதனை நன்கு பொடி செய்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று வேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும். நல்ல நிவாரணம் கிடைக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தேனில் குழைத்துக் கொடுக்கலாம்.
அனுபவ வைத்தியம்-31
தொண்டையில் சதை வளர்ச்சி:
தொண்டையில் வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டைக் கரகரப்பு, இருமல், காதுவலி, அடிக்கடி காய்ச்சல் இவை தொண்டையில் சதை வளர்ச்சியின் அறிகுறிகள். இது முற்றினால் (டான்சில்), அறுவை சிகிச்சை வரை சென்றுவிடும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் நோய் இதை நீக்க எளிய சிகிச்சை காண்போமா?
ஒரு துண்டு பப்பாளிக்காயை அம்மியில் நசுக்கிச் சாறு எடுக்கவும். ஒரு சிறிய கரண்டி அளவு சாறும் அதே அளவு தேனும் கலந்து தொண்டைக்குள் (டான்சில்) தடவி வந்தால் எச்சிலாக ஊற்றித் துர்நீர் வெளியாகி வீக்கம் வடிந்துவிடும் மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை இன்றியே முற்றிலும் குணமாகிவிடும் இதைக் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம். வாயில் அடிக்கடி ஒரு சொட்டு மேற்படிச் சாற்றை விட்டு மெல்ல விழுங்கச் செய்யலாம்.
பாரம்பரிய இயற்கை மருத்துவம்..!
1. மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.
2. ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும்.
3. வாழைபட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமாகும்.
4. கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.
5. வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.
6. புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
7. சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வந்தால் உடைந்த கட்டிகள் குணமாகும்.
8. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி குணமாகும்.
9. அகத்தி கீரை சாறு,அகத்தி கீரை பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நீங்கும்.
10 .மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
No comments:
Post a Comment