Sunday, March 24, 2013

சோற்றுக் கற்றாழை 3


சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம் ( பாகம் 2)

March 19, 2013 by: machamuni
சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 1 )ஐ படித்துவிட்டு இந்த சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் தயாரிப்புக்கள் (பாகம் 5) மூலச் சூரணம்( பாகம் 2 ) ஐ தொடரவும்.
இது வரை நாம் வெளியிட்ட பதிவுகளில்  கற்றாழையைப் பற்றிய இந்தப் பதிவை வெளியிடுவதில் மிகப் பெருமை அடைகிறோம் .
aloevora
இந்த மருந்து கலவையில் சேரும் இரண்டாவது பொருளான  சோற்றுக் கற்றாழைக்கே ஒரு தனிப்பதிவு எழுத வேண்டும்.அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூலிகை இது.
சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும்.இந்தக் குமரியின் படத்தை இம்ப்காப்ஸ் ன் சித்த மருந்து செய்முறைகள் புத்தகத்திலும், ஆயுர்வேத மருந்து செய்முறைகள் புத்தகத்திலும்,யூனானி மருந்து செய்முறைகள் புத்தகத்திலும் முதல் பக்கத்தில் போட்டிருப்பதில் இருந்து இதன் முக்கியத்துவம் உங்களுக்கு புரியும் என்றே நினைக்கிறேன் .
sortuk karttaaLai 1
sortuk karttaaLai 2
sortuk karttaaLai   3
எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை.இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான  அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.
சோற்றுக் கற்றாழையை உணவே மருந்தாக தயாரிக்கப்படும் சோற்றுக் கற்றாழைப் பாயசம் செய்யும் முறைகளை இங்கே விவரிக்கிறோம்.
சோற்றுக்கற்றாழையின்
உள்ளே இருக்கும் சதை பாகம் – 2 கப்,
பால் – 2 கப்,
பனங்கருப்பட்டி – தேவைக்கேற்ப,
முந்திரி, திராட்சை – ஒவ்வொன்றும் 10 எண்ணம்,
ஏலக்காய் – 2,
நெய் – 1 டீஸ்பூன்.
சோற்றுக் கற்றாழைப் பாயசம் எப்படிச் செய்வது?
சோற்றுக்கற்றாழையின் இலையைக் கீறினால் உள்ளே சோறு போன்ற வெள்ளையான சதைப்பற்றான பாகத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும் . அதை சிறிய துண்டுகளாக வெட்டி, சுமார் பத்து முறை தண்ணீரில் நன்கு அலசவும். காய்ச்சிய பாலில் அதைச் சேர்த்துக் கொதிக்க விட்டு ஆறவிடவும். பனங்கருப்பட்டியில் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, வடிகட்டவும்.
பால் – கற்றாழை கலவையில் விட்டு, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும். நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்த்துப் பரிமாறவும். உடல் சூட்டைத் தணிக்கும். வெள்ளைப் படுதலை சரியாக்கும். மகப்பேறு பெறும் வாய்ப்பினை அதிகரித்து, கருப்பை வளர்ச்சிக்கும் உதவும்.கீழ்க் கண்ட பல பிரச்சினைகளை சரியாக்கும்.
உணவே மருந்து மருந்தே உணவு என்ற ரீதியில் கொடுக்கப்பட்ட உணவுக்குறிப்பு இது.
2)சோற்றுக் கற்றாழை:-
சோற்றுக்கற்றாழை குமரி என்றழைக்கப்படுவது ஏனெனில் எந்தக் குமரியையும் காமத்தில் அடக்கும் வல்லமையை இந்தக சோற்றுக் கற்றாழைக்கு உண்டு.விந்து நீக்கம் (சுய இன்பம் செய்வதனாலும், அதீதமான உடலுறவு கொள்வதனாலும்{ஒரு நாளுக்கு பல முறை உடலுறவு கொள்வது }) ஆனதால் ஏற்பட்ட மூலச் சூட்டின் காரணமாகவே மலக்கட்டு ஏற்பட்டு  மூலமும் , பவுத்திரமும் உண்டாகின்றன.ஆனால் இதனால் ஏற்பட்ட  தாது நஷ்டத்தையும் ,அதனால் ஏற்பட்ட சப்த தாதுக்களில் ஏற்பட்ட குறைபாடுகள்,ஆகிய  இவற்றைக் கூண்டோடு தொலைக்கும் வல்லமை உள்ளது இந்த சோற்றுக்கற்றாழை.
அதனால் பல தீய பழக்க வழக்கங்களினால் இழந்த தாது நஷ்டத்தை ஈடு   செய்து உடலை குமரனாக்குவதால் இதற்கு ஈடு இணை எந்த மூலிகையையும் சொல்ல முடியாது.அவ்வளவு சிறப்பு வாய்ந்த மூலிகை.மேலும்  மூட்டு வலிகள், வெட்டையினால் உண்டான கைகால் மூட்டுக்கள் அசையாத தன்மைகள் இவற்றையெல்லாம் யாரும் கற்பனை செய்து பார்க்காத அளவில் தொலைத்து நாசமாக்கும்.
நாம் இந்த வலைத் தளத்தை உங்களுக்கு கொண்டு வருவதில் பெருமை கொள்ள  மருந்துகளில் ஏதேனும் உண்டென்றால் அது இந்த  சோற்றுக்கற்றாழையேதான்.அதென்ன இது அவ்வளவு பெருமை உடையதா?? என்று நீங்கள் கேட்டால்  இதைவிட பெருமை உடையது எமக்குத் தெரிந்த வரை வெறொன்றில்லை!!!!!!!!!
சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது.எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது.கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
பொல்லாமே கங்க பம்பு ழுச்சூலை குஷ்டரச
மல்லார்மத் தம்பகந்த ரங் குன்ம-மெல்லாம்விட்
டேகு மரிக்கு மெரிச்சற் கிரிச்சமு
மாகு மரிக்கு மருண்டு.
நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள பித்த கிரிச்சரம் ( அரிப்பும் , பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு ) ஆகிய வியாதிகள் மருண்டு  ஓடும் என்று பொருள்.மேலும் மது மேகத்தால் ( சர்க்கரை வியாதியில் ) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.
இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு ,அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும்.அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும்.மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை.
சோற்றுக் கற்றாழை இராஜ கருவிகளில் உண்டாகும் பல குறைபாடுகளை நீக்குவதில் இதற்கு இணை இதுதான். அதீத சர்க்கரையா??குறைந்த சர்க்கரையா???உயர் இரத்த அழுத்தமா???குறைந்த இரத்த அழுத்தமா???அதீத உடல் எடையா ???குறைந்த உடல் எடையா??அதிக உடல் எடையா???அதிக கொழுப்பா???குறைந்த உடல் கொழுப்பா???அதீத உடல் எடையா??? குறைந்த உடல் எடையா???அதீத உணர்ச்சிகளால் உடலில் பல தொல்லைகளா????(அல்சர்,ஆஸ்துமா, பைத்தியம், ஹிஸ்டீரியா, அதீத உணர்ச்சி ஆனால் குறி எழும்பாமை, சர்க்கரை வியாதி , இரத்த அழுத்தம் , கை கால்களில் வலிகள், மூட்டு வலிகள், கீழ்முதுகு வலிகள்)ஏன் மதி மயங்கி பைத்தியமாகி உள்ளனரா???அனைத்திற்கும் தீர்வாக இந்த சோற்றுக் கற்றாழை செயல்படும்.

2 comments: